குங்
ஃபூ ஹஸ்டில் ( 2004 - ஆங்கிலம்):
குங் ஃபூ ஹஸ்டில் அதிரடி நகைச்சுவைப் படமாகும்.
இந்தத் திரைப்படத்தை எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்தவர் ஸ்டீபன் சோவ் ஆவார். இது
இவருக்கு இயக்கத்தில் 7 வது படமாகும். நடிப்பில்( தொலைக்காட்சி தொடர்கள் உட்பட) 61
வது படமாகும். இந்தத் திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிட்டது கொலம்பியா திரைப்பட
தயாரிப்பு நிறுவனம் ஆகும். தயாரித்தது, கொலம்பியா திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஆசியா.
ஸ்டார் ஓவர்சீஸ், பெய்ஜிங் பிலிம் ஸ்டுடியோ, தாய் பிலிம் இன்வெஸ்ட்மென்ட், சீனா திரைப்பட
குழுமம், ஹீய் சகோதாரர்கள்,
ஆகியோர்கள் இனைந்து தயாரித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தில் நடித்தவர்கள்:
ஸ்டீபன் சோவ் – சிங் கதாபாத்திரம், கோடாறிக் குழுவில் சேர்ந்து
கெட்டவனாகத் துடிக்கும் நபர்.
யூயோன் வாவ் – தாய் சி சுவான் மாஸ்டர். பன்றி நகர குடியிருப்பின்
உரிமையாளர். தாய் சி சென் மாஸ்டர்
சூ சியோன் – பன்றி நகர குடியிருப்பின் உரிமையாளர் மனைவி. சிங்க
கர்ஜனை குங்பூ மாஸ்டர்.
சான் குவாக் குவென் – சாம் அண்ணன், கோடாறிக் கூட்டத் தலைவன்.
யங் சியாவ் லுங் – உலகின் அதிக கொலைகளைச் செய்த கொலைகாரன்
டங்சிவ் வாவ் – டோனட் – பேக்கரியாளர், ஓய்வு பெற்ற என் கோன கு ங்பூ மாஸ்டர்
சூ சி லிங் – டைலர். இரும்புக் கயிறு குங்பூ மாஸ்டர்.
சிங் யூ – கூலி – டாம் பள்ளியின் 12 குத்து குங்பூ மாஸ்டர்.
லிம் சி சௌங் – போன் - சிங்கின் உதவியாளர் மற்றும் பலரும் நடித்துள்ள
வெற்றிப்படம் இது.
குங்
ஃபூ ஹஸ்டில் திரைப்படத்தின் கதைச்சுருக்கம்:
இந்தத் திரைப்படத்தின் கதை 1940 ஆம் ஆண்டில்
ஷங்காய் நகரத்தில் நடப்பதைப் போல சித்தரிக்கப்பட்டுள்ளது. 1940 ஆம் ஆண்டு ஷங்காய் நகரத்தில்
சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுப் போயிருக்கும் சூழலில், ஷங்காய் நகரத்தில் இரண்டு
பெரிய ரவுடிக் கும்பல் ஆதிக்கம் செலுத்துகின்றது. முதலைக் கூட்டம் மற்றும் கோடாரிக்
கூட்டம். இதில் கோடாரிக் கூட்டத்தின் தலைவன் சாம் அண்ணன், முதலைக் கூட்டத்தின் தலைவன்
மற்றும் அவரது அழகான மனைவியையும் கொன்று ஷங்காய் நகரம் முழுவதையும் கோடாரிக் கூட்டத்தின்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றான்.
இந்நிலையில் சாம் மற்றும் அவரது உதவியாளர்,
ஷங்காய் நகரத்தில் உள்ள ஏழைகளின் குடியிருப்புப் பகுதியான பன்றி நகரக் குடியிருப்புப்
பகுதிக்கு வருகின்றனர், தாங்கள் கோடாரிக் கும்பலில் இருந்து வருவதாக கூறி மாமுல் வசூலிக்க
முயற்சிக்கும் போது, பன்றி நகரக் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் கூலி மாஸ்டர்
மற்றும் டைலர் மாஸ்டர், பேக்கரி மாஸ்டர் ஆகியோரால் விரட்டியடிக்கப்படுகின்றனர். அந்தநேரத்தில்
தற்செயலாக அங்கு வரும் கோடாரிக் கும்பலிடம் தாங்களும் கோடாரிக் கும்பல்தான், தங்களை
இங்குள்ளவர்கள் அடித்துவிட்டதாக கூறுகின்றனர்.
