Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts
Monday, June 5, 2017
Friday, May 5, 2017
இசை ஞானியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
இசை ஞானியாரே...
வாழ்த்துக்கள்
இசை ஞானியாரே...
காற்றுக்கு உருவம் இல்லை
என கற்பித்தது கல்வி…
ஆயினும்
உங்களின் புல்லாங்குழலில்
இருந்து வரும்
காற்றுக்கு மட்டும்
உயிர் உண்டு
உணர்வு உண்டு
ஐம்புலன் உண்டு
என மெய்பித்ததால்
இசை ஞானி நீங்கள்...
என கற்பித்தது கல்வி…
ஆயினும்
உங்களின் புல்லாங்குழலில்
இருந்து வரும்
காற்றுக்கு மட்டும்
உயிர் உண்டு
உணர்வு உண்டு
ஐம்புலன் உண்டு
என மெய்பித்ததால்
இசை ஞானி நீங்கள்...
பட்டி தொட்டியெங்கும்
பாட்டாளியின் ஓசை ஒலிக்கும்,
உங்களின் கைபட்டதால்
அது பாட்டாளியின் இசையானது...
பாட்டாளியின் ஓசை ஒலிக்கும்,
உங்களின் கைபட்டதால்
அது பாட்டாளியின் இசையானது...
தோலிசை கருவிகளும்
உங்களால் சுரம் பாடியது...
உங்களால் சுரம் பாடியது...
நரம்பிசை கருவிகளும்
குத்துப்பாட்டிற்கு
பயன்பட்டது
உங்களுக்கு மட்டும்...
இசையை
புனிதமாக பாவித்தவர்களுக்கு
உன் இசை மொழி
கலக மொழி....
புனிதமாக பாவித்தவர்களுக்கு
உன் இசை மொழி
கலக மொழி....
பசியால் வாடிடும்
மக்களுக்கு
இசை யென்னும்
அமுத சுரபியால்
பசியாற்றிய
எங்கள் பன்னை புரத்து
ஆபுத்திரன் நீங்கள்...
மக்களுக்கு
இசை யென்னும்
அமுத சுரபியால்
பசியாற்றிய
எங்கள் பன்னை புரத்து
ஆபுத்திரன் நீங்கள்...
வாழ்க
வளமுடனும்
நலமுடனும்
நலமுடனும்
பல்லாண்டுகள்....
Sunday, November 23, 2014
Saturday, September 14, 2013
வாழ்க்கை பயணம்...
கடந்து போகும்
பாதையெல்லாம்
கடல் அலை
தாலாட்ட
நடப்பதோன்றும்
கடற்கரை அல்ல...
கல்லும் முல்லும்
காலுக்கு மெத்தை
என்று சொல்லி
நடக்க இது ஒன்றும்
சபரிமலை அல்ல..
நடந்த பாதையில்
நலமாய் திரும்ப
இது ஒன்றும்
மகிழுந்து பயணம் அல்ல...
வாழ்க்கைப் பயணம்....
அது எப்படி இருக்கும்...
ஆள் நடமாட்டம்
இல்லாத
அனுபவமில்லாத
காட்டை அழித்து
பாதை செய்வது....
முள் கிழிக்கும்,
கல் அடிபடும்...
கால் வைத்த இடமெல்லாம்...
நெருஞ்சி குத்தும்...
உடலெங்கும் காயம்
எஞ்சியிருக்க
மனம் எங்கும்
முள் குத்திய வலியும்
தனிமையின் தவிப்பும் தகிக்க
ஒரு வழி பாதையாய்
பயணம் தொடர
எனக்கு பின் வருபவனுக்கு
சுகமான பாதை
கிடைக்கும்....
பாதை போட்டவனக்கு
என்ன கிடைக்கும்...
அசிங்கம்...
அவமானம்...காயம்...
வலி... வேறென்ன...
இதுதானே வாழ்க்கை பயணம்...
யாரேனும் தப்ப இயலுமா என்ன
இந்த பயனத்திலிருந்து...
இன்று எனக்கு
எதுவோ அதே தானே,
நாளை எனக்கு பின் வருபவனுக்கும்...
இடமும், களமும் மாறுபடும்...
அவ்வளவுதானே...
அதுதானே வாழ்க்கை பயணம்...
