Showing posts with label பௌத்த கூட்டியக்கம். Show all posts
Showing posts with label பௌத்த கூட்டியக்கம். Show all posts

Saturday, August 1, 2020

ஆத்திசூடி மீள் வாசிப்பு


ஆத்திசூடி மீள் வாசிப்பு புத்தகம். விலை 240 + 50(கொரியர் செலவு) மொத்தம் 290. கூகுள் பே யிலும் தொகையை செலுத்தலாம். எண். Google pay no:9150724997
வங்கியில் செலுத்த விரும்புவோருக்கு
வங்கி விவரம்
Amaresan,
Account No: 107801000007712, IOB Bank, Polur Branch, IFSC Code, IOBA0001078... 

பேச. 9150724997

Monday, October 17, 2016

பௌத்த கூட்டியக்கத்தின் செயல் திட்டம்

நமோ புத்தாயா
பௌத்த கூட்டியக்கம் ஒருங்கினைக்கும் நவம்பர் 13ல் போதிசத்வா. அம்பேத்கர் மணி மண்டபத்தில் காலை பத்து மணிக்கு  நிகழ உள்ள பௌத்தம் ஏற்போம் நிகழ்வு குறித்து பலரின் மனதுக்குள் இருக்கும் ஐயப்பாடுகளுக்கான சில விளக்கமும் தெளிவும். 
  1. இந்நிகழ்வுக்கு வரும் அனைத்து அமைப்புகளும் அவர்கள் பெயரிலே வரலாம்.
  2. தனித்தனி அமைப்புகள் எங்கோ எப்பொழுதோ நிகழ்த்தும் பௌத்தம் ஏற்ப்போம் நிகழ்வை பௌத்த கூட்டியக்கம் 13/11/2016அன்று ஒரே இடத்தில் ஒருங்கிணைப்பு செய்கிறது.
  3. எனவே அவரவர் அமைப்புகள் அவரவர் அமைப்பு சார்ந்த நபர்களோடு பௌத்தம் ஏற்க அழைக்கிறேன்.
  4. பல அமைப்புகள் தனித்தனியாக நிகழ்த்தும் போது கவனம் ஈர்காது. அதே நேரத்தில் பலரும் மற்றும் பல அமைப்புகளும் சேர்ந்து ஒரே இடத்தில் பௌத்தம் ஏற்கும் போது மிகு முக்கியத்துவம் பெறும். இதைத்தான் பௌத்த கூட்டியக்கம் செயல்படுத்த முயற்சிக்கின்றது.  இதுதான் செயல் திட்டம்.
  5. அண்ணல் பௌத்தம் ஏற்ற 60 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பெரும் திரளான மக்கள் பௌத்தம் தழுவ வேண்டும் என்னும் நோக்கத்திற்காக இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.
  6. இந்த நோக்கத்தில் வெற்றி பெற உங்களின் பங்களிப்பை மற்றும் ஒத்துழைப்பை எதிர்பார்கிறேன். நன்றி

இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிரவும்
மா.அமரேசன்.
புத்தகயா
பேச. 9150724997.

Thursday, October 6, 2016

இன்றைய சூழலில் பௌத்தம் யாருக்குத் தேவை.

உண்மையில் மிக வருத்தமாகத்தான் இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் ஓராயிரம் கேள்விகள் பௌத்தம் தொடர்பாக படித்தவர்களிடமிருந்து விவாதங்களாகவும், விதண்டாவாதமாகவும் வருகின்றது.
ஒவ்வொரு கேள்விக்குப் பின்னாலும் 
  • அறியாமையும், 
  • சிறு பிள்ளைத்தனமும், 
  • அதி புத்திசாலித்தனமும் ஒலிந்து கொண்டிருப்பதை உணர்கின்றேன் நான்.

