Saturday, March 30, 2013

தள்ளுபடி வேண்டாம், தனி வங்கி வேண்டும்.


தள்ளுபடி வேண்டாம், தனி வங்கி வேண்டும்.


இன்று இந்தியாவில் 5 ஒருவராக தலித் மக்கள் இருப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட  மக்கள் தொகை ஆய்வறிக்கை சொல்கின்றது. இந்த மக்கள் அணைவரும், அரசியல், சமுக பொருளியல் கண்ணோட்டத்தில் நலிவுற்றே வாழ்கின்றனர்.
அதிலும் அரசு ஆதிக்க சாதியினரின் மனோபாவத்திலேயே செயல் பட்டுக் கொண்டிருக்கின்றது. சுதந்திரம் அடைந்து  60ஆண்டுகளுககு மேல்  ஆன பின்னும். நான் கொடுப்பதை நீ வாங்கிக் கொள்ள வேண்டும். மாறாக நீ உரிமை என்றோ, சம பங்கீடு என்றோ பேச கூடாது. இதுதான் அந்த ஆதிக்க சாதியினரின் மனோபாவம். அரசும் இது வரை இப்படித்தான் செயல்பட்டுக் கொண்டு வருகின்றது. 
படித்த தலித்து இளைஞர்கள் சுய தொழில் செய்ய வங்கி கடன் விண்ணப்பித்தால், வங்கி கடன் கிடைப்பது குதிரை கொம்பாகவே உள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்குவதற்க்கும், அதற்கான மான்யத்தைப் பெறுவற்க்கும் அவர் படாதபாடு படுகின்றார்.
அதற்க்கு காரணம், மான்யம் ஒரு துறையிடம் இருந்தும், தாட்கோவில் இருந்தும், கடன் உதவி வங்கியில் இருந்தும் வருவதும் ஒரு காரணம்.  இதை மாற்றி அரசாங்கமே தலித்துகளுக்கு என ஒரு வளர்ச்சி வங்கி துவங்கி அவர்களுக்கான கடன் உதவி மற்றும், மான்யம் என இரண்டையும் ஒரே இடத்தில் கொடுத்தால். தலித் இளைஞர்களுக்கான அலைச்சல் மிச்சமாகும். கடனும் ஒழுங்காய் போய்ச்சேரும்.
தலித்துகள் இன்றைய காலத்தில் அரசியல் அதிகாரம் பெறுவதற்க்கும், அவற்றை தக்க வைப்பதற்க்குமே பொருளாதார அதிகாரம், தேவைப்படுகின்றது. அதற்க்கு அவர்களுக்கான நிதி நிறுவனங்களை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது.
அந்த நிதி நிறுவனங்ள்,
·        குடும்பம் சார்ந்தும் இருக்கலாம்.
·        கிராம அளவிலும் இருக்கலாம்,
·        மாவட்ட அளவிலும் இருக்கலாம். ஆக தனியொரு நபரை முன்னேற்ற முணையாமல், குடும்பம், கிராம்ம், மாவட்டம், மாநிலம் என்ற அளவில் உள்ள தலித்துகளை முன்னேற்ற நிறுவனங்கள் அவசியம் தேவைப்படுகின்றது.
நிறுவனங்களை உருவாக்காத எந்த சமுகமும் முன்னேற்றம் அடைந்த வரலாறு கிடையாது. தலித்துகள் இன்னும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையாமல் இருப்பதற்க்கு. அவர்களுக்கென நிதி நிறுவனங்கள் கிடையாது. அத்தகைய நிதி நிறுவனங்களை நாம் இதுவரை அரசிடம் கேட்டதும் கிடையாது.
அல்லது நமக்கான நிதி நிறுவனங்களை நாமே உருவாக்கி கொள்ள வேண்டும். அது வங்கியாகவே, நுன் நிதி நிறுவனமாகவே, மகா சன சங்கமாகவே எதோ ஒரு வடிவத்தில் இருந்து இந்த மக்களை உயர்த்த ஒரு கருவியாக செயல்பட்டால் போதும்.
தலித்துகளுக்கான பொருளாதார மேம்பாடு அடைவதற்கான நிதி நிறுவனம் எந்த வடிவத்தில் இருக்க வேண்டும்.எந்த வகையில் செயல்பட வேண்டும் என்றும்.  உங்களிடம் இருந்து கருத்தும் ஆலோசனையும் எதிர் பார்க்கின்றேன். நன்றி. 

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்