Tuesday, February 26, 2013

நற் பேச்சு




நற் பேச்சு  என்ற உடன் நினைவுக்கு வந்ததது   " நினப்பதேல்லாம் வெலியில் சொல்ல முடிமா கண்ணா " என்று நாம் நினைப்பதை எல்லாவற்றையும் வெலியில் சொல்ல முடியாது என்பதை கவியரசு கண்ணதாசன் ஒரு பாட்டில் சொல்லுவார் . அவரே மற்றொரு  பாட்டில் " சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி " என்பார் . ஆக நாம் நினைப்பதை எல்லாம் வெலியில் சொல்ல முடியாது என்பதுதான் உண்மை .
உளவியல் அறிஞர்களும் நினைக்கின்ற வேகத்தில் பேச முடியாது , பேசுகின்ற வேகத்தில் எழுத முடியாது என்பதை ஒப்புகொள்கின்றனர் .

அவ்வாறு என்றால் நற் பேச்சு என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கும்போது " புத்தரின்    போதனையான தம்மத்தை தமிழிற்கு தந்த அய்யன் திருவள்ளுவரும் "வெல்ல முடியாதவர்கள் பட்டியலில் சொலல் வல்லான் " என நன்றாக பேசும் திறன் கொண்டோரையே முதலில் குறிப்பிடுவார் . அதே நேரத்தில் அவரும் "சொல்லுதல் யாருக்கும் எளிய " என்று பேசுவது மிக எளிய செயல் என்பதையும் " தம் பேச்சுக்கு மறு பேச்சு சொல்லா வகையில் பேச வேண்டும் என்பதை "சொல்லுக பிரிதோர் சொல்லை " என்றும் சொல்லுவார் . இது எப்படி பேசவேண்டும் அல்லது ஒருவருடைய பேச்சு எவ்வகையில் இருக்க வேண்டும் என்பதற்கு வேண்டுமானால் எடுத்துகட்டாக கொள்ளலாம் . 

ஆனால் நற் பேச்சு என்று எதை சொல்வது என யோசித்தபோது புத்தரின் போதனைகள் நினைவிற்கு வந்தது . அவருடைய 4 உன்னத வாய்மைகள் 
  1. துன்பம் (துக்கம்) வாழ்வில் உள்ளது 
  2. துன்பத்திற்கு (துக்கத்திற்கு ) காரணம் உள்ளது 
  3. துன்பம் (துக்கம்) ஒழிக்க படக்கூடியது 
  4. துன்பத்தை (துக்கத்தை ) ஒழிக்க வழி உள்ளது என்று போதித்து இருப்பதும் நினைவிற்கு வந்தது .  அவரின் போதனைகளில் எண் வழி பாதை  என்பது 
உன்னத வாய்மைஆன துன்பத்தை (துக்கத்தை ) ஒழிக்க வழி உள்ளது என்பதை குறிக்கும் , அவ்வாறு துன்பத்தை (துக்கத்தை ) ஒழிக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளே எண் வழி பாதை அகும் . அவை 
  1. நற்காட்சி                                     - Right View
  2. நல்லெண்ணம்                          - Right Thought
  3. நன்மொழி (நற் பேச்சு)             - Right Speech
  4. நற்செய்கை                                 - Right Conduct
  5. நல்வாழ்க்கை                             - Right Livelihood
  6. நன்முயற்சி                                 - Right Effort
  7. நற்கடைப்பிடி                             - Right Mindfulness
  8. நற்தியானம்                                 - Right Meditation
இந்த  எண் வழி பாதையை 3 பிரிவுகளாக பிரித்து உள்ளனர்  அவை 

  1. மெய்யறிவு 
    1. நற்காட்சி                  
    2. நல்லெண்ணம்   
  2. நல்லொழுக்கம்  
    1. நன்மொழி                   
    2. நற்செய்கை               
    3. நல்வாழ்க்கை
  3. நற்சமாதி  
    1. நன்முயற்சி               
    2. நற்கடைப்பிடி           
    3. நற்தியானம்
இவற்றில்  (நற் பேச்சு) என்பது 
  1. பொய் பேசுவது 
  2. புறன்கூருவது 
  3. அடுத்தவர் மனம் புண்படும்படி பேசுவது  
  4. பயனில்லாமல் பேசுவது  -   ஆகிய வற்றை  தவிர்த்த செயல்களே ஆகும்.  (நற் பேச்சு) என்பது  முழுமையான அளவில் பொருள் தரக்கூடிய இனிய சொற்களை 
  1. அவசியம் கருதியும் 
  2. உண்மை கருதியும் 
  3. இனிமை கருதியும் 
  4. பயன் கருதியும்  
  5. கனிவுடன் பேச வேண்டியவை ஆகும் .    
 நற் பேச்சு என்பது இது மட்டும் தானா . அதற்க்கான விளக்கம் இதுதானா என்பவர்களுக்காக எண் வழி பாதையை தமிழிற்கு தந்த தமிழ் பாட்டி ஒவ்வை தனது ஆத்திசூடியில் சொல்லிருக்கும் 109 சூத்திரங்களுல் 17 சூத்திரங்கள்  நற் பேச்சு என்பதை விளக்குவதாகவே உள்ளது அவை .
  1. உடையது விளம்பேல் - உன்னிடம் இருக்கும் பணத்தை பற்றி சொல்லாதே 
  2. ஒவ்வியம் பேசேல் - ஒருவர் மீது பொறமை கொண்டு பேசாதே 
  3. கண்டொன்று சொல்லேல் - பார்த்ததை விட்டு பார்க்காத ஒன்றை பற்றி பேசாதே 
  4. ஞாயம் பட உரை  - ஞாயமாக பேசு (மற்றவர் மனம் புண்படும் படி பேசாதே )
  5.  வஞ்சகம் பேசேல் - பழி வாங்கும் நோக்கோடு பேசாதே 
  6. சித்திரம் பேசேல்  - கற்பனை கலந்து பேசாதே 
  7. சுளிக்க சொல்லேல்  - கேட்பவர் மனம் புண்படும்படி பேசாதே 
  8. சொற் சோர்வு படேல்  - உற்சாகம் (நம்பிக்கை) இல்லாமல் பேசாதே 
  9. நொய்ய உரையேல்  - பிறர் மனம் வருந்தும் வகையில்  பேசாதே 
  10. பழிப்பன பகரேல்  - மற்றவர்களின் மேல் பழி சுமத்தி  பேசாதே 
  11. பிழை பட சொல்லேல் - பிறர் மேல் குற்றம் சொல்லாதே 
  12. மிகை பட சொல்லேல்  - நடந்ததை நடந்தவாறு சொல்லாமல் மிகை படுத்தி பேசாதே 
  13. மொழிவது அற மொழி  - தர்மத்தை (தம்மத்தை ) பேசு 
  14. வல்லமை பேசேல்  - கற்றவர் முன் உன் பலத்தை பற்றி பெருமை கொண்டு பேசாதே 
  15. வாது முற் கூறேல்  - அறிஞ்சர்கள் இருக்கும் சபையில் முந்திக்கொண்டு யாரையும் கூற்றம் சொல்லி பேசாதே 
  16. வேட்டேன பேசேல்  - பொறுப்பில்லாமல் பேசாதே 
  17. ஓரம் சொல்லேல்  - ஒரு சார்பாக பேசாதே . நடு  நிலையில் நின்று பேசு  என்பதாகும் . 
 2000 ஆண்டுகளுக்கு முன்பே எதை பேசுவது எப்படி பேசுவது என்று வகை படுத்தி உள்ள புத்தரின் போதனைகளை பின் பற்றி வாழ்வோருக்கு துன்பம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு நற் பேச்சுபேசும் போது நம் துன்பம் தீர வழி உள்ளதை நடைமுறை வாழ்வில் நாமே கண்டு உணர்ந்து இருப்போம் 
 - 24.02.2013 அன்று பள்ளிகொண்டாவில் நடந்த பௌத்தர்களின் குடும்ப விழாவில் நற் பேச்சு குறித்து நான் பேசியது 