நகரத்தில் உள்ள மொத்த கோடாரிக் கும்பலும் பன்றி
நகரக் குடியிருப்புப் பகுதிக்கு வருகின்றது. அவர்கள் அனைவரையும் அங்குள்ள குங்பூ மாஸ்டர்கள்
அனைவரும் இனைந்து அவர்களை விரட்டியடிக்கின்றனர். இது கோடாரிக் கூட்டத்தலைவனுக்கு கௌரவப்
பிரச்சனையாகின்றது, பன்றிநகரக் குடியிருப்புப் பகுதியில் உள்ள குங்பூ மாஸ்டர்களைக்
கொலை செய்ய வாடகைக் கொலைகாரர்களை இசை வாத்தியக் கருவி இசைப்பாளர்களாக பன்றி நகர குடியிருப்புக்கு
அனுப்புகின்றான். அவர்கள் கூலி மாஸடரை மட்டும் கொலை செய்கின்றனர், மற்றவர்களை அவர்களால்
கொலை செய்ய முடியாமல் வாடகைக் கொலைகாரர்கள், பன்றி நகர குங்பூ மாஸ்டர்களால் கொல்லப்படுகின்றனர்.
கொதித்துப் போன சாம் அண்ணன், உலகின் அதிக கொலை
செய்த கொலைகாரன் அடைபட்டிருக்கும், சிறையை சிங்கின் அபரிதமான திறனான பூட்டைத் திறக்கும்
திறனைக் கொண்டு பீஸ்ட் அடைபட்டிருக்கும் மிகு திறன் கொண்டோருக்கான சிறைச்சாலையில் இருந்து
தப்பிவிக்கப்படுகின்றான். பின்னர் பீஸ்ட்டுக்கும் பன்றி நகரக் குடியிருப்பு உரிமையாளரையும்
அவர் மனைவியையும் கொலை செய்யும் நோக்கத்தோடு அவர்களுக்குள் சண்டை நிகழ்கின்றது, அந்த
சண்டையில் சிங்க கர்ஜனையை புத்தரின் பெரிய மணியை ஒலிபெருக்கியாகப் பயன்படுத்தி பீஸ்டைத்
தோற்கடிக்கின்றனர்.
அதன் பின் அவர்களை ஏமாற்றி பீஸ்ட் கடுமையாகத்
தாக்கும் போது சிங் பீஸ்டை கட்டையால் தாக்க, பீஸ்டின் ஒட்டு மொத்த கோபமும் சிங்கின்
மீது திரும்பி, சிங்கை படு மோசமாகத் தாக்க பின் பன்றி நகர உரிமையாளர்களான கணவன் மனைவி
இருவருமே சிங்கை காப்பாற்றுகின்றனர். அவர்களே மருத்துவமும் செய்கின்றனர். தாய்சியின்
மருத்துவத்தால் சிங் விரைவாகக் குணமடைந்து அவருக்குள் இருக்கும் தீய எண்ணங்கள் மறைந்து
நல்வழிக்கு திரும்பகின்றார்.
இறுதியாக பீஸ்டுக்கும் சிங்குக்கும் பன்றி
நகரக் குடியிருப்பில் சண்டை நிகழ்கின்றது, பீஸ்ட் சிங்கை தாக்கி மேலே துாக்கி வீசியெறிய
சிங் மேகக் கூட்டத்தையும் தாண்டி புத்தரை மேக வடிவில் சந்தித்து அவரிடம் ஆசி பெற்று
புத்தரின் உள்ளங்கை குங்பூ கலையைக் கற்றுத் திரும்புகின்றான். அதனைக் கொண்டு பீஸ்டை
தோற்கடிக்கின்றான். தோற்றுப் போன பீஸ்ட் இதை எப்படிக் கற்றுக்கொண்டாய் எனக் கேட்க்க
சிங் உடனே, சொல்லித்தரட்டுமா எனக் கேட்க பீஸ்ட் சிங்கை மாஸ்டராக ஏற்றுக் கொள்கின்றான்.
குங்
ஃபூ ஹஸ்டில் படத்தின் வேறு சில சிறப்புகள்
இந்தத்
திரைப்படம் 1973 ஆம் ஆண்டு வெளியான The House of 72 Tenants திரைப்படத்தின் தழுவலாகும்.
