Monday, October 17, 2016

பௌத்த கூட்டியக்கத்தின் செயல் திட்டம்

நமோ புத்தாயா
பௌத்த கூட்டியக்கம் ஒருங்கினைக்கும் நவம்பர் 13ல் போதிசத்வா. அம்பேத்கர் மணி மண்டபத்தில் காலை பத்து மணிக்கு  நிகழ உள்ள பௌத்தம் ஏற்போம் நிகழ்வு குறித்து பலரின் மனதுக்குள் இருக்கும் ஐயப்பாடுகளுக்கான சில விளக்கமும் தெளிவும். 
 1. இந்நிகழ்வுக்கு வரும் அனைத்து அமைப்புகளும் அவர்கள் பெயரிலே வரலாம்.
 2. தனித்தனி அமைப்புகள் எங்கோ எப்பொழுதோ நிகழ்த்தும் பௌத்தம் ஏற்ப்போம் நிகழ்வை பௌத்த கூட்டியக்கம் 13/11/2016அன்று ஒரே இடத்தில் ஒருங்கிணைப்பு செய்கிறது.
 3. எனவே அவரவர் அமைப்புகள் அவரவர் அமைப்பு சார்ந்த நபர்களோடு பௌத்தம் ஏற்க அழைக்கிறேன்.
 4. பல அமைப்புகள் தனித்தனியாக நிகழ்த்தும் போது கவனம் ஈர்காது. அதே நேரத்தில் பலரும் மற்றும் பல அமைப்புகளும் சேர்ந்து ஒரே இடத்தில் பௌத்தம் ஏற்கும் போது மிகு முக்கியத்துவம் பெறும். இதைத்தான் பௌத்த கூட்டியக்கம் செயல்படுத்த முயற்சிக்கின்றது.  இதுதான் செயல் திட்டம்.
 5. அண்ணல் பௌத்தம் ஏற்ற 60 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பெரும் திரளான மக்கள் பௌத்தம் தழுவ வேண்டும் என்னும் நோக்கத்திற்காக இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.
 6. இந்த நோக்கத்தில் வெற்றி பெற உங்களின் பங்களிப்பை மற்றும் ஒத்துழைப்பை எதிர்பார்கிறேன். நன்றி

இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிரவும்
மா.அமரேசன்.
புத்தகயா
பேச. 9150724997.

Thursday, October 6, 2016

இன்றைய சூழலில் பௌத்தம் யாருக்குத் தேவை.

உண்மையில் மிக வருத்தமாகத்தான் இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் ஓராயிரம் கேள்விகள் பௌத்தம் தொடர்பாக படித்தவர்களிடமிருந்து விவாதங்களாகவும், விதண்டாவாதமாகவும் வருகின்றது.
ஒவ்வொரு கேள்விக்குப் பின்னாலும் 
 • அறியாமையும், 
 • சிறு பிள்ளைத்தனமும், 
 • அதி புத்திசாலித்தனமும் ஒலிந்து கொண்டிருப்பதை உணர்கின்றேன் நான்.

உண்மையில் பௌத்த கூட்டியக்கம், 
 • மெத்தப் படித்த்தவர்களுக்கா எனில் இல்லை, 
 • அம்பேத்கரின் புத்தரும் அவர் தம்மமும் அட்டை டு அட்டை படி படித்தவர்களுக்கானதா எனில் இல்லை.
 • நவயானம் சிந்தாந்தம் கொண்டவர்களுக்கா எனில் அதுவும் இல்லை.
 • தேரவாதத்தில் தேர்ச்சியுற்றவர்களுக்கா எனில் அதுவும் இல்லை.

இவர்கள் எல்லாம் பௌத்தத்தில் தேர்ச்சியும் மிகு புலமையும் பெற்றவர்கள், 60 ஆண்டுகளாக அம்பேத்கரின் பௌத்தத்தை தோள் கொடுத்து தாங்கிக் கொண்டிருப்பவர்கள். இவர்களை நான் தொந்தரவு செய்யப் போவதும் இல்லை, அவர்களின் சுமையை துாக்கப் போவதும் இல்லை.
பௌத்த கூட்டியக்கத்தின் நோக்கம், 
 • சேரிகளில் உள்ள தினமும் தீண்டாமையின் வடிவத்தை எவ்வகையிலாவது அனுபவித்துக் கொண்டிருக்கும் என் இரத்த உறவுகள், தீண்டாமையின் மூல காரணமாக இருக்கின்ற அவர்கள் தற்போது வணங்கும் தெய்வங்களை விடுத்து,,
 • எந்த கடவுளை அவர்களால் தொட்டு வணங்க இயலுமோ, அந்த கடவுளை வணங்கச் செய்வது. 
 • எந்த கடவுளை வணங்கினால் மதவாதமும் வன்முறையும் உருவாகாதோ அந்த கடவுளை வணங்கச் செய்வது. 
 • மனித குலத்துக்கு சமத்துவம் சகோதரத்துவம் இவற்றை போதித்து, ஒடுக்கப்பட்ட மற்றும் தனிமைப் படுத்தப்பட்ட மக்களை தன்னுடன் தோழர்களாகவும், சீடர்களாகவும் சேர்த்துக் கொண்டு அறம் சார்ந்த வாழ்வியலோடு எப்பொழுதும் மகிழ்ச்சியாக வாழ வழி சொன்ன பகவான் புத்தரை வழிபடுவதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதுதான்.

இங்கே வழக்கமாக கேள்வி கேட்ப்பவர்கள் ” புத்தரை வழி பட்டால் எல்லாம் தீர்ந்து விடுமா? தயவு செய்து கேள்விகள் கேட்க வேண்டாம் வழி பட்டுப் பாருங்கள் தீரும். நம்பிக்கை தானே வாழ்க்கை .
புத்தரின் வார்த்தையில் சொல்வதெனில், நம்பிக்கை உடையவனிடத்தில் அய்யங்களும், அவ நம்பிக்கையும், கேள்விகளும் இருக்காது. 

தற்போதைய பதிவு

அறம் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் விலை பட்டியல். 1. சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு - யாழன் ஆதி. விலை. 150 ரூபாய் ...

பலராலும் படிக்கப்பட்ட கட்டுரைகள்