Monday, February 16, 2026

சப்த கன்னியர்கள் - மறைக்கப்பட்ட வரலாறு

 சப்த கன்னியர்கள் - மறைக்கப்பட்ட வரலாறு - புதினம் 

அத்தியாயம் - 1

டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் 

தொல்பொருள் ஆய்வுத்துறையின் தலைமை அலுவலகம் (தரோஹர் பவன்' (தரோஹர் பவன்), 24, திலக் மார்க், புது தில்லி - 110001 )




டில்லியில் உள்ள தொல்பொருள் ஆய்வுத்துறை அலுவலகம் எப்போதும் போல் கனத்த அமைதியோடு இயங்கிக் கொண்டிருந்தது. தென் மண்டல இயக்குனர் கதிரேசன் தனது அறையில் சத்தமில்லாமல் தொலைக்காட்சியில் பாராளுமன்ற கூட்டத்தொடரை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய களப்பணியாளர் பப்பு சூடான சமோசா மற்றும் தேனீரோடு கதிரேசன் அறைக்கு வந்து மேஜை மீது வைத்தார். சாயா கடையில் கூட்டம் அதிகம், ரொம்ப கஷ்டப்பட்டு வாங்கி வந்தேன். சூடு ஆறுவதற்குள் சாப்பிடுங்கள் என இந்தியில் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கதிரேசன் அமைதியாக இரு என்று கைகளைக் காட்டிக்கொண்டே தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். 


தெலைக்காட்சியில் தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர், மேட்டூர் வனப்பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட சப்த கன்னியர்கள் ஆலயம் இருக்கும் இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்து அதன் பண்டையத் தன்மை, வரலாறு ஆகியவற்றை தொல்லியல் துறை கண்டுபிடித்து மக்களுக்கு சொல்ல வேண்டும். இந்த வேலையை ஒன்றியத் தொல்லியல் துறை ஏன் செய்யவில்லை, என்றும் மாநில தொல்லியல் துறையை இந்த வேலை செய்ய ஏன் அனுமதிக்கவில்லை என்றும் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் பார்த்துக் கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தார். இந்த ஒளிபரப்பை சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்த கதிரேசன், பப்பு வாங்கி வந்த சமோசாவை மறந்தே போனார்

உள்துறை அமைச்சர், இந்திய தொல்லியத்துறை மேட்டூர் வனப்பகுதியில் அகழ்வாராய்சி செய்து சப்த கன்னிகள் கோயில் பற்றிய உண்மை நிலையை வெளிக் கொண்டு வருவோம் என்று உறுதிமொழி சொல்லியதும், கதிரேசனுக்கு சுவாரசியம் குறைந்து, சமோசாவின் மீது கவனம் வந்தது. டெல்லி குளிருக்கு சுமாரான சூட்டில் இருந்த சமோசவை எடுத்து கடித்துக் கொண்டே, பப்புவைப் பார்த்து இரண்டு தேநீரை சூடாக வாங்கி வரச் சொன்னார் ஒன்று கதிருக்கும் இன்னொன்று பப்புவுக்கும். 

பப்பு போன சிறிது நேரத்திற்கெல்லாம் அலுவலக உதவியாளர் வந்து அய்யா உங்களை பொது இயக்குனர் அழைக்கின்றார் என்றதும், கதிரேசன் யோசித்துக் கொண்டே அவர் அறையை அடைந்தார்... அதற்குள் நாம் கதிரேசனைப் பற்றி தெரிந்து கொள்வோம். 

கதிரேசனுக்கு தொல்லியல் துறை மிக விருப்பமான படிப்பு என்பதால் தொல்லியலில் முனைவர் பட்டம் பெற்றவர், சென்னை பல்கலை கழகத்திலும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்திலும், வாசிப்பும், ஆழ்ந்த யோசிப்பும் கதிரேசனின் விருப்பமான விஷயங்கள். அவருடைய மேசையில் பலவகையான புத்தகங்கள் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். பாலி மொழி நூல்கள், பெண்கள் வரலாறு, ஆய்வுக் கட்டுரைகள் சிதைந்த ஓலைச்சுவடிகளின் புகைப்படங்கள். இவை எல்லாம் அவர் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டிருந்தன. 