  














Sunday, February 24, 2013

பௌத்தர்களின் குடும்ப விழா பதிவு

பௌத்தர்களின் குடும்ப விழா பதிவு

இன்று மாலை வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா RCM  பள்ளியில் நடந்த நிகழ்வில் 80 கும் அதிகமானோர் பங்கேற்ற்று சிறப்பித்தனர் . மக்கள் பாடகர் கு.சா .முத்து அவர்களும் வந்திருந்து இதை போல பௌத்தர்களின் குடும்ப விழாவை விருதுநகர் மாவட்டத்திலும் அடுத்த மாதத்திலிருந்து நடத்த முயற்சி செய்வேன் என்று சொல்லி " சிங்கத்தை அதன் குகையில் " என்னும் விழிப்புணர்வு பாடலை பாடிச்சென்றார் .
மேலும் தலித் அல்லாதவர்களும் பௌத்தம் , தம்மம் தங்கள் வாழ்வில் நிகழ்த்திய மாற்றங்களை குறித்து பேசியதும் இன்னோர் வியப்பு .

வரும் அக்டோபர் மாதம் வேலூர் ,திருவண்ணாமலை மாவட்டங்களை ஒருங்கிணைத்து கோட்டை மைதானத்தில் 1000 பேர் பௌத்தம் ஏற்கும் நிகழ்வு நடத்த திட்டமிட்டுள்ளனர் .

தொடர்ந்து இந்த குடும்ப விழா நடக்கும் 

எங்களுக்கு வழிகாட்டிய Sc /ST  சங்கத்துக்கு நன்றி 

Wednesday, February 20, 2013

பௌத்தர்களாய் ஒன்றினைவோம்

பௌத்தர்களாய் ஒன்றினைவோம் 

கடந்த சில மாதங்களாக சென்னையில் அம்பேத்கர் மணி மண்டபத்தில் sc /st  பணியாளர் சங்கத்தின் சார்பாக பௌர்ணமி தோறும் பௌத்தர்களின் குடும்ப விழா தலித்து  மக்கள் சாதியை கடந்து, அரசியலை கடந்து, புத்தரின் வழியை பின்பற்றி அன்பையும் , சகோதர உணர்வையும் வளர்த்துக்கொள்ள நடக்கிறது.

அதை போலவே வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை ஒருங்கிணைத்து இந்த மாதம் முதல் பௌத்தம் ஏற்றுகொண்ட அல்லது ஏற்று கொள்வதில் ஆர்வமாய் இருக்கிற தோழமை வீட்டில் நடத்த திட்டமிட்டுள்ளோம் .

இந்த மதம் வரும் 24.02.13 அன்று ஞாயிறு கிழமை பிற்பகல் 3 மணி அளவில் RCM  பள்ளி வளாகத்தில் , பள்ளிகொண்டாவில் தளபதி கிருஷ்ணசாமி அவர்களின் மகன் இளைய தளபதி திரு .கி . கிருஷ்ணகுமார் அவர்களின் தலைமையில் நடக்க உள்ளது. சமுக சொந்தங்கள் இந்த நிகழ்வில் குடும்பத்தோடு கலந்து கொண்டு நமக்குள் உறவும் சகோதர உணர்வும் வளர பங்களிக்குமாறு கேட்டு கொள்கிறோம் நன்றி .

ஒருங்கிணைப்பு :


திரு . தண்டபாணி  - 98846 89631
திரு . தினகர்  - 98941 20551
திரு . மா .அமரேசன்  - 98659 76642

Friday, February 15, 2013

கொச்சை படுத்தப்படும் குஷ்பூ

கொச்சை படுத்தப்படும் குஷ்பூ 

அண்மையில் இன்னொரு மணியம்மை என்று நடிகை குஷ்பூவை மையபடுத்தி வந்து இருக்கும் செய்தியை இந்த கோணங்களில் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது 



  1. வரிகளுக்குள் ஒளிந்து இருக்கும் செய்தியை போல் செய்திக்குள் ஒளிந்து இருக்கும் செய்தி 
  2. நடிகைகள் குறித்த ஊடக கண்ணோட்டம் 
  3. நடிகைகள் குறித்த சமுக கண்ணோட்டம் 
  4. குஷ்பூவின்  பங்களிப்பு தமிழ் சமுகத்துக்கு 
  5. சிறுபான்மை பெண்ணுக்கு எதிரான அரசியல் காழ்ப்புணர்வு 
  6. திராவிட இயக்கங்களில் பெண்களுக்கான இருப்பு  
இன்று  உள்ள ஊடகங்கள் (அச்சு , காட்சி , மின் ) யாவுமே பார்பனர்  மற்றும் செட்டியார்களின் கைகளில் உள்ளது . இந்த நாட்டு மக்கள் படிக்க வேண்டிய செய்தியை தீர்மானிப்பவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள் . அதுவும் படிக்க வேண்டிய அளவையும் அவர்களே தீர்மானிக்கும் சக்தியாகிறார்கள் .நாட்டில் ஊடகங்களை கட்டுபடுத்தும் வலுவான அமைப்பு இல்லை . அதனாலே அவர்கள் யாரை குறித்தும் கொச்சை படுத்தி செய்தி வெளி இடுகிறார்கள் பின்,மறுப்போ எதிர்ப்போ வந்தால் வேறு வழிஇன்றி  பின் அட்டையில் கண்ணுக்கு தெரியாத அளவில் (சிகரெட் அட்டை மற்றும் மது பாட்டிலில் உள்ளது போன்று ) மன்னிப்பு வெளி வரும் .