உண்மையில் பௌத்த கூட்டியக்கம், 
  • மெத்தப் படித்த்தவர்களுக்கா எனில் இல்லை, 
  • அம்பேத்கரின் புத்தரும் அவர் தம்மமும் அட்டை டு அட்டை படி படித்தவர்களுக்கானதா எனில் இல்லை.
  • நவயானம் சிந்தாந்தம் கொண்டவர்களுக்கா எனில் அதுவும் இல்லை.
  • தேரவாதத்தில் தேர்ச்சியுற்றவர்களுக்கா எனில் அதுவும் இல்லை.

இவர்கள் எல்லாம் பௌத்தத்தில் தேர்ச்சியும் மிகு புலமையும் பெற்றவர்கள், 60 ஆண்டுகளாக அம்பேத்கரின் பௌத்தத்தை தோள் கொடுத்து தாங்கிக் கொண்டிருப்பவர்கள். இவர்களை நான் தொந்தரவு செய்யப் போவதும் இல்லை, அவர்களின் சுமையை துாக்கப் போவதும் இல்லை.
பௌத்த கூட்டியக்கத்தின் நோக்கம், 
  • சேரிகளில் உள்ள தினமும் தீண்டாமையின் வடிவத்தை எவ்வகையிலாவது அனுபவித்துக் கொண்டிருக்கும் என் இரத்த உறவுகள், தீண்டாமையின் மூல காரணமாக இருக்கின்ற அவர்கள் தற்போது வணங்கும் தெய்வங்களை விடுத்து,,
  • எந்த கடவுளை அவர்களால் தொட்டு வணங்க இயலுமோ, அந்த கடவுளை வணங்கச் செய்வது. 
  • எந்த கடவுளை வணங்கினால் மதவாதமும் வன்முறையும் உருவாகாதோ அந்த கடவுளை வணங்கச் செய்வது. 
  • மனித குலத்துக்கு சமத்துவம் சகோதரத்துவம் இவற்றை போதித்து, ஒடுக்கப்பட்ட மற்றும் தனிமைப் படுத்தப்பட்ட மக்களை தன்னுடன் தோழர்களாகவும், சீடர்களாகவும் சேர்த்துக் கொண்டு அறம் சார்ந்த வாழ்வியலோடு எப்பொழுதும் மகிழ்ச்சியாக வாழ வழி சொன்ன பகவான் புத்தரை வழிபடுவதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதுதான்.

இங்கே வழக்கமாக கேள்வி கேட்ப்பவர்கள் ” புத்தரை வழி பட்டால் எல்லாம் தீர்ந்து விடுமா? தயவு செய்து கேள்விகள் கேட்க வேண்டாம் வழி பட்டுப் பாருங்கள் தீரும். நம்பிக்கை தானே வாழ்க்கை .
புத்தரின் வார்த்தையில் சொல்வதெனில், நம்பிக்கை உடையவனிடத்தில் அய்யங்களும், அவ நம்பிக்கையும், கேள்விகளும் இருக்காது. 

Thursday, September 22, 2016

பௌத்தம் ஏற்போம்

நமோ புத்தாயா
2016 நவம்பர் மாதம் 13ம் தேதி. காலை பத்து மணிக்கு. சென்னையில் போதிசத்வா.அம்பேத்கர் மணி மண்டபத்தில் நடக்க இருக்கும் பௌத்தம் ஏற்ப்போம் நிகழ்வு குறித்து சில விளக்கம்.
தொலை பேசி யில் பேசும் பலரும் தான் மட்டுமே பௌத்தம் ஏற்க விரும்புவதாக விளக்கம் கேட்காறார்கள். உண்மையில் தனி நபர்கள் பௌத்தம் ஏற்பது சமுகத்தில் இருந்து அவர் களை தனிமை படுத்துவதாக அமைந்துவிடும். எனவே குழுவாக பௌத்தம் ஏற்பதே பௌத்த வளர்ச்சி க்கு பயன்படும்.