அவர் ஒரு சாதாரண தொல்லியலாளர் அல்ல. அரசின் பெரிய திட்டங்களில் அவர் பெயர் அடிக்கடி அடிபடும். பத்திரிகைகள் பேசும் முக்கிய அகழ்வாய்வுகளில் பட்டியலியலிலும் அவர் எப்போதும் இடம் பெறுவார். ஆனால் அவருக்கு ஒரு தனி தேடல் இருந்தது. பெண்கள் வரலாறு ஜைன சுவடுகள், பௌத்த சுவடுகள், ஆசிவகத் தேடல்கள், சாங்கியத் தத்துவங்கள் போன்ற துறைகளிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு. ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். 


அழிக்கப்பட்ட நினைவுகள் , வரலாற்றில் இருந்து திட்டமிட்டு நீக்கப்பட்ட அல்லது மெதுவாக மறைக்கப்பட்ட பாதைகள், அவற்றைத் தேடுவதில்தான் அவர் தன் வாழ்வை செலவிட்டுக் கொண்டிருக்கின்றார். அது குறித்து ஒன்றிரண்டு நூல்களையும் எழுதியிருக்கின்றார் அவர். அவைகள் இந்தியாவை விட வெளிநாட்டில் அதிக வாசகர்களை் கொண்டிருந்ததுதான் அவருக்கே விளங்காத ஆச்சர்யம். 


இயக்குனர் அறையில் , அவரைப்போல உள்ள பிராந்திய இயக்குனர்களோடு பொது இயக்குனர் சமோசாவோடு கதிரேசனை வரவேற்றார்... வா கதிர் உனக்காகத்தான் நாங்கள் காத்திருக்கின்றோம் என்று அழகான ஆங்கிலத்தில் பேசினார்... அவர் எப்போதும் கதிரேசனோடு ஆங்கிலத்தில் உரையாட ஆர்வம் காண்பிப்பார். காரணம் கதிரேசனுக்கு ஏழு மொழிகள் தெரியும் ஏழு மொழிகளையும் பிற மொழி கலப்பில்லாமல் உரையாடுவார். எழுதுவார்... அவருடைய ஆங்கிலம் ஆங்கிலேயன் பேசுவதைப் போலவே இருக்கும். கதிரேசனோடு உரையாடி அவர் தனது ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்வார்..


ஃபாக்ஸ் வந்திருக்கின்றது. நம்துறை தமிழ்நாட்டில் மேட்டூர் வனப்பகுதியில் அகழ்வாய்வு செய்து சப்த கன்னியர் ஆலயத்தை குறித்து அறிக்கை தர வேண்டும் என்று சொன்னதும், கதிரேசன் அமைதியாக இருந்தார். பொது இயக்குனரே தொடர்ந்தார், தென் மண்டல இயக்குனர் என்பதால் உங்களுடைய கருத்தும் ஆலோசனையும் எங்களுக்குத் தேவையென்பதால் உங்களை அழைத்தேன், எனவே என்ன செய்யலாம், நீங்களே சொல்லுங்கள் என்றார்... 


கதிரேசன் அமைதியாக இருக்கையில் கண்களை மூடி யோசித்து, முதலில் நாம் இதை மாநில அரசின் கைகளில் ஒப்படைத்து விடுவோம், அவர்களே இதை செய்து கொள்ளட்டுமே என்றார். இல்லை மாநில அரசின் கைகளில் இந்த ஆய்வு செல்வதைமத்திய அரசு விரும்பவில்லை, மத ரீதியாக தமிழ்நாடு அரசு இந்த விஷயத்தை கையிலெடுக்காது அவர்கள் தொண்மை, தமிழர் நாகரீகம், பண்பாடு என்று வேறு கோணத்தில் கொண்டு செல்வார்கள் அதை ஒன்றிய அரசு விரும்பவில்லை, அப்படியென்றால் ஒன்றிய அரசு எதைத்தான் விரும்புகின்றது என்று சற்று வேகமாக கேள்வியெழுப்பினார் கதிரேசன். 


இதே வேகத்தில்தான் நானும் கேள்வி கேட்டேன், அவர்களிடம்... இந்த அகழ்வாய்வை இந்து சமயத்தின் ஆதிக்கத்துக்குட்பட்ட  இடமாக மாற்றி அதிலிருந்து இந்து சமய எழுச்சியை தமிழ்நாட்டில் உருவாக்க நினைக்கின்றது ஒன்றிய அரசு என்றார் பொது இயக்குனர், அப்படியே செய்யலாமே அதற்கு அவர்களிடம் எத்தனையோ வசதிகள் இருக்கும் போது நம்மை எதற்கு இதற்குள் இழுக்க வேண்டும் என்றார் கதிரேசன். 


