ஆங் பேக் ( Ong – Bak) ஆங்கிலம்
ஆங்
என்னும் தாய்லாந்து நாட்டின் சொல்லுக்கு உடல் உறுப்புகளில் தலை என்று பொருளாகும். பேக்
என்னும் தாய்லாந்து சொல்லுக்கு பாதுகாத்தல் என்னும் பொருளாகும். ஆங் பேக் திரைப்படத்தின்
முழுக்கதையும் அதன் தலைப்பிலேயே அடங்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்தத் திரைப்படத்தில் நடித்தவர்கள்.
·
டோனிஜா – டின்
·
பேட்சை ஓம்கம்லோம் – ஜார்ஜ் என்கின்ற அம்ளே
·
பும்முவாய் யோத்கமல் – மோதாய் மற்றும் பலர், நடித்துள்ளனர்.
தாய்லாந்து நாட்டில் இந்த திரைப்படம், 21ம்
தேதி சனவரி மாதம் 2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் பின்னர், பல்வேறு மொழிகளிலும்,
பல்வேறு பெயர்களிலும் இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் டோனிஜாவுக்கு
மிகப்பெரும் திருப்புமுனையும் உலகெமெங்கும், வெற்றிகரமாக ஓடிய முதல் திரைப்படமாகும்.
ஆங் பேக் திரைப்படத்தின் கதைச் சுருக்கம்:
வடக்கிழக்கு
தாய்லாந்தில் உள்ள பான் நாங் பிரது (Pan Nong Pradu) என்னும் கிராமத்தில் உள்ள மிகப்
பழமையான புத்தர் விகாரில் உள்ள புத்த வெண்கலச்
சிலையின் பெயர் ஆங் பேக். புத்தர் சிலையின் தலையை திருடும் ஒரு கும்பல், ஆங்பேக் புத்தர்
சிலையின் தலையை திருடுச் சென்றுவிடுகின்றது. (அந்த புத்தர் சிலையின் முகத்தில் இருக்கும் தழும்பு,
ஏற்கனவே நடந்த ஏதோ ஒரு கலவரத்தினால் வெட்டுக்காயம்பட்டு மீ்ட்க்கப்பட்ட விவரத்தை நமக்கு
காட்சியாகவும். பின்னர், பல புத்தர் சிலைகளின் தலைகளில் இருந்து எளிதில் அடையாளம் காண்பதற்காகவும்
வைக்கப்பட்டிருக்கின்றது)
திருடப்பட்ட
புத்தரின் தலையை, அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் மீட்க வேண்டும் என பேசிக்கொண்டிருக்கும்
போது, அந்த கிராமத்திலுள்ள டின் என்னும் இளைஞன் அந்த கிராமத்திலுள்ள புத்த பிக்குவிடமிருந்து
முவாய் (Muay) தாய்லாந்து நாட்டின் கிராமப்புற தற்காப்புக் கலையை கற்றுத்தேர்ந்தவன்.
அவனே தன்னார்வத்துடன் அந்தச் சிலையை மீட்க தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காங் கிளம்பிவருகின்றான்.
அவனுடைய பயணத்துக்கு அந்த கிராமத்து மக்கள் தங்கள் கைவசமுள்ள நகை, பணம், பொருட்களை
கொடுத்து அனுப்புகின்றனர்.
அதே
கிராமத்தைச் சேர்ந்த ஜார்ஜ் என்றழைக்கப்படும் அம்ளே என்னும் இளைஞன் பாங்காங்கில் உள்ளதால்
அவனை அவனுடையத் தந்தையின் கடிதத்துடன் சென்று சந்திக்கின்றான். அம்ளே ஆரம்பத்தில் டின்னை
வைத்து பந்தயச் சண்டையில் போட்டியிட்டு பணம் சம்பாதிப்பதில் குறிக்கோளாக இருக்கின்றான்,
பின்னர் மனம் திருந்தி, ஆங்பேக் சிலையின் தலையை மீட்க உதவிச் செய்கின்றான். உடன் அவனுடைய
காதலியும் உதவி செய்கின்றாள்.
பின்னர்
புத்தர் சிலையின் தலையை திருடும் கும்பல் தலைவன் கொம்துவன் ஆங்பேக் சிலையின் தலையுடன்
தாய்லாந்து பர்மா எல்லையில் உள்ள குகையில் இருப்பதை அறிந்து அங்குச் செல்கின்றனர்.
அந்தக் குகையில் உள்ள பிராமாண்டமான புத்தரின் கற்சிலையின் தலையை துண்டிக்கும் வேலை
நடைபெற்றுக்கொண்டிருப்பதால், அந்தக் குகைக்குச்
சென்று டின்னும், ஜார்ஜீம் சண்டையிடுகின்றனர். சண்டையின் போது, குகையில் உள்ள பிராமாண்ட
கற்சிலையின் தலை உருண்டு விழுகின்றது, ஜார்ஜ் ஆங் பேக் சிலையைக் காப்பாற்றி டின் வசம்
தந்துவிட்டு, தனது அன்பை தன் ஊர்காரர்களுக்கும் அப்பாவிடமும் தெரிவிக்கச் சொல்லி உயிரிழக்கின்றான்.
