Tuesday, September 13, 2016

விளிம்பு நிலை மக்களுக்கான கூட்டுறவுப் பதிப்பகம்

தமிழகத்தில் விளிம்பு நிலை மக்களுக்கென அச்சு ஊடகம் இல்லாத நிலை உள்ளது. அவர்களின் கருத்தும் எழுத்தும் மிகு சிரமத்திற்கு பிறகே வெளியிடப்படுகிறது. மேலும் காலத்திற்கேற்ற படைப்பாகவும் அவை இருப்பதில்லை. இந்நிலையை தவிர்க்க விளிம்பு நிலை மக்களுக்காக விளிம்பு நிலை மக்களைக் கொண்டே ஒரு பதிப்பகம் கூட்டாண்மை முறையில் துவங்க செயலபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் தாங்கள் இனைவதை ஆக பெருமையாக கொள்கிறோம்.


பதிப்பகம் தொடர்பான செயல் திட்டத்தில் ஒரு நபருக்கு இருபது ஆயிரம் என ஐம்பது நபர்கழள இனைத்துக் கொண்டு ரூபாய் பத்து லட்சம் முதலீட்டில் பதிப்பகம் தொடங்குவது திட்டம். இதுவரை 30 நபர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.


இது உங்களின் தகவலுக்காக. நீங்களும் இந்த திட்டத்தில் இனையலாம், அல்லது  இது குறித்து உங்கள் நண்பர்களிடமும் பேசி அவரையும் இனையச் செய்யலாம். அக்டோபர் மாதம் அனைவரையும் திரட்டி ஒரு கூட்டம் நடத்தி. பணம் வசூலிப்பும் ஒப்பந்த பதிவும் இருக்கும். பின்னர். சனவரி 2017 புத்தக சந்தைக்கு புத்தகத்தை கொண்டு வருவது என திட்டமிட்டுள்ளோம். . இந்த திட்டத்தில் இனைய ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். நன்றி.


மா. அமரேசன்

புத்தகயாவிலிருந்து

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்