சிறிது மௌனம் நிலவியது. பின் பொது இயக்குனரே பேசினார். கதிரேசன், நாம் இதில் இறங்குவோம், உறுதியாக இறங்குவோம். உண்மை நிலவரம் என்னவோ அதை மட்டும் சொல்லுவோம். எதையும் மறைக்க வேண்டாம். எந்த முடிவையும் யாருக்காகவும் மாற்ற வேண்டாம் என்று தீர்க்கமாக சொன்னதும் எல்லோரும் ஆச்சர்யமாக அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தனர்... 


எனக்காக நீங்கள் உங்கள் ஒட்டுமொத்த டீமோடு போய் அகழ்வாய்வை நடத்திவிட்டு உண்மை நிலவரத்தை எனக்கு அறிக்கையாகத் தருங்கள் மக்களுக்குச் சொல்வோம் என்றதும்...சார் என்று கதிரேசன் மெல்ல இழுத்தார். 


கதிரேசன்... அங்கெல்லாம் எந்த அழுத்தமும் இல்லை.. இங்கு அரசியல் அழுத்தமும் மத அழுத்தமும் போட்டிப் போடுகின்றது .. நீங்கள் போனால்தான் உண்மை நிலவரம் தெரியும். நீங்கள் 3 மாத காலத்திஅகழ்வாய்வை முடித்துவிட்டு, அறிக்கை கொடுங்கள் என்று பொது இயக்குனர்  சொல்லி முடிக்கவும் அவரது உதவியாளர் ஏதோ ஒரு தாளை கொண்டுவந்து கொடுக்கவும் சரியாக இருந்தது. 

வாங்கிப் படித்தனர், கையொப்பமிட்டு அதை கதிரேசனிடம் நீட்டினார். வாங்கிப் படித்துப் பார்த்தார் கதிரேசன், அதில் 3 மாத காலம் மேட்டூர் வனப்பகுதியில் அகழ்வாய்வுக்கு தன்னையும் தனது அணியையும் அனுப்புவதாகவும் இருந்தது. நகல்கள் துறை சார்ந்தவர்களுக்கும் ஒன்றிய மாநில அரசுகளுக்கும் இருந்தது. இது என்ன புது தலைவலி வந்து சேர்ந்திருக்கின்றதே என்று நெற்றியை தேய்த்துக் கொண்டார் கதிரேசன். 

Thursday, June 26, 2025

சேரி ரெண்டுபட்டால் - நூலின் சிறப்பு

                               


சேரி ரெண்டுபட்டால் ( Cheri Rendupattal) என்னும் இந்த நூல் எழுத்தாளர், மற்றும் பதிப்பாளர், பௌத்த ஆய்வறிஞர் மா. அமரேசன் அவர்களால் எழுதப்பட்டது. 

இந்த நூலின் சிறப்புகள் சில

1. அம்பேத்கரியப் பார்வை : நூல் முழுவதும், அம்பேத்கரின் சிந்தனைகள் மற்றும் தத்துவங்களின் அடிப்படையில் சமூகப் பிரச்சனைகள் அணுகப்படுகின்றன. இது தலித் மக்களின் வாழ்வியல், மற்றும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், சமூக சமத்துவமின்னை போன்றவற்றை ஆழமாக ஆராய்கிறது. 

2. சமூக விமர்சனம் ; சேரி ரெண்டுபட்டால் என்ற தலைப்பே, தலித் சமூகத்திற்குள்ளேயே, இருக்கும் பிரிவினைகள் மற்றும் அதனால் ஏற்படும் பலவீனங்கள் குறித்து பேசுகிறது. இது சமூகத்தின் புறநிலைப் பார்வைகளையும் உள் நிலை பிரச்சனைகளையும் விமர்சன ரீதியாக அணுகுகிறது. 

3. தெளிவான எழுத்து நடை - மா. அமரேசன் தனது கருத்துக்களைத் தெளிவான மற்றும் நேரடியான தமிழில் முன் வைக்கிறார். இது வாசகர்களுக்குக் கருத்துக்களை எளிதில் புரிந்து கொள்ள உதவுகிறது. 

