Showing posts with label புத்தமந்திரங்கள். Show all posts
Showing posts with label புத்தமந்திரங்கள். Show all posts

Friday, March 12, 2021

புத்தநெறி மந்திரங்கள் - 4

புத்தநெறி மந்திரங்கள் 4


ஓம் மணி பத்மே ஹூம்

தியான மந்திரங்கள் - 1 

இந்த மந்திரத்தை ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், என எவர் வேண்டுமானாலும், காலை, மாலை, இரவு, நள்ளிரவு, பகல், நண்பகல், என எப்பொழுது வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையிலும், எந்த இடத்திலும் மனதுக்குள்ளும், வாய்விட்டும், உச்சரிக்கவும், ஜெபிக்கவும் தியானிக்கவும் ஏற்ற மந்திரம். 

புத்தநெறி மந்திரங்களுக்குள் மிக சக்தி வாய்ந்த மந்திரம் இது.  இதை மணி மந்திரம் என்றும் அழைப்பர். பண்டையத் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு மணி என்கின்ற பெயர் இருக்கும். அதே போல பலரும் தங்கள் வீட்டு நாய்க்கு முன்பெல்லாம் மணி என்றே பெயரிட்டு அழைப்பர்கள். ஏனென்றால் தங்களை காப்பது மணி மந்திரம் என்பதால் தங்களையும் தங்களின் குடும்பத்தையும் காப்பாற்றும் நாய்க்கும் அதே பெயரிட்டு அழைப்பது தமிழரின் மரபாக இருந்தது முன்பெல்லாம். 

அவலோகிதேஷ்வரரின் அவதாரமாக கருதப்படும் தலாய் லாமாவின் பக்தர்களால் இந்த மந்திரம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. மேலும் இந்த மந்திரத்தின் ஆற்றலை அதிகப்படுத்துவதற்காக இந்த மந்திரத்தை திபெத்தியர்கள் பாறைகளில் செதுக்கியும், பிரார்த்தனை சக்கரங்களில் எழுதியும் வைக்கின்றனர். ஒவ்வொரு முறை இந்த சக்கரத்தை சுழற்றும் போது, அது மந்திரத்தின் உச்சரித்ததின் பலனை தருகின்றதென நம்பப்படுகிறது.


இந்த மந்திரம் முதன் முதலின் காரண்டவியூக சூத்திரத்தில் காணப்படுகிறது. இந்த சூத்திரம் திபெத்திய பௌத்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரம் ஆகும். இந்த சூத்திரத்தில் கௌதம புத்தர் இவ்வாறு கூறுகிறார், "இது தான் மிகவும் பயனுள்ள மந்திரம். நான் கூட இதைப் பெற வேண்டி பல புத்தர்களிடம் வேண்டினேன், இறுதியில் இந்த மந்திரத்தை அமிதாப புத்தரிடமிருந்து பெற்றேன் என்கிறார் பகவான் புத்தர். 

இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் பயன்கள். 

1. நமது கர்ம வினைகள் மாறுகின்றன
2. நமது ஆரா சுத்தமாகின்றது. 
4. நமது வாழ்விலும் தொழிலிலும் உள்ள தடைகள் விலகுகின்றது. 
5. மன அமைதி கிடைக்கின்றது
6. உச்சரிப்பவருக்கு என்ன தேவையோ அது நிச்சயம்  நிறைவேறுகின்றது. 
    பணம், பதவி, புகழ், பட்டம், வேலை ஆகிய தேவைகள் நிறைவேறும். 