கிருத்துவர்களெனில் ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் செல்வர். இந்துக்கள் செவ்வாய் வெள்ளி கோயிலுக்கு சொல்வர். அதேபோல் தான் மட்டும் பௌத்தம் ஏற்பவர் எங்கு போவார்.
அதே நேரத்தில் ஒரு ஊரிலிருந்து குழுவாக பௌத்தம் ஏற்ப்போர் இனைந்து அந்த ஊரில் ஒரு பௌத்த விகாரை உருவாக்க இயலும். அதன் வழி பௌத்தம் வளரும். நன்றி

Saturday, September 17, 2016

பௌத்த உபாசகர்கள் தொலை பேசி எண் தேவை.

வணக்கம்

சென்னையில் வரும் நவம்பர் மாதம் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கிழமை காலை பத்து மணிக்கு . போதிசத்வா. அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடக்க இருக்கும் பௌத்தம் ஏற்ப்போம் நிகழ்வுக்கு ஒருங்கிணைப்பு செய்ய தமிழ்நாட்டில் உள்ள பௌத்த உபாசகர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பு செய்ய வேண்டிய தேவையும் உள்ளது. பௌத்தம் ஏற்ப்போம் நிகழ்வில் மக்களை திரட்டுவதில் அவர்களின் பங்களிப்பும் தேவை. அதே நேரத்தில் பௌத்தம் ஏற்ற பிறகு அவர்களுடைய பணியும் துவங்குகின்றது. 
எனவே இந்த குழுவில் இருப்பவர்கள் உங்களுக்கு தெரிந்த பௌத்த உபாசகர்களின் பெயரையும் தொலைபேசி எண்ணையும் பகிரக் கேட்டுக் கொள்கிறேன்.
அக்டோபர் மாதம் அவர்களையும் ஒருங்கினைத்து கூட்டம் நடத்த வேண்டும். நன்றி.
புத்தகயாவிலிருந்து.
மா.அமரேசன்
17/09/2016
முன்னிரவு.7:16

Thursday, September 15, 2016

பௌத்த கூட்டியக்கம்

தம்ம உறவுகளுக்கு வணக்கம், 
12.09.2016 அன்று காலை 11. மணி அளவில் புத்த கயாவில் உள்ள அனைத்து இந்திய பிக்குகள் சங்க செயலாளர். பாந்தே. திரு. பிரகதீப் கயா அவர்களை சந்தித்து பேசினேன். சென்னையில் வரும் நவம்பர் 13ம் தேதியன்று போதிசத்வா. அம்பேக்கர் மணிமண்டபத்தில் நடக்க இருக்கும் பௌத்தம் ஏற்ப்போம் நிகழ்வு குறித்து பேசினேன். 
பௌத்தம் ஏற்ப்பதில் ஓர் உலக சாதனையை திட்டமிட்டு இந்த நிகழ்வு நடத்தப்படுகின்றதென்றும். அதனுடைய நுன் அரசியலையும் விளக்கினேன். அவர் அதை கேட்டதும் மிகவும் மகிழ்ந்து சென்னை நிகழ்வைப் போல் இந்தியா முழுவதும், பௌத்தம் ஏற்பதில் மாநிலத்துக்கு மாநிலம் உலக சாதனை நிகழ்த்த வேண்டும். அதைப் போல் செய்வதில் உனது வழிகாட்டுதல் வேண்டும் என்றும் சொன்னார்.
இந்நிலையில் நவம்பர் 13ம் தேதி சென்னையில் நடக்க இருக்கும் பௌத்தம் ஏற்ப்போம் நிகழ்வுக்கு பௌத்த அன்பர்கள், தாங்களும், தங்களுடைய குடும்பத்தில் ஒரு சிலரும் வந்தால் போதும் என்னும் மனோபாவத்தில் இருந்து மாற்றம் பெற்று குறைந்ததது, தாங்கள் வசிக்கும் ஊரில் உள்ள அனைத்து பட்டி யல் இன மக்களையும் பௌத்தம் ஏற்க செய்ய பணி செய்து வெற்றி பெற முயற்சிக்க கேட்டுக் கொள்கின்றேன்.
பௌத்த அமைப்பு மற்றும் இயக்கம் வைத்திருக்கும் தலைமைகள் தங்கள் அமைப்பின் சார்பாக முழு முயற்சி எடுத்து மாவட்டம் அல்லது மாநில அளவில் இந்த கருத்தை கொண்டு சென்று உலக சாதனை நிகழ்வில், அவர்களையும், அவர்களுடைய அமைப்பின் பெயரையும் அழுத்தமாக பதிவு செய்ய பணியாற்ற மிகப் பணிந்து கேட்டுக் கொள்கின்றேன்.
புத்தகாயாவிலிருந்து.
மா. அமரேசன்.

