Friday, March 15, 2013

விடுதலை போராட்டம்


ஈழ விடுதலை போராட்டம் தமிழ்நாட்டில் புதிய எழுச்சி கண்டுள்ளது. வரவேற்ப்புக்குரியது, எப்பொழுதுமே இத்தகைய திடிரெழுச்சிக்குப் பின் ஒரு அரசியல்  கட்சியிருக்கும், அல்லது போராட்ட புரவலர்கள் தொண்டு நிறுவனங்கள் இருக்கும், அல்லது மத அமைப்புகள் இருக்கும். இங்கே யார் இருக்கிறரார்கள் என்பது தெரியவில்லை.
ஆனால் போராடும் மாணவர் அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள், ஈழத்தில் வாழ்வு அழிக்கப்பட்ட நம் உறவுகளுக்கு போரிடும் அதே நேரத்தில் சிங்கள ரானுவத்தால் வாழ்கை அழிக்கப்பட்டு ஏதிலிகளாக இருக்கும் நம் தமிழ்நாட்டு சகோதரனையும் கொஞ்சம் பாருங்கள், ராமேசுவரம் மீனவரை சிங்கள ரானுவம் சுடுவதும், மீனவர்களின் வாழ்வுரிமையை அழிக்கின்ற செயல்தானே, அதற்க்காகவும் நாம் சேர்ந்து குரல் கொடுப்போம். அவர்களுக்காக நாம் குரல் கொடுக்க வில்லையென்றால் நாம் அவர்களை தமிழர்களாக எடுத்துக் கொள்ள வில்லையென்றே அர்த்தம்.
21 கடல் மைல் தொலைவிற்க்குள் மீன் பிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு மீன் பிடி தொழிலுக்கு உகந்த்து அல்ல. ஈழத்தின் நில வளத்துக்காக எப்படி ஈழ தமிழரை சிங்கள இரானுவம் கொடுரமாக கொன்று குவித்த்தோ, அதைப் போலவே, இராமேசுவரம் கடல் மீன் வளத்தை சப்பானுக்கும், சீனாவுக்கும் தாரை வார்த்து தரவே, எல்லை தான்டி மீன் பிடித்த்தாய் சொல்லி துப்பாக்கி சூடு நடத்தி மீனவர்களை கொன்று குவித்திருக்கின்றது சிங்கள இரானுவம்.
இதுவரை சிங்கள இரானுவத்தின் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை மட்டும் 1200 என்று ஒரு புள்ளி விவரம் சொல்கின்றது. இவர்கள் தமிழர்கள் இல்லையா, இவர்களுக்கு குடும்பங்கள் இல்லையா, இவர்களின் கொடுமையான மரணத்திற்க்கு நீதி கேட்டது யார். ?
கடல் தொழிலில் எல்லை தாண்டுவது என்பது சர்வ சாதாரணமாய் நடக்கின்ற ஒன்று. ஆனால் ஈழ எல்லையில் மட்டும் இது அத்து மீறிய செயலாக கருதி கொன்று போடுவது, ஏன் ? ஆண்டுக்கு 2000 கோடிக்கு மேல் லாபம் தரக்குடிய தொழிலாய் குமரிக்கடற்கரை மீன் வளம் இருக்கின்றது. அது அந்த மண்ணின் மைந்தர்களான மீனவர்களுக்கு சேராமல் மொத்த வளத்தையும் கொள்ளையடிக்கவே இந்த கொலை நடக்கின்றது.  இதை கேட்க்க யாரும் இல்லை. இங்கே மீனவர்களின் ஓட்டு விழுக்காடு 2 சதமானம் தான், எனவே அவர்களுக்காக எந்த அரசியல் கட்சியும் பரிந்து பேசாது.
அவர்களுக்கு எல்லாமே திருச்சபை தான், அவர்களும் இதை பற்றி பேசமாட்டார்கள், ஆண்டவரை வேண்டிக் கொள் என்பதே அவர்களுடைய இறுதி வார்த்தையாக இருக்கும், திருச்சபையை அவர்கள் திருச்சுமை என்று கருத தெரியாமல் உள்ளனர்.
நமது போராட்டம் ஈழ படுகொலைக்கு மட்டும் அல்லாமல், மீனவர் படுகொலக்கும் சேர்த்து இருக்கட்டுமே ஏன் என்றால் இரண்டையும் செய்த்து, செய்வது சிங்கள இரானுவம் தானே?

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்