குஷ்பூ 29.09.1970 இல் மும்பை நகரத்தில் பிறந்தவர் குழந்தை நட்சத்திரமாய் ஹிந்தி யில் அறிமுகமாகி தமிழில் 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 மூலம் தமிழுக்கு அறிமுகமானார் . உண்மையான பெயர் நக்கத் கான் . தமிழ், தெலுங்கு, இந்தி,உருது, 
மராத்தி கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம் என குஷ்புக்கு ஒன்பது மொழிகளில் பேசவும் எழுதவும் தெரியும், 2010 ஆண்டில் திராவிட முன்னேற்ற கழகத்தில் தம்மை அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டார். 

குமுதத்துக்கும் குஷ்பூ வுக்கும் உள்ள பகை 1993 லில் இருந்து துவங்குகிறது . அப்போது இயக்குனர் சிகரம் திரு கே .பாலசந்தர் அவருடைய ஜாதி மல்லி படத்தில் குஷ்பூ நடித்து கொண்டு இருந்தார் . அந்த ஆண்டின் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் வந்த குமுதம் இதழில் குஷ்பூகும், திரு .கே .பாலசந்தர்  அவருக்கும் கள்ள தொடர்பு என கொச்சையான செய்தியை வெளி இட்டது அதே இதழின் கடைசி பக்கத்தில் இது ஏப்ரல் முதல் வாரம் என தகவல் தந்து இருந்தது . பின்னர் பலத்த எதிர்ப்பால் மன்னிப்பு செய்தி வெளிட்டது குமுதம் இந்த எதிர்ப்பில் இறுதி வரை உறுதியாய் நின்றவர் நடிகை குஷ்பூ, மற்றும்  கே .பாலசந்தர் . 

திமுகவின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலின் வருவதற்கு தான் முன்மொழிவேன் என சமீபத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதி கூறியிருந்தார்.எனினும் இது தொடர்பிலான ஊடக பேட்டி ஒன்றின் போது பதில் அளித்த நடிகையும், திமுக பிரமுகருமான குஷ்பூ, அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக்கூடாது. தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் மு.க.ஸ்டாலின் தான் தனது அடுத்த தேர்வு என்றே தலைவர் கூறியிருக்கிறார். இறுதி முடிவை பொதுக்குழு தான் எடுக்கும் என தெரிவித்திருந்தார். இது மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்ததால், சென்னை சாந்தோமில் உள்ள குஷ்புவின் வீடு தாக்கபப்ட்டதுடன், திருச்சியிலும் அவர் மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்நிலையில் தான் வாரப்பத்திரிகைக்கு அளித்த பேட்டி தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக குஷ்பூ தற்போது விளக்கம் அளித்துள்ளார். 
இதை ஒட்டிதான்  இன்னொரு மணியம்மை என தலைமை உடன் கொச்சை படுத்தப்பட்டு இருக்கிறார் . குஷ்பூ,  தான் சார்ந்து இருக்கும் கட்சிஇன்  வருங்கால தலைவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் விமர்சனத்தை தாங்கும் பண்பு இல்லை என்பதை வெளிபடுத்திய நிகழ்வு இது . கடமை கண்ணியம் கட்டுப்பாடு காற்றில் பறந்து போனதை காட்டிய நிகழ்வு  இது . மற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்ற அண்ணாவின் சகிப்பு தன்மை இல்லாமல் போனதை எடுத்து காட்டும் செயல் இது . இதற்க்கு மேல் போனால் என் வீட்டுக்கும் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் இத்தோடு நிறுத்தி கொள்கிறேன் .
அரசியலில் நடிகை நடிகர்கள் கூட்டம் சேர்க்கும் கருவியாகவே பயன் பட்டது தான் வரலாறு பத்திரிகை களும் நடிகைகளை சதை பண்டமாக காண்பித்தே தங்கள் விற்பனையை பெருக்கி கொள்கிறார்கள் . அது சம்பந்தமான செய்திகளை வெளி இட்டு பொது சமூகமும் நடிகைகளை உடலுறவு பண்டமாகவே பார்க்கிறது .
2 G  வழக்கில் சிறை இருந்த தோழர் கனிமொழிக்கு இனையான  அறிவாளுமையும் பன்மொழி புலமையும் தி .மு .க . வுக்கு தில்லியில் சமுக வக்காலத்து செய்ய பயன் படுவார் என்னும் தொலை நோக்கு திட்டத்தில் கட்சிக்கு தேவைப்பட்டார் நடிகை குஷ்பூ, தனது கருத்தை துணிச்சலோடு பதிவு செய்பவர் . 2005 இல் கற்பு குறித்து பேச அது கொந்தளிப்பை ஏற்ப்படுத்த  47 வழக்கு அவர் மேல் அத்தனையும் எதிர் கொண்ட நெஞ்சுரம் தமிழ் கூறும் நல்லுலகம் ஒரு சராசரி நடிகை இடம் காணாத ஒன்று .
குஷ்பூ பேசினால் குற்றம் , புடவை கட்டினால் எதிர்ப்பு என இத்தனை வன்மம் கொண்டு தாக்க காரணம் பார்பன , பணியா ஊடகங்களால் ஒரு முஸ்லிம் பெண்ணை உயர்த்தி பிடிப்பதா என்பது ஒருகாரணம் . மற்றொன்று ஒரு நடிகை இடம் இருந்து அறிவு சார் செய்திகள் இந்த சமுகத்துக்கு போக கூடாது என்னும் ஆணாதிக்க மனோபாவம் .
எல்லா கட்சிகளும் நடிகர்களை எப்படி கவர்ச்சிக்கு பயன் படுத்துகிறார்களோ. அதை போலவே நடிகைகளும் . குறிப்பாக பெண்களை அவர்களால் அப்படித்தானே பார்க்க முடிகிறது . மணியம்மையும் பெண் .குஷ்பூவும் பெண்   ஆணாதிக்க அரசியல் பார்வை .
எல்லாவற்றுக்கும் மேலாய் அதாரம் இல்லாத குற்ற சாட்டுகளால் ஒரு தனி நபரின் குடும்பமும் எந்த அளவு வேதனை படும் என்பதை  உணராமல் துதி படிகளின் கூட்டம் வேறு என்ன செய்யும் dmk  இதை வழக்கம் போல் எதிர்க்கட்சி சதி என்று சொல்லும் . உளவு துறை வேலை என சொல்லும் . 
முஸ்லிம் அமைப்புகள் சுந்தர் சி .யை திருமணம் செய்ததால் அவரை இந்துவாக பார்த்து அமைதியாய் இருக்கபோகிறதா ?
பெண்ணியிய அமைப்புகள் நடிகை குறித்து பேசினால் நாங்கள் பேசுவது இல்லை என மௌனம் சாதிக்க போகிறதா ?
இவர்கள் யாரும் குஷ்பூக்கு ஆதரவை தர வில்லை என்றாளும் குடும்பத்து பெண்களின் அதரவு உங்களுக்கு உண்டு தோழர் குஷ்பூ, 