மேலும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள குங்பூ மாஸ்டர்கள் அனைவரும் 1970 களில் குங்பூ
படங்களில் கதாநாயகனாக நடித்தவர்களாவார்கள். இந்த திரைப்படத்திற்கு முதலில் சண்டைக்
காட்சிகளை அமைத்தவர், ஆரம்பகாலங்களில் ஜாக்கிச்சான்வுடன் நடித்த சமோ ஹங்
ஆவார். இடையில் சமோ ஹங் உடல் நலிவுற்றதும்,
இந்த படத்தின் சண்டைக்காட்சிகளை அமைக்க Yuen Woo – Ping ஐ நியமிக்கின்றார் ஸ்டீபன் சோவ், இவர் ஏற்கனவே
வெற்றித் திரைப்படங்களான, Crouching Tiger, Hidden Dragon, மற்றும் The Matrix ஆகியப்
படங்களுக்குச் சண்டைக்காட்சிகளை அமைத்தார்.
அதனால்தான், இந்த திரைப்படத்தின் இறுதிக் காட்சியின்
சண்டைக்காட்சிகள், The Matrix திரைபபடத்தில் உள்ளதைப் போன்றே வடிவமைக்கப்பட்டிருபபதாக
விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் இசை பழமையான சீன இசைக்கருவிகளைக்
கொண்டு அமெரிக்க பாணியில் அமைக்கப்பட்டதாகும். இதனால் இதன் இசை சீனா, தாய்லாந்து, மலோசியா
போன்ற நாடுகளில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே நேரத்தில், அமெரிக்க மற்றும்
இங்கிலாந்து நாடுகளிலும் வரவேற்பை பெற்றது. மேலும் திரையிட்ட எல்லா நாடுகளிலும், வசூலை
வாரிகுவித்தது. பல விருதுகளையும் வாரி குவித்தது. அதையெல்லாம் விவரித்து எழுதினால்
இந்த கட்டுரையின் போக்கு மாறும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன்.
குங்
ஃபூ ஹஸ்டில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள
புத்தச் சமயக் கருத்துகள்:
புத்தர் பரிநிபானம் ( உடலைத் துறத்தல்)அடைந்து
283 ஆண்டுகளுக்கு பிறகு அரியனையேறிய மாமன்னர் அசோகர். புத்தச் சமயத்தைப் பரப்ப பல நாடுகளுக்கும்
புத்த பிக்ககளை அனுப்பியதைப் போலவே சீனாவுக்கும் புத்தச் சமயத்தைப் பரப்ப தனது மகள்
சங்கமித்ராவை அனுப்பியதாக அசேகரின் பெஷாவர் கல்வெட்டும், அசோகவந்தனா நுாலும் குறிப்பிடுகின்றது.
அதைப் போலவே, புத்தர் பரிநிபானம் அடைந்து 600 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றியவர், பல்லவ
வம்சத்தைச் சேர்ந்த அரசர். போதி தர்மர். இவருடைய சமய குருவாக இருந்தவர். புத்தச் சமய
பிக்குனி. பிரக்யதாரா அவருக்கு வந்த சீன தேசத்து அழைப்பை ஏற்க முடியாமல் அவர் பரிநிப்பானம்
அடைந்த போது அவருடைய அனுக்கச் சீடரான, போதிதர்மாவிடம் சீன தேசத்துக்கு புத்தச் சமயத்தை
பரப்ப செல்லுமாறு ஆனையிட, அதனையேற்ற புத்த பிக்கவான போதி தர்மா கி.பி.520 ஆம் ஆண்டு
சீனா சென்றார். சீன புத்தச் சமய மகாயான மரபில் போதிதர்மர் 28 வது தலைமை பிக்குவாக பட்டியலிடப்படுகின்றார்.
மற்ற குங்பூ திரைப்படங்களுக்கும் குங் ஃபூ ஹஸ்டில் திரைப்படத்துக்கும் உள்ள
மிகப்பெரிய வித்தியாசமே, மற்ற திரைப்படங்களில் போதி தர்மர் சீனத்தைச் சேர்ந்த புத்தச்
சமயப் பிக்குகளுக்குக் கற்பித்த 72 வகையான குங்ஃபூ
முறைகளில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு வகையானவற்றை மட்டுமே பயன்படுத்தியிருப்பர்,
ஆனால் இந்தத் திரைப்படத்தில் மட்டுமே போதி தர்மர் போதித்த 72 வகையையும் பயன்படுத்தியிருப்பர்.
