Tuesday, February 26, 2013

நற் பேச்சு




நற் பேச்சு  என்ற உடன் நினைவுக்கு வந்ததது   " நினப்பதேல்லாம் வெலியில் சொல்ல முடிமா கண்ணா " என்று நாம் நினைப்பதை எல்லாவற்றையும் வெலியில் சொல்ல முடியாது என்பதை கவியரசு கண்ணதாசன் ஒரு பாட்டில் சொல்லுவார் . அவரே மற்றொரு  பாட்டில் " சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி " என்பார் . ஆக நாம் நினைப்பதை எல்லாம் வெலியில் சொல்ல முடியாது என்பதுதான் உண்மை .
உளவியல் அறிஞர்களும் நினைக்கின்ற வேகத்தில் பேச முடியாது , பேசுகின்ற வேகத்தில் எழுத முடியாது என்பதை ஒப்புகொள்கின்றனர் .

அவ்வாறு என்றால் நற் பேச்சு என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கும்போது " புத்தரின்    போதனையான தம்மத்தை தமிழிற்கு தந்த அய்யன் திருவள்ளுவரும் "வெல்ல முடியாதவர்கள் பட்டியலில் சொலல் வல்லான் " என நன்றாக பேசும் திறன் கொண்டோரையே முதலில் குறிப்பிடுவார் . அதே நேரத்தில் அவரும் "சொல்லுதல் யாருக்கும் எளிய " என்று பேசுவது மிக எளிய செயல் என்பதையும் " தம் பேச்சுக்கு மறு பேச்சு சொல்லா வகையில் பேச வேண்டும் என்பதை "சொல்லுக பிரிதோர் சொல்லை " என்றும் சொல்லுவார் . இது எப்படி பேசவேண்டும் அல்லது ஒருவருடைய பேச்சு எவ்வகையில் இருக்க வேண்டும் என்பதற்கு வேண்டுமானால் எடுத்துகட்டாக கொள்ளலாம் . 

ஆனால் நற் பேச்சு என்று எதை சொல்வது என யோசித்தபோது புத்தரின் போதனைகள் நினைவிற்கு வந்தது . அவருடைய 4 உன்னத வாய்மைகள் 
  1. துன்பம் (துக்கம்) வாழ்வில் உள்ளது 
  2. துன்பத்திற்கு (துக்கத்திற்கு ) காரணம் உள்ளது 
  3. துன்பம் (துக்கம்) ஒழிக்க படக்கூடியது 
  4. துன்பத்தை (துக்கத்தை ) ஒழிக்க வழி உள்ளது என்று போதித்து இருப்பதும் நினைவிற்கு வந்தது .  அவரின் போதனைகளில் எண் வழி பாதை  என்பது 
உன்னத வாய்மைஆன துன்பத்தை (துக்கத்தை ) ஒழிக்க வழி உள்ளது என்பதை குறிக்கும் , அவ்வாறு துன்பத்தை (துக்கத்தை ) ஒழிக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளே எண் வழி பாதை அகும் . அவை 
  1. நற்காட்சி                                     - Right View
  2. நல்லெண்ணம்                          - Right Thought
  3. நன்மொழி (நற் பேச்சு)             - Right Speech
  4. நற்செய்கை                                 - Right Conduct
  5. நல்வாழ்க்கை                             - Right Livelihood
  6. நன்முயற்சி                                 - Right Effort
  7. நற்கடைப்பிடி                             - Right Mindfulness
  8. நற்தியானம்                                 - Right Meditation
இந்த  எண் வழி பாதையை 3 பிரிவுகளாக பிரித்து உள்ளனர்  அவை 

