Sunday, July 23, 2017

என்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம்

என்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம் 

இளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமயக் கோட்பாடுகள்: 4
புத்தரின் போதனைகள்:-
பொதுவில் புத்தரின் போதனைகளை அழைக்கும் போது தம்மம் என்றே அழைப்பர். தம்மம் 3 பெரும் பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டு பாலி மொழியில்  “திரி பீடகம்” என்று அழைக்கப்படுகின்றது. அவை. 1. சுத்த பீடகம். 2. அபிதம்ம பீடகம். 3. விநய பீடகம் என பிரிக்கப்பட்டுள்ளது.
சுத்த பீடகம்:-
      புத்தரின் போதனைகளை கொண்டது. பாலி மொழியில் முதன் முதலில் தொகுக்கப்பட்டது. இதனை பாலி மொழியில் தொகுத்தவர். புத்தரின் உதவியாளராகவும், முதன்மைச் சீடராகவும், இருந்த ஆனந்தர் ஆவார். இவர் புத்தரின் உறவினர். புத்தருக்குப்பின் சங்கத் தலைமையேற்றவர் இவரே.
      ஞான போதனைகளின் வழியாக ஒருவரின் அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞானத்தை அடையச் செய்வது அல்லது மனிதர்களின் வாழ்வில் நிகழும் துன்பங்களைக் களைவதே சுத்த பீடகத்தின் நோக்கமாகும்.
புத்தர் தன் வாழ்நாளில் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு சூழலில், தனி நபர்களுக்கும், அரசர்களுக்கும், பொது மக்களுக்கும் தனது சீடர்களுக்கும், பௌத்தத்தை விளக்கி, மனிதர்களின் வாழ்வில் நிகழும் துன்பங்களுக்கான காரணங்களை விளக்கி கூறியதே சுத்த பீடகம். இது பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது அவை:-
·         தீக நிகாயம் 32 உரைகள்
·         மஜ்ஜிம நிகாயம் 152 பேருரைகள்
·         சம்யுக்த நிகாயம் ( இது 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு பிரிவிலும் தலா 52 உரைகளை அடக்கியது.
·         அங்குத்தர நிகாயம் 11 நிப்பாதம் ( பிரிவுகள்) 2308 சூக்தங்கள் ( செய்யுள்கள்)
·         குந்தக நிகாயம் 25 பிரிவுகள் அவற்றில் ஒன்று தம்மபதம்
தம்மபதம் :-
 தம்மபதம் ( தம்மவழிஇது புத்தரின் வாய்மொழியாக வந்தவை. தம்மபதம் புத்தர் இவ்வுலகில் உள்ள அணைத்து உயிரினங்களின் மீதும்மனிதர்களின் மீதும்கொண்டிருந்த கருணை மற்றும் அவருடைய எல்லையற்ற ஞானத்தையும் உலகுக்கு உணர்த்தும்  சிறிய செய்யுள்களின்  தொகுப்பாகும். 26 தலைப்புகளைக் கொண்டது. 423 சிறு செய்யுளைக் கொண்டதாகும்.
தம்மபதம் தலைப்புகள்
1.   இணைகள் – 08 செய்யுள்கள்
2.   விழிப்பு – 19 செய்யுள்கள்
3.   மனம் – 24 செய்யுள்கள்
4.   பூக்கள் – 29 செய்யுள்கள்
5.   அறிவிலி – 35 செய்யுள்கள்
6.   அறிவர் – 41 செய்யுள்கள்
7.   போற்றத்தக்ககோர் – 46 செய்யுள்கள்
8.   ஆயிரங்கள் – 50 செய்யுள்கள்
9.   தீமை 56 செய்யுள்கள்
10.  தண்டித்தல் 61 செய்யுள்கள்
11.  முதுமை 67 செய்யுள்கள்
12.  தான் 72 செய்யுள்கள்
13.  உலகம் 76 செய்யுள்கள்
14.  புத்தர் 81 செய்யுள்கள்
15.  மகிழ்ச்சி 87 செய்யுள்கள்
16.  பிரியம் 92 செய்யுள்கள்
17.  சினம் 97 செய்யுள்கள்
18.  அசுத்தக் கறைகள் 102 செய்யுள்கள்
19.  நீதி 111 செய்யுள்கள்
20.  வழி 116 செய்யுள்கள்
21.  பல்வகை 123 செய்யுள்கள்
22.  தீமை 129 செய்யுள்கள்
23.  யானை 135 செய்யுள்கள்
24.  அவா 141 செய்யுள்கள்
25.  பிக்கு 151 செய்யுள்கள்
26.  அறவோர் 160 செய்யுள்கள்[1]
தம்மபதத்துக்கு உரை எழுதியோர்கள்:-
பாலி மொழியிலிருந்த தம்ம பதத்துக்கு முதன் முதலில்  உரையெழுதியவர் கி.பி.ஐந்தாம் நுற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த புத்தேகோஷர் உரையெழுதி இருக்கின்றார். அவருக்குப் பின்  தம்மத்தை  முதலில்  தமிழிற்க்கு தந்தவர்  அய்யன்  திருவள்ளுவர்  திருக்குறளாக தந்துள்ளார். அவ்வையார் மூதுரையாக தந்துள்ளார்.


 பதினென் கீழ் கணக்கு நுால்கள் எழுதிய அனைவரும் அவரவர் அளவிற்கு தம்மபதத்தை தமிழுக்குத் தந்தவர்கள் ஆவார்கள்.  அதற்குப் பின்  பலரும் தம்மத்தை தமிழ்படுத்தினாலும், அவற்றில் குறிப்பிடத்தக்கவர்கள் இலங்கையைச் சேர்ந்த எம். என். மெகைதீன்., பவுத்த துறவி சோமானந்த  தேரா,  சி.எஸ்.தேவநாதன், மற்றும் பகவான். ரஐினிஸ்  ஆகியோர் அடங்குவர்.  இவர்களில் பகவான்  ரசினிஸ் தம்ம பதத்தை கதைகளாக விளக்கினார்.
இந்திய தத்துவ மேதை சர்வபள்ளி. இராதாகிருஷ்ணனும் தம்மபதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இவர் இந்து மத நோக்கில் தம்மபதத்தை மொழிப்பெயர்த்துள்ளார்.  மற்றவர்கள் வசன கவிதை மற்றும் உரைநடைகளாக வெளியிட்டுள்ளனர்

இவர்களை அடுத்து தமிழ் கவிதைகளில் தனக்கென தனி ஆளுமையை ஏற்படுத்திக் கொண்டுள்ள யாழன் ஆதியும் தம்மபதம் என்னும் அரியதொரு பொக்கிஷத்தை வெளியிட்டுள்ளார்.
தம்மபதத்தின் சிறப்புகள் :
      மெய்யறிவு வளரவும், வாழ்வியல் உள மற்றும் மனச் சிக்கல்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்கும் ஆதாரமாக அமைந்துள்ளது. தினசரி வாழ்க்கை சிக்கலுக்கு எளிய தீர்வை தரும் தீர்வுப் புத்தகமாகவும், ஒழுக்கத்தை பேணவும், அமைதியான மன நிலையில் வாழவும் அறிவுடையோர் பின்பற்ற வேண்டிய நடைமுறையை தம்மபதம் விவரிப்பதால் இன்று தம்மபதம் திசையெங்கும் தீர்வு சொல்லும் நீதி புத்தகமாக பயணப்படுகின்றது.
தேரவாத பௌத்தக் கொள்கையின் படி தம்மபத்தின்  ஒவ்வொரு வரியும், ஒரு குறிப்பிட்ட சம்பவம், அல்லது  நிகழ்விற்க்கு  பதில் தர புத்தரால் சொல்லப்பட்ட வார்த்தையாகும்.
தம்மத பதம் உலகின் பல பகுதியில் பிரபலமாயுள்ளது.ஐரோப்பிய  மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதுஆங்கிலத்தில் மட்டுமே 40க்கும்
மேற்பட்ட  மொழிபெயர்ப்புகள்  உள்ளனஅமெரிக்காவில்  இப்போது  அதிகமாகப்
பரவி வரும் மதம் பெளத்தமதம் என்கிறார்கள்.

