Sunday, February 3, 2013

நடுங்க வைத்த நடை பயணம்



நடுங்க வைத்த நடை பயணம்

வரலாறு தனது பயணத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு  உரிமைகள் மறுக்கும்போதும் ,பரிக்கும்போதும் பாதிக்கப்பட்ட  மக்களை ஒன்று சேர்த்து நீதி கேட்டு பல நடைபயணங்களை பார்த்திருக்கிறது , இருந்தாலும் 22.01.2013  அன்று போச்சம்பள்ளியில் சமுக சமத்துவ படை கட்சி சார்பாக தருமபுரி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று சேர்த்துக்கொண்டு எழுத்தாளரும்  அக்கட்சி தலைவருமான பெருமைமிகு ப .சிவகாமி அவர்கள்  தலைமையில் தொடங்கிய நடைபயணம் பெரும் தடத்தை வரலாற்றில் பதிவு செய்த பயணமாக 29.01.13 அன்று சென்னையில் மாநில ஆளுநரிடம் மனு கொடுத்து நிறைவடைந்தது.

இந்த பயணத்தை உணர்வு ரீதியாகவும், வரலாற்று அடிப்படை  கண்ணோட்டத்தோடு பதிவு செய்ய வேண்டிய தேவை தலித் மக்களுக்கு இருக்கிறது .தலித்  வரலாற்றில் அண்ணல் அம்பேத்கர் , ஐயா இளைய பெருமாளுக்கு பிறகு நிகழ்ந்த தலித் தலைவர் ஒருவரின் நீண்ட தூரம் (500 கிலோ மீட்டர் )நடைபயணம் இது .

நீண்ட காலமாய் தலித் மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு போய் இருந்த தலைவர்களில் முதன் முதலாய் தலித்  மக்களோடு  மக்களாய் கோட்டையை  நோக்கி நடந்துவரும்  தலைவராகவே சிவகாமி தலித் மக்களுக்கு தெரிகிறார்.
பாதிக்கப்பட்ட தருமபுரி மக்களுக்கு காகிதத்தில் கரிசனம் கட்டாமல் , அறிக்கைகளை ஆயுதமாக்காமல் விடியலை வெளிச்சம்போட்டு காட்டிய நம்பிக்கை நாயகி  அவர் .

பன்னிரெண்டு மணி பனி பொழியும் இரவில் 25.01.13 அன்று ஆரணி வந்தடைந்த நடைபயண கூட்டத்திடம் சோர்வு இல்லை. விரக்தி இல்லை . கட்டுக்கோப்போடு இருந்தது . இரவு உணவு முடிய 1 மணிக்கும் மேலானபின்னும் கூட்டம் சிவகாமி பேச்சை ஆர்வத்தோடு கேட்டது மிகுந்த வியப்பு . தருமபுரியில்  வந்திருந்த தலித் சகோதர சகோதரிகளின் கண்களில் சோகத்தை விட , விரக்தியை விட நம்பிக்கை நிரம்பி இருந்தது .

தங்களுக்கு தாயாகவும் , தங்கையாகவும் , தமக்கையகவும் , தங்க தலைவியாகவும் அறிவும் நம்பிக்கையும் போரட்டகுனமும் நிரம்பிய தலைவியோடு நாங்கள் நடைபயணம் வந்து இருக்கின்றோம். நாம் தனித்து இல்லை நமக்கு பின் பெரும் கூட்டம் இருக்கின்றது நிச்சயம் வெற்றி எங்கள் கைகளில் வரும் அது சிவகாமியால் முடியும் என்ற நம்பிக்கை அவர்களோடு பேசியதில் புரிந்து கொள்ள முடிந்தது அந்த வாய்ப்பை வழங்கிய சிவகாமிக்கு நன்றி .

5 அக்டோபர் 1789 பாரிஸில் நடந்த வேர்சைல்ஸ் நடை பயணத்தில் தான் பெண்கள் முதன்முதல் பெருமளவில் பங்கேற்ற பதிவு இருந்தாலும் . ரஷிய புரட்சியில் பெண்கள் ஆர்பாட்டம் ஊர்வலம் முதலிய நிகழ்வுகளில் பங்கெடுத்து இருந்தாலும் வரலாற்றில் பெண்தலைமையில்  நடைபெற்ற முதல் நடைபயணம் இது. ஊடகங்கள் இதை மறைத்தாலும் உண்மை உலகத்துக்கு ஒருநாள் தெரியும் . உண்மையில் சிவகாமிதான்  தலித் மக்களின் உண்மையான புரட்சி தலைவி .

வழக்கமாக இம்மாதிரி கலவரங்கள் முடிந்து பல ஆண்டுகள் ஆனபிறகே நீதியும் நிதியும் கிடைக்கும் . அனால் இந்த நடைபயண நிறைவு நாளிலேயே பாதிகப்பட்ட மக்களுக்கு நிதி உதவி கிடைக்க அரசு உத்தரவு போட்டது சிவகாமி சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கின்றார் என்பதை தலித் மக்களுக்கு உணர்த்தியது . மற்ற சாதிக்கும் அரசுக்கும் இவருடைய நடைபயணம் நடுங்க வைத்த நடை பயணமாய் இருந்தது .













No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்