4. சமகால பொருத்தப்பாடு - இந்த நூல் 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதில் விவாதிக்கப்படும் சமூகப் பிரச்சனைகள் இன்றும் பொருத்தமானவையாக உள்ளன. 

5. அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு - இந்த நூல் வாசகர்களுக்கு சமூக நீதி, சாதிய ஏற்றத்தாழ்வுகள், மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. சுருக்கமாகச் சொன்னால் “சேரி ரெண்டுபட்டால்” என்பது அம்பேத்கரிய சிந்தனையின் அடிப்படையில் எழுதப்பட்ட, சமூகப் பிரச்சினைகளை ஆழமாக ஆராயும் ஒரு முக்கியமான நூல். இது தலித் சமூகத்தின் சவால்களைப் புரிந்து கொள்ளவும், சமூக மாற்றத்திற்கான சிந்தனைகளை தூண்டவும் உதவுகின்றது. 

நூல் கிடைக்குமிடம் 

1. இக்சா புத்தக மையம் - எழும்பூர் சென்னை

2. https://www.amazon.in/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0

3. https://www.commonfolks.in/books/d/seri-rendupattaal

4. https://www1.marinabooks.com/category?authorid=1510-2418-6294-6208&showby=list&sortby=firstedi

6. https://www.noolulagam.com/books-by-publisher/656/aram-pathippagam/

7. www.arampublication.com

 

8. பேச. 9150724997

 


Wednesday, April 10, 2024

புத்த நெறி வாஸ்து டிப்ஸ் 1

 புத்த நெறி வாஸ்து டிப்ஸ்



வீட்டில் எப்போதும் பணம் இருந்து கொண்டே இருக்க..... வீட்டின் ஈசான்ய மூலையில் ஒரு மூங்கில் செடியை நட்டு வையுங்கள். 


மூங்கில் செடி வளர வளர உங்கள் வீட்டில் செல்வம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.  


# மா. அமரேசன்

# புத்த நெறி வாஸ்து டிப்ஸ்

# மூங்கில்

# செல்வம்

# பணம் சேர

Wednesday, March 6, 2024

திருவண்ணாமலை மாவட்ட புத்தக கண்காட்சி 2024

 


திருவண்ணாமலை மாவட்ட புத்தக கண்காட்சி காந்தி நகர் மைதானத்தில் 07.03.24 முதல் 16.03.24 வரை நடைபெறுகிறது. 


இதில் அறம் பதிப்பகத்தின் அரங்க எண் 75 ல் சமூக நீதி சார்ந்த அனைத்து புத்தகங்களும் கிடைக்கும். நண்பர்களுக்கு பகிருங்கள் நன்றி 


தோழர்கள் திரளாக வருகை தந்து ஏராளமான நூல்களை வாங்கி செல்லுங்கள். தள்ளுபடி உண்டு.

Thursday, September 21, 2023

சாமானனியனின் சந்தேகங்கள்


 அறம் பதிப்பகம்

முற்போக்கு நூல்களின் களஞ்சியம்


"சாமானியனின் சந்தேகங்கள்" ( Doubts of Common Man) 


ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த கேள்வி பதில்களின் தொகுப்பு. தேனி மு. சுப்ரமணியன் எழுதியது. விலை ரூ 370/ கொரியர் செலவுடன் ரூ. 420/ரூபாய் தொகையை ஜி பேயில் எண்: 9150724997

Monday, August 14, 2023

ரோகிணி நதிக்கரையில்

நதியின் நடுவில்

குளம் போல 

தேங்கியிருந்த நீரில்

சித்தார்த்தர் கைகளால் 

மீன் பிடித்து மீண்டும் 

ஆற்றில் விட்டு 

விளையாடிக் கொண்டிருந்தார்


ஆற்றின் இரு கரையிலும்

சாக்கியர்களும் கோலியர்களும்

தமது படைகளுடன்

தாக்குதலுக்கு அணியமாக 

இருந்தனர். 


இளவரசரை தங்கள் 

பக்கம் அழைக்க

இரு படைகளும் 

கத்தி கத்தி

களைத்து போயின

கலைந்தும் போயின


கரையோரப் போன கௌதமரின்

கையிலிந்த மீன் கேட்டது 

ஏன் இந்த மீன் விளையாட்டு என்று

போரில் விருப்பம் இல்லை

பதில் வந்தது கௌதமரிடமிருந்து


இளவரசரின் பதிலைக் கேட்டதும்

கையில் இருந்து 

துள்ளி தாவியது மீன்

விடியலில் கட்டிலில் இருந்து 

கீழே விழுந்தேன் நான். 