பௌத்த கூட்டியக்கம்

தம்ம உறவுகளுக்கு வணக்கம், 
12.09.2016 அன்று காலை 11. மணி அளவில் புத்த கயாவில் உள்ள அனைத்து இந்திய பிக்குகள் சங்க செயலாளர். பாந்தே. திரு. பிரகதீப் கயா அவர்களை சந்தித்து பேசினேன். சென்னையில் வரும் நவம்பர் 13ம் தேதியன்று போதிசத்வா. அம்பேக்கர் மணிமண்டபத்தில் நடக்க இருக்கும் பௌத்தம் ஏற்ப்போம் நிகழ்வு குறித்து பேசினேன். 
பௌத்தம் ஏற்ப்பதில் ஓர் உலக சாதனையை திட்டமிட்டு இந்த நிகழ்வு நடத்தப்படுகின்றதென்றும். அதனுடைய நுன் அரசியலையும் விளக்கினேன். அவர் அதை கேட்டதும் மிகவும் மகிழ்ந்து சென்னை நிகழ்வைப் போல் இந்தியா முழுவதும், பௌத்தம் ஏற்பதில் மாநிலத்துக்கு மாநிலம் உலக சாதனை நிகழ்த்த வேண்டும். அதைப் போல் செய்வதில் உனது வழிகாட்டுதல் வேண்டும் என்றும் சொன்னார்.
இந்நிலையில் நவம்பர் 13ம் தேதி சென்னையில் நடக்க இருக்கும் பௌத்தம் ஏற்ப்போம் நிகழ்வுக்கு பௌத்த அன்பர்கள், தாங்களும், தங்களுடைய குடும்பத்தில் ஒரு சிலரும் வந்தால் போதும் என்னும் மனோபாவத்தில் இருந்து மாற்றம் பெற்று குறைந்ததது, தாங்கள் வசிக்கும் ஊரில் உள்ள அனைத்து பட்டி யல் இன மக்களையும் பௌத்தம் ஏற்க செய்ய பணி செய்து வெற்றி பெற முயற்சிக்க கேட்டுக் கொள்கின்றேன்.
பௌத்த அமைப்பு மற்றும் இயக்கம் வைத்திருக்கும் தலைமைகள் தங்கள் அமைப்பின் சார்பாக முழு முயற்சி எடுத்து மாவட்டம் அல்லது மாநில அளவில் இந்த கருத்தை கொண்டு சென்று உலக சாதனை நிகழ்வில், அவர்களையும், அவர்களுடைய அமைப்பின் பெயரையும் அழுத்தமாக பதிவு செய்ய பணியாற்ற மிகப் பணிந்து கேட்டுக் கொள்கின்றேன்.
புத்தகாயாவிலிருந்து.
மா. அமரேசன்.

பௌத்த சங்கம், அமைப்புகளின் முகவரி தேவை.

நவம்பர் 13ம் தேதி சென்னையில் போதிசத்வா அம்பேத்கர் மணி மண்டபத்தில் நடக்க இருக்கும் பௌத்தம் ஏற்ப்போம் நிகழ்வை ஒட்டி துண்டறிக்கை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடுவதற்காக இந்த குழுவில் உள்ள அமைப்புகளும் மற்றும் சேர்ந்து செயல்பட விரும்பும் அமைப்புகளின் பெயரை பதிவிட பனிந்து கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

