Monday, August 14, 2023

ரோகிணி நதிக்கரையில்

நதியின் நடுவில்

குளம் போல 

தேங்கியிருந்த நீரில்

சித்தார்த்தர் கைகளால் 

மீன் பிடித்து மீண்டும் 

ஆற்றில் விட்டு 

விளையாடிக் கொண்டிருந்தார்


ஆற்றின் இரு கரையிலும்

சாக்கியர்களும் கோலியர்களும்

தமது படைகளுடன்

தாக்குதலுக்கு அணியமாக 

இருந்தனர். 


இளவரசரை தங்கள் 

பக்கம் அழைக்க

இரு படைகளும் 

கத்தி கத்தி

களைத்து போயின

கலைந்தும் போயின


கரையோரப் போன கௌதமரின்

கையிலிந்த மீன் கேட்டது 

ஏன் இந்த மீன் விளையாட்டு என்று

போரில் விருப்பம் இல்லை

பதில் வந்தது கௌதமரிடமிருந்து


இளவரசரின் பதிலைக் கேட்டதும்

கையில் இருந்து 

துள்ளி தாவியது மீன்

விடியலில் கட்டிலில் இருந்து 

கீழே விழுந்தேன் நான். 

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்