அவற்றில் புத்தரின் உள்ளங்கை (Buddha’s Palm) முறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருப்பார்.
இந்தத்
திரைப்படத்தில் உள்ள அனைவருமே சண்டைக் காட்சிகளின் போது வெவ்வேறு விதமான குங்ஃபூ
முறைகளில் சண்டையிடவர். கோடாறிக் கும்பலில் உள்ள நபர்கள் கூட வெவ்வேறு முறைகளில் சண்டையிடுவதாகக்
காண்பிக்கப்படுகின்றனர். சிலகாட்சிகளில்.
புத்த
உள்ளங்கை: (தியானம்)
புத்தரின்
உள்ளங்கை என்பது இரண்டு விதமானப் பொருளையும் பயன்பாட்டையும் குறிக்கும் ஒரு சொல்லாடலாகும்.
முதல்
வகையான சொல்லாடல், தியானத்துடன் தொடர்புடையது, புத்தர் ஞானம் அடைவதற்கு முன்பும் பின்பும்,
தியானத்தின் போது பயன்படுத்திய முத்திரைகளைக் குறிக்கும் பொழுது பொதுவாக புத்தரின்
உள்ளங்கை எனக் குறிக்கப்படுவதுண்டு. இந்திய வரலாற்றில் பகவான் புத்தர், 1888க்கும்
அதிகமான முத்திரைகளைக் கண்டுபிடித்ததாக குறிப்பிடப்படுகின்ற அதே நேரத்தில் சீனாவில்
புத்தர் 2800க்கும் அதிகமான முத்திரைகளைப் கண்டுபிடித்ததாக குறிப்பு உள்ளது. ஜப்பானில்
3800க்கும் அதிகமான முத்திரைகளைக் கண்டுபிடித்ததாக குறிப்பு உள்ளது. எது எப்படியாக
இருந்தாலும் முத்திரைகள் என்பது பகவான் புத்தரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பதே இங்கு
நான் பதிவிட விரும்பும் தகவல்.
இருப்பினும்
புத்தர் குறித்த எழுத்துக்களிலும், சித்திரங்கள், சிற்பங்கள், சிலைகள், என பலவற்றிலும்
பெரும்பாலும் புத்தர் கீழ்கண்ட பத்து வகையான முத்திரைகளோடு மட்டுமே காட்சித் தருகின்றார்.
அவை
1. அஞ்சலி முத்திரை
2. உத்ரபோதி முத்திரை
3. அபய முத்திரை
4. விட்ராக் முத்திரை
5. வஜ்ரா முத்திரை
6. கர்ண முத்திரை
7. வரத முத்திரை
8. பிம்பிசார முத்திரை
9. தியான முத்திரை
10. தம்ம சக்ர முத்திரை இவைகள் புத்தரின் தியான
முத்திரைகள் என அழைக்கப்படுகின்றது. இவற்றிலும் புத்தரின் உள்ளங்கைக்கு முக்கிய பங்களிப்பு
உள்ளது.
புத்தரின்
உள்ளங்கை( Buddha Palm) (குங்ஃபூ)
புத்தரின்
உள்ளங்கை முறைக்கு, ரு லாய் உள்ளங்கை அல்லது செலிஸ்டியல் உள்ளங்கை என வேறுசிலப் பெயர்களும் உள்ளன. புத்தரின் உள்ளங்கை என்பது குங்ஃபூ
சண்டையில் பயன்படுத்தும் பல சண்டை நுட்பங்களைப்
போன்றது, மற்ற சண்டை முறைகளில் எதிராளியின் மீது கைகளால், முஸ்டிகளால், விரல்களால்,
கை ஓரங்களால் தாக்குதல் நிகழ்த்துவோம். ஆனால், புத்தரின் உள்ளங்கை முறைய எதிராளியை
தொடாமலேயே தாக்கும் முறையாகும்.
கராத்தேவில்
ஷூட்டோ, டேக்வாண்டோவில் நம்முடைய கை கத்தியைப் போன்று செயல்படும். ஆனால் புத்தரின்
உள்ளங்கை முறையில் உள்ளங்கை கத்தியைப் போன்று அல்லது கூர்மையான ஆயுதம் போலச் செயல்படும்.