அரச மரக்கன்று தேவை

வரும் நவம்பர் மாதம் சென்னையில் 13ம் தேதி போதிசத்வா. அம்பேத்கர் மணி மண்டபத்தில் நிகழ இருக்கும் பௌத்தம் ஏற்ப்போம் நிகழ்வை உலக சாதனை நிகழ்வாக திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றோம். அதனையொட்டி இந்த வேண்டுகோள் உங்கள் அனைவருக்கும் வைக்கப்படுகின்றது. 
வழக்கமாக பௌத்தம் ஏற்கின்ற நபர்களுக்கு இது வரையிலும், தரப்படுகின்றத பொருட்களுக்கு மாற்றாக, இம்முறை பௌத்தம் தழுவுபவர்களுக்கு, ஒரு அரச மரக் கன்றையும், ஒரு சிறு புத்தர் கற் சிலையையும் தருவதாக திட்டமிட்டு இருக்கின்றோம், அவ்வாறு அரசமரமும், புத்தர் சிலையும் தரும் பொழுது, அவர் அவருக்கு பிடித்த மான இடத்தில் அரச மரத்தையும் புத்தரையும் வைத்து வழிபாடு நிகழ்த்துவார். அதே நேரத்தில் அரச மரக் கன்றுகளும் நடப்பட்டிருக்கும். இதன் தொடர்ச்சியாக மரம் பெரிதாகும் பொழுது அடியில் இருக்கும் சிலையும் பெரிதாகிக் கொண்டே இருக்கும். மரம், சிலை, இவற்றைப் போல் கண்ணுக்குத் தெரியாமல் பௌத்தமும் வளர்ந்து கொண்டிருக்கும்.
எனவே, தற்போது முதல் தேவையாக நவம்பர் மாதம் நிகழ்வின் போது, பௌத்தம் ஏற்பவர்களுக்கு தருவதற்காக, அரச மரக்கன்று தேவைப்படுகின்றது. இதனை தர தயராக இருக்கும் சுற்றுச்சூழல் அமைப்பும் ஆர்வலர்களும் தயவு செய்து தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.
புத்தகயாவிலிருந்து
மா. அமரேசன்.

Wednesday, February 20, 2013

பௌத்தர்களாய் ஒன்றினைவோம்

பௌத்தர்களாய் ஒன்றினைவோம் 

கடந்த சில மாதங்களாக சென்னையில் அம்பேத்கர் மணி மண்டபத்தில் sc /st  பணியாளர் சங்கத்தின் சார்பாக பௌர்ணமி தோறும் பௌத்தர்களின் குடும்ப விழா தலித்து  மக்கள் சாதியை கடந்து, அரசியலை கடந்து, புத்தரின் வழியை பின்பற்றி அன்பையும் , சகோதர உணர்வையும் வளர்த்துக்கொள்ள நடக்கிறது.

அதை போலவே வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை ஒருங்கிணைத்து இந்த மாதம் முதல் பௌத்தம் ஏற்றுகொண்ட அல்லது ஏற்று கொள்வதில் ஆர்வமாய் இருக்கிற தோழமை வீட்டில் நடத்த திட்டமிட்டுள்ளோம் .

இந்த மதம் வரும் 24.02.13 அன்று ஞாயிறு கிழமை பிற்பகல் 3 மணி அளவில் RCM  பள்ளி வளாகத்தில் , பள்ளிகொண்டாவில் தளபதி கிருஷ்ணசாமி அவர்களின் மகன் இளைய தளபதி திரு .கி . கிருஷ்ணகுமார் அவர்களின் தலைமையில் நடக்க உள்ளது. சமுக சொந்தங்கள் இந்த நிகழ்வில் குடும்பத்தோடு கலந்து கொண்டு நமக்குள் உறவும் சகோதர உணர்வும் வளர பங்களிக்குமாறு கேட்டு கொள்கிறோம் நன்றி .

ஒருங்கிணைப்பு :


திரு . தண்டபாணி  - 98846 89631
திரு . தினகர்  - 98941 20551
திரு . மா .அமரேசன்  - 98659 76642

இதையும் படியுங்கள்