Saturday, March 30, 2013

தள்ளுபடி வேண்டாம், தனி வங்கி வேண்டும்.


தள்ளுபடி வேண்டாம், தனி வங்கி வேண்டும்.


இன்று இந்தியாவில் 5 ஒருவராக தலித் மக்கள் இருப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட  மக்கள் தொகை ஆய்வறிக்கை சொல்கின்றது. இந்த மக்கள் அணைவரும், அரசியல், சமுக பொருளியல் கண்ணோட்டத்தில் நலிவுற்றே வாழ்கின்றனர்.
அதிலும் அரசு ஆதிக்க சாதியினரின் மனோபாவத்திலேயே செயல் பட்டுக் கொண்டிருக்கின்றது. சுதந்திரம் அடைந்து  60ஆண்டுகளுககு மேல்  ஆன பின்னும். நான் கொடுப்பதை நீ வாங்கிக் கொள்ள வேண்டும். மாறாக நீ உரிமை என்றோ, சம பங்கீடு என்றோ பேச கூடாது. இதுதான் அந்த ஆதிக்க சாதியினரின் மனோபாவம். அரசும் இது வரை இப்படித்தான் செயல்பட்டுக் கொண்டு வருகின்றது. 
படித்த தலித்து இளைஞர்கள் சுய தொழில் செய்ய வங்கி கடன் விண்ணப்பித்தால், வங்கி கடன் கிடைப்பது குதிரை கொம்பாகவே உள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்குவதற்க்கும், அதற்கான மான்யத்தைப் பெறுவற்க்கும் அவர் படாதபாடு படுகின்றார்.
அதற்க்கு காரணம், மான்யம் ஒரு துறையிடம் இருந்தும், தாட்கோவில் இருந்தும், கடன் உதவி வங்கியில் இருந்தும் வருவதும் ஒரு காரணம்.  இதை மாற்றி அரசாங்கமே தலித்துகளுக்கு என ஒரு வளர்ச்சி வங்கி துவங்கி அவர்களுக்கான கடன் உதவி மற்றும், மான்யம் என இரண்டையும் ஒரே இடத்தில் கொடுத்தால். தலித் இளைஞர்களுக்கான அலைச்சல் மிச்சமாகும். கடனும் ஒழுங்காய் போய்ச்சேரும்.
தலித்துகள் இன்றைய காலத்தில் அரசியல் அதிகாரம் பெறுவதற்க்கும், அவற்றை தக்க வைப்பதற்க்குமே பொருளாதார அதிகாரம், தேவைப்படுகின்றது. அதற்க்கு அவர்களுக்கான நிதி நிறுவனங்களை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது.
அந்த நிதி நிறுவனங்ள்,
·        குடும்பம் சார்ந்தும் இருக்கலாம்.
·        கிராம அளவிலும் இருக்கலாம்,
·        மாவட்ட அளவிலும் இருக்கலாம். ஆக தனியொரு நபரை முன்னேற்ற முணையாமல், குடும்பம், கிராம்ம், மாவட்டம், மாநிலம் என்ற அளவில் உள்ள தலித்துகளை முன்னேற்ற நிறுவனங்கள் அவசியம் தேவைப்படுகின்றது.
நிறுவனங்களை உருவாக்காத எந்த சமுகமும் முன்னேற்றம் அடைந்த வரலாறு கிடையாது. தலித்துகள் இன்னும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையாமல் இருப்பதற்க்கு. அவர்களுக்கென நிதி நிறுவனங்கள் கிடையாது. அத்தகைய நிதி நிறுவனங்களை நாம் இதுவரை அரசிடம் கேட்டதும் கிடையாது.
அல்லது நமக்கான நிதி நிறுவனங்களை நாமே உருவாக்கி கொள்ள வேண்டும். அது வங்கியாகவே, நுன் நிதி நிறுவனமாகவே, மகா சன சங்கமாகவே எதோ ஒரு வடிவத்தில் இருந்து இந்த மக்களை உயர்த்த ஒரு கருவியாக செயல்பட்டால் போதும்.
தலித்துகளுக்கான பொருளாதார மேம்பாடு அடைவதற்கான நிதி நிறுவனம் எந்த வடிவத்தில் இருக்க வேண்டும்.எந்த வகையில் செயல்பட வேண்டும் என்றும்.  உங்களிடம் இருந்து கருத்தும் ஆலோசனையும் எதிர் பார்க்கின்றேன். நன்றி. 

Tuesday, March 26, 2013

நல்லுணர்வு


புத்தரின் நான்கு உண்ணத வாய்மைகளான

1.      துக்கம் வாழ்வில் உள்ளது.
2.      துக்கத்திற்கான காரணம் உள்ளது.
3.      துக்கம் ஒழிக்கப்படக்கூடியது.
4.      துக்கத்தை ஒழிக்க வழி உள்ளது.
எண்வழி பாதை என்பது நான்காவது உண்ணத வாய்மையான துக்கத்தை ஒழிக்க வழி உள்ளது என்பதை குறித்து பேசுவது. அவ்வாறு துக்கத்தை ஒழிக்கப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளே எண்வழிப் பாதையாகும். அவை ,
        1. நல்லறிவு

  • 1.    நல்லுணர்வு       
  • 2.     நற் கருத்து   
        2. நல்லொழுக்கம்

  • 3.     .நல் வாய்மை
  • 4.     நற் செயல்
  • 5.    நல் வாழ்க்கை
      3. நற்கருணை

  • 6.      நன் முயற்சி
  • 7.      .நல் மனம்
  • 8.      நல் அமைதி
நல்லுணர்வு என்பது நான்கு உண்ணத வாய்மைகளை உணர்தலாகும். அவற்றை அறிவது மட்டுமல்ல, படிப்பது மட்டுமல்ல, பின்பற்றுவது மட்டுமே போதுமானதல்ல, மாறாக அவறின் உண்மையை உணர்ந்து இருத்தல் வேண்டும். நல்லுணர்வைப் பெற மனம் மாசற்றதாக இருக்க வேண்டும். இதனையே வள்ளுவரும், மனத்துக்கன் மாசிலன் ஆதல் அணைத்துக்கன் ஆகுல நீரபிற – என்பார்.

தெளிந்த மனம் குழம்புவதில்லை, தெளிந்த மனதில் சந்தேகங்கள் தோன்றுவதில்லை, தெளிந்த மனதில் அவ நம்பிக்கைகள் குடியிருப்பதில்லை, அதற்க்கு மனம் உண்மையை பேச வேண்டும், உண்மையை விரும்ப வேண்டும். உண்மையாக இருத்தல் வேண்டும். இதனையே வள்ளுவப் பெருந்தகையும், உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் என்பார். அவ்வாறு உள்ளத்தால் பொய்யாது ஒழுகுதலே நல்லுணர்வு ஆகும்.
இன்னும் விளக்கமாக சொல்வது என்றால், மண்ணில் பிறந்த அணைத்தும் ஒரு நாள் இறந்தே தீரும், என்பதும், உருவாக்கிய அணைத்தும் ஒரு நாள் அழிந்தே தீரும், என்பதும், எல்லாவற்றிற்க்கும் வளர் சிதை மாற்றம் என்பது உண்டு என்பதே ஒப்புக் கொள்வதும் உணர்ந்து இருந்தலுமே நல்லுணர்வு ஆகும். இதனை மார்க்சும் “ மாற்றம் ஒன்றே நிலையானது என்பார். புத்தரும் எல்லோருக்கும் முன்பாக மாற்றம் நிலையானது அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்வழி மார்கத்தில் கூறி சென்றுள்ளார். அவ்வாறு மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனமே உண்மையை உண்மை என்று உணரும் ஏற்றுக் கொள்ளாத மணம் பற்று அல்லது ஆசை என்னும் துன்பச் சகதியில் உழலும்.

நல்லுணர்வு என்னும் கருத்தை ஒரு சிறிய சென் கதையிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
     ஒரு நாள் அடர்ந்த காட்டிற்க்கு வேட்டைக்குச் சென்ற மன்னர், ஒய்வெடுக்க கருதி அந்த அடர்ந்த காட்டில் யாருடைய தொல்லையும் இல்லாமல் அமைதியான சூழ்நிலையிலிருந்த ஒரு சென் மடத்திற்க்குச் சென்றார். அந்த மடத்தின் அமைதியும், துறவிகளின் உபசரிப்பும் அவரை மெய் மறக்கச் செய்தது. ஒரு புத்துணர்வு பெற்று கிளம்பினார். அரசர் சென்ற சில தினங்கள் கழித்து, அரசரின் காவலர்கள், மடத்திற்க்கு ஒரு ஓலையும், பரிசும் கொண்டு வந்து கொடுத்தனர்.
     ஓலையில் மடத்திற்க்கு கொஞ்சம் நிலங்களையும், மாண்யத்தையும் அறிவித்திருந்ததுடன், அந்நாட்டிலுள்ள அனைவரும் அந்த மடத்திற்க்குச் சென்று வந்தால் நாட்டில் அமைதி நிலவும் என்று எழுதி இருந்த்துடன், மடத்திற்க்காக அழகிய பரிசு ஒன்றையும் அனுப்பி இருந்தார்.
அரசர் பரிசு அனுப்பிய செய்தியறிந்து, மக்கள் அவற்றைப் பார்ப்பதற்காக மடத்திற்க்கு வந்து போனார்கள். மடத்திற்க்கு மக்கள் கூட்டம் அரசரின் நிணைவுப் பரிசை பார்ப்பதற்க்கு வந்து போனது, எனவே, கூட்டத்தைக் குறைப்பதற்காக அரசருடைய நிணைவுப் பரிசை பார்க்க வருகின்றவர்களுக்கு நுழைவுக் கட்டணம், வசூலிக்க வேண்டும் என்று தலைமை குரு சொன்னதும், அவ்வாறே நுழைவுக் கட்டணம், வசூலித்தனர் மாணவர்களும், ஆனாலும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமானது. மடத்திற்க்கு வருமானமும் அதிகமாக வந்து கொண்டே இருந்த்து. ஒரு நாள்
மடத்திலிருந்த சீடன் ஒருவன் அந்த நினைவுச் சின்னத்தை துடைத்து வைக்கும் போது, கை தவறி கீழே விழுந்து உடைந்து விட்டது. உள்ளே இருந்த தலைமைத் துறவி கேட்டார். என்ன சத்தம் என்று  மாணவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, கை கால் நடுக்கத்துடன், பயத்தில் உளறலோடு “ அரசரது நிணைவுச் சின்னம் உடைந்து விட்டது என்று சொன்னான். “ உடைந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு உனது அடுத்த வேலையை பார் என்றார். இதுதான் நல்லுணர்வு என்பது.
மடத்தை பார்வையிட வந்த மக்கள் கூட்டம், துறவியின் கருத்தையோ, அவர்களுடைய கொள்கைகளை ஏற்றுக் கொள்ள வந்த கூட்டம் அல்ல. கட்டணம் வசூலித்த போதும், மடத்திற்க்கு வருமாணம் வந்தாலும், அது நிரந்தரமானதல்ல என்பதும், திடிரென்று வந்த புகழும், வளர்ச்சியும், திடிரெண்று மறையும் என்பதை துறவி உணர்ந்தே இருந்தார். இதுதான் நல்லுணர்வு.
தன்னை உணர்தலும், தனது கடமையை சரியாக செய்தலும், தன்னைச் சுற்றி நடப்பவைகளை உணர்தலுமே நல்லுணர்வு.
நல்லுணர்வை வலியுறுத்தி சில திரைப்படப் பாடல்களும் வந்துள்ளன.
நிணைக்கத் தெரிந்த மனமே உணக்கு மறக்கத் தெரியாதா?
உறவு என்றொரு சொல் இருந்தால் பிரிவு என்றொரு பொருள்   இருக்கும்
இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்
ஆணென்ன பெண்ணென்ன எல்லாம் ஓரினம் தான் ”   என்ற பாடல்களில் வருகின்ற எல்லாமே நல்லுணர்வு என்னும் கருத்தை வலியுறுத்தி வந்தவைதான்.
யாரோடு இருக்கும் போது நாம் மகிழ்ந்திருக்கின்றோமோ, அவராலே நாம் துன்பத்திற்க்கு உள்ளாவோம்.
யாரை நாம் உயிராக கருதுன்றோமோ? அவராலே நமக்கு உயிர் போகும் அளவுக்கு துன்பம் வரும், என்பதை புரிந்து கொண்டு பழகுவதே நல்லுணர்வு.
இன்று நண்பராக இருப்பவர் நாளை எதிரியாகவும் மாறலாம் என்று புரிந்து கொண்டு பழகுதலே நல்லுணர்வு.


புத்தரின் நாண்கு உண்ணத வாய்மைகளில் நான்காவது உண்ணத வாய்மையான துக்கத்தை அல்லது துன்பத்தை போக்குவதற்க்கு வழியிருக்கின்றது அது தான் எண்வழிப் பாதை, அதை தமிழுக்கு தந்தவர் ஓளவையார். ஔவையாரின் ஆத்திச் சூடி எண்வழி மார்க்தைத்தான் தமிழ் மக்களுக்கு போதிக்கின்றது. அது நல்லுணர்வு என்னும் கருத்தை கீழ்கண்ட பாடல்கள் மூலமாக வலியுறுத்துகின்றது.
நல்லுணர்வு
1.      ஏற்பது இகழ்ச்சி
2.      ஒப்புரவு ஒழுகு
3.      தந்தை தாய் பேண்.
4.      காப்பது விரதம்.
5.      சான்றோரினத்திரு.
6.      தக்கோனெனத்திரு.
7.      நன்மெய் கடை பிடி
8.      தக்கோனெனத்திரு.
9.      நேர்பட ஒழுகு.
10.   பெரியாரைத் துணைக்கொள்
11.   மாற்றானுக்கு இடம் கொடேல்.
12.   மேன்மக்கள் சொற்கேள்.
13.   உத்தமனாய் இரு.


ஆத்திச்சூடியின் உண்மையான பொருளுணர்ந்து அதனை விளக்கியவர் பண்டிதர் அயோத்தி தாசர். மற்றவர்கள் அது பௌத்தம் குறித்து பேசுவதை புரிந்து கொள்ளாமல் விளக்கியுள்ளனர். இரு வேறு வகையான விளக்கங்களையும் உங்களுக்கு கீழே தருகின்றேன். 



ஏற்பது இகழ்ச்சி
nghJ tpsf;fk;:
·        ,we;J tho;tJ ,opthdJ. mjdhy; ahrpf;f $lhJ.
mNahj;jpjhrh; tpsf;fk;:
·        xUth; nrhy;Yk; thh;j;ijia tprhhpidapd;wp Vw;Wf;nfhs;tJ  ,opitj;jUk;
2. Xg;GuT xOF
 nghJ tpsf;fk;:
·        cyf elj;ijia mwpe;J nfhz;L> mj;NjhL nghUe;JkhW ele;J nfhs;
 mNahj;jpjhrh; tpsf;fk;:
·        kdjpy; mikjpnfhz;L Kfkyh;r;rpNahL tho;jy; Ntz;Lk;
3. je;ij jha; Ngz;
nghJ tpsf;fk;:
·        cd; je;ijiaAk; jhiaAk; mth;fSila KJikf; fhyk; tiu md;Gld; fhg;ghw;W.
mNahj;jpjhrh; tpsf;fk;:
cd; je;ijiaAk; jhiaAk; mth;fSila KJikf; fhyk; tiu md;Gld; fhg;ghw;W
4. fhg;gJ tpujk;.
nghJ tpsf;fk;:
·        jhd; nra;aj; njhlq;fpa jUkj;ij tplhky; nra;tNj tpujkhFk;. (my;yJ)
·        gpw caph;fSf;F Jd;gk; nra;ahky; mtw;iwf; fhg;ghw;WtNj jtk; MFk;.
mNahj;jpjhrh; tpsf;fk;:
·        ey;nyhOf;fq;fis tplhky; fhg;ghNj tpujk;
5. rhd;Nwhhpdj;jpU.
nghJ tpsf;fk;:
o   mwpnthOf;fq;fspy; epiwe;j nghpNahh;fSld; Nrh;e;J ,U.
mNahj;jpjhrh; tpsf;fk;:
         mwpnthOf;fq;fspy; epiwe;j nghpNahh;fSld;
          Nrh;e;J ,U.
6. jf;Nfhnddj;jphp

nghJ tpsf;fk;:
·        nghpNahh;fs; cd;idj; jf;ftd; (Nahf;fpad;> ey;ytd;) vd;W GfOk;gb ele;J nfhs;.
mNahj;jpjhrh; tpsf;fk;:
·        vLj;j nraiy ntw;wpfukhf Kbf;f ty;yth;fSld; Nrh;e;jpU.
7. ed;ik filg;gpb

nghJ tpsf;fk;
·        ey; tpiz nra;jiy vt;tsT ,ilA+W te;jhYk; cWjpahf njhluTk;.
mNahj;jpjhrh; tpsf;fk;:
·        ey;ytd; vd;W nrhy;yj;jFe;j nray;fis tplhky; njhlh;e;J nra;
8. Neh; glnthOF.
nghJ tpsf;fk;:
·        xOf;fq;jtwhky; Neh; topapy; el.
mNahj;jpjhrh; tpsf;fk;:
·        miztUf;Fk; Neh;ikahdtdha; ele;J nfhs;
9. nghpahiuj; Jizf;nfhs;.
nghJ tpsf;fk;:
·        mwptpNy rpwe;j nghpNahh;fis cdf;Fj; Jizahfg; Ngzpf;nfhs;.
mNahj;jpjhrh; tpsf;fk;:
·        fy;tp> njhopy;><if> mwpT kpFjpahf cs;s Nkd;kf;fis rhh;e;J tho;
10.      khw;whDf;fplq;nfhnly;.
nghJ tpsf;fk;:
·        giftd; cd;id Jd;GWj;jp cd;id nty;tjw;F ,lk; nfhLf;fhNj.

mNahj;jpjhrh; tpsf;fk;:
·        tQ;rfh;fs; ek;ik mDf tha;g;Gfs; juhNj.
11.      Nkd; kf;fs; nrhw;Nfs;.
nghJ tpsf;fk;:
·        ey;nyhOf;fk; cila nghpNahh; nrhy;iyf; Nfl;L el.
mNahj;jpjhrh; tpsf;fk;:
·        ey;nyhOf;fk; cila nghpNahh; nrhy;iyf; Nfl;L el.
12.      cj;jkdha; ,U.
nghJ tpsf;fk;:
·        cah;e;j Fzq;fs; nfhz;ltdhf thO
mNahj;;jpjhrh; tpsf;fk;:
       midtUk; ey;ytndd;W nrhy;Yk; gb tho;


இத்தகைய உண்மைகளை புரிந்து கொண்டு வாழும் போதுதான் புத்தரின் போதணையான உனக்கு நீயே ஒளி என்ற உண்மை நமக்குப் புரியும். நம்மாலும் அதைப் போல் வாழ இயலும்.

-          நல்லுணர்வு என்னம் தலைப்பில் பௌத்தர்களின் இரண்டாவது பௌர்ணமி குடும்ப விழா, 24.03.13 அன்று வேலுர் மாவட்டம் விருஞ்சிபுரம் கிராமத்தில் தளபதி கிருஸ்ணசாமி இலவச இரவுப் பள்ளி கூட்டமைப்புத் ஆசிரியர் திரு. வெங்கடேசன் அவர்களின் இல்லத்தில் நடந்த போது நான் பேசியது. 


Monday, March 18, 2013

தீர்ப்பு எழுதும் நாள்


இந்திய பாராளுமன்ற தேர்தல் மேகம் திரண்டு கொண்டிருப்பதால், தமிழக அரசியல் கூட்டணி மாற்றம் எப்பொழுது வேண்டுமானாலும் நிகழலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒன்றை மனதில் வைத்துக் கொண்டு வாக்களிப்பேன் நான்.
இப்போது அழுகின்ற ஓநாய்கள் எல்லாம் 1,50,000 தமிழர்கள் இறந்தபோது, 1,50,000 கோடி  ஊழலில் திளைத்துக் கொண்டு இருந்தவர்கள் தானே.
இலங்கையின் உள் நாட்டு விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றவர்களின் கட்சியினரே, உங்கள் மனச்சாட்சி(அப்படி எதுவும் இருக்காது) தொட்டு சொல்லுங்கள். உங்கள் தலைவரின் மரணத்துக்கு புலிகள் மட்டும் காரணம் என்றால். திருச்சி வேலுச்சாமியின் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.
தாலியின் மீது நம்பிக்கையில்லாத மோதிரம் மாற்றிக் கொள்ளும் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்காக ஒரு இனத்தின் ஒட்டு மொத்த தாலியும் அறுபட காரணமாக இருக்கின்ற உங்களை இந்த தேசமும், வரலாறும் வாழும் தமிழ் மக்களும் ஒரு போதும் மண்ணிக்க மாட்டார்கள்.
மக்களுக்கு மறதி அதிகம், ஊடகங்களை வைத்து கருத்தை திசை மாற்றி விடலாம், பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என்று இருமாந்து இருந்தீர்கள் என்றால், ஏமாறப் போவது நீங்கள் தான். ஐந்து ஆண்டுகள் வேண்டுமானால் நீங்கள் ஆட்சியாளராக இருக்கலாம் ஆனால் உங்களை தேர்ந்தெடுக்க நீங்கள் எங்களைத் தேடி எப்போதாவது வர வேண்டும் தானே. அப்போது என் கோபம் வெளிப்படும். மீன்டும் நீ மீண்டெழ முடியாதவாறு.
ஈழத்தில் எம் தமிழினம் புதைக்ப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளனர். ஆனால் உங்களின் அரசியல் வாழ்க்கை ஈழ மக்களின் கண்ணீரால் புதைக்ப்பட்டுக் கொண்டிருக்கின்றது மறக்க வேண்டாம்.

வரும் தேர்தலில் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரனின் மகன் படம் போட்டு, அதற்க்குப் பக்கத்தில் ” காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி  கட்சியும் வாக்கு கேட்டு என் வீட்டுப் படி ஏறாதீர்கள்” என என் வீட்டின் முன் சுவரொட்டி ஒட்டி வைப்பேன். என் போன்ற இன  உணர்வாளர்களையும் இதையே செய்யச் சொல்லுவேன். இது நடக்கும். உங்களுக்கு(ஈழ தமிழர்களை அழித்தவர்களையும், அழிக்க துணை போனவர்களுக்கும்) தமிழ் மக்கள் தீர்ப்பு எழுதும் நாள் நெருங்கி விட்டது.

Friday, March 15, 2013

விடுதலை போராட்டம்


ஈழ விடுதலை போராட்டம் தமிழ்நாட்டில் புதிய எழுச்சி கண்டுள்ளது. வரவேற்ப்புக்குரியது, எப்பொழுதுமே இத்தகைய திடிரெழுச்சிக்குப் பின் ஒரு அரசியல்  கட்சியிருக்கும், அல்லது போராட்ட புரவலர்கள் தொண்டு நிறுவனங்கள் இருக்கும், அல்லது மத அமைப்புகள் இருக்கும். இங்கே யார் இருக்கிறரார்கள் என்பது தெரியவில்லை.
ஆனால் போராடும் மாணவர் அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள், ஈழத்தில் வாழ்வு அழிக்கப்பட்ட நம் உறவுகளுக்கு போரிடும் அதே நேரத்தில் சிங்கள ரானுவத்தால் வாழ்கை அழிக்கப்பட்டு ஏதிலிகளாக இருக்கும் நம் தமிழ்நாட்டு சகோதரனையும் கொஞ்சம் பாருங்கள், ராமேசுவரம் மீனவரை சிங்கள ரானுவம் சுடுவதும், மீனவர்களின் வாழ்வுரிமையை அழிக்கின்ற செயல்தானே, அதற்க்காகவும் நாம் சேர்ந்து குரல் கொடுப்போம். அவர்களுக்காக நாம் குரல் கொடுக்க வில்லையென்றால் நாம் அவர்களை தமிழர்களாக எடுத்துக் கொள்ள வில்லையென்றே அர்த்தம்.
21 கடல் மைல் தொலைவிற்க்குள் மீன் பிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு மீன் பிடி தொழிலுக்கு உகந்த்து அல்ல. ஈழத்தின் நில வளத்துக்காக எப்படி ஈழ தமிழரை சிங்கள இரானுவம் கொடுரமாக கொன்று குவித்த்தோ, அதைப் போலவே, இராமேசுவரம் கடல் மீன் வளத்தை சப்பானுக்கும், சீனாவுக்கும் தாரை வார்த்து தரவே, எல்லை தான்டி மீன் பிடித்த்தாய் சொல்லி துப்பாக்கி சூடு நடத்தி மீனவர்களை கொன்று குவித்திருக்கின்றது சிங்கள இரானுவம்.
இதுவரை சிங்கள இரானுவத்தின் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை மட்டும் 1200 என்று ஒரு புள்ளி விவரம் சொல்கின்றது. இவர்கள் தமிழர்கள் இல்லையா, இவர்களுக்கு குடும்பங்கள் இல்லையா, இவர்களின் கொடுமையான மரணத்திற்க்கு நீதி கேட்டது யார். ?
கடல் தொழிலில் எல்லை தாண்டுவது என்பது சர்வ சாதாரணமாய் நடக்கின்ற ஒன்று. ஆனால் ஈழ எல்லையில் மட்டும் இது அத்து மீறிய செயலாக கருதி கொன்று போடுவது, ஏன் ? ஆண்டுக்கு 2000 கோடிக்கு மேல் லாபம் தரக்குடிய தொழிலாய் குமரிக்கடற்கரை மீன் வளம் இருக்கின்றது. அது அந்த மண்ணின் மைந்தர்களான மீனவர்களுக்கு சேராமல் மொத்த வளத்தையும் கொள்ளையடிக்கவே இந்த கொலை நடக்கின்றது.  இதை கேட்க்க யாரும் இல்லை. இங்கே மீனவர்களின் ஓட்டு விழுக்காடு 2 சதமானம் தான், எனவே அவர்களுக்காக எந்த அரசியல் கட்சியும் பரிந்து பேசாது.
அவர்களுக்கு எல்லாமே திருச்சபை தான், அவர்களும் இதை பற்றி பேசமாட்டார்கள், ஆண்டவரை வேண்டிக் கொள் என்பதே அவர்களுடைய இறுதி வார்த்தையாக இருக்கும், திருச்சபையை அவர்கள் திருச்சுமை என்று கருத தெரியாமல் உள்ளனர்.
நமது போராட்டம் ஈழ படுகொலைக்கு மட்டும் அல்லாமல், மீனவர் படுகொலக்கும் சேர்த்து இருக்கட்டுமே ஏன் என்றால் இரண்டையும் செய்த்து, செய்வது சிங்கள இரானுவம் தானே?

இதையும் படியுங்கள்