  1. மெய்யறிவு 
    1. நற்காட்சி                  
    2. நல்லெண்ணம்   
  2. நல்லொழுக்கம்  
    1. நன்மொழி                   
    2. நற்செய்கை               
    3. நல்வாழ்க்கை
  3. நற்சமாதி  
    1. நன்முயற்சி               
    2. நற்கடைப்பிடி           
    3. நற்தியானம்
இவற்றில்  (நற் பேச்சு) என்பது 
  1. பொய் பேசுவது 
  2. புறன்கூருவது 
  3. அடுத்தவர் மனம் புண்படும்படி பேசுவது  
  4. பயனில்லாமல் பேசுவது  -   ஆகிய வற்றை  தவிர்த்த செயல்களே ஆகும்.  (நற் பேச்சு) என்பது  முழுமையான அளவில் பொருள் தரக்கூடிய இனிய சொற்களை 
  1. அவசியம் கருதியும் 
  2. உண்மை கருதியும் 
  3. இனிமை கருதியும் 
  4. பயன் கருதியும்  
  5. கனிவுடன் பேச வேண்டியவை ஆகும் .    
 நற் பேச்சு என்பது இது மட்டும் தானா . அதற்க்கான விளக்கம் இதுதானா என்பவர்களுக்காக எண் வழி பாதையை தமிழிற்கு தந்த தமிழ் பாட்டி ஒவ்வை தனது ஆத்திசூடியில் சொல்லிருக்கும் 109 சூத்திரங்களுல் 17 சூத்திரங்கள்  நற் பேச்சு என்பதை விளக்குவதாகவே உள்ளது அவை .
  1. உடையது விளம்பேல் - உன்னிடம் இருக்கும் பணத்தை பற்றி சொல்லாதே 
  2. ஒவ்வியம் பேசேல் - ஒருவர் மீது பொறமை கொண்டு பேசாதே 
  3. கண்டொன்று சொல்லேல் - பார்த்ததை விட்டு பார்க்காத ஒன்றை பற்றி பேசாதே 
  4. ஞாயம் பட உரை  - ஞாயமாக பேசு (மற்றவர் மனம் புண்படும் படி பேசாதே )
  5.  வஞ்சகம் பேசேல் - பழி வாங்கும் நோக்கோடு பேசாதே 
  6. சித்திரம் பேசேல்  - கற்பனை கலந்து பேசாதே 
  7. சுளிக்க சொல்லேல்  - கேட்பவர் மனம் புண்படும்படி பேசாதே 
  8. சொற் சோர்வு படேல்  - உற்சாகம் (நம்பிக்கை) இல்லாமல் பேசாதே 
  9. நொய்ய உரையேல்  - பிறர் மனம் வருந்தும் வகையில்  பேசாதே 
  10. பழிப்பன பகரேல்  - மற்றவர்களின் மேல் பழி சுமத்தி  பேசாதே 
  11. பிழை பட சொல்லேல் - பிறர் மேல் குற்றம் சொல்லாதே 
  12. மிகை பட சொல்லேல்  - நடந்ததை நடந்தவாறு சொல்லாமல் மிகை படுத்தி பேசாதே 
  13. மொழிவது அற மொழி  - தர்மத்தை (தம்மத்தை ) பேசு 
  14. வல்லமை பேசேல்  - கற்றவர் முன் உன் பலத்தை பற்றி பெருமை கொண்டு பேசாதே 
  15. வாது முற் கூறேல்  - அறிஞ்சர்கள் இருக்கும் சபையில் முந்திக்கொண்டு யாரையும் கூற்றம் சொல்லி பேசாதே 
  16. வேட்டேன பேசேல்  - பொறுப்பில்லாமல் பேசாதே 
  17. ஓரம் சொல்லேல்  - ஒரு சார்பாக பேசாதே . நடு  நிலையில் நின்று பேசு  என்பதாகும் . 
 2000 ஆண்டுகளுக்கு முன்பே எதை பேசுவது எப்படி பேசுவது என்று வகை படுத்தி உள்ள புத்தரின் போதனைகளை பின் பற்றி வாழ்வோருக்கு துன்பம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு நற் பேச்சுபேசும் போது நம் துன்பம் தீர வழி உள்ளதை நடைமுறை வாழ்வில் நாமே கண்டு உணர்ந்து இருப்போம் 
 - 24.02.2013 அன்று பள்ளிகொண்டாவில் நடந்த பௌத்தர்களின் குடும்ப விழாவில் நற் பேச்சு குறித்து நான் பேசியது 




  














2 comments:

  1. அருமை... மிகவும் அருமை...

    நற்பேச்சும் நல்ல பகிர்வும் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

இதையும் படியுங்கள்