Sunday, August 13, 2023

பல்கு நதிக்கரையில்

பல்கு நதிக்கரையில்

அரச மரத்தின் கீழ் இருந்த

மரங்களின் தேவனுக்கு

பால் சோறு படைக்கிறாள் 

பழங்குடி இளவரசி சுஜாதா


துறவி சாப்பிடும் போது

சிந்திய சோற்றுப் பருக்களை

எங்கிருந்தோ வந்த 

காகம் ஒன்று தன்

அலகால் கொத்தி தின்றது


சுஜாதா கையை தூக்கி

காகத்தை விரட்ட எத்தனிக்க

பார்வையால் தடுக்கிறார் சித்தார்த்தர்


கௌதமர் அமர்ந்திருந்த இடத்தை

சுத்தம் செய்த மகிழ்ச்சியை 

கா கா என கத்தி சொன்னது காகம் 

தூக்கம் கலைந்து நானும்

காகா என கத்திக் கொண்டிருந்தேன்

Friday, August 11, 2023

சரயு நதிக்கரையில்


வைகாசி மாதத்தின்

முழு நிலா இரவில்

சரயு நதிக்கரையில்

நானும் ராமனும்

அருகருகே நின்றிருந்தோம்... 


பெண்கள் வரிசையாக வந்து 

நதியில் மூழ்கி மூழ்கி நீராடினர்

நான் பெண்கள் கூட்டத்தில்

சீதையைத் தேடினேன்

ராமனின் கண்களோ 

சூர்ப்பனகையைத் தேடின


சீதையின் பாதம் பணிய

குனிந்த என்னை தடுத்த சீதை

கை குலுக்கி நலம் விசாரித்தார்


ராமனோ சூர்பனகையை 

வானரக் கூட்டத்தோடு

வன்புணர்ந்து கொண்டிருந்தார்


தொலைக்காட்சியில்

செய்தி சேனல்கள்

அலறலில் திடுக்கிட்டு எழுந்தேன்


மணிப்பூர் பற்றி எரிகிறது 

Saturday, July 29, 2023

கோவை புத்தக கண்காட்சி 1






நேற்று கோவை புத்தக கண்காட்சிக்கு எழுத்தாளர் ஜராதுஷ்ட்ரா வந்திருந்தார். அவர் மொழி பெயர்த்த புத்தகத்தை சென்ற ஆண்டு பதிப்பிக்க அறம் பதிப்பகத்திடம் தந்திருந்தார். 

இந்த ஆண்டு அவரது கையில் புத்தகத்தை தந்தேன். மகிழ்ச்சிச்சியை பிரதிபலித்த தருணங்கள் அவை. அவருக்கு நன்றி. 

 

Sunday, April 9, 2023

சுற்றுச்சூழல் பொருளாதாரம் நூல் திறனாய்வு


 வரும் செவ்வாய் கிழமை 11.04.2023 அன்று மாலை 6:00 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்வில் நான் எழுதிய சுற்றுச்சூழல் பொருளாதாரம் என்னும் நூல் திறனாய்வு செய்யப்படுகிறது. நண்பர்கள் திரளாக கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பிக்க கோருகிறேன் நன்றி


மா. அமரேசன்

எழுத்தாளர், பதிப்பாளர், பௌத்த அறிஞர்

Sunday, August 14, 2022

தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி

 

தமிழக முதல்வருக்கு அறம் பதிப்பகத்தின் நன்றி

26.05.2002 அன்று நான் எழுதிய கடிதத்தை கருத்தில் கொண்டு அதன் கருத்தை ஆய்வு செய்து அவற்றின் நன்மை கருதி உடனே செயல்படுத்திய மாண்புமிகு தமிழக முதல்வர் திருமிகு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அறம் பதிப்பகம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. 

https://tamil.samayam.com/business/business-news/tn-chief-minister-mk-stalin-launched-neithal-uppu-brand-under-tamilnadu-salt-corporation/articleshow/93517297.cms








Thursday, October 14, 2021

அறம் பதிப்பகம் - புத்தகங்களின் தொகுப்பு விவரம்

 புரட்சிப்பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே – லெனின்.










இதையும் படியுங்கள்