Thursday, February 14, 2013

தோழர் மாரியப்பனின் பிறந்த நாள்



இன்று  தோழர் மாரியப்பனின் பிறந்த நாள் என முகநூலில் செய்தி பார்த்தேன் .

அதற்கு முன்பே தொலை பேசியில் அழைத்த போது அணைக்க பட்டு இருந்தது .முகநூளில் வாழ்த்து சொல்லிய பின் இந்த யோசனை தோன்றியதால் இதை எழதுகிறேன் .

முதன் முதலில் கோவை ரயில் நிலையத்தின் எதிரில் பேரா . வேலுசாமி யோடு சந்தித்த நாள்  முதல் இன்று வரை தொடர்ந்து பார்க்கிறேன் . பணம் சம்பாதிக்க என்னும் உலகத்தில் மனித மனம் சம்பாதிக்க என்னும் உயர்ந்த உள்ளம்  அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் .

சமுக பனியும் செய்கிறார் விளம்பரம் இல்லாமல் . பல குடும்பங்கள் வாழ்த்துது . அவரை தினமும் . இந்த இடுகை எழதுதவே  அவரை தோழர் என்று அழைக்க நேர்ந்தது .

அவரை மேலும் நிறைய வாழ்த்துவோம் " நீங்கள் நல்ல இருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற " என்று 

Wednesday, February 13, 2013

பெண் அரசியல்

பெண் அரசியல் 



இந்தியாவில்  பெண்களுக்கான பாதுகாப்பற்ற தன்மை டில்லி மருத்துவ கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை  நிகழ்விலிருந்து துவங்குவதாக ஊடகங்களும் சமுக செயல் பட்டாலர்களும் கருத்து பரப்பி வருகிறார்கள் . ஒரு விசியத்தை வசதியாக மறந்து விட்டு . அது  இந்திய சமுகம் அடிப்படையில் ஆணாதிக்க சமுகம் இங்கு காலந்தோறும் பெண்களுக்கு நீதி மறுக்கப்பட்டு வந்து கொண்டே இருக்கின்றது .

தேசிய மகளிர் ஆணையத்தின் புள்ளி விவரத்தின் படி இந்தியாவில் 17 நிமிடங்களுக்கு ஒரு பெண் பழமை வாதிகளின் மொழியில்  சொல்வது என்றால் கற்பழிக்கப் படுகிறாள் . அப்போது எல்லாம் கவலை படாத ஊடகங்களும் பொது சமூகங்களும் இப்போது அக்கறை கொள்வது ஏன் ?

சட்டங்கள் கடுமை ஆவதால் குற்றங்கள் குறையுமா ? தண்டனை அதிகமாவதால் சிறைகள் குறையுமா ? சட்டங்களை இயற்றுவது ஆண்கள் . மீறுவது ஆண்கள் . ( கவுண்டமணி சொல்வது போல் அரசியில இது எல்லாம் சகஜமப்பா ) என்று எடுத்துக்கொண்டே சமுகத்தில் உள்ள ஆணாதிக்கம்  பெண்களுக்கான சட்டங்களை இயற்றுகிறது .

கற்பழிப்பு மட்டும்தான் இந்திய பெண் சமுகத்தின் ஒட்டு மொத்த சிக்கல் என்பது போலவே ஊடகங்கள் சித்தரிப்பதும். அரசு அதற்க்கு சட்டத்தின் மூலம் தீர்வு  சொல்வதும் திட்டமிட்ட நாடகமாக தெரிகின்றது .

பெண்களுக்கான மற்ற சட்டங்கள் உண்மையாக கடை பிடிக்க படுகிறதா ? அதை  போலத்தான் இ ப்போது வரும் சட்டங்களும் . சட்ட பட்டியல் கிழே 

  • 1. 1955 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பெற்ற இந்து திருமணச் சட்டப்படி பெண்களின் திருமண வயது 17 வயதாக அறிவிக்கப்பெற்று தற்பொழுது 21 வயதாக அறிவிக்கப்பட்டு பின்பற்றப் படுகின்றது.
    • நாட்டில் இளவயது திருமணங்கள் நடப்பதும்  பேருகாலத்தில் ஊட்ட சத்து குறைபாடுகளால் பெண்கள் இறப்பது தொடர்கிறதே இது அரசுக்கு தெரியாதா ?
  • 2. 1956- ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டம். பெற்றோர்களின் சொத்துக்களையடைய பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
    • பெண்களுக்கான சொத்து உரிமை குடும்ப ஆண்களால் சீர் என்னும் குடும்ப பந்தத்தால் பாதுகாப்பு அச்சுறுத்தலால் உருவாக்கப்பட்டு சுரண்டபடுவது அரசுக்கு தெரியாத ஊடகங்களுக்கு புரியாத ?
  • 3. 1961 ஆம் ஆண்டு வரதட்சணை தடுப்புச் சட்டம் (1984 இல் திருத்தப்பட்டது). வரதட்சணை வாங்குபவர்களுக்கு சிறைத் தண்டணைகளை கூடிய கடுந்தண்டணைகளை அளிக்கின்றது.
    • வரதட்சணை கொடுமைகளும் கொலைகளும் நாட்டில் நடப்பதே கிடையாதா ?
  • 6. 1989 ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச்சட்டம் (தமிழக அரசின் திருத்தச்சட்டம்) பெண்களுக்குப் பரம்பரை சொத்தில் சமபங்குரிமை
    • .
  • 7. தமிழக அரசின் 1999 ஆம் ஆண்டு பெண்களை கண்ணியமற்ற முறையில் சித்தரிப்பதை தடை செய்யும் சட்டம், இதனால் வாரப்பத்திரிகைகள், சுவரொட்டிகள், விளம்பர பலகைகள், ஊடகங்கள் போன்றவைகளில் பெண்களை கண்ணியமற்ற முறையில் சித்தரிப்பதை, விளம்பரப்படுத்துவதை தடை செய்கின்றது. (நன்றி : http://ta.wikipedia.)
    • இந்த சட்டத்தின் படி எல்லா அச்சு ஊடகத்தின் அட்டைப்படங்களும் பதிக்கப் படுதா ? திரைப்பட சுவரொட்டிகள் கண்ணியமாக பெண்களை சிதரிககுதா ?
 இந்திய ராணுவம் தினமும் இந்திய பழங்குடி பெண்களை கற்பழிக்கின்றதே அவை பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா ? சில ஆண்டுகளுக்கு முன் இந்திய ராணுவம் எங்களை கற்பழித்து விட்டது என்ற பதாகை தங்கி அஸ்ஸாம் மாநில பெண்கள் நிர்வான போராட்டம் நடதின்னர்களே அவர்களுக்கு நடந்தது கொடுமை இல்லியா?

