Wednesday, March 6, 2013

அம்பேத்கர் திரைப்பட அரசியல்


அம்பேத்கர் திரைப்பட அரசியல்


தமிழ்நாட்டில் ஒடுக்கப்ட்ட மக்களின் உரிமைக்காகப் போராடுகின்ற கட்சிகள் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள். அம்பேத்கர் திரைப்பட வெளியீட்டுக்காக செய்த வேலை என்ன?
இப்போது குறுந்தகடு வடிவில் கிடைக்கும் திரைப்படம் தேசிய திரைப்பட வளர்ச்சி கவுன்சில் திரைப்படமாக திரையரங்குகளில் வெளியிடும் போது 2 நாட்கள் கூட திரையரங்குகளில் ஓட விடாமல் செய்தவர்கள் யார்?
ஆனால் நடிகர்கள் படம் திரையிடும் போது 25 நாட்கள், 50 நாட்கள் படம் ஒட காரணமாக இருக்கும் தலித் சுவைஞர்கள் (ரசிகர்கள்) அம்பேத்கர் படம் ஓடும் திரையரங்குப் பக்கம் கூட எட்டிப்பார்க்க மறுத்தது ஏன்.?
எத்தனை தலித் கட்சிகள் தங்கள் தொண்டர்களிடம் இந்தப் படம் குறித்துப் பேசியிருப்பார்கள்.?
உலகில் அதிக சிலைகள் கொண்ட தலைவனின் வாழ்க்கை திரைப்படமாக வெளியிடும் போது, முதன் முதலில் பார்க்க ஆர்வம் கொண்டது எத்தனை பேர். நடிகர்களின் கட்அவுட்டுக்கு பாலாபிசேகம் செய்யும் தலித் இளைஞர்கள் எத்தனை பேர் திரையரங்கில் அம்பேத்கருக்கு கட்அவுட் வைத்திருப்பர். திரைப்படம் பார்க்க வரும் சுவைஞர்களை வரவேற்று எத்தனை அரசியல் கட்சி, இயக்கம், பொறுப்பாளர்கள் சுவரொட்டி ஒட்டியிருந்தனர்.? விடை எனக்குத் தெரிந்து எதுவும் இல்லை. ஏன் என்பதுதான் எனது கேள்வி?
உணர்ந்து கொள்ளுங்கள் தலித் தலைவர்களே, இன்று அம்பேத்கர் திரைப்படத்துக்கு நிகழ்ந்த அத்தனையும் நாளை உங்களுக்கும் நடக்கும். உங்களின் செயல்பாடுகள் மறந்து போகும் அளவுக்குத்தான் நீங்கள் இன்றைய சமுகத்தின் இளைஞர்களுக்கு செய்தி சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள்.
ஒரு உன்னத தலைவரின் பெருமை உங்கள் கட்சி தொண்டனுக்கே தெரியக்கூடாது என்னும் சுய நலம் உங்களை ஆட்டுவிக்கின்றது. இல்லை என்று சொல்லமுடியுமா. உங்களால்.  ஏன் அம்பேத்கரின் திரைப்படத்தை சேரிகள் தோறும் திரையிட்டு காட்டி மக்களிடம் அவருடைய உழைப்பை, அவர் இந்த மக்களை நேசித்தை, சுட்டிக்காட்டி வரலாறு மறந்து போன இந்த தலித் மக்களுக்கு வரலாற்றை அம்பேத்கரின் படத்தின் மூலமாக சொல்ல முடியவில்லை.?
குறுந்தகட்டை வாங்குவதற்க்குகூட எந்த தலித் அரசியல் கட்சிகளும் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் மிகுந்த வேதனை.
தலைவனை மறந்த எந்த சமுகமும், தலைநிமிர்ந்து வாழ்ந்த்து இல்லை. வரலாறு சொல்லும் உண்மை இது. . இன்று தலித் சமுகம் தலைவனை மறந்த சமுகமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

1 comment:

  1. தலைவனை மறந்த எந்த சமுகமும், தலைநிமிர்ந்து வாழ்ந்தது இல்லை - உணர வேண்டிய உண்மை...

    ReplyDelete

இதையும் படியுங்கள்