Monday, July 22, 2013
இங்கு நடப்பதெற்கெல்லாம் யார் காரணம்...
இங்கு நடக்கும்
கொலைகளுக்கெல்லாம்
யார் காரணம்...
சாதி வெறி கொலைகளுக்கும்.
அரசியல் கொலைகளுக்கும்.
சொத்து கொலைகளுக்கும்,
பெண் பித்து கொலைகளுக்கும்
சுதந்திர கொலைகளுக்கும்.
வறுமை கொலைகளுக்கும்
மத கொலைகளுக்கும்
மர்ம கொலைகளுக்கும்
கௌரவ கொலைகளுக்கும்...
யார் காரணம்...
வல்லவன் வகுத்ததே
வாய்கால் என்ற மரபு
இப்போது இயக்கி
கொண்டிருக்கின்றது
அனைவரையும்...
பணம் இருந்தால்
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
சட்டத்தை சட்டைப் பைக்குள்
வைத்துக் கொள்ளலாம்
என்னும் மனோபாவம்
வந்து விட்டது எல்லோருக்கும்.
அரசியல் வாதிகளை
அடிமையாக்கி வைத்திருக்கின்றது
பன்னாட்டு நிறுவனங்கள்
தரும் கழிவு பணம்,
சுவிஸ்வங்கியில்
துாங்குது லஞ்சப் பணம்
வெள்ளை அழகிகளோடு உல்லாசம்
இதற்க்குத்தான் அரசியல் வாதிகளின்
அயல் நாட்டுப் பயணம்...
தலைவர்களே தறிகெட்டு
சுயநலத்தை தேடும் போது
தொண்டன் மட்டும்
துாய்மையாய் இருந்து
என்ன செய்ய போகின்றான்...
தலைவருக்குத் தெரிந்ததை
அவர் செய்கின்றார்....
தொண்டருக்குத் தெரிந்ததை
அவர் செய்கின்றார்....
கடவுளையும்
கர்த்தரையும்
நம்பிக்கொண்டிருப்போம்....
இறுதிநாள் வரை
ஏழையாய்...
கொலைகளுக்கெல்லாம்
யார் காரணம்...
சாதி வெறி கொலைகளுக்கும்.
அரசியல் கொலைகளுக்கும்.
சொத்து கொலைகளுக்கும்,
பெண் பித்து கொலைகளுக்கும்
சுதந்திர கொலைகளுக்கும்.
வறுமை கொலைகளுக்கும்
மத கொலைகளுக்கும்
மர்ம கொலைகளுக்கும்
கௌரவ கொலைகளுக்கும்...
யார் காரணம்...
வல்லவன் வகுத்ததே
வாய்கால் என்ற மரபு
இப்போது இயக்கி
கொண்டிருக்கின்றது
அனைவரையும்...
பணம் இருந்தால்
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
சட்டத்தை சட்டைப் பைக்குள்
வைத்துக் கொள்ளலாம்
என்னும் மனோபாவம்
வந்து விட்டது எல்லோருக்கும்.
அரசியல் வாதிகளை
அடிமையாக்கி வைத்திருக்கின்றது
பன்னாட்டு நிறுவனங்கள்
தரும் கழிவு பணம்,
சுவிஸ்வங்கியில்
துாங்குது லஞ்சப் பணம்
வெள்ளை அழகிகளோடு உல்லாசம்
இதற்க்குத்தான் அரசியல் வாதிகளின்
அயல் நாட்டுப் பயணம்...
தலைவர்களே தறிகெட்டு
சுயநலத்தை தேடும் போது
தொண்டன் மட்டும்
துாய்மையாய் இருந்து
என்ன செய்ய போகின்றான்...
தலைவருக்குத் தெரிந்ததை
அவர் செய்கின்றார்....
தொண்டருக்குத் தெரிந்ததை
அவர் செய்கின்றார்....
கடவுளையும்
கர்த்தரையும்
நம்பிக்கொண்டிருப்போம்....
இறுதிநாள் வரை
ஏழையாய்...
ஏழைகளை மயக்க
எல்லாவற்றையும்
உருவாக்கி கொண்டிருக்கின்றது
கடவுளிருந்து
கவர்சி கன்னிகள் வரை
உலகமயம்,
தாரள மயம்,
தனியார் மயம்...
