Tuesday, February 5, 2013

சுற்று சூழலும் சாதிய புனிதமும்


சுற்று சூழலும் சாதிய புனிதமும்


நாட்டிற்கு இலக்கணம் வகுத்த அய்யன் திருவள்ளுவரும் " இரு புனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு " என நாட்டிற்கான இலக்கணத்தை வகுத்துள்ளார். மலையும் மழை மேகமும் காடும் தான் ஒரு நாட்டிற்கு உறுப்புகளாக இருக்க வேண்டியவை என்பது அவர் கருத்து .

இன்று சுற்று சுழலுக்கு பெரும் சிக்கலாக இருப்பது மழை குறைவும்,
நிலத்தடி நீர்மட்டம் குறைவும் . மழை பொழிவு குறைய காடுகளை அழித்து பெரு  வணிகர்களின் குடில்களாக கட்டுவதும்,மலை மீதுள்ள மரங்களை வெட்டி தேனீர் தோட்டமும், காபி தோட்டமும் அமைப்பதால் மலைக்கு மேல் தவழும் மேகங்களை ஈர்க்க மரம் இல்லாமல் மழையை கருவுற்று இருக்கும் மேகங்கள் நிறை பிரவசவமாக இல்லாமல் குறை பிரசவமாகவே மழை பொழிகிறது

நிலத்தடி நீர் மட்டம் உயராமல் போவதற்கு இன்று பெருமளவு பயன்படுத்தும் பிளாஸ்டிக் குவளைகளே காரணம் . நாட்டில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் குவளைகளின் பயன்பாடு தலை விரித்து ஆடுகின்றது . தேனீர் ,காபி , மது தண்ணீர் ,பழச்சாறு இவைகளை அருந்த இன்று பிளாஸ்டிக் குவளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்த படுகிறது . காரணம் என்ன குடிப்பவரின் மனதுக்குள் ஒளிந்து இருக்கும் சாதி .

நகர் புறங்களில் முன் பின் தெரியாத மக்கள் வந்து போகும் இடங்களில் சாதி இந்துக்கள் பிளாஸ்டிக் குவளைகளில் குடிப்பதால் தங்களின் சாதி புனிதம் காப்பாற்ற படுவதாக நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் குடித்து போட்ட பிளாஸ்டிக் குவளையால் வரும் விளைவுகளை பற்றி அவர்கள் கவலைப்படுவது கிடையாது .

சூடான பிளாஸ்டிக் குவளை மூலம் எதை குடித்தாலும் பிளாஸ்டிக் உருகி உணவோடு குடலுக்கு செல்வதால் புற்று நோய் வருகின்றது என அறிவியல் அறிஞர்கள் கண்டு பிடித்து சொல்லி இருந்தாலும் என் சாதிகாரன் தவிர வேறு எந்த சாதிகாரன் தொட்டு குடித்து இருந்தாலும்   நான் குடிக்க மாட்டேன் என்ற பிடிவாதத்துக்கு உள்ளே ஒளிந்து இருப்பது சாதிதானே .

சுத்தம் என்று பேசினாலும் அந்த சுத்தத்துக்குள்ளும் சொல்ல வருவது சாதிய புனிதம் தானே . இந்த பிளாஸ்டிக் குவளைகள் மண்ணில் எளிதில் மக்காமல் மழை நீரை மண்ணுக்குள் அனுப்பாமல் கடலுக்குள் அனுப்பினால் என்ன என் சாதி புனிதம் காப்பாற்ற பட்டாள் போதும் .

 இந்த  மனோபாவம் இல்லாமல் பிளாஸ்டிக் குவளை வேண்டாம் கண்ணாடி குவளையில் டீ , காபி  குடிக்கும் துணிச்சல் ( சில்வர் குவளை ஓரங்களில் அழுக்கு படிந்து இருப்பதால் அது சுகாதாரமானது அல்ல) உள்ள சாதி இந்து யாரேனும் இருந்தால் அவருக்கு உண்மையாகவே சிலை வைக்கலாம் .
     


No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்