அப்போது எல்லாம் அமைதியாக இருந்த அரசுகளுக்கும் இப்போது சினிமா காத நாயகன் போல வீரம் கொட்டுவது ஏன் ?
பெண்களை உடலுறவு கருவியாக சித்தரிப்பதன் வெளிப்பாடு தான் இப்போது வந்து இருக்கும் புதிய சட்டம் . உண்மையில் பெண்களுக்கான அக்கறை இருக்கும்  அரசுக்கு பெண்களுக்கான இட ஒதுக்கிடு மசோதா மறந்து பொய் இருக்குமா ? பெண்களுக்கான தனி நிதி அறிக்கை மறந்து பொய் இருக்குமா ? அரசு மற்றும் தனியார் துறைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கிடு ஞாபகம் வராத ?

பாராளுமன்றத்தில் இருந்து ஊடகம் பொது சமுகத்தின் கவனத்தை திசை திருப்பவே டில்லி பாலியல் சம்பவம் பெரிதாக்க பட்டது அரசு மற்றும் ஊடகத்தால் எதிர் பார்த்த விளைவு  நிகழ்ந்து விட்டது மக்கள் பாராளுமன்றத்தை மறந்து விட்டார்கள் . சட்டம் குறித்து பேசுவோர்களும்  இப்போது அப்சல் குரு தண்டனை குறித்து பேச தொடங்கி விட்டனர்

அடுத்து இன்னும் சில துக்கு தண்டனை தலைப்பு செய்தியாக வரும் அதை பற்றியும் விரிவாக பேசும் . மீண்டும் ஒரு பாலியல் கொடுமை என  கவனம் திருப்பும் ஊக்தி  அரசியல் இப்போது பெண்களை மையமாக வைத்து செயல் படுகிறது  எப்போது புரிய போகிறதோ .

Saturday, February 9, 2013

பறையிசை

பறை என்னும் சொல் தமிழ் இலக்கியத்தில் சொல்லுதலுக்கு பெருமளவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதை பிங்கல நிகண்டும் உறுதி படுத்துகின்றது. பறையொலியால் பறையர் சமுகம் விடுதலை பெறுமா? பறை விடுதலை கருவியாக?  என்ற கேள்வி எனக்குள் நெடுங்காலமாக உண்டு.

      பறையிசைப்பதால் தலித்துகள் சமுக நிலையிலும், அரசியல் நிலையிலும், மற்றும் பொருளாதார நிலையிலும் எந்த வகையான மாற்றத்தை கண்டுள்ளனர் என்பதை பறை விடுதலைக்கான கருவி என்போர் உணர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
      பறை என்பதும் இழிவுகளில் இருந்து கட்டமைக்கும், சொல் அல்லது தலித்துகளுக்கான செயல். தாழ்த்தப்பட்ட சமுகம் முன்னேற வேண்டும் என்றால், அல்லது விடுதலை பெற வேண்டும் என்றரால் அதனுடைய இழிவுத் தொழில்களில் இருந்து விடுதலை அடைய வேண்டும் . அப்போதுதான் சாதியத்தின் கட்டமைப்புகளை உடைக்க முடியும் என்று 80 களில் தலித் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி உருவானது.
      அந்த எழுச்சியை அந்தந்த பகுதியில் இருந்த தலித் தலைவர்கள் பெருமையோடும் துடிப்போடும் முன்னெடுத்தனர் . அய்யா இளைய பெருமாளும், வை.பா.அவர்களும், பெருந்தலைவர். சுந்தராசனும், பறையை மூலமாக கொண்ட பாரம்பரிய தொழில் எதிர்ப்பை பறை எதிர்ப்பாகவே முன்மொழிந்து தலித்துகளுக்கான பாரம்பரிய இழிவை துடைக்கும் பணியில் முன்நின்றனர்.
      பறையிசைக்க மருத்தால்  கடலுர் மாவட்டம், காட்டு மண்ணார் கோயில் வட்டம், ரெட்டியுர் கிராமத்திலிருந்த துருமயில் – சின்னப்பொண்னு .இவர்களின் மகன் பாண்டியன். காவல் துறையின் துப்பாக்கி சூட்டினால் 15.08.1985 அன்று இறக்கின்றார்.
      இதைப்போல பறையிசை எதிர்ப்பு போரில் பாதிக்ப்பட்டவர்களும், பங்கெடுத்தவர்களின் வரலாறும் நமக்கு தெரியாமல் மறைக்கப்பட்டு வருகிறது. இதே காலத்தில் ஆரணிவட்டம், அக்ராபாளையம் கிராமத்தில் பறையிசைக்க மறுத்தால் ஆதிக்க சாதியினரின் பிணம், எடுக்கமுடியாமல் சாதிகலவரம் நடந்து  காவல் துறையினர் தலித்துக்களை துரத்தி துரத்தி அடித்திருக்கின்றனர். அந்த காலத்தில் இந்த போராட்டத்தை நடத்தியவர். இந்த பகுதியில் இருந்த சமிபத்தில் மறைந்த அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைவராக இருந்த. திரு. அரி அவர்கள். இந்த வரலாறு அந்த பகுதி தலித் மக்களின் பழம் பெருமை பேசும் வாய்மொழி வரலாறாகவே இன்றும் இருக்கின்றது.
      பாரம்பரியத் தொழிலை விடாத எந்த விளிம்பு நிலை சமூகமும், விடுதலை பெற்றது இல்லை. அந்த வகையில் கிராமந்தோறும், தலித்துகளின் பாரம்பரியத் தொழிலை இருக்கிப் பிடித்துக்கொண்டிருக்கும். பறையை எவ்வாறு தலித்துகளுக்கான விடுதலைக் கருவி என்று சொல்லமுடியும்.
      பறையை பொதுசமுகம் இன்னும் தலித்துகளோடு மட்டுமே தொடர்புபடுத்திப் பார்க்கின்றது. பொதுச் சமூகம் அதனை இசைக் கருவியாக ஏற்றுக் கொள்ளாதவரை அது இழிவுக் கருவி.  உதாரணத்திற்க்கு திருமணங்களுக்கு தவில் இசைக்கும் கலைஞர்களுக்கும், தவிலுக்குமான இலவச பேருந்து அட்டையை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. அவர்கள் நலிவுற்ற கலைஞர்கள் என்பதால்.
      அவர்களை விட கீழான நிலையில்தானே இன்று சேரிகளில் சாவுக்கு பறையிசைக்கும் பறையிசைக் கலைஞர்கள் இருக்கின்றனர். தவில் இசைக்கும் கலைஞர்களுக்கு திருமணம்தோறும் முன்னுரிமையும் ஒரு உயர்ந்த தொகை கூலியாகவும் வழங்கப்படுகின்றது.