இறுதியாக,
ஆங்பேக் புத்தர் சிலையின் தலை பான் நாங் பிரது கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டு புத்தர்
சிலையுடன் தலை பொருத்தப்பட்டு வழிபாடு நிகழ்த்தப்படுகின்றது. ஜார்ஜின் அஸ்தி புத்த
பிக்குவின் கரங்களால் யானையின் மீது கொண்டுவரப்பட்டு மரியாதைச் செலுத்தப்படுகின்றது.
ஜார்ஜின் காதலியும் அந்த கிராமத்திலேயே தங்கிவிடுகின்றாள்.
ஆங் பேக் திரைப்படத்தின் சிறப்புகள்:
திரைப்படத்தின்
துவக்கத்தில் காண்பிக்குப்படும் மரத்தின் மீது கொடியேற்றி அதனை கைப்பற்றுவதற்காக நடக்கும்
சண்டை விளையாட்டு ஒவ்வொரு நாட்டிலுள்ள கிராமத்திலும் நடக்கின்ற விளையாட்டாகும். இதனை
காட்சிபடுத்தியிருப்பது இந்தப் படத்தின் சிறப்பாகும். இந்தப் படத்திலுள்ள சண்டைக் காட்சிகள்
முழுவதும் முவாய் சண்டைக் கலையைப் பயன்படுத்தி எடுக்கப்ட்டதாகும். தாய்லாந்து நாட்டின்
பராம்பரியச் சண்டைக் கலையை முதன்முதலாகத் திரையில் பயன்படுத்தி உலகமெங்கும் அதற்கென
ரசிகர்களை ஏற்படுத்தியதும் மற்றொரு சிறப்பாகும்.
தாய்லாந்து நாட்டின் புத்தச் சமய வரலாறு:
தாய்லாந்து
நாடு புத்தச் சமயத்தில் தேரவாதத்தைப் பின்பற்றும் நாடாகும். தாய்லாந்து நாட்டின் புத்தசமய
வரலாற்று நுாலின் படி புத்தரே, தாய்லாந்து நாட்டிற்குச் சென்று, புத்தச் சமயத்தைப்
பரப்பியதாக தகவல் அளிக்கின்றது. ஸ்ரீலங்கா நாட்டின் மகாவம்சம் நுாலின்படி, பேரரசர்
அசோகர், தாய்லாந்து நாட்டிற்கு புத்தச் சமயத்தைப் பரப்புவதற்காக சேனா தேரோ மற்றும்
உத்தர தேரோ ஆகிய இரண்டு புத்தப் பிக்குகளிடம் புத்தரின் அஸ்த்தி மற்றும் புனிதமான சிலப்
பொருட்களையும் தந்து அனுப்பியதாக சொல்கின்றது. அவ்வாறு புத்தர் தந்த புனிதப் பொருட்கள்
இன்றும் தாய்லாந்து நாட்டின் நக்கோன் பத்தோம் (Nakon Pathon) ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது
மற்றும், அசோகரின் துாதர்கள் வந்த இடத்தில்
அசோகரின் நினைவுத் துான் வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய
நிலையில் தாய்லாந்து நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 94 சதவிகிதத்தினர் புத்தச் சமயத்தை
பின்பற்றுவதாகவும், 4.6 சதவிகிதத்தினர் முஸ்லீம் சமயத்தையும் பின்பற்றுகின்றனர். இதர
பிரிவுகளாக, சீக்கியர்கள், கிருத்துவர்கள், மற்றும் இந்துக்கள் வாழ்கின்றனர்.
தாய்லாந்து
நாட்டில் உள்ள, புத்தச் சமயக் கோயில்களில், 310 கோயில்களை தாய்லாந்து நாட்டின் அரசர்
பரம்பரையினர் வழிபடுவதற்காகவும், 39,883 கோயில்கள் தனியார் வசமிருப்பதாகவும் 2016 ஆம்
ஆண்டின் புள்ளிவிவரம் சொல்கின்றது. 2,98,580 புத்த பிக்குகள் உள்ளனர். தாய்லாந்து நாட்டில்
உள்ள அனைவருமே எப்போது வேண்டுமானாலும் குறுகிய கால பிக்குவாக மாறுவதற்கு வழியுள்ளது.
இதனை ஆங் பேங் திரைப்படத்தில் ஜார்ஜின் கதாப்பாத்திரம் வழியாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த திரைப்படத்தின் கதாநாயகன் டோனி ஜாவும் 28 மே மாதம் 2010 ஆம் வருடம் தாய்லாந்து
நாட்டில் உள்ள சுரின் புத்த தேவாலயத்தில் புத்த பிக்குவாக தீட்சை அளிக்கப்பட்டு முறைப்படியான
புத்த பிக்குவாக மாறினார்.
