Thursday, September 21, 2023

சாமானனியனின் சந்தேகங்கள்


 அறம் பதிப்பகம்

முற்போக்கு நூல்களின் களஞ்சியம்


"சாமானியனின் சந்தேகங்கள்" ( Doubts of Common Man) 


ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த கேள்வி பதில்களின் தொகுப்பு. தேனி மு. சுப்ரமணியன் எழுதியது. விலை ரூ 370/ கொரியர் செலவுடன் ரூ. 420/ரூபாய் தொகையை ஜி பேயில் எண்: 9150724997

Monday, August 14, 2023

ரோகிணி நதிக்கரையில்

நதியின் நடுவில்

குளம் போல 

தேங்கியிருந்த நீரில்

சித்தார்த்தர் கைகளால் 

மீன் பிடித்து மீண்டும் 

ஆற்றில் விட்டு 

விளையாடிக் கொண்டிருந்தார்


ஆற்றின் இரு கரையிலும்

சாக்கியர்களும் கோலியர்களும்

தமது படைகளுடன்

தாக்குதலுக்கு அணியமாக 

இருந்தனர். 


இளவரசரை தங்கள் 

பக்கம் அழைக்க

இரு படைகளும் 

கத்தி கத்தி

களைத்து போயின

கலைந்தும் போயின


கரையோரப் போன கௌதமரின்

கையிலிந்த மீன் கேட்டது 

ஏன் இந்த மீன் விளையாட்டு என்று

போரில் விருப்பம் இல்லை

பதில் வந்தது கௌதமரிடமிருந்து


இளவரசரின் பதிலைக் கேட்டதும்

கையில் இருந்து 

துள்ளி தாவியது மீன்

விடியலில் கட்டிலில் இருந்து 

கீழே விழுந்தேன் நான். 

Sunday, August 13, 2023

பல்கு நதிக்கரையில்

பல்கு நதிக்கரையில்

அரச மரத்தின் கீழ் இருந்த

மரங்களின் தேவனுக்கு

பால் சோறு படைக்கிறாள் 

பழங்குடி இளவரசி சுஜாதா


துறவி சாப்பிடும் போது

சிந்திய சோற்றுப் பருக்களை

எங்கிருந்தோ வந்த 

காகம் ஒன்று தன்

அலகால் கொத்தி தின்றது


சுஜாதா கையை தூக்கி

காகத்தை விரட்ட எத்தனிக்க

பார்வையால் தடுக்கிறார் சித்தார்த்தர்


கௌதமர் அமர்ந்திருந்த இடத்தை

சுத்தம் செய்த மகிழ்ச்சியை 

கா கா என கத்தி சொன்னது காகம் 

தூக்கம் கலைந்து நானும்

காகா என கத்திக் கொண்டிருந்தேன்

Friday, August 11, 2023

சரயு நதிக்கரையில்


வைகாசி மாதத்தின்

முழு நிலா இரவில்

சரயு நதிக்கரையில்

நானும் ராமனும்

அருகருகே நின்றிருந்தோம்... 


பெண்கள் வரிசையாக வந்து 

நதியில் மூழ்கி மூழ்கி நீராடினர்

நான் பெண்கள் கூட்டத்தில்

சீதையைத் தேடினேன்

ராமனின் கண்களோ 

சூர்ப்பனகையைத் தேடின


சீதையின் பாதம் பணிய

குனிந்த என்னை தடுத்த சீதை

கை குலுக்கி நலம் விசாரித்தார்


ராமனோ சூர்பனகையை 

வானரக் கூட்டத்தோடு

வன்புணர்ந்து கொண்டிருந்தார்


தொலைக்காட்சியில்

செய்தி சேனல்கள்

அலறலில் திடுக்கிட்டு எழுந்தேன்


மணிப்பூர் பற்றி எரிகிறது 

Saturday, July 29, 2023

கோவை புத்தக கண்காட்சி 1






நேற்று கோவை புத்தக கண்காட்சிக்கு எழுத்தாளர் ஜராதுஷ்ட்ரா வந்திருந்தார். அவர் மொழி பெயர்த்த புத்தகத்தை சென்ற ஆண்டு பதிப்பிக்க அறம் பதிப்பகத்திடம் தந்திருந்தார். 

இந்த ஆண்டு அவரது கையில் புத்தகத்தை தந்தேன். மகிழ்ச்சிச்சியை பிரதிபலித்த தருணங்கள் அவை. அவருக்கு நன்றி. 

 

Sunday, April 9, 2023

சுற்றுச்சூழல் பொருளாதாரம் நூல் திறனாய்வு


 வரும் செவ்வாய் கிழமை 11.04.2023 அன்று மாலை 6:00 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்வில் நான் எழுதிய சுற்றுச்சூழல் பொருளாதாரம் என்னும் நூல் திறனாய்வு செய்யப்படுகிறது. நண்பர்கள் திரளாக கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பிக்க கோருகிறேன் நன்றி


மா. அமரேசன்

எழுத்தாளர், பதிப்பாளர், பௌத்த அறிஞர்

இதையும் படியுங்கள்