நண்பர்
கனியன் செல்வராஜ் அவர்களின் வனத்திலிருந்து வந்தவள் கவிதைப் புத்தகத்தை வாசிக்கும்
வாய்ப்பு, நண்பர் செல்வராஜ் அவர்களால் சில தினங்களுக்கு முன்பு கிட்டியது. முதல் பக்கத்திலிருந்து
கடைசிப் பக்கம் வரை அத்தனை சுவாரஸ்யம். புத்தகத்தை வாசித்து முடித்ததே தெரியவில்லை.
அத்தனை ஈர்ப்பு அவரது கவிதைகளில். ஆசிரியராகப் பணி செய்வதாலோ என்னவோ, நண்பர் கனியன்
செல்வராஜீக்கு இலகுவான மொழி நடையும் வன்மையான சொற்களும், மென் தென்றலாய் உரசிச் செல்கின்றது
அவரது கவிதைகளில். 16 தலைப்புகளில் 76 பக்கங்களில் கவிதை புத்தகத்தை தந்துள்ளார். இவற்றில்
1. துளியளவேயான மரணம்
2. புத்தன் ஒரு சகபயணி
3. பரவும் இனம்
4. புத்தன் -
ஆகிய
கவிதைகளில் சூபியிசத்தின் சாயலில் புத்த மதத்தின் சாரத்தை வாசகர்களின் மனதில் விதைத்துச்
செல்கின்றார். கவிதையளவில் இது ஒரு புதிய முயற்சி என்பதாகவே எனக்குத் தோன்றுகின்றது.
இருப்பினும் அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றார் ஆசிரியர்.
5. காடு – காடு காத்து வாழும்
6. வனத்திலிருந்து வந்தவள் –
இந்த
இரண்டு கவிதைகளில் இயற்கை குறித்து ஆழந்த புரிதலுடன் பேசுகின்றார். அதை எளிதாக படிப்பவர்களுக்கும்
கடத்துகின்றார். வாழ்த்துகள் கனியன்.
7. கீழே இறங்கிவா
8. நாடகக்காரி
9. அவனுக்கென்ன ராஜாவுக்கு
1 எங்க ஊர் பொதுக்கிணறு –
இந்தக்
கவிதைகளில் விளிம்பு நிலை மக்கள் குறித்துப் பேசுகின்றார். அதிலும் விளிம்பு நிலை சிறுவர்கள்,
கலைஞி, நடுத்தர வர்கத்து கணவன், என பல்வேறு நபர்களின் வாழ்வியல் கனவையும், சூழலையும்
மனம் உருகிச் செல்லும் வகையில் படைத்துள்ளார்.
11. எல்லோரையும் நோக்கிப் பாயும் தோட்டா
12. அந்த அது
13. எல்லாவற்றிலும் -
இந்த
தலைப்புகளில் மனித நேயம் குறித்து பேசுகின்றார், கவலைப்படுகின்றார், எந்த நிலையிலும்,
எக்காலத்திலும் அழியாதது, மனித நேயம் என்பதை பறைசாற்றுகின்றார்.
14. புராதன ரகசியங்கள்
15. சாணக்கியனின் பூனுால்
16. பூவரசமரமும் நவீன யுவதியும். –
இந்த
கவிதைகளில் வரலாற்றைப் பேசுகின்றார், அதிலும் புராதன ரகசியங்கள் கவிதையில், பெண்ணின்
பார்வையில் இருந்து வரலாற்றைச் சொல்கின்றார். இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இது வரையிலும்
பெண்ணின் பார்வையில் இருந்து வரலாறு படைக்கப்படவில்லை. என்பதை இந்தக் கவிதையை படிக்கும்
போது உணர முடிகின்றது.
பூவரச
மரமும் நவீன யுவதியும் கவிதையில், மரம், தன் பாட்டி, நவீன யுவதி, ஆகியோரின் மனோபாவம்,
வாழ்வியல், ஆகியவற்றை இயல்பானச் சொற்களால் மாலைகளாக கோர்த்து தந்துள்ளார்.
இவை
எல்லாவற்றையும் விட சிறப்பானது. எங்க ஊர் தெரு கவிதை. வாசிப்பவனை சில நிமிடமாவது தனது
ஊரையும் தெருவையும் நினைக்கத் தோன்றும் சிறப்பான கவிதை அது.
மொத்தத்தின்
தமிழ் கவிதையார்வலர்கள் தவற விடக்கூடாதப் புத்தகமாக வனத்திலிருந்து வந்தவள் உள்ளது.
இதை பதிப்பதவருக்கும். ஆசிரியர் கனியன் செல்வராஜீக்கும், சிறப்பான வாழ்த்துகள்.
புத்தகம்
வேண்டுவோர். ஆசிரியரிடம் பேசினால் (கைபேசி எண் – 98435 72355)இலவசமாகவே மின்னஞ்சல்
அனுப்பி வைக்கின்றார். வாழ்த்துகள். கனியன். தமிழ் கவிதை உலகில் தரமான முத்திரை பதிக்கின்றது
உங்களின் வனத்திலிருந்து வந்தவள் கவிதைத் தொகுப்பு.
No comments:
Post a Comment