இந்த முறையில் ஒருவர் நிபுனத்துவம் பெற்றிருப்பாரெனில்
அவரது உள்ளங்கை எதிராளியைத் தொடராமலேயே அவரை தாக்கும் வல்லமை பெற்றிருக்கும். மேலும்
அது எத்தகைய கடினமானப் பொருளாக இருந்தாலும் அதை துாள் துாளாக்கும் அளவுக்கான வலிமையுடன்
செயல்படும்.
இந்தக்
கலையைக் கற்றுக் கொள்ளும் ஒருவர், ஆரம்ப நிலையில் மென்மையானப் பொருள்களில் துவங்கி,
பின் மரக்கட்டைகளில் பயிற்சியெடுத்து, அதன் பின்னர் பாறைகளின் மீது பயிற்சி செய்து,
இறுதி நிலையாக அதாவது மிகு நிபுணத்துவம் பெற்றவராக ( மாஸ்டர்) நிலை எய்தும் போது ஒரு
பாத்திரத்தில் உள்ள சிறு துகளை அல்லது துரும்பை இரு சம பகுதியாகப் பிளக்க வேண்டும்.
இந்த நிலையை அடைய ஒரு வருடம் அல்லது இரண்டு ஆண்டுகள் கூட ஆகலாம்.
இதைத்தான்
சிங் சிறுவயதில் ஊமை பெண்னை ரவுடிக் கும்பலிடம்
இருந்து காப்பாற்றும் பொழுது காட்சிப் படுத்தப்படும். கற்றுக் கொள்ள கடினமானதாகத் தோன்றினாலும்
புத்தரின் உள்ளங்கை முறையைப் பயிற்சி எடுக்க உடல் பலமாக இருக்க வேண்டும் என்னும் தேவையில்லை.
மாறாக பஞ்சபூத சக்திகளை தன் உடல்வழியாக வெளியேற்றும் அதே வேலையில் பிரபஞ்சத்திலுள்ள
பஞ்சபூத ஆற்றலோடு இனைத்து எதிராளியைத் தாக்கும் நுட்பம் தெரிந்திருந்தாலே அவர்தான்
புத்தரின் உள்ளங்கை முறையில் மாஸ்டர் எனப் போற்றப்படுகின்றார். குங் ஃபூ ஹஸ்டல் திரைப்படம்
இந்த புத்தரின் உள்ளங்கை முறையை பிரமாண்டமான சக்தியாகப் பயன்படுத்தமுடியும் என்னும்
நம்பிக்கையை இந்த முறையை பயில்பவர்களுக்குள் ஆழமாகக் கொண்டுச் சென்ற படமாகும்.
நிறைவாக,
புத்தரின் உள்ளங்கை தியான முறைக்கும், குங்பூ முறைக்கும் உள்ள வேறுபாட்டை விளக்குவது
பொருத்தமாக கூடுதல் புரிதலை உண்டாக்கும் என்பதால் விளக்க விரும்புகின்றேன். பொதுவில்
தியானம் என்பது, பிரபஞ்ச ஆற்றலை ( Cosmic Rays) ஈர்க்கும் ஊடகமாக உள்ளங்கையை பயன்படுத்தும்
முறையாகும். தியானிக்கும் போது நமது உள்ளங்கை
பிரபஞ்ச ஆற்றலை ஈர்பதால் நமது உடலும் உள்ளமும் இயக்கச் சமநிலை அடைகின்றது. ஆனால் குங்பூ
முறையான புத்தரின் உள்ளங்கை முறையில், நமது உடலில் உள்ள பிரபஞ்ச ஆற்றலை நமது உள்ளங்கைகளில்
இருந்து முதலில் வெளியேற்றி, அதனோடு பிரபஞ்ச ஆற்றலையும் சேர்த்து பேறாற்றலாக மாற்றி
எதிராளியை தொடாமல் தாக்குதல் நிகழ்த்துவதாகும். இந்த கலையைப் கற்றுக் கொள்ள தாய்சி
அடிப்படைப் பயிற்சியும் அவசியமாகும்.
தாய்சி
கலை குறித்தும் போதி தர்மரின் போதனைகள் மற்றும் அவரின் புத்தச் சமயப் பங்களிப்பு குறித்து
லங்கவாத சுக்தத்தில் கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment