பத்து நாட்களுக்குப் பிறகு.
சேலம் பயணியர் விடுதியில் கதிரேசனும், மற்ற உயர் அதிகாரிகளும், தங்க வைக்கப்பட்டிருந்தனர், மேட்டூர் பயணியர் விடுதியில் தொல்பொருள் ஆய்வாளர்கள், மேட்டூர் அணைகட்டில் உள்ள விருந்தினர் இல்லத்தில் களப்பணியாளர்களும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
காலை 5 மணிக்கெல்லாம் எழுந்துவிடும் பழக்கமுடைய கதிரேசன், கண்களை மூடி இதுவரை நடந்ததையெல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். மேட்டூர் வந்து அகழ்வாய்வுப் பணிகளைத் துவங்கி 3 நாட்களாகின்றது. இன்று கதிரேசன் அகழ்வாய்வு நடக்கும் இடத்தைப் பார்க்க இயலவில்லை, மாநில தொல்லியல் துறையினரோடு தொடர்ந்த பேச்சு வார்த்தைகளும், அவர்களின் ஒத்துழைப்பை கோரி நடந்த கடிதப் போக்குவரத்துமே நான்கு நாட்களுக்கு மேல் ஆனதில் கதிரேசனுக்கு மிகுந்த வருத்தம்.
மூன்று மாதங்களில் 10 நாட்கள் ஓடிப் போனது, இருக்கும் நாட்களில் களப்பணியை முடிக்க வேண்டும் என்றால் நிறைய ஆட்களும், ஆய்வாளர்களும் தேவை மாநில அரசின் தொல்லியல் துறையை உதவிக்கு கேட்டிருந்தார். அவர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் வராத நிலையில் கொஞ்சம் அயர்ந்து போனார் கதிரேசன். இருந்தும் தன்னால் இயலும் என்பதை மனதில் உறுதியாக சொல்லிக்கொண்டிருந்தார்.
காலை பத்து மணி அளவில், கதிரேசனின் கை பேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது, அது பிரைவேட் நம்பர் என்று திரையில் காண்பித்தது, ஹலோ, சார் மேட்டரில் அகழ்வாய்வில் கண்டுபிடித்த பொருட்களை எல்லாம், அழித்துக் கொண்டிருக்கிறார்கள், என்று ஒரு உறுதிபடுத்தப்படாத செய்தி வந்தது, அதிர்ந்து போனார், கதிரேசன், பதறியடித்துக் கொண்டு மற்ற அதிகாரிகளையும் அழைத்துக் கொண்டு வாகனத்தில் ஏறி மேட்டூர் வனப்பகுதியை வந்தடைந்த போது நேரம் பகல் 12 மணி,
கதிரேசனைப் பார்த்ததும், பப்பு ஓடி வந்து இங்கு எந்த பிரச்சனையும் இல்லை சார், யாரும் வரவில்லை, என்றதும், கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பினார் கதிரேசன். பப்பு கல்வெட்டுகள் ஏதாவது கிடைத்ததா என்றதற்கும் இல்லை என்றே பதில் வந்தது, பப்புவிடம், கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு, மெல்ல ஆய்வு நடைபெறும் பகுதியை பார்வையிட எழுந்திருக்க முயன்றபோது தமிழ்நாடு அரசு என்ற பெயர் பலகையை தாங்கிய மகிழுந்து வந்து நின்றது.
அதிலிருந்து ஒரு 30 வயதுடைய பெண்ணும், ஒரு டவாலியும் வந்து இறங்கினார்கள், டவாலி பப்புவிடம் வந்து மேடம் கதிரேசன் அய்யாவை பார்க்க வந்திருக்காங்க, என்றதும், கதிரேசன் நேரடியாக வாங்க என்ன விஷயம் என்று சொன்னதும், ஆறுதல் மூச்சு வந்தது அந்த பெண்ணிடமிருந்து, சார் என்பெயர் மலர்மதி, நான் தமிழ்நாடு தொல்லியல் துறையில் முதுநிலை களப்பணியாளர் , உங்களுக்கு உதவி செய்யவும், தேவையான தகவலை அளிக்கவும் மாநில அரசாங்கம் நியமித்திருக்கின்றார்கள் என்றதும். கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு வந்தது, கதிரேசனிடமிருந்து.
சரி வாங்க இடத்தைப் பார்க்கலாம் என்ற கதிரேசன் நேரடியாக அகழ்வாய்வு நடக்கும் இடத்திற்கு நடந்தே அழைத்துச் சென்றார். அவர்கள் அகழ்வாய்வு நடக்கும் இடத்தை அடைய முப்பது நிமிடங்களுக்கு மேலாகும். அதற்குள் மலர் மதியைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். மலர் மதி, திராவிடப் பாரம்பரியத்தில் வந்த குடும்பம், தொல்லியலில் முதுகலை படித்தவர். தேர்வு எழுதி முதுநிலை களப்பணியாளரானவர். கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகம், சொந்த ஊர் மேட்டூர் என்பதால் சுற்று வட்டாரங்கள் மிக நன்றாகத் தெரியும். வயது 30க்கு மேல் இருக்கும். மிக சிவந்த நிறம், ஒடிசலான தேகம், முதலில் யார் பார்த்தாலும் இவள் எந்த திரைப்பட நடிகையோ என்று சொல்ல வைக்கும் அழகு.. இன்று திருமணம் ஆகவில்லை, வீட்டில் இந்த தொல்லை தாங்காமல் களப்பணிகளுக்கு சென்று விடுவாள், மனதிற்கு பிடித்தவர் கிடைத்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருப்பவள்.
அகழ்வாய்வு நடைபெறும் இடத்திற்க வந்ததும், கிடைத்தப் பொருட்களை எல்லாம், எடுத்து தனியாக வைத்திருந்தனர். அப்போது ஒரு களப்பணியாளர் வந்து ஒரு பாறை செடி கொடிகள் , மண்ணால் மூடப்பட்டிருந்தது . சுத்தம் செய்ய சில மணி நேரம் . ஆனது . சுத்தம் செய்திருக்கின்றோம் வந்து பாருங்கள் என அழைத்ததும், கதிரேசனும் மலர்மதியும் ஓடிச்சென்று அந்த கல்வெட்டைப் பார்த்தனர். பிராமி எழுத்துகள் வெளிவந்தன . கதிரேசனுக்கு ஆச்சரியம் இல்லை – ஆயிரம் முறை பார்த்தவர் . ஆனால் இவை வேறு . பொதுவாக கல்வெட்டுகள், அரச கட்டலையாக இருக்கும், அரசரின் புகழ் பாடுவதாக இருக்கும், ஆனால் இந்த கல்வெட்டு வேறு மாதிரியாக இருந்தது. அதில் அரசு கட்டளை இல்லை , புகழ் பாடல் இல்லை . ஒரு வரி தெளிவு : " இங்கே இருந்து ஏழு சகோதரிகள் தம்மத்திற்காகப் புறப்பட்டனர் ."
கதிரேசன் மெதுவாக வாசித்தார் . “ ஏழு சகோதரிகள் .” ' சகோதரிகள் ' க்குக் கீழ் அழுத்தமான கோடு – மீண்டும் மீண்டும் இழுக்கப்பட்டது . “ இவர்கள் சகோதரிகள் அல்ல ” என்று யாரோ சொல்ல முயன்றது போல . ' ஏழு ', ' தம்மம் ', ' புறப்படுதல் ' – பௌத்த சங்க வரலாறு நினைவுக்கு வந்தது . எனில் இந்த இடம் பண்டைய காலத்தில் பௌத்த சங்கமாக இருந்திருக்கலாம், அல்லது விகாரமாக இருந்திருக்கும், தம்மம் பறப்ப பயணம் செய்த ஏழு பிக்குனிகளை வரலாற்றில் யாரோ சகோதரிகள் என்று பாறையெழுத்தின் வழியாக ஆவணப்படுத்தி இருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொண்டார்கள். ஆனால் ' ஏழு சகோதரிகள் ' இல்லை . இது மறந்தது இல்லை மறைத்தது ,” என்று கதிரேசன் முனகினார் .
மலர்மதியும், ஓரளவுக்கு கல்வெட்டுகளில் பரிச்சியம் உள்ளவர் என்பதால், கதிரேசன் என்ன சொல்கின்றாரோ அதை ஒப்புக்கொண்டார். இது ஒரு புது விதமாக அகழ்வாய்வு என்பதை மட்டும் அவர் மலர் மதியிடம் கூறினார். இரவு அறைக்கு திரும்பியது இதுவரையில் கண்டெடுத்த பொருட்களின் பட்டியல், அவற்றின் காலம், அவை யாருடைய ஆட்சிகாலம், எந்த சமயம் என எல்லாவற்றையும் ஒரு சிறு குறிப்பாக எழுதி பொது மேலாளருக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு தூங்கிப் போனார்.
No comments:
Post a Comment