Monday, February 15, 2021

புத்தநெறி மந்திரங்கள் - 3

பஞ்ச சீலங்கள் - பாளி

ஐந்தொழுக்கங்கள்  

பானாதி பாதா வேரமணி சிக்காபதங் சமாதியாமி

அதின்னதானா வேரமணி சிக்காபதங் சமாதியாமி

காமேசு மிச்சா சாரா வேரமணி சிக்காபதங் சமாதியாமி

மூசாவாதா வேரமணி சிக்காபதங் சமாதியாமி

சுரா மேரய மஜ்ஜ பமாதட்டான வேரமணி சிக்காபதங் சமாதியாமி

                                                       சாது   சாது   சாது 



பஞ்ச சீலம் - தமிழ்  பொருள்

வழிபாட்டின் போது சொல்லவேண்டியது

  1. நான் உயிர்வதை செய்வதிலிருந்து விலகியிருப்பேன்  என்ற போதனையை ஏற்றுக்கொள்கின்றேன். 
  2. நான் எனக்கு கொடுக்கப்படாததை எடுப்பதிலிருந்து விலகியிருப்பேன் என்ற போதனையை ஏற்றுக் கொள்கிறேன்.
  3. நான் பிழையுறு காமத்தினை பின்பற்றுவதிலிருந்து விலகியிருப்பேன் என்ற போதனையை ஏற்றுக் கொள்கிறேன். 
  4. நான் பொய் பேசுவதிலிருந்து விலகியிருப்பேன் என்ற போதனையை ஏற்றுக் கொள்கிறேன்.
  5. நான் போதையை உண்டாக்ககூடிய பொருளை எடுத்துக் கொள்வதிலிருந்து விலகியிருப்பேன் என்ற போதனையை ஏற்றுக் கொள்கிறேன்.

நேர்மறை சீலம் - தியானத்திற்கு முன் சொல்ல வேண்டியது

  1.  எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தி என் உடலைத் துாய்மை படுத்துகிறேன்.
  2. மனமுவந்து தானம் செய்வதன் மூலம் என் உடலைத் துாய்மை படுத்துகிறேன்.
  3. சாந்தம்,எளிமை மற்றும் மனநிறைவுடன் வாழ்ந்து என் உடலை துாய்மை படுத்துகிறேன். 
  4. உண்மை நிறைந்த உரையாடல் மூலம் என் நாவினை துாய்மை படுத்துகிறேன்.
  5. தெளிவு, தீர்க்கம் மற்றும் பிரகாசமான மத்துடன் இருந்து என் மனதை துாய்மை படுத்துகிறேன். 
சிறப்புகள் 

  • புத்தநெறியைப் பின்பற்றும் குடும்பத்தினர்கள் மன அமைதியோடும் மகிழ்வோழும் வாழ்வதற்கு பின்பற்ற வேண்டிய ஒழுக்க கோட்பாடுகள்
  • தனிநபர் ஒருவர் மன அமைதியோடு வாழ்வாரெனில் இந்த உலகம் அமைதியோடு வாழும் என்ற நெறிமுறையின் படி பகவான் புத்தரால் போதிக்கப்பட்ட ஒழுக்க நெறியாகும்.
  • இந்த 5 ஒழுக்க கோட்பாட்டின் படி வாழும் ஒருவர் உயர் ஞானம் பெற்றவராக கருதப்படுவார்.
பயன்கள்

  • மன அமைதியோடு வாழ வழி வகுக்கும்
  • எல்லா உயிர்களையும் நேசிக்கும் எண்ணம் மேலோங்கும்
  • இருப்பதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து வாழும் எண்ணம் பெருகும்
  • உலகம் அமைதிக்கான அருமருந்து 5 ஒழுக்க கோட்பாடு

இதன் லிங்க் : https://www.youtube.com/watch?v=LMIQVuVf8LU
 

Sunday, February 7, 2021

புத்தநெறி மந்திரங்கள் - 1

 புத்தநெறி மந்திரங்கள் – 1 



  

“ நமோ தஸோ பகவதோ அரகதோ சம்மா சம் புத்தஸ  

 நமோ தஸோ பகவதோ அரகதோ சம்மா சம் புத்தஸ 

 நமோ தஸோ பகவதோ அரகதோ சம்மா சம் புத்தஸ ”

இந்த மந்திரம் பொதுவாக புத்தரை வந்தனத்திற்க்கு (வழிபடுவதற்கு) முன்பாகவும், புத்தரின் பெருமைகளை பறைசாற்றும் விதமாகவும் புத்தசமயத்தவர்களால் ஓதப்படுகின்ற மந்திரமாகும்.

இதன் பொருள்

      உலகின் முழு ஞானம் பெற்ற ஒரே ஒருவரும் மற்றும் ஆசிர்வதிக்கப்பட்டவருமான புத்தருக்கு நான் மரியதை செலுத்துகின்றேன். அஞ்சலி செலுத்துக்கின்றேன்.

இதன் பயன்

1.   முழு ஞானம் அடையவும், நற்செயல்களைப் செய்யவும் உதவி செய்யும்.

2.   உலக பந்தங்களிலிருந்து விடுபடவும், உயர்ஞானத்தை அடையவும் உதவி செய்யும்.

3.   இதை உச்சரிக்கும் ஒருவரின் மன உறுதி வலுப்படும்.

  

இதையும் படியுங்கள்