      பறையிசையையும், பறையையும் அரசு சாதிய கண்ணோட்டத்தில் பார்க்கின்ற காரணத்தால், பறையிசையையும், பறைஇசைக் கலைஞர்களையும் அங்கிகரிக்க மறுக்கின்றது.
      தொண்டு நிறுவனங்களின் முன் முயற்சியால் தான் தமிழகத்தில் இன்று பறையிசை பரவிக்கொண்டு வருகின்றது. அவர்கள்தான் பறையிசைக் குழுவை நடத்தும் புரவலராக இருக்கின்றனர். அதிலும் பறையை பறையர் சாதி அல்லது தலித்துகள் மட்டுமே இசைக்க வேண்டும் என்னும் சாதிய கட்டமைப்பைக் கொண்டே அந்த பறையிசைக் குழுக்கள் உருவாக்ப்பட்டு அவர்களால் இசைக்கப்படும் இசை, சேரிகள் தோறும் உள்ள சாதிய கட்டமைப்பை உடைக்கும் கருவி என்பதை எப்படி நம்புவது தோழர்களே.
      ஒரு காலத்தில் பறை இசைக்க மறுக்க வைத்தப் போராட்டங்களை வேகமாக முன்னெடுத்த இந்திய குடியரசு கட்சியின் மேடைகளில் கூட இன்று பறை இசைக்கப்படுவதுதான் மிகுந்த வேதனை. அவர்களைப்ப் பொருத்த வரை சாதிய இழிவு நிலை மாறிவிட்டதாக கருதுகின்றனரோ என்னவோ.
ஆனாலும் இழிவும், தேவையும் அப்படியேதான் உள்ளது. குடியரசுக் கட்சித் தலைவர்களே கூட அதனை கூட்டம் சேர்க்க பயன்படுத்திக் கொள்ளும் உத்தியாக பார்க்க தலைப்பட்டு விட்டனர் என்பதைதான் இது காட்டுகின்றது.
      இன்றும் கூட பறையிசைக்கு எதிராக அல்லது பறையிசைத்தலுக்கும் , சாதியத் தொழில்களுக்கும் எதிராண ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை தலித்துகளுக்கும், தலித் அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.
      தோல் இசைக் கருவிகளுக்கு கிடைக்கும் மரியாதை, மிருதங்கம், தவில், உறுமி ஏன் பறைக்க கிடைப்பதில்லை என்று என்றேனும் பறையிசையை விடுதலைக் கருவிகளாக்குவோம் என்போர் எண்ணிப் பார்த்த்துண்டா?

Tuesday, February 5, 2013

சுற்று சூழலும் சாதிய புனிதமும்


சுற்று சூழலும் சாதிய புனிதமும்


நாட்டிற்கு இலக்கணம் வகுத்த அய்யன் திருவள்ளுவரும் " இரு புனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு " என நாட்டிற்கான இலக்கணத்தை வகுத்துள்ளார். மலையும் மழை மேகமும் காடும் தான் ஒரு நாட்டிற்கு உறுப்புகளாக இருக்க வேண்டியவை என்பது அவர் கருத்து .

இன்று சுற்று சுழலுக்கு பெரும் சிக்கலாக இருப்பது மழை குறைவும்,
நிலத்தடி நீர்மட்டம் குறைவும் . மழை பொழிவு குறைய காடுகளை அழித்து பெரு  வணிகர்களின் குடில்களாக கட்டுவதும்,மலை மீதுள்ள மரங்களை வெட்டி தேனீர் தோட்டமும், காபி தோட்டமும் அமைப்பதால் மலைக்கு மேல் தவழும் மேகங்களை ஈர்க்க மரம் இல்லாமல் மழையை கருவுற்று இருக்கும் மேகங்கள் நிறை பிரவசவமாக இல்லாமல் குறை பிரசவமாகவே மழை பொழிகிறது

நிலத்தடி நீர் மட்டம் உயராமல் போவதற்கு இன்று பெருமளவு பயன்படுத்தும் பிளாஸ்டிக் குவளைகளே காரணம் . நாட்டில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் குவளைகளின் பயன்பாடு தலை விரித்து ஆடுகின்றது . தேனீர் ,காபி , மது தண்ணீர் ,பழச்சாறு இவைகளை அருந்த இன்று பிளாஸ்டிக் குவளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்த படுகிறது . காரணம் என்ன குடிப்பவரின் மனதுக்குள் ஒளிந்து இருக்கும் சாதி .

நகர் புறங்களில் முன் பின் தெரியாத மக்கள் வந்து போகும் இடங்களில் சாதி இந்துக்கள் பிளாஸ்டிக் குவளைகளில் குடிப்பதால் தங்களின் சாதி புனிதம் காப்பாற்ற படுவதாக நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் குடித்து போட்ட பிளாஸ்டிக் குவளையால் வரும் விளைவுகளை பற்றி அவர்கள் கவலைப்படுவது கிடையாது .