தம்ம பதத்தின் சூத்திரங்கள் படிப்பதற்கு எளிமையானவைபெளத்த சமயக்
கொள்கைகளும் வாழ்க்கைக்குத் தேவையான நீதிகளும் தம்மபதத்தில்
நிறையவே இருப்பதால் அவற்றைப் படித்துத் தெளிந்துகொள்ளலாம்.
இது நமது மொழியிலுள்ள திருவள்ளுவரது திருக்குறளைப் போன்று
அத்துணைச் சிறப்பு வாய்ந்தது” என்று தம்ம பதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய நூல் திருக்குறளே என்கிறார் வையாபுரிப்பிள்ளைதம் இலக்கிய உதயம் பகுதி 11  எனும்  நூலில். தம்ம பதத்தின் பெருமையை  ஹெர்மான்  ஓல்டன்பெர்க்  எனும்  ஜெர்மானியப் பேராசிரியர்  இப்படிக்  கூறுகிறார்.
பெளத்த சமயத்தைப் பற்றித் தெளிவாய்த் தெரிந்துகொள்வதற்கு பெளத்த
தர்ம ஆராய்ச்சிகளை ஆரம்பிக்கும் போதே  ஆராய்ச்சியாளனுக்கு  ஒரு  புனிதமானவரின்  கைகளால்  தம்மபதத்தை  அளிப்பதைவிட  மேலான காரியம்  ஒன்றும்  இருக்க முடியாது.  தம்மபதம்  தன்னிரகற்ற  அழகுடையதுபொருள்  நிறைந்த பழமொழிக்களஞ்சியம். பெளத்த  சமயத்தைத்  தெரிந்து  கொள்ள  உறுதிகொண்ட  எவரும்  திரும்பத் திரும்பப் டிக்க வேண்டிய நூல் இது.”

என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்:

      இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி, இது நடிகர் சிவக்குமாரின் நுாறாவது படம். இந்தப் பாடலை எழுதியவர், இசைஞானியின் இளவல், பன்முக ஆளுமை கொண்ட கங்கை அமரன் அவர்கள். இது ஒரு பெண்ணின் விரகதாபத்தை விரசமில்லாமல் சொல்லும் பாடலாகும். இந்த பாடல் எழுதிய பாடலாசிரியருக்கும், பின்னனி பாடகி. வாணி ஜெயராம் அவர்களின் குரலோடு சேர்ந்து இசைஞானியின் இசையில் புதிய உயிரோட்டம் கிடைக்கும். இப்பொழுது மட்டுமல்ல எப்போது கேட்டாலும் நம்மை மெய் மறக்கச் செய்யும் பாடல்களுள் ஒன்றுதான் என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் பாடல். இந்த பாடல் சாரங்கி ராகத்தில் அமைந்த பாடல் என படித்திருக்கின்றேன். இந்த பாடலின் நிரவல் இசை (இன்டர்லுா) குறித்து மட்டுமே நாம் பேசப்போகின்றோம். 

      “ பெண்கள் மீதான ஆசை
சிறிதளவாய் இருப்பினும்
அதை நீக்கல் வேண்டும்
பால் குடிகன்று பசுவிடம்
வளர்வதைப் போல
அது வளர்ந்து விடும்” – தம்மபதம் 284. யாழன் ஆதி



என்னும் புத்தரின் தம்ம பத வாக்கு, அப்போது காமம் கொண்ட ஒரு ஆண்மகனை நல்வழிப்படுத்த போதிக்கப்பட்டதாகும். அதை இன்றைய நோக்கில் ஆணுக்கும் எடுத்துக் கொள்ளலாம், பெண்களுக்கும் பொருத்திக் கொள்ளலாம். 

      இந்த தம்மப்பத பாடலின் படியே, என்னுள்ளில் எங்கும் ஏங்கும் கீதம் பாடலுக்கு இசைஞானி இசை அமைத்து இருப்பார். பாடல் துவங்கும் போது வரும் முன் இசையினை நிறைமாத பசு கன்று ஈனும் மகிழ்வான தருணத்தை புல்லாங்குழல் இசையால் நினைவு படுத்துவதாக இருக்கும். இந்த கட்டுரையை படித்து விட்டு இந்த பாடலைக் கேட்க்கும் போது, முன் இசைக்கு கன்று ஈனும் பசுவின் சூழலை, வலியை, காட்சிப் படுத்திப் பார்க்கும் போது முன் இசைப் பொருந்திப் போவதை உணர இயலும் 

      இந்த பாடலின் நிரவல் இசையில் புத்தரின் வாய்மொழி வேதமான மேலே சொன்ன தம்ம பதம் 284ன் பொருளுனர்ந்து இசை அமைத்திருப்பார் நம் இசைஞானி, முதல் நிரவல் இசையில் ஒரு கன்று முதன் முதலாய் தன் தாய்ப்பசுவிடம் பால் அருந்தும் காட்சிக்கு இசை அமைத்தது போலவே இருக்கும், இந்த பாடலை கேட்டு கண்களை மூடி இந்த காட்சியை உணரும் போது அந்த இசைப் பொருந்திப் போவதை உணர இயலும். இரண்டாவது நிரவல் இசைக்கு வளர்ந்த கன்று தன் தாயிடம் பால் அருந்தி வளர்ந்து நிற்ப்பதை இசையால் நமக்கு காட்சிப் படுத்தியிருப்பார் நம் இசைஞானி.
நிறைவாக, இனையர்களுக்குள் நிகழும் ஒரு நல்ல உடலுறவு என்பது இன்னும் கொஞ்சம் நீடிக்காதா என்னும் போதே முடிவுற வேண்டும்.  அதுதான் நிறை இன்பம். மாறாக எப்போது முடியுமோ என்னும் எண்ணம் எழுமாயின் அது துன்பம். இது காமம் குறித்தப் பாடலானதால், இன்னும் கொஞ்சம் நேரம்நீ இந்த பாடலும் இசையும் நீளாதா என்று நமக்குள் எண்ணம் தோன்றும் போது தனது இசையை நிறைவு செய்வார். நம் இசைஞானி. 
தொடரும்...
       






[1]   தம்மபதம் – தமிழில் யாழன் ஆதி 

Friday, July 21, 2017

பிட்ச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே.



இளையராஜாவின் இசை - பாடல்களில் பௌத்த கூறுகள் – 3 

பிட்ச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே. 

இரண்டாம் பகுதியை படித்து விட்டு எதிர் கேள்வியும், நயத்தக்க பாராட்டையும் வழங்கிய தோழர். சக்திவேலுக்கு நன்றி சொல்லி 3 ஆம் பாகத்தை துவங்குகின்றேன். 

மகாயான பௌத்தம்

       இந்திய தத்துவ மரபில் புதிய வெளிச்சம் பாய்ச்சிய பௌத்த தத்துவத்தின் அடுத்த பரினாமம் கி.மு. இரண்டாம் நுாற்றாண்டில், ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் அருகில் நாகார்ஜுனகொண்டா என்று அழைக்கப்படும் இடத்திற்கு அருகில் வசித்த ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்த நாகர்ஜீனர்.  இவர் தம்மை இரண்டாம் புத்தர் என்று அழைத்துக் கொண்டார். இவரைப் பின்பற்றியவர்களும் அவ்வாறே ஒப்புக் கொண்டு பௌத்தத்தின் புதிய பரிணாமத்தை துவக்கினார்கள், தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் மகாயானம் என்னும் பௌத்த பிரிவை துவங்கினார். அத்துடன் இவர் பல தென்னிந்திய மன்னர்களையும், ஏராளமான பிராமணர்களையும் பௌத்தம் ஏற்க்கச் செய்ததுடன்,[1] வெளிநாடுகளிலும் மகாயான பௌத்தம் பரவ காரணமாக இருந்தார்.
(நாகார்ஜீணரின் சிலை. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இனையத்தளத்திலிருந்து எடுத்தது. அவருக்கு நன்றி)

மகாயான பௌத்தத்தின் முதன்மை நோக்கம்.