ஆங்பேக் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள புத்தச்
சமயக் கருத்தியல்கள்:
ஆங்
பேக் திரைப்படத்தில் புத்தச் சமயக் கருத்தியல்கள் எதுவும் இடம்பெறவில்லை, மாறாக, இந்தியாவில்
புத்தச் சமயத்தை அழித்த வரலாற்றை நவீன பானியில்
சித்தரிக்கப்பட்டிருக்கும். உதாரணத்துக்குச் சொல்வதென்றால், மகாபாரதத்தில் உள்ள கர்ணன்,
மற்றும் துரியோதனன் நட்பை நடப்புக் காலத்துக்கு மாற்றி தளபதி படமாகத் தந்ததைப் போல்,
இந்திய புத்தச் சமயத்தின் வீழ்ச்சியை நடப்புக் காலத்துக்கு ஏற்ற வகையில் சொல்லியிருப்பார்கள்.
இந்தியாவில் புத்தச் சமயம் வீழ்ந்த வரலாறு:
கி.மு.
185 ஆண்டில் மௌரிய சாம்ராஜ்ஜியத்தின் கடைசி பேரரசரான, பிரகதர்த்தா விடம் தளபதியாக இருந்த
பிராமணரான புஷ்யமித்ர சுங்கன், ஒரு இரானுவ அணிவகுப்பின்போது, பிரகதர்த்தா மௌரிய அரசரைக்
கொன்று, இந்திய வரலாற்றில் சுங்க வம்சத்தின் ஆட்சியை துவக்கினார். புஷ்யமித்ர சுங்கன்
சுங்க வம்சத்தின் முதல் பேரரசராக முடிசூடிக் கொண்டார்.
தனது பெயர் வரலாற்றில் இடம்பெற என்ன செய்ய
வேண்டும் என புஷ்யமித்ர சுங்கன் தனது பிராமண குருக்களிடம் கேட்டபோது, அசோகர் புத்த
சமயத்தை உருவாக்கினார். அவர் உருவாக்கிய புத்த சமயத்தையும், நிறுவிய 84,000 ஸ்துாபிகளையும்
அழித்தால் வரலாற்றில் நீங்கள் நீங்கா இடம் பெறுவீர்கள் என சொன்ன அறிவுரையை ஏற்று, அசோகர்
உருவாக்கிய புத்தச் சமய நினைவுத் துாண்களை அழிக்கின்றார்.
எல்லாவற்றிற்கும்
மேலாக, புத்த பிக்குகளின் தலையை கொண்டுவருவோருக்கு 100 தினார்கள் ( தங்க நாணயங்கள்
) பரிசலிக்கப்படும் என அரசாங்கத்தால் அறிவிப்பும் செய்கின்றார். இதன் காரணமாக மக்களும்,
பணத்துக்கு ஆசைப்பட்டும், அரசியல் லாபமடையும் பொருட்டும், பாதுகாப்புக்காகவும், புத்த
பிக்குகளின் தலையைக் கொன்று தங்க நாணயங்களை அரசிடம் இருந்து பெறுகின்றனர். மேலும் அதன் தொடர்ச்சியாகவே இன்றும் நாம் நமது வீடுகளில்
கல்யாணப் பூசனியை பலிகொடுக்கும் நிகழ்வை சுபச் சடங்கு மற்றும் அசுபச் சடங்கின் போது
நிகழ்த்துகின்றோம்.
இந்த
வரலாற்ற நிகழ்வையே டோனிஜா ஆங்பேக் திரைப்படத்தில் கதைக்களனாக்கியிருப்பார். புஷ்யமித்ரன்
பேச்சுத்திறன் இல்லாத அரசன் என்பதை உருவகப்படுத்தவே, வில்லனுக்கு குரல் இல்லாமல் செயற்கைக்
கருவிகளின் வழியாகப் பேசுவதாக நவீன குறியீட்டை வைத்திருப்பார். மேலும் இறுதிக் காட்சியில்
இடம்பெறும் பிரமாண்ட புத்தர் சிலையின் தலை தகர்ப்பு மற்றும், புத்தரின் சிலைகளின் தலையை
விற்பனை செய்வது என புஷ்யமித்திரன் வரலாற்றில் செய்த அனைத்தையும் வில்லன் செய்வதாகவே
உருவகப்படுத்தியிருப்பார்.
இந்திய புத்தச் சமய வீழ்ச்சியை துணிச்சலாக படம் பிடித்த
திரைப்படம் ஆங் பேக் ஆகும்.
ஆங் பேங் திரைப்படத்தின் தமிழ் லிங்க்
No comments:
Post a Comment