சூடான பிளாஸ்டிக் குவளை மூலம் எதை குடித்தாலும் பிளாஸ்டிக் உருகி உணவோடு குடலுக்கு செல்வதால் புற்று நோய் வருகின்றது என அறிவியல் அறிஞர்கள் கண்டு பிடித்து சொல்லி இருந்தாலும் என் சாதிகாரன் தவிர வேறு எந்த சாதிகாரன் தொட்டு குடித்து இருந்தாலும்   நான் குடிக்க மாட்டேன் என்ற பிடிவாதத்துக்கு உள்ளே ஒளிந்து இருப்பது சாதிதானே .

சுத்தம் என்று பேசினாலும் அந்த சுத்தத்துக்குள்ளும் சொல்ல வருவது சாதிய புனிதம் தானே . இந்த பிளாஸ்டிக் குவளைகள் மண்ணில் எளிதில் மக்காமல் மழை நீரை மண்ணுக்குள் அனுப்பாமல் கடலுக்குள் அனுப்பினால் என்ன என் சாதி புனிதம் காப்பாற்ற பட்டாள் போதும் .

 இந்த  மனோபாவம் இல்லாமல் பிளாஸ்டிக் குவளை வேண்டாம் கண்ணாடி குவளையில் டீ , காபி  குடிக்கும் துணிச்சல் ( சில்வர் குவளை ஓரங்களில் அழுக்கு படிந்து இருப்பதால் அது சுகாதாரமானது அல்ல) உள்ள சாதி இந்து யாரேனும் இருந்தால் அவருக்கு உண்மையாகவே சிலை வைக்கலாம் .
     

Monday, February 4, 2013

வணிகம் வசப்படாத தலித்துகள்

வணிகம் வசப்படாத தலித்துகள்

சுததந்திரம் அடைந்து 65 ஆண்டுகளுக்கு மேலாகியும் மண்ணின் மைந்தர்களான தலித்துகள் குறிப்பாக தமிழக தலித்துகள் இந்தியவில் வறுமை நிலை அதிகமாக இருப்பதாக திட்ட குழுவின் ஆண்டறிக்கை தெரிவிக்கின்றது
இவ்வாறு தலித்துகளின் வறுமை நிலைக்கு காரணம் என்ன என்று ஆய்வு செய்யவேண்டிய தேவை இருக்கின்றது

முதலில் தலித்துகளின் மனோபாவம் பட்டுக்கோட்டையார் சொல்லும் " கஞ்சி காஞ்சி என்றால் பானை நிறையாது சிந்த்தித்து முன்னேரவேண்டுமடி"  என்னும் பாடல் வரிகளுக்கு ஒப்ப " புதுமை பித்தனின் கதையான 'ஒரு நாள் கழிந்தது ' போலவே வாழ்ந்து வருகின்றனர் .

இன்றைய விரைவு உலகத்தில் குறிக்கோள் இல்லா பயணம் நுகர்வு மயமாக்கப்பட்டு சிதைந்து போகிறது . ஒரு சமுகம் பொருளாதரத்தில் முன்னேற அந்த சமுகத்தின் ஒட்டுமொத்த மக்களும் முன்னேற வேண்டும் என்பதை புரிந்துகொண்டு ஒட்டுமொத்த சமுகமும் பொருளாதரத்தில் முன்னேற 3 வகையான வழி முறைகளை கைகொள்ள வேண்டும்

  1. பணி பரவலாக்கம் (Occupational mobility)
  2.  கூட்டு  செயல்பாடு (Community activities )
  3. நிறுவன மயமாக்கம் ( organization building ) 
இந்த வழிமுறைகள் எதையும் பின்பற்றாமல் ஒரு சமுகத்தின் பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகுமா என்பதை சுதந்திரத்துக்கு பின் நம் வாழ்க்கை நிலை மாறாமல் இருப்பதை வைத்து நாம் புரிந்து கொள்ள வேண்டும் .

பொதுவாகவே தலித்துகள் கடுமையான உழைப்பாளிகள் ஆக்கபுர்வமான செயல் பட்டாளர்கள் இன்று எல்லா தொழிலகளிலும் கடை நிலை மற்றும் இடை நிலை பணி  செய்து கொண்டு இருப்பவர்கள் .அனால் அந்த தொழிலை சொந்தமாக செய்ய முனையாதவர்கள் . அவ்வாறு சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என்னும் முனைப்போடு செயல் பட்டால் முன்னேறலாம் .

உதாரனமாக மாட்டுக்கறி என்பது தலித்துகளின் குறிப்பாக பறையர்களின் வாழ்வோடு பிணைந்த ஒரு உணவு . அந்த உணவு தயாரிக்கும் தொழிலில் மாடு அறுதல் மற்றும்  சமைதலில் உதவி என அவர்களின் பங்கு இருந்தாலும்  அதை சந்தை படுத்துவதில் அவர்களின் பங்கு எள்முனையளவும் இல்லை .அதை மற்று சமூகமும் மதமும் கையில் எடுத்துக்கொண்டதால் தங்களின் பாரம்பரிய உணவை வணிகமாக்கும்  முயற்சியல் வெற்றி கொள்ள வேண்டிய தேவையும் கட்டாயமும் தலித்துகளுக்கு இருக்கின்றது



இன்று பெரும்பாலான நகரங்களில் டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் இருக்கின்றது அது தேவையான நிகழ்வும் கூட ஆனால் 30உறுப்பினர்களை கொண்டு முதலில் ஆரம்பிக்கும் சங்கம் தொடர் செயல் திட்டம் இல்லாததால் உடைந்து அல்லது உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து அந்ததந்த நகரங்களில் பெயரளவுக்கு இருக்கும் . அதற்க்கு மாற்றாக சங்கம் ஆரம்பித்ததும் அடுத்த செயல் திட்டமாக தங்களின் ஆட்டோக்களை பழுது பார்க்க ஒரு service center அணைத்து உறுப்பினர்களும் கொஞ்சம் முன்பணம் போட்டு ஆரம்பித்து இருந்தால் அவர்களுடைய ஆட்டோவும் பராமரிப்பு செலவு இல்லாமலே பழுது பார்த்து கொள்ளலாம்
மற்ற ஆடோக்களுக்கும் தரமான சேவையை கொடுத்து அதன்வழி தலித் mechanic ஒருவருக்கு மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு அளித்து இருக்கலாம்
பொருளாதார மேம்பாட்டுக்கு ஒரு தொடர் திட்டம் கைவசப்பட்டு இருக்கும்.

படித்து அரசு வேளைகளில் இருக்கும் தலித்துகள் SC /ST  சங்கம் அமைத்து அரசியல் அமைப்பு சட்டத்தின் படி தங்களின் உரிமைக்கு குரல் கொடுக்கின்றனர் இருந்தும் அவர்களும் பொருளாதார கட்டமைப்பை தங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ள தவறி விடுகின்றனர் . அதனால் முதலில் வலிமை தோற்றம் காட்டி பின் நீர்த்து போகின்றது அணைத்து சங்கங்களும் .

மாறாக அவர்களும் தங்களுக்கு கூட்டு முதலிட்டு திட்டத்தின்படி தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் தேவையான பொருளை விற்பனை செய்யும் வகையில்   விற்பனை சங்கத்தையும் உபரியாக நடத்தி வந்தால் தலித் மக்களின் பணம் தலித்துகளின் கையில் சுழலும் வண்ணம் செய்யும் பொது பொருளாதார முன்னேற்றம் சாத்தியமாகும் . 

மற்ற சமூகங்களின் எழுச்சி பொருளாதரத்தில் அவர்களை வலிவடைய செய்கிறது . ஆனால் தலித்துகள் மட்டும் தங்கள் சமுக எழுச்சியை அரசியல் எழுச்சியாக நீர்த்துப்போக செய்கின்றனர் . பொருளதாரம் வசப்படா தவர்களுக்கு அரசியல் வசப்படாது என்னும் உண்மையை இன்னும் தலித்துகளுக்கு சொல்ல தலைவர்கள் இல்லை தமிழ்நாட்டில் .

Sunday, February 3, 2013

நடுங்க வைத்த நடை பயணம்



நடுங்க வைத்த நடை பயணம்

வரலாறு தனது பயணத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு  உரிமைகள் மறுக்கும்போதும் ,பரிக்கும்போதும் பாதிக்கப்பட்ட  மக்களை ஒன்று சேர்த்து நீதி கேட்டு பல நடைபயணங்களை பார்த்திருக்கிறது , இருந்தாலும் 22.01.2013  அன்று போச்சம்பள்ளியில் சமுக சமத்துவ படை கட்சி சார்பாக தருமபுரி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று சேர்த்துக்கொண்டு எழுத்தாளரும்  அக்கட்சி தலைவருமான பெருமைமிகு ப .சிவகாமி அவர்கள்  தலைமையில் தொடங்கிய நடைபயணம் பெரும் தடத்தை வரலாற்றில் பதிவு செய்த பயணமாக 29.01.13 அன்று சென்னையில் மாநில ஆளுநரிடம் மனு கொடுத்து நிறைவடைந்தது.

இந்த பயணத்தை உணர்வு ரீதியாகவும், வரலாற்று அடிப்படை  கண்ணோட்டத்தோடு பதிவு செய்ய வேண்டிய தேவை தலித் மக்களுக்கு இருக்கிறது .தலித்  வரலாற்றில் அண்ணல் அம்பேத்கர் , ஐயா இளைய பெருமாளுக்கு பிறகு நிகழ்ந்த தலித் தலைவர் ஒருவரின் நீண்ட தூரம் (500 கிலோ மீட்டர் )நடைபயணம் இது .

நீண்ட காலமாய் தலித் மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு போய் இருந்த தலைவர்களில் முதன் முதலாய் தலித்  மக்களோடு  மக்களாய் கோட்டையை  நோக்கி நடந்துவரும்  தலைவராகவே சிவகாமி தலித் மக்களுக்கு தெரிகிறார்.
பாதிக்கப்பட்ட தருமபுரி மக்களுக்கு காகிதத்தில் கரிசனம் கட்டாமல் , அறிக்கைகளை ஆயுதமாக்காமல் விடியலை வெளிச்சம்போட்டு காட்டிய நம்பிக்கை நாயகி  அவர் .

பன்னிரெண்டு மணி பனி பொழியும் இரவில் 25.01.13 அன்று ஆரணி வந்தடைந்த நடைபயண கூட்டத்திடம் சோர்வு இல்லை. விரக்தி இல்லை . கட்டுக்கோப்போடு இருந்தது . இரவு உணவு முடிய 1 மணிக்கும் மேலானபின்னும் கூட்டம் சிவகாமி பேச்சை ஆர்வத்தோடு கேட்டது மிகுந்த வியப்பு . தருமபுரியில்  வந்திருந்த தலித் சகோதர சகோதரிகளின் கண்களில் சோகத்தை விட , விரக்தியை விட நம்பிக்கை நிரம்பி இருந்தது .

தங்களுக்கு தாயாகவும் , தங்கையாகவும் , தமக்கையகவும் , தங்க தலைவியாகவும் அறிவும் நம்பிக்கையும் போரட்டகுனமும் நிரம்பிய தலைவியோடு நாங்கள் நடைபயணம் வந்து இருக்கின்றோம். நாம் தனித்து இல்லை நமக்கு பின் பெரும் கூட்டம் இருக்கின்றது நிச்சயம் வெற்றி எங்கள் கைகளில் வரும் அது சிவகாமியால் முடியும் என்ற நம்பிக்கை அவர்களோடு பேசியதில் புரிந்து கொள்ள முடிந்தது அந்த வாய்ப்பை வழங்கிய சிவகாமிக்கு நன்றி .

5 அக்டோபர் 1789 பாரிஸில் நடந்த வேர்சைல்ஸ் நடை பயணத்தில் தான் பெண்கள் முதன்முதல் பெருமளவில் பங்கேற்ற பதிவு இருந்தாலும் . ரஷிய புரட்சியில் பெண்கள் ஆர்பாட்டம் ஊர்வலம் முதலிய நிகழ்வுகளில் பங்கெடுத்து இருந்தாலும் வரலாற்றில் பெண்தலைமையில்  நடைபெற்ற முதல் நடைபயணம் இது. ஊடகங்கள் இதை மறைத்தாலும் உண்மை உலகத்துக்கு ஒருநாள் தெரியும் . உண்மையில் சிவகாமிதான்  தலித் மக்களின் உண்மையான புரட்சி தலைவி .

வழக்கமாக இம்மாதிரி கலவரங்கள் முடிந்து பல ஆண்டுகள் ஆனபிறகே நீதியும் நிதியும் கிடைக்கும் . அனால் இந்த நடைபயண நிறைவு நாளிலேயே பாதிகப்பட்ட மக்களுக்கு நிதி உதவி கிடைக்க அரசு உத்தரவு போட்டது சிவகாமி சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கின்றார் என்பதை தலித் மக்களுக்கு உணர்த்தியது . மற்ற சாதிக்கும் அரசுக்கும் இவருடைய நடைபயணம் நடுங்க வைத்த நடை பயணமாய் இருந்தது .













இதையும் படியுங்கள்