Monday, February 4, 2013

வணிகம் வசப்படாத தலித்துகள்

வணிகம் வசப்படாத தலித்துகள்

சுததந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கு மேலாகியும் மண்ணின் மைந்தர்களான தலித்துகள் குறிப்பாக தமிழக தலித்துகள் இந்தியவில் வறுமை நிலை அதிகமாக இருப்பதாக திட்ட குழுவின் ஆண்டறிக்கை தெரிவிக்கின்றது
இவ்வாறு தலித்துகளின் வறுமை நிலைக்கு காரணம் என்ன என்று ஆய்வு செய்யவேண்டிய தேவை இருக்கின்றது

முதலில் தலித்துகளின் மனோபாவம் பட்டுக்கோட்டையார் சொல்லும் " கஞ்சி காஞ்சி என்றால் பானை நிறையாது சிந்த்தித்து முன்னேரவேண்டுமடி"  என்னும் பாடல் வரிகளுக்கு ஒப்ப " புதுமை பித்தனின் கதையான 'ஒரு நாள் கழிந்தது ' போலவே வாழ்ந்து வருகின்றனர் .

இன்றைய விரைவு உலகத்தில் குறிக்கோள் இல்லா பயணம் நுகர்வு மயமாக்கப்பட்டு சிதைந்து போகிறது . ஒரு சமுகம் பொருளாதரத்தில் முன்னேற அந்த சமுகத்தின் ஒட்டுமொத்த மக்களும் முன்னேற வேண்டும் என்பதை புரிந்துகொண்டு ஒட்டுமொத்த சமுகமும் பொருளாதரத்தில் முன்னேற 3 வகையான வழி முறைகளை கைகொள்ள வேண்டும்

  1. பணி பரவலாக்கம் (Occupational mobility)
  2.  கூட்டு  செயல்பாடு (Community activities )
  3. நிறுவன மயமாக்கம் ( organization building ) 
இந்த வழிமுறைகள் எதையும் பின்பற்றாமல் ஒரு சமுகத்தின் பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகுமா என்பதை சுதந்திரத்துக்கு பின் நம் வாழ்க்கை நிலை மாறாமல் இருப்பதை வைத்து நாம் புரிந்து கொள்ள வேண்டும் .

பொதுவாகவே தலித்துகள் கடுமையான உழைப்பாளிகள் ஆக்கபுர்வமான செயல் பட்டாளர்கள் இன்று எல்லா தொழிலகளிலும் கடை நிலை மற்றும் இடை நிலை பணி  செய்து கொண்டு இருப்பவர்கள் .அனால் அந்த தொழிலை சொந்தமாக செய்ய முனையாதவர்கள் . அவ்வாறு சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என்னும் முனைப்போடு செயல் பட்டால் முன்னேறலாம் .

உதாரனமாக மாட்டுக்கறி என்பது தலித்துகளின் குறிப்பாக பறையர்களின் வாழ்வோடு பிணைந்த ஒரு உணவு . அந்த உணவு தயாரிக்கும் தொழிலில் மாடு அறுதல் மற்றும்  சமைதலில் உதவி என அவர்களின் பங்கு இருந்தாலும்  அதை சந்தை படுத்துவதில் அவர்களின் பங்கு எள்முனையளவும் இல்லை .அதை மற்று சமூகமும் மதமும் கையில் எடுத்துக்கொண்டதால் தங்களின் பாரம்பரிய உணவை வணிகமாக்கும்  முயற்சியல் வெற்றி கொள்ள வேண்டிய தேவையும் கட்டாயமும் தலித்துகளுக்கு இருக்கின்றது



இன்று பெரும்பாலான நகரங்களில் டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் இருக்கின்றது அது தேவையான நிகழ்வும் கூட ஆனால் 30உறுப்பினர்களை கொண்டு முதலில் ஆரம்பிக்கும் சங்கம் தொடர் செயல் திட்டம் இல்லாததால் உடைந்து அல்லது உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து அந்ததந்த நகரங்களில் பெயரளவுக்கு இருக்கும் . அதற்க்கு மாற்றாக சங்கம் ஆரம்பித்ததும் அடுத்த செயல் திட்டமாக தங்களின் ஆட்டோக்களை பழுது பார்க்க ஒரு service center அணைத்து உறுப்பினர்களும் கொஞ்சம் முன்பணம் போட்டு ஆரம்பித்து இருந்தால் அவர்களுடைய ஆட்டோவும் பராமரிப்பு செலவு இல்லாமலே பழுது பார்த்து கொள்ளலாம்
மற்ற ஆடோக்களுக்கும் தரமான சேவையை கொடுத்து அதன்வழி தலித் mechanic ஒருவருக்கு மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு அளித்து இருக்கலாம்
பொருளாதார மேம்பாட்டுக்கு ஒரு தொடர் திட்டம் கைவசப்பட்டு இருக்கும்.

படித்து அரசு வேளைகளில் இருக்கும் தலித்துகள் SC /ST  சங்கம் அமைத்து அரசியல் அமைப்பு சட்டத்தின் படி தங்களின் உரிமைக்கு குரல் கொடுக்கின்றனர் இருந்தும் அவர்களும் பொருளாதார கட்டமைப்பை தங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ள தவறி விடுகின்றனர் . அதனால் முதலில் வலிமை தோற்றம் காட்டி பின் நீர்த்து போகின்றது அணைத்து சங்கங்களும் .

மாறாக அவர்களும் தங்களுக்கு கூட்டு முதலிட்டு திட்டத்தின்படி தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் தேவையான பொருளை விற்பனை செய்யும் வகையில்   விற்பனை சங்கத்தையும் உபரியாக நடத்தி வந்தால் தலித் மக்களின் பணம் தலித்துகளின் கையில் சுழலும் வண்ணம் செய்யும் பொது பொருளாதார முன்னேற்றம் சாத்தியமாகும் . 

மற்ற சமூகங்களின் எழுச்சி பொருளாதரத்தில் அவர்களை வலிவடைய செய்கிறது . ஆனால் தலித்துகள் மட்டும் தங்கள் சமுக எழுச்சியை அரசியல் எழுச்சியாக நீர்த்துப்போக செய்கின்றனர் . பொருளதாரம் வசப்படா தவர்களுக்கு அரசியல் வசப்படாது என்னும் உண்மையை இன்னும் தலித்துகளுக்கு சொல்ல தலைவர்கள் இல்லை தமிழ்நாட்டில் .

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்