      தேரவாத பௌத்தத்தின் படி குடும்பம் என்னும் அமைப்பைத் துறந்து பிக்கு அல்லது பிக்குனிகளாக உள்ளவர்களே, உடல் துறத்தல் (நிர்வாணம்) பெற்று பின்னர் முழுமையான துறத்தலுக்கு (உடல் மற்றும் உயிர் துறத்தலுக்கு) தகுதியானவர்களாக தீர்மானிக்கப்பட்டிருந்ததால், அனைத்து மக்களும் முழுமையான துறத்தல் கிடைக்கச் செய்ய இயலாத குறைபாடான கோட்பாடுகளை கொண்டிருக்கின்றன என்னும் கருத்தோட்டத்தின் படி உருவானதுதான் மகாயானம் என்னும் பௌத்த பிரிவு.

      காலத்திற்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளாத எதுவுமே வீழ்ச்சிபெறும் அல்லது மறு உருவாக்கம் பெறும் என்னும் அறிவியல் நிலைப்பாட்டின் படி புத்தரின் முழு துறத்தலுக்குப் பின் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப காலத்தின் கட்டாயமாக உருவெடுத்ததுதான் மகாயான பௌத்தம். அதன் படி புத்தர் நம்மிடம் இருந்து மறைந்தார் என நாம் நினைக்கத் தேவையில்லை, எத்தனையோ புத்தர்கள் இருந்தார்கள், மறைந்தார்கள், மீண்டும் வருவார்கள், மீண்டு வருவார்கள் என புத்தர் தற்போது நம்மிடம் இல்லை என்னும் கருத்தில் இருந்த மக்களிடம் புத்தர் மீண்டும் வருவார் என புத்தெழுச்சியை உருவாக்கியது மகாயானம்.


அத்துடன், பௌத்தம் ஏற்று ஞானம் அடைந்தால் நீயும் புத்தனே, புத்தரை வெளியில் எங்கும் தேட வேண்டாம், உணக்குள்ளும் புத்தர் இருக்கின்றார். மற்றவர்களுக்குள்ளும் புத்தரைப் பார்க்கலாம்.  நீ பார்க்கும் எல்லாமே புத்தரின் வடிவங்கள் என புத்தரின் உருவத்துக்கும், கருத்தியலுக்கும் புது விளக்கம் அளித்து, புத்தரை பொதுமைப் படுத்தியது மகாயான பௌத்தம். இந்த கருத்தாக்கமே பிற்பாடு இந்து மதத்துக்குள் நுழைந்து அத்வைதத் தத்துவமாக மலர்ந்தது.

மகாயான பௌத்தத்தின் சிறப்புகள்

       தத்துவத்தின் அடிப்படையில்
1.     'அனைவருக்கும் மோட்சம்'
2.     'ஊக்குவிப்பு
3.     'கருணை'
சமயத்தின் அடிப்படையில்
4.     'இறை நிலையை உணர்தல்'
5.     'இறை நிலையோடு இரண்டற கலத்தல்'[2]
என தத்துவமாக மட்டுமே தனித்து இயங்காமல், சமயமாக மட்டுமே தெய்வங்களை சார்ந்து இராமல், தத்துவம் மற்றும் சமயம் இரண்டின் கலவையாக உருவானதுதான் மகாயான பௌத்தம். மகாயான பௌத்தம் குறித்த எளிய அறிமுகத்தை இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன்.

கள்ள புத்தர் அல்லது கபட புத்தர் என்றழைக்கப்பட்ட கௌடபாதர்

       மகாயான பௌத்த பிக்குவாக ஆரம்பத்தில் இருந்தவர், பின் கௌதம புத்தரைப் போலவே தத்துவ விசாரனையில் ஈடுபட்டு, பதஞ்சலி முனிவரிடம் (இவர் வேறு பதஞ்சலி முனிவர்) யோகச்சாரம் பயின்றவர். அதன் பின் தான் கற்ற பௌத்த சூத்திரங்களை (அப்போதிருந்தது வேத மதம் படிப்பவரின் புரிதலுக்காக இந்து மதம் என்றே இக்கட்டுரை முழுவதும் குறிப்பிடுகின்றேன்.) இந்து மதத்தில் இனைத்து சூத்திரங்களுக்கு இந்து மத நோக்கில் உரை இயற்றியவர். இவர் உத்திர கீதை என்னும் நுாலுக்கு உரையாசிரியராக கருதப்படுகின்றார்.[3]

      மகாயான தத்துவங்களை இந்து மதத்தில் இனைத்து உரையெழுதி அதற்கு அத்வைதம் எனப் பெயரிட்டவர். அவ்வாறு இவர் மகாயானத்தில் இருந்து இந்து மதத்துக்கு கொண்டு வந்த தந்துவங்களுக்கு இவர் வைத்த பெயர். மண்டுக காரிகை. மண்டுகம் என்றால் தமிழில் தவளை என்றுப் பொருள். தவளயைப் போல ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தாவிக் கொண்டிருக்கும் கருத்தியல் என்பதே அதற்கான விளக்கம்[4]

                                 ( கபட புத்தர்)[5]

      இருப்பினும் அக்காலத்தில் வீழ்ச்சியுற்றிருந்த இந்து மதத்திற்கு ஒரு புதிய கருத்தியல் தேவைப்பட்டதாலும், செல்வாக்கு பெற்றிருந்த பௌத்தத்தின் கோட்பாடுகளை இந்து மதத்திற்கு கொண்டு வந்ததாலும் மண்டுக காரிகை மிக முக்கியத்துவம் வாய்ந்த நுாலாக இருந்தது அந்த காலத்தில் இந்து மதத்தின் ஆதரவாளர்களுக்கு.

      வரலாற்றில் எப்போதுமே சமயங்கள் மறையும் ஆனால்  சமயக் கருத்துக்கள் எப்போதும் வாழ்ந்து கொண்டேயிருக்கும். இதுதான் நடைமுறையில் உள்ள உண்மை. உதாரணமாக அப்போது வீழ்ச்சிக் கண்டுகொண்டிருந்த பௌத்த சமயம் மறைந்தாலும் அதன் சமயக் கருத்துக்களை இந்து மதம் உள்வாங்கிக் கொண்டதைப் போலவே எல்லா நாட்டிலும் நிகழ்ந்திருக்கின்றது. நாகர்ஜீணர் தமது மகாயான பௌத்தத்தை பரப்பிய சீனம், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளிலும், அப்போது அங்கு வீழ்ச்சியுற்றுக் கொண்டிருந்த சமயங்களின் கருத்துக்களையும் கடவுளையும் உள்வாங்கிக் கொண்டே மகாயான பௌத்தம் கட்டமைக்கப்பட்டது. அதேதான் இந்தியாவிலும் நிகழ்ந்தது.

      ஆனால் பௌத்த கருத்துக்களை உள் வாங்கி இந்து சமயம் வளர்ந்த பொழுது, அதன் முக்கியமான சாரத்தை விட்டு விட்டு சக்கையைக் கொண்டே வளர முயற்சித்தது. தேரவாதம், மகாயானம், மற்றும் வஜ்ஜிரயான ஆகிய 3 முக்கியப் பிரிவுகளின் மொத்த கருத்துக்களை ஒரு வரியில் சொல்வதாயின், பிறப்பின் அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே, மனிதர்களில் உயர்வுதாழ்வு என்பது அவரது நடத்தையாலே தீர்மானிக்கப்படுகின்றது ஒழிய பிறப்பின் அடிப்படையில் இல்லை என்பதே ஆகும். நேரடியாக சொல்வதாயின் பௌத்தம் எந்த நிலையிலும் சாதி மற்றும் வருணப் பாகுபாடுகளை பார்ப்பதில்லை, உயர்வுத்தாழ்வு பார்ப்பதில்லை. அவ்வாறு சாதி பார்த்தால் அவர் பௌத்தர் இல்லை.

      ஆனால் பௌத்த கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு மீண்டும் புத்துயிர் பெற்ற இந்து சமயம், பௌத்தத்தின் உயிர் தத்துவமான பிறப்பின் அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் சமம் என்னும் கருத்தியலை கை விட்டு, பிறப்பின் அடிப்படையில் மனிதனை பிரிக்கின்ற நான்கு வர்ணத்தைத் தக்க வைத்துக் கொண்டு, பௌத்தம் கருத்துக்களுக்கு மண்டூக காரிகையில் இந்து மத நோக்கில் உரையெழுதிய காரணத்தாலே அவர் கபட புத்தர் என அழைக்கப்பட்டார்.

இவரது இந்த மனதை புரிந்து கொண்டதால்தான், பௌத்தர்கள் (அப்போது பௌத்தத்தை ஏற்றுக்கொன்டு, இப்போது இழி நிலையில் தள்ளப்பட்டிருக்கும் சேரி மக்கள்) பொய்யர்களுக்கும், பொய் பேசும் நபர்களுக்கும் கபடன் என அழைக்கலாயினர். கபடதாரி, கபட நாடகம் என்றெல்லாம் அவர்களின் பேச்சு வழக்கில் வருகின்ற சொல்லாடல்களாகும். அவ்வாறு கபடன் என அழைக்கப்படும் நபரின் வழியாக சுட்டிக்காட்டப் படுபவர்  கபட புத்தர் ஆவார். கேரளத்தில் இவரை கள்ள புத்தர் என்றே அழைக்கின்றனர். ( இந்த தகவலை வாய் மொழியாக தெரிவித்தவர். பேராசிரியர். வேதசகாயக் குமார். அவருக்கு நன்றி) 

கபட புத்தர் எவ்வாறு பௌத்த மதக் கருத்துக்களை இந்து மதத்தோடு இனைத்தார் என்பதை, ஆய்வாளர் திரு. மயிலை. சீனி வெங்கட்டச்சாமி அவர்களின் நுாலான பௌத்தமும் தமிழும் என்பதில் இருந்து சில பகுதிகளை சுட்டிக் காட்டுவதன் வழியாக விளக்க இயலும் என என்னுகின்றேன்.
             ஆய்வறிஞர். மயிலை. சீனி. வெங்கட்டசாமி.

பௌத்த மதக் கருத்துக்களை இந்து மதத்தில் நுழைத்த பின்னும் பௌத்தமும் பௌத்த கருத்துக்களும் மக்களிடம் செல்வாக்கோடு இருந்தது. மேலும் புத்தரின் உருவ வழிபாடும் மக்களிடம் செழித்திருந்தது. எனவே பௌத்த கருத்தியலோடு பௌத்த நிறுவனரான புத்தரையும் தன்னுள் இனைத்துக் கொண்டது இந்து மதம்.

      திருமாலிய பிரிவினர். புத்தர் திருமலின் பல அவதாரங்களுள் ஒருவர் என உரிமை கொண்டாடியது. சிவனிய பிரிவினர் சிவ கனங்களுள் ஒருவராக புத்தரை இனைத்துக் கொண்டது, அவ்வாறு இனைக்கப்பட்ட சிவ கனங்கள் தனித்து தெரிவதற்காக, சாஸ்த்தா என அழைக்கப்படும் ஐயப்பன் மற்றும் ஐய்யனாரை புத்தராக இனைத்துக் கொண்டது. பின்னர், முருகன் மற்றும் வினாயகரையும் புத்தராக இனைத்துக் கொண்டது. புத்தருக்கு தருமராசன் என்றொரு பெயரும் உண்டு. அந்த பெயரில் இருந்த கோவில்களையெல்லாம், மகாபாரதத்தில் வரும் தருமராசன் கோயிலாக மாற்றியது.

      பௌத்த மதத்தின் சிறு தெய்வங்களான, மணிமேகலை, சம்பாபாதி, தாரா தேவி ஆகியோரை, இந்து மதத்தில் காளி, பிடாரி, திரௌபதை அம்மன் என்ற பெயர்களில் கிராம தேவதைகளாக மாற்றப்பட்டு வழிபாடு நிகழ்த்தப்பட்டனர். ஐம்பெரும் காப்பியங்களுள் பௌத்த காப்பியமான மணிமேகலையின் தலைவி மணிமேகலையின் சிற்பம்தான் காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் இருக்கும், அன்னபூரணி அம்மன் என்றும் காமாட்சி அம்மன் கோயிலே, பௌத்த சிறு தெய்வமான, தாராதேவியின் ஆலயம் என்றும் தமது ஆய்வுகளின் வழியாக நிறுவுகின்றார். அறிஞர். மயிலை. சீனி. வெங்கட்டசாமி.

      அத்துடன் அதுவரையிலும் இந்து மதத்தில் இல்லாது இருந்த சங்கம் என்னும் கட்டமைப்பையும் (மடங்களையும்) உருவாக்குகின்றனர். அதுதான் பிற்காலத்தில் பீடங்களாக உருமாறியது. சங்கர மடம், ஆதீன மடங்கள் எல்லாம் பௌத்தத்தை பார்த்து உருவாக்கிய சங்கம் வகையை சேர்ந்த நிறுவனங்களாகும். பல இடங்களில் பௌத்தர்களின் சங்கங்களை (நிறுவனங்களை) கைப்பற்றிக் கொண்டனர். இந்து சமயத்தின் சொத்துக்காளக (நிறுவனங்களாக ) பாவித்தனர்

      அதை அடுத்து கபட புத்தர் செய்ய மிக சிறப்பான பணி. இந்து மதத்தில் இருந்து வேள்வி, யாகங்களை ஒழித்து, பிராமணர்களை சைவ உணவுக்கு மாற்றியது. அதன் பின் போதி மரத்தை தொழுவதை பின்பற்றி அரச மரத்தை சுற்றச் செய்ததும், பௌத்தத்தை பின்பற்றி, ஸ்தல விருட்சங்களை உருவாக்கி அதனை வழிபடச் செய்தது. 

      கபட புத்தரின் மண்டூக்க காரிகை, அத்வைத தத்துவத்தின் முதல் நுாலாகும். இந்நுால் பௌத்தத்தின் வழி நின்று, பட்டறிவு மற்றும் பகுத்தறிவு இவை இரண்டின் வழியாக நின்று இறைவன் ஒருவனே. அந்த இறைவனே, எல்லா உயிர்களிடத்தும், எல்லா இடத்திலும் நிறைந்திருக்கின்றான் என்னும் நோக்கத்தை நிறுவ எழுதப்பட்டதாகும். இது பிரகரணங்கள் என அழைக்கப்பட்டு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை்.
1.   ஆகமப் பிரகரணம்
2.   வைதத்தியப் பிரகரணம்
3.   அத்வைதப் பிரகரணம்
4.   ஆலதசந்திப் பிரகரணம். 
   
           இவை முறையே 29,38,48,100 ஆகிய எண்ணிக்கையிலான சுலோகங்களால் இயற்றப்பட்டது.[6] ,இவை நாம் இந்த கட்டுரையின் துவக்கத்தில் பார்த்த மகாயான பௌத்தத்தின் சிறப்பு இயல்புகளாகப் நாம் பார்த்த ஐந்து கருத்தாக்கங்களின் சுருக்கமே ஆகும்.

கபட புத்தரின் சீடர்களுள் முதன்மையானவர். கோவிந்த் பாகவத் புத்தர் இந்து மதத்திற்கு வந்த பிறகு கோவிந்த பாகவத பாதர்.என தனது பெயரை மாற்றிக்கொண்டார். இவரது சீடர்தான் ஆதி சங்கரர்.
ஆதி சங்கரர்.

( ஆதி சங்கரர் தனது சீடர்களுடன். ராஜா ரவிவர்மா வரைந்த ஓவியத்திலிருந்து எடுத்தது)


       ஆதிசங்கரர் இன்றைய கேரள மாநிலத்திலுள்ள காலடி  என்னும் ஊரில் பிறந்தார். இவரது தாயார் பெயர் ஆர்யம்மாள். தந்தை பெயர் சிவகுரு. இவரது காலம் குறித்து கனிப்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடம் குழப்பம் உள்ளது. ஒரு சிலர் இவர் கி.மு. நான்காம் நுாற்றாண்டு என்றும், மற்றும் சிலர் கி.பி. ஏழாம் நுாற்றாண்டு எனவும் இவரது காலத்தை கணிக்கின்றனர். தமிழறிஞர். மயிலை. சீனி.வெங்கட்டசாமி. இவர் கி.பி. ஏழாம் நுாற்றாண்டைச் சேர்ந்தவர் என்னும் கருத்தை ஆதரிப்பவராக இருக்கின்றார்.


      ஆதி சங்கரர் ஆரம்ப காலத்தில் கபட புத்தரின் சீடரான கோவிந் பாகவத் புத்தரிடம் தத்துவம் பயின்றார். அப்பொழுது இவரது பெயர் சங்கர பாகவத் புத்தர் என்றே அழைக்கப்பட்டார். ஆரம்ப காலத்தில் ஆதி சங்கரர் தன்னை தத்துவ வாதியாகவே நிலைப்படுத்திக் கொண்டார். அதன் அடிப்படையில் இந்து மதத்தின் மிக முக்கிய தத்துவங்கள் மற்றும் வேதாந்தங்கள் என்று அழைக்கப்படுகின்ற உபநிஷங்களுக்கு உரையெழுதினார். அவ்வாறு அவர் உரையெழுதிய உபநிஷங்களையே பதினென் உபநிஷங்கள் என்று அழைக்கின்றனர். அவை.


1.   ஈச உபநிடதம்
8.   மாண்டூக்ய உபநிடதம் (கபட புத்தரின் மகாயான பௌத்த தத்துவம்)
12. கௌசீதகி உபநிடதம்
13. பிரம்ம்பிந்து உபநிடதம்
14. மைத்ராயணி உபநிடதம்
15. நாராயண உபநிடதம்
17. ஆருணிக உபநிடதம்

 

பிரம்ம சூத்திரம்.


      ஆதி சங்கரர் இந்து மதத்தின் முந்நெறிகள் என அழைக்கப்படுகின்ற உபநிஷத்துகள். பிரம்ப சூத்திரம் மற்றும் பகவத் கீதை ஆகிய மூன்று நுால்களுக்கும் உரையெழுதி ஆரம்ப காலங்களில் தம்மை இந்து சமய தத்துவ வாதியாக பாவித்துக் கொண்டார்.

      பிரம்மஞானம் என அழைக்கப்படும் பிரம்ம சூத்திரத்துக்கு மூவர் உரையெழுதுகின்றனர். அவர்களுள் முதலாவதாக உரையெழுதியவர். ஆதிசங்கரர். அவ்வாறு உரையெழுதி அவரது தத்துத்திற்கு அவர் இட்டபெயர் மனீஷா பஞ்சகம்  இது அத்வைதம் என்னும் தத்துவ வகையாக வகைப்படுத்துகின்றார். இரண்டாவதாக உரையெழுதியவர் வைணவ மதத்தைச் சேர்ந்த இராமனுாஜர். அவர் உரை எழுதி அதற்கு ஸ்ரீ பாஷ்யம் எனப் பெயரிடுகின்றார். அவரது தத்துவத்திற்கு விசிஷ்டாத்வைதம் என பெயரிடுகின்றார்.[8] மூன்றாவதாக உரையெழுதியவர் மத்வர். இவர் எழுதிய உரைக்கு விஜாதீய பேதம்  எனப் பெயரிடுகின்றார். அவரது தத்துவத்திற்கு துவைதம் எனப் பெயரிடுகின்றார்.[9]

      இவ்வாறு ஒரே உரைக்கு 3 நபர்கள் உரையெழுத நேர்ந்ததன் காரணத்தை அறிஞர். மயிலை. சீனி. வெங்கட்டச்சாமியின் நுாலான பௌத்தமும் தமிழும் என்ற நுாலில் இருந்து எடுத்தாளப்படும் மேற்கோலில் இருந்து அப்படியே எடுத்துக்காட்ட விழைகின்றேன். “ வைணவ ஆசாரியருள் தலைசிறந்தவரும். ஸ்ரீபாஷ்யம் அருளிச்செய்தவருமான இராமாநுசர், சங்கராச்சாரியரின் அத்வைத மதத்தைப் பிரசன்ன பௌத்தம். அதாவது மாறுவேடம் பூண்டுவந்த பௌத்தம் என்று கூறுயிருக்கின்றார். துவைத மதத்தின் தலைவராகிய மத்வாச்சாரியாரும் அவ்வாறே சங்கரரின் அத்வைத மதத்தைப் பிரசன்ன பௌத்தம் என்று கூறியிருக்கின்றார். பதுமபுராணத்தின் உத்திரகாண்டத்திலும் சங்கராச்சாரியாரின் மாயாவாத மதம் பிரசன்ன பௌத்தம் என்றே கூறப்படுகின்றது. இதனால் அத்வைத மதத்தின் அடிப்படையான கொள்கைகள் பௌத்த மதத்திலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பது நன்கு விளங்குகின்றது. [10]
  
                                  இராமானுஜர்.
      வைதிக சமயங்களான இந்து சமயத்தின் பிரிவுகளுக்குள் பௌத்த சமயத்தின் நிறுவனங்களான கோயில்கள், மடங்கள், கடவுள்கள் இவைகளை தன்வயப்படுத்தி வளர நினைத்ததின் விளைவாகவே, பௌத்ததிலிருந்து புத்தரின் சூத்திரங்களை மொழிபெயர்த்து வெவ்வேறு பெயர்களும் விளக்கமும் அளிக்கின்றனர் என்பததான் இதுவரையிலும் சொல்ல வந்த கருத்தின் சுருக்கம். அதில் முதலில் மொழிபெயர்ப்பு செய்த ஆதிசங்கரின் அத்வைத தத்துவத்தை மற்ற இருவரும் மாறுவேடம் பூண்டு வந்த பௌத்தம் என மாறி மாறி குற்றம் சொல்கின்றனர். இதனை ஆதிசங்கரரின் வார்த்தையில் சொல்வதென்றால், “ ஹுதர நிமித்தம் பஹுக்ருத வேஷம்” ( வயிற்றை நிரம்ப இவ்வளவு வேஷம் போடுகிறான் மனிதன்)

                                மத்வாச்சாரியார்
அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய மூன்று தத்துவங்களுமே மாறுவேடம் பூண்டு வந்த பௌத்தக் கருத்துகளே. அதனால்தான் ஒருவரை ஒருவர் குறை சொல்லி எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப் போல உண்மையை உளரிகொட்டியதை வரலாறு சொல்கின்றது.

ரமண மகரிஷி

       ரமண மகரிஷி 1879 ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் நாள் தற்போதைய விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், திருச்சுழி ஒன்றியத்திலுள்ள திருச்சுழியில் பிறந்தார். சுந்தரம் ஐயர், அழகம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் வெங்கட்டராமன். பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். பிறப்பின் அடிப்படையில் வெங்கட்டடராமன் திருமாலிய வழிபாட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்.


      ஆன்மீக ஈடுபாட்டின் காரணமாக, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என அவரது உறவினர்களில் ஒருவர் சொல்ல, அந்த திருவண்ணாமலையை தரிசிக்க வேண்டும் என நினைத்து தனது பதினேழாம் வயதில் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். இவர் ஆதிசங்கரரின் அத்வைத மரபை பின்பற்றுபவராகவே இருந்தார். அதிலும் அவரது நான் யார் என்னும் கேள்வியும் அதற்கான பதிலுமே அவரை பிரம்மஞான தேடுதலுக்கு இட்டுச் சென்றது. அதன் பின் அவர். தாம் அறிந்த பிரம்மஞானத்தை அனைவருக்கும், அனைத்து உயிரினங்களுக்கும், ( மனிதர்களுக்கும், ஆடு , மாடு, மயில், குரங்கு, அணில் ) என புவியில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களையும் ஒன்றாகவே கருதி, தனக்கு சமமாகவே பாவித்தார், அவ்வாறே நடத்தினார்.
     

இவருக்கு மக்கள் இட்ட பெயர், பிரம்மஞான சுவாமி, அதுவே நாளடைவிலும், பேச்சு வழக்கிலும் பிராமண சுவாமி என்று மருவியது. இவருடைய சீடரான கணபதி முனி என்னும் சமஸ்கிருத புலவர், இவருக்கு இரமண மகரிஷி என்னும் பட்டப் பெயரைச் சூட்டினார். இரமணர் என்னும் பெயருக்கு இரண்டு பொருள் உண்டு. 1. எல்லையில்லா ஆனந்தத்தை அருளுபவர். 2. பிறவி தளையை அறுப்பவர் என இரு பொருள்கள் உண்டு.

      மற்ற துறவிகளில் இருந்து இரமண மகரிஷி முற்றிலுமாக வேறுபடுகின்றார். 1. தனக்கென தான் அணிந்திருந்த வேட்டி மற்றும் கோவணத்தை தவிர எந்த சொத்தும் சேர்த்துக் கொள்ளாதவர். 2. தன் இறுதிக் காலம் வரை காசு, பணத்தை தன் கைகளால் தொடாமலே வாழ்ந்தவர். 3. அனைத்து உயிரினங்களையும் எல்லையில்லா அன்புடன் நேசித்தவர்.
·            ஆதி சங்கரரின் ஆக்கமான 'ஆத்ம போதம்' தனை தமிழில் வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார்.
·         உபதேச உந்தியார்
·         உள்ளது நாற்பது
·         உள்ளது நாற்பது அனுபந்தம்
·         ஏகான்ம பஞ்சகம்
·         ஆன்ம வித்தை
·         உபதேசத் தனிப்பாக்கள்
·         ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை
·         ஸ்ரீ அருணாசல அஷ்டகம்
·         நான் யார்?
·         விவேகசூடாமணி அவதாரிகை
·         பகவத் கீதா ஸாரம்
·         குரு வாசகக் கோவை
·         ஸ்ரீ ரமண நூற்றிரட்டு
·         ஸ்ரீ ரமணோபதேச நூன்மாலை - விளக்கவுரை[11] ஆகிய நுால்களை எழுதி தன்னனை தத்துவ வாதியக நிலை நிறுத்திக் கொண்டவர். ஆதி சங்கரரைப் போல், தத்துவ வாதியாக இருந்து பின் சமய வாதியாக மாறாமல், இறுதி வரையிலும் தத்துவ விசாரணயைாளராகவே தன் வாழ்நாளைக் கழித்தவர்.

பிரம்ம ஞானம்

      பிரம்மஞானம் என்னும்  கருத்தை தமிழகத்தில் மக்களிடம் மிக நெருக்கமாக அனைத்து தரப்புக்கும் கொண்டு சென்றவர்கள் 3 ஞானிகள். திரு. ரமண மகரிஷி, திரு. யோகிராம்.சுரத்குமார். திரு. அருள்தந்தை. வேதாத்திரி மகரிஷி, இவர்கள் மூவரின் பிரம்ம ஞான கருத்தையும் வழிமுறையும் மிக நெருக்கமாக ஆய்வு செய்து, பயின்றவர். நமது இசைஞானியார். இவர்களில் இரமணரை. தனது குரு என்றும். ஞான தந்தை என்றும் அழைத்து ரமணரை பெருமை படுத்துகின்றார். தனது ராஜாவின் ரமண மாலை ஒலிநாடாவில் நமது இசைஞானி. பிரம்ம ஞானம் என்பது குறித்து கதை வழியாக விளக்க விரும்புகின்றேன். இந்த கதை ஆதிசங்கரரின் வாழ்வில் நடந்தது,

      வரணாசிக்கு அருகில் ஆதிசங்கரர் வாழ்ந்து வந்த காலத்தில், ஒரு நாள் காலை கங்கை நதியில் இருந்து குளித்து முடித்து விட்டு, புதிய ஆடை அணிந்து காசி விசுவநாதரை தரிசிக்க வேண்டும் என்னும் ஆவல் மிகுதியால், கரையேறும் போது, எதிரில் ஒரு சண்டாளன், ( பஞ்சமர் ஆணுக்கும், பார்ப்பண பெண்ணுக்கும் பிறந்தவர்களை சண்டாளர்கள் என அழைப்பர். )  தனது நாய்களுடன் அவர் கரையேற நினைக்கும் இடத்தில் நின்று கொண்டிருக்க தனது பார்ப்பன ஆசாரம் கெட்டுவிடும் என்னும் எண்ணத்தில், அவரை விலகியிருக்கச் சொல்கின்றார். அந்த உரையாடலை அப்படியே பார்ப்போம்.


சங்கரர். “ கொஞ்சம் விலகி வழி விடுங்கள்,
சண்டாளர், ஏன் இருக்கின்ற வழியில் நீங்கள் போகலாமே,
சங்கரர். இல்லை நான் குளித்து விட்டு வருகின்றேன். தங்கள் சுவாசித்த காற்று என்மீது பட்டால் தீட்டு, அதனால் விலகி இருக்க சொல்கின்றேன்.
சண்டாளர். காற்றில் என் சுவாசக் காற்று, உங்கள் சுவாசக் காற்று என பிரித்து பார்க்க இயலுமா என்ன. என் சுவாசக் காற்று, அப்படியே வேறு எதனுடம் கலக்காமல் இருக்குமா, அல்லது நீங்கள் சுவாசித்த காற்று உங்களுடையதுதான் என உங்களால் உறுதி பட சொல்ல இயலுமா.
சங்கரர்.  எனக்கு உன்னுடன் பேச நேரமில்லை, சற்று நகர்ந்து நில்,
சண்டாளர். நகர்ந்து என்றால், நான் நகர வேண்டுமா, என் மனம் நகர வேண்டுமா, நான் நகர வேண்டும் எனில் என் மனம் அதற்கு ஒத்துழைக்க வேண்டும், என் மனம் நகர வேண்டும் எனில் என் உடல் ஒத்துழைக்க வேண்டும். இதில் எதனை தாங்கள் நகரச் சொல்கின்றீர்கள். அவ்வாறு. தாங்கள் உன் உடலை நகரச் சொன்னால், என் மனம் உங்களைச் சுற்றி வந்தால், அதற்கு தீட்டு கிடையாதா. என் மனதிற்கு தீட்டு இல்லையெனில், என் மனதை சுமந்திருக்கும் உடலுக்கு மட்டும் எங்கிருந்து தீட்டு வந்தது என்கின்றார்.

( இந்த பதிலால் ஆதி சங்கரர் சற்று திடுக்கிட்டாலும், தொடர்ந்து சமாளித்து, )
சங்கரர். கொஞ்சம் தெற்கு திசையாக நகர்ந்து நில்லேன், என்கின்றார்.
சண்டாளர். அப்படியெனில் தெற்கு திசை தீட்டுப்பட்டால் பரவாயில்லையா, நான்கு திசைகளில் ஒரு திசை தீட்டானால் உங்களுக்கு சம்மதமா, எல்லா திசைகளிலும் என் போன்ற இழிசாதியினர் வாழ்ந்து வருவதால், நாங்கள் வசிக்காத திசையிருந்தால் சொல்லுங்கள் அங்கே நகர்ந்து நிற்கின்றேன், என்கின்றார்.

அவருடைய அந்த பதிலைக் கேட்டு சங்கரருக்கு உதித்த ஞானமே, பிரம்ம ஞானம். உயிர்கள் அனைத்தும் இறைவனின் படைப்பு, இதில் உயர்வு தாழ்வு கிடையாது என்னும் ஞானமே பிரம்ம ஞானம். எனக்குள் இருக்கும் இறையாற்றலே, சண்டாளனுக்குள்ளும் இருக்கின்றது, அவர் கையிலிருக்கும் நாய்க்குள் இருப்பதும் இறையாற்றலே, என்ற தனது தத்துவ தேடலை முடிவுக்கு கொண்டு வந்து, அந்த சண்டாளனின் பெயராலே, மனீஷா பஞ்சகம் பாடினார் என்பது வரலாறு.

எல்லா இடங்களிலும் எக்காலத்திலும் எல்லாப் பொருட்களிலும், உயிர்களிலும் இறைநிலையை உணரக்கூடிய பேரறிவுதான் பிரம்மஞானம், அண்டவெளிதான்  இறைநிலைஅதுதான் கடவுள். கடவுளுக்கு உடலும் குடலும் இல்லை, உருவம் இல்லை, எல்லோரும் உணரக்கூடிய ஒரு பேராற்றல். எல்லா உயிர்களையும் நிபந்தனையற்று நேசிக்க வேண்டும் என்பதே பிரம்மஞானம்,

ரமணர் தன் இறுதிக்காலம் வரை, ஆடு, மாடுகளையும் தனது பிள்ளைகள் என்றே அழைத்து, அவர்களுக்கும் ஞானத்தை போதித்து மோட்சம் பெற காரணமாக இருந்தார் என அவரது வரலாறு சொல்கின்றது. எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும் என இந்து மதம் உபதேசம் செய்யும். ஆனால் மனிதர்களை உயர்சாதி, கீழ்சாதி என பாகுபாடு பார்த்து பிரித்து வைக்கும். இந்த போக்கைத்தான் பிரசன்ன பௌத்தம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.  எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும் என சொல்லி விட்டு உயர்வு தாழ்வு பார்ப்பது இறைநிலையில் எந்த வகையில் தகும். .இன்றைய இந்து மத ஞானங்கள் இதைத்தான் போதிக்கின்றன. இதைத்தான் கற்பிக்கின்றன. உயர்சாதி, கீழ்சாதி என சாதி பேதம் பார்க்காத ஒரு இந்துவை இங்கே காட்ட இயலுமா என்ன.

பிட்ச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே.

      நான் இங்கே பேசு பொருளாக எடுத்துக் கொண்டது, ராஜாவின் ரமணமாலையில் வரும், பிட்ச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே, என் அய்யனே, பாடலை. ஆனால் இதுவரையிலும் எழுதியது. அந்த பாடலுக்கான முன்புலச் செய்திகள். இந்த முன்புலச் செய்திகள் புரியாமல் இந்த பாடலை கேட்க்கும் எவருக்கும் இசைஞானியாரின் எல்லையில்லா ஆன்ம ஞானமும், தேடலும் புரியாமலே போய்விடும் என்பதால் எழுத நேர்ந்தது. படிப்பவருக்கு இது மிக நீளமாகத் தோன்றும். உண்மையில் மிக சுருக்கமாகவே இதனை பகிர்ந்திருக்கின்றேன் என்பது வரலாற்றுடன் பொருத்திப் பார்ப்பவருக்கு எளிதில் புரியும்.  

அதே பாடல் சிற்சில மாற்றங்களுடன் “ பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே” என நான் கடவுள் படத்தில் இடம் பெற்றது. இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை படிப்பவருக்கு உணர்த்த வேண்டிய தேவையுள்ளது.
            முதலில் பிச்சை என்பதற்கும் பிட்சை என்பதற்குமான வேறுபாடுகளை விளங்கி கொள்ள வேண்டும். பிச்சை என்பது சாமானியர்கள் யார் வேண்டுமானாலும் பெறுவது. இல்லாதவன் இருப்பவனிடம் கெஞ்சி, கூத்தாடி, கதறி, கண்ணீர் விட்டு இரந்து பெறுவது பிச்சை. இதற்கென எந்த விதமான நிபந்தனைகளும், கட்டுப்பாடும் கிடையாது. 
பிட்சை என்பது உயர் ஞானம் எய்திய ஞானிகள் தமக்கான உணவு, உடை, மற்றும் அவசியத் தேவைகள் எதற்காகவும் சாமானியர்கள் யாரிடமும் கையேந்த மாட்டார்கள். தனக்குத் தேவையானவைகளை இறைவன் அவர்களுக்கு அளிப்பான் என்பது அவர்களின் நம்பிக்கை. எங்காவது ஓரிடத்தில் பிச்சைப் பாத்திரத்தை வைத்துவிட்டு காத்திருப்பார்கள். அதில் விழுவதை இறைவன் இன்று அவருக்கு அளித்ததாக நினைத்து மகிழ்ந்து உண்பார்கள். அவர்களுக்குத் தேவையான உணவு அன்று கிடைத்ததும் பிட்சைப் பெறுவதை நிறுத்திவிட்டு, இறைவனை தியானிக்கத் துவங்கிவிடுவார்கள். 

ஒரு வேலை அன்றைய உணவு பிட்சையாகக் கிடைக்கவில்லை என்றாலும் அதற்காக வருத்தப்பட மாட்டார்கள். அப்பொழுதும் இறைவனை நோக்கிய சிந்தனை, உடல், மனம், என புறவயம் மற்றும் அக நோக்கிலேயே, காலத்தையும், பொழுதையும் செலவிடுவார்கள். தேவைக்கு மேல் எதிர்பார்க்காதது பிட்சை, தேவை அடங்காமல் யாசிப்பது பிச்சை.

இந்து மதத்தில், இறைவனை தோழனாகப் பார்ப்பவர்கள், கண்ணனை வழிபடுவார்கள். இறைவனை தந்தையாகப் பார்ப்பவர்கள், சிவனை வழிபடுவார்கள். இறைவனை தாயாகப் பார்ப்பவர்கள் சக்தியை வழிபடுவார்கள். இறைவனை மகனாகப் பார்ப்பவர்கள் முருகனை வழிபடுவார்கள். இறைவனை எல்லோருக்கும் பொதுவாகப் பார்ப்பவர்கள் சூரியனை வழிபடுவார்கள். இதுதான் இந்து மத கடவுள்களின் வழிவாட்டு உளவியல். இறைவனைத் துாதராக பார்ப்பவர்கள் நபியை வணங்குகின்றார்கள், இறைவனை மீட்ப்பராகப் பார்ப்பவர்கள் இயேசுவை வணங்குகின்றார்கள். இதுதான் பொதுவான மதம் சார்ந்த வழிபாட்டு உளவியல்.

இந்த உளவியல் வழிபாட்டுப் பின்புலத்தில், நமது இசைஞானி, ஒலிநாடாவில் உள்ள வேறொரு பாட்டின் வழியாக ரமணரை தமது ஞானத் தந்தை என்கின்றார். எனவே இந்த பாடல் ஒரு மகன் தந்தையிடம் பேசுவது போல அமைக்கப்பட்டிருக்கின்றது. அதுவும் அவரின் தந்தை ஞான தந்தை என்றானபின், ஞானத் தேடல் நோக்கிலேயே இது அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை உணர்ந்து கொண்டு இந்த பாடலை விளக்க விரும்புகின்றேன்.