எல்லாவற்றையும்
உருவாக்கி கொண்டிருக்கின்றது
கடவுளிருந்து
கவர்சி கன்னிகள் வரை
உலகமயம்,
தாரள மயம்,
தனியார் மயம்...
Friday, March 15, 2013
உண்மை
உண்மை
என்னும் ஒரே
ஆயுதம் தாங்கி
ஏழு ஆண்டுகள்
இடைவிடாது
போராடுகிறேன்…
எதிர்படும்
எல்லோரும்
எதிரிகளாகவே
இருக்கிறார்கள்…
நட்பு
அன்பு
தோழமை
கருணை
எல்லாமே
காற்றில்
கரைந்து போய்
போட்டியாளராகவே
புலப்படுகின்றனர்
கண்ணுக்கும்
கருத்துக்கும்…
என்னை
குறை சொல்லியே
கறைபட்டது
என் சட்டை
கைகளும் தான்
என்கின்றனர்
எதிரிகள்…
சாதிக்காரனில்
துவங்கி
சகோதரனும்.
புன்னகை முகத்தானும்,
புடவை கட்டியவர்களும்,
அதிகாரிகளோடும்
சதியாளர்களும்
எத்தனையோ
ஆயுதங்களோடு
எதிர்கொள்கின்றனர்
என்னை…
போராடுகிறேன்
வாழ்வு
என்னும் போர்களத்தில்
எதிரிகளோடும்
சதிகளோடும்.,,
என் எதிரிகளை
வீழ்த்துவது
என் இலட்சியம் அல்ல..,
வெற்றி பெறுவதும்
என் விருப்பம் அல்ல..,
தற்காத்துக் கொள்ளவே
என் போராட்டம்…
என் எதிரிகளுக்கோ
என்னை அழிப்பது
ஒன்றே குறி…
சில நேரம் முகம்
தெரிகிறது.
பல நேரம்
மறைந்து போய்
வெறுங்காற்றில்
சுழற்றுகிறேன் வாளை..,
அதிகாரத்தின்
சதுரங்க ஆட்டத்தில்
துவங்கியதும்
துண்டாடும்
சிப்பாயல்ல நான்
எளிதில் வெட்டமுடியாத
குதிரையாகவே
இருக்க வேண்டும் நான்..,
இங்கே
பொய்யர்கள்
மத்தியிலிருந்து
மெய்யர்கள்
வெளியேற்றப்படுகிறார்கள்
எனக்கு என்றோ???
போதியின் நிழலில்
இருந்த போது
உனக்கு நீயே ஒளி
என்றது நினைவுக்கு
வந்து…
மாற்றியோசித்தேன்…
உன்னாலே உனக்கு அழிவு…
உண்மையை
கை கொண்டதாலா?
அவர்களின்
சாதுர்யமும் புரியவில்லை
சந்தர்ப வாதமும்
தெரியவில்லை
எனக்கு..,
என்
நியாயமும்
புரியவில்லை
ஞானமும்
தெரியவில்லை
அவர்களுக்கு…
முடிவெடுத்த
போராட்டம்
முற்று பெறாமல்
நீள்கிறது..,
Subscribe to:
Posts (Atom)
இதையும் படியுங்கள்
-
அசோகன் அங்குலிமாலா அகத்தியன் அகிம்சகன் அஜபலா அசாஜி அஜாதசத்ரு அனத்தா அனிச்சா அகாலா அஷ்வகோஷ் அஞ்சான் அசித்தா அனிருத்தா அபயன...
-
புத்தச் சமயப் பெயர்கள் - பெண் குழந்தைகள் அபயா அமிதா அபிதா அஞ்சனா அசிந்தா அனோமா அரிஷ்மதி அபிமுகி அவித்யா அம்பிகா அம்பாலி அ...
-
புத்தரின் பிறப்பு: கி.மு.ஆறாம் நுாற்றாண்டில் வட இந்தியாவில் இமயமலையின் அடிவாரத்தில் இருந்த கபிலவஸ்த்து நாட்டை கௌதம என்னும் பழங்குடி வகை...
-
பறை என்னும் இசைக் கருவி இசைப்பதால் பறையன் என்ற பெயர் வந்த்தா? அல்லது பறையனாய் இருப்பதால் பறை என்ற இசைக் கருவியை இசைக்கின்றானா? இந்த ...