புத்தநெறி மந்திரங்கள் 4
ஓம் மணி பத்மே ஹூம்
தியான மந்திரங்கள் - 1
இந்த மந்திரத்தை ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், என எவர் வேண்டுமானாலும், காலை, மாலை, இரவு, நள்ளிரவு, பகல், நண்பகல், என எப்பொழுது வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையிலும், எந்த இடத்திலும் மனதுக்குள்ளும், வாய்விட்டும், உச்சரிக்கவும், ஜெபிக்கவும் தியானிக்கவும் ஏற்ற மந்திரம்.
புத்தநெறி மந்திரங்களுக்குள் மிக சக்தி வாய்ந்த மந்திரம் இது. இதை மணி மந்திரம் என்றும் அழைப்பர். பண்டையத் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு மணி என்கின்ற பெயர் இருக்கும். அதே போல பலரும் தங்கள் வீட்டு நாய்க்கு முன்பெல்லாம் மணி என்றே பெயரிட்டு அழைப்பர்கள். ஏனென்றால் தங்களை காப்பது மணி மந்திரம் என்பதால் தங்களையும் தங்களின் குடும்பத்தையும் காப்பாற்றும் நாய்க்கும் அதே பெயரிட்டு அழைப்பது தமிழரின் மரபாக இருந்தது முன்பெல்லாம்.
அவலோகிதேஷ்வரரின் அவதாரமாக கருதப்படும் தலாய் லாமாவின் பக்தர்களால் இந்த மந்திரம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. மேலும் இந்த மந்திரத்தின் ஆற்றலை அதிகப்படுத்துவதற்காக இந்த மந்திரத்தை திபெத்தியர்கள் பாறைகளில் செதுக்கியும், பிரார்த்தனை சக்கரங்களில் எழுதியும் வைக்கின்றனர். ஒவ்வொரு முறை இந்த சக்கரத்தை சுழற்றும் போது, அது மந்திரத்தின் உச்சரித்ததின் பலனை தருகின்றதென நம்பப்படுகிறது.
இந்த மந்திரம் முதன் முதலின் காரண்டவியூக சூத்திரத்தில் காணப்படுகிறது. இந்த சூத்திரம் திபெத்திய பௌத்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரம் ஆகும். இந்த சூத்திரத்தில் கௌதம புத்தர் இவ்வாறு கூறுகிறார், "இது தான் மிகவும் பயனுள்ள மந்திரம். நான் கூட இதைப் பெற வேண்டி பல புத்தர்களிடம் வேண்டினேன், இறுதியில் இந்த மந்திரத்தை அமிதாப புத்தரிடமிருந்து பெற்றேன் என்கிறார் பகவான் புத்தர்.
இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் பயன்கள்.
1. நமது கர்ம வினைகள் மாறுகின்றன
2. நமது ஆரா சுத்தமாகின்றது.
4. நமது வாழ்விலும் தொழிலிலும் உள்ள தடைகள் விலகுகின்றது.
5. மன அமைதி கிடைக்கின்றது
6. உச்சரிப்பவருக்கு என்ன தேவையோ அது நிச்சயம் நிறைவேறுகின்றது.
பணம், பதவி, புகழ், பட்டம், வேலை ஆகிய தேவைகள் நிறைவேறும்.