பிட்சைபபிட்ச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிட்ச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
யாம் ஒரு, பிட்ச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

சிவனிய மதத்தில் உடலை, குறித்து மற்ற இறை ஆளுமைகள் குறிப்பிட்டிருப்பதை இங்கே ஒப்பிட வேண்டும். தனது உடலை, புறம் தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடியது என்கின்றார். மாணிக்க வாசகர். திருவாசகத்தில். உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன். என ஞானம் அடைவதற்கு முன் உடல் ஒரு அசிங்கம் என்கின்றார். திருமூலர். நுன்மான் நுழை புலம் இல்லையெனில் மனித உடல், எலும்பும் தோலும் போர்த்தப்பட்ட பொம்மை என்கின்றார். திருவள்ளுவர்.
ஆனால் நமது இசைஞானியார் மட்டும் தனித்து, இந்த உடலை ஒரு பிச்சைப் பாத்திரம் என்கின்றார். அதையும் மூன்று முறை வெவ்வேறு பொருளில் பதிவிடுகின்றார். முதல் முறை தனது ஞான தந்தையிடம் நீ எனக்கு கொடுத்திருக்கும், எலும்பு, உடல், சதை, நரம்பு, ரத்தம் என்று சொல்லப்படும் பஞ்சேந்திரியங்கள் அனைத்துமே எனக்கு நீங்கள் பிட்ச்சையாக அளித்தது. என்கின்றார்.

இரண்டாவது முறையாக, இந்த உடலும், மனமும் நீங்கள் எனக்கு அளித்த பிட்ச்சை என்கின்றார். மூன்றாவது முறையாகவும், பிட்ச்சை என்னும் போது, போதும் எனக்கு இந்த மனிதப் பிறவி என்னும் பிட்ச்சை இதனுடன் நான் துன்பப்பட விருமப்பவில்லை என்கின்றார்.

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்ததா
தெய்வீக ஆற்றலான அம்மை அப்பானால் ( சிவன் பார்வதி) இந்த பிறவி கிட்டியதா, அல்லது மனித ஆற்றலான தாய் தந்தையின் ( ராமச்சாமி, சின்னத்தாயம்மாள்)  வழி இந்த பிறவி கிட்டியதா என்கின்றார். அல்லது எனது முன் பிறவியின் வினைப் பயனால் வந்ததா என அவரை அவரே கேட்டுக் கொள்கின்றார்.
இம்மையை நான் அறியாததா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிட்ச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிட்ச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
           
எதனால் இந்த பிறவி என்பதே நான் அறியாதது, மீண்டும் மனிதனாக  இப்பிறவி எதனால் எனக்கு வந்தது என்பது நான் அறியாதது. ஆயினும் சின்ன பொம்மையைப் போல் இயக்கமில்லாமல் இருந்து உனது இயக்கம் என்னும் பேரண்டத்தின் சுழற்சி, மற்றும் அதன் விரிவாக்கம் இவற்றை குறித்து அறிந்து கொள்ள இந்த உடல் மனம் ஆகியவற்றின் வழியாக முயற்சிக்கின்றேன். அப்பா என்கின்றார்.

அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிட்ச்சைக்கு செல்வது எவ்வ விடத்தில்
அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிட்ச்சைக்கு செல்வது எவ்வ விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்
·         செல்வங்களை பொதுவாக இரண்டு வகையாகப் பிரிப்பர். ஒன்று அருட் செல்வம், மற்றொன்று பொருட்செல்வம். இதனை பதினாறு வகையாகப் பிரிப்பர்.
1.   கல்வி
2.   புகழ்
3.   வலி
4.   வெற்றி
5.   நன் மக்கள்
6.   பொன்
7.   நெல்
8.   நல்லூழ்
9.   நுகர்ச்சி
10. அறிவு
11. அழகு
12. பொநுமை
13. இளமை
14. துணிவு
15. நோயின்மை
16. வாழ்நாள்

அதனால்தான் ஒருவரை வாழ்த்தும் போது பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்பர். அதைப் போல், அருட் செல்வம், பொருட்செல்வம் என இரண்டையும் நீயே வைத்துக் கொண்டால் நான் எங்கு சென்று யாரிடம் பிட்சை கேட்ப்பது, உன்னிடம் தானே கேட்டக்க வேண்டும். உன் கையில் நான் ஒரு கருவியாக மட்டுமே இருக்கின்றேன். என்னை இயக்குவது நீயாக இருக்கின்றாய் என்கின்றார்.

ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினைய பழ வினையா
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
      இந்த உடல் எத்தனையோ பிறவிகள் எடுத்து, மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்துக் கொண்டிருக்கின்றதே, என் முன் வினைப் பயனும், பின் வினைப் பயனும் நொடி தோறும் என்னை துன்பத்துக்குள்ளாக்க வைத்திருக்கின்றதே, இது சரியா என்கின்றார்.

பொருளுக்கு அலைந்திடும் போருளட்ற வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் நிறையும் அருனையே
ரமணர் என்னும் கருனையே
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

           
நம்மில் பலரும் பொருளுக்கு அலைந்திடும் அந்த உழைப்பை அல்லது வாழ்வை, பொருளற்ற வாழ்வு என்கின்றார். இறைவனின் அருளை நாடும் மனம் நிறைவு பெறாமல் பிதற்றுகின்றது என்கின்றார். ரமணர் என்னும் கருனையே என்னை ஆதரித்து அருள் தருக என இறைஞ்சுகின்றார்.
பிட்ச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிட்ச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

      அண்மையில், இசைஞானியாரின் பிறந்தநாளின் போது, இரமண மாலை மற்றும் இரமண கீதம் ஆகிய இரண்டு ஒலிநாடாக்களின் உரிமையை இரமணாசரமத்திற்கே எழுதி கொடுத்து விட்டு வந்தார் நம் இசைஞானி, தனது 73 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, அதன் விற்பனை வழியாக வருகின்ற வருமானம் ரமணாசரமத்திற்கே செல்ல வேண்டும் என எழுதி தந்து விட்டு வந்தவர் இளையராஜா.

      உன்னதமான ஆன்மீக தத்துவக் குவியலாய் இரமணமாலை ஒலித்தொகுப்பு உள்ளது, அதிலும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் பாடல் ஆன்மீக தத்துவ விசாரனையாகவும், விடையாகவும், உள்ளது. இதைப் போல என்னற்ற பாடல்களை இறைநிலையில் இருந்து இசையமைத்து கொடுத்து நம்மை மகிழ்விக்கும் இசைஞானிக்கு நாம் என்ன கைமாறு செய்ய இயலும். அவர் பாடலை கேட்க்கும் போது ஒரு கனமாவது, அவர், குரு அருளாலும், திரு அருளாலும், உடல்நலம், நீளாயுள், நிறை செல்வம் பெற்று நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என பகவான் புத்தரிடம் ( அவரவர் அவரவர் வழிபடும் தெய்வங்களிடம் வேண்டுவதைத் தவிர.

      இந்தப் பாடலின் இசையைப் பொறுத்த வரை, பாடலின் பொருளை உணர்த்தும் விதமாகவே இசை அமைப்பு இருக்கும். சங்கு, சிகண்டி, புல்லாங்குழல், தவில், என்னும் பௌத்த இசைக் கருவிகளுடன், வயலின் இசையும் கலந்து ஒலிக்கும் போது, பாடலின் உருக்கத்தில் நம்மை மெய் மறக்கச் செய்து தாயின் கருவரையில் இருந்த அமைதியை உணரச் செய்கின்றார் இசை ஞானி. பாடல் துவங்கும் போதே, சாவுக்கு ஒலிக்கும் சங்கு, சிகண்டி, இசையை தவழச் செய்து, இசை மரபுகளை இதிலும் உடைக்கின்றார். நம் இசை ஞானி.

      நிறைவாக. இசைஞானியாரின் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் என்னும் பாடல் பௌத்த தத்துவமான பிரம்மஞானம் என்னும் தத்துவத்தின் அடிப்படையில் இயற்றி இசையமைக்கப்பட்ட ஒரு உயர் தத்துவப் பாடலாகும்.
தொடரும்…,

இதையும் படியுங்கள்