Sunday, July 23, 2017

என்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம்

என்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம் 

இளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமயக் கோட்பாடுகள்: 4
புத்தரின் போதனைகள்:-
பொதுவில் புத்தரின் போதனைகளை அழைக்கும் போது தம்மம் என்றே அழைப்பர். தம்மம் 3 பெரும் பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டு பாலி மொழியில்  “திரி பீடகம்” என்று அழைக்கப்படுகின்றது. அவை. 1. சுத்த பீடகம். 2. அபிதம்ம பீடகம். 3. விநய பீடகம் என பிரிக்கப்பட்டுள்ளது.
சுத்த பீடகம்:-
      புத்தரின் போதனைகளை கொண்டது. பாலி மொழியில் முதன் முதலில் தொகுக்கப்பட்டது. இதனை பாலி மொழியில் தொகுத்தவர். புத்தரின் உதவியாளராகவும், முதன்மைச் சீடராகவும், இருந்த ஆனந்தர் ஆவார். இவர் புத்தரின் உறவினர். புத்தருக்குப்பின் சங்கத் தலைமையேற்றவர் இவரே.
      ஞான போதனைகளின் வழியாக ஒருவரின் அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞானத்தை அடையச் செய்வது அல்லது மனிதர்களின் வாழ்வில் நிகழும் துன்பங்களைக் களைவதே சுத்த பீடகத்தின் நோக்கமாகும்.
புத்தர் தன் வாழ்நாளில் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு சூழலில், தனி நபர்களுக்கும், அரசர்களுக்கும், பொது மக்களுக்கும் தனது சீடர்களுக்கும், பௌத்தத்தை விளக்கி, மனிதர்களின் வாழ்வில் நிகழும் துன்பங்களுக்கான காரணங்களை விளக்கி கூறியதே சுத்த பீடகம். இது பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது அவை:-
·         தீக நிகாயம் 32 உரைகள்
·         மஜ்ஜிம நிகாயம் 152 பேருரைகள்
·         சம்யுக்த நிகாயம் ( இது 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு பிரிவிலும் தலா 52 உரைகளை அடக்கியது.
·         அங்குத்தர நிகாயம் 11 நிப்பாதம் ( பிரிவுகள்) 2308 சூக்தங்கள் ( செய்யுள்கள்)
·         குந்தக நிகாயம் 25 பிரிவுகள் அவற்றில் ஒன்று தம்மபதம்
தம்மபதம் :-
 தம்மபதம் ( தம்மவழிஇது புத்தரின் வாய்மொழியாக வந்தவை. தம்மபதம் புத்தர் இவ்வுலகில் உள்ள அணைத்து உயிரினங்களின் மீதும்மனிதர்களின் மீதும்கொண்டிருந்த கருணை மற்றும் அவருடைய எல்லையற்ற ஞானத்தையும் உலகுக்கு உணர்த்தும்  சிறிய செய்யுள்களின்  தொகுப்பாகும். 26 தலைப்புகளைக் கொண்டது. 423 சிறு செய்யுளைக் கொண்டதாகும்.
தம்மபதம் தலைப்புகள்
1.   இணைகள் – 08 செய்யுள்கள்
2.   விழிப்பு – 19 செய்யுள்கள்
3.   மனம் – 24 செய்யுள்கள்
4.   பூக்கள் – 29 செய்யுள்கள்
5.   அறிவிலி – 35 செய்யுள்கள்
6.   அறிவர் – 41 செய்யுள்கள்
7.   போற்றத்தக்ககோர் – 46 செய்யுள்கள்
8.   ஆயிரங்கள் – 50 செய்யுள்கள்
9.   தீமை 56 செய்யுள்கள்
10.  தண்டித்தல் 61 செய்யுள்கள்
11.  முதுமை 67 செய்யுள்கள்
12.  தான் 72 செய்யுள்கள்
13.  உலகம் 76 செய்யுள்கள்
14.  புத்தர் 81 செய்யுள்கள்
15.  மகிழ்ச்சி 87 செய்யுள்கள்
16.  பிரியம் 92 செய்யுள்கள்
17.  சினம் 97 செய்யுள்கள்
18.  அசுத்தக் கறைகள் 102 செய்யுள்கள்
19.  நீதி 111 செய்யுள்கள்
20.  வழி 116 செய்யுள்கள்
21.  பல்வகை 123 செய்யுள்கள்
22.  தீமை 129 செய்யுள்கள்
23.  யானை 135 செய்யுள்கள்
24.  அவா 141 செய்யுள்கள்
25.  பிக்கு 151 செய்யுள்கள்
26.  அறவோர் 160 செய்யுள்கள்[1]
தம்மபதத்துக்கு உரை எழுதியோர்கள்:-
பாலி மொழியிலிருந்த தம்ம பதத்துக்கு முதன் முதலில்  உரையெழுதியவர் கி.பி.ஐந்தாம் நுற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த புத்தேகோஷர் உரையெழுதி இருக்கின்றார். அவருக்குப் பின்  தம்மத்தை  முதலில்  தமிழிற்க்கு தந்தவர்  அய்யன்  திருவள்ளுவர்  திருக்குறளாக தந்துள்ளார். அவ்வையார் மூதுரையாக தந்துள்ளார்.


 பதினென் கீழ் கணக்கு நுால்கள் எழுதிய அனைவரும் அவரவர் அளவிற்கு தம்மபதத்தை தமிழுக்குத் தந்தவர்கள் ஆவார்கள்.  அதற்குப் பின்  பலரும் தம்மத்தை தமிழ்படுத்தினாலும், அவற்றில் குறிப்பிடத்தக்கவர்கள் இலங்கையைச் சேர்ந்த எம். என். மெகைதீன்., பவுத்த துறவி சோமானந்த  தேரா,  சி.எஸ்.தேவநாதன், மற்றும் பகவான். ரஐினிஸ்  ஆகியோர் அடங்குவர்.  இவர்களில் பகவான்  ரசினிஸ் தம்ம பதத்தை கதைகளாக விளக்கினார்.
இந்திய தத்துவ மேதை சர்வபள்ளி. இராதாகிருஷ்ணனும் தம்மபதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இவர் இந்து மத நோக்கில் தம்மபதத்தை மொழிப்பெயர்த்துள்ளார்.  மற்றவர்கள் வசன கவிதை மற்றும் உரைநடைகளாக வெளியிட்டுள்ளனர்

இவர்களை அடுத்து தமிழ் கவிதைகளில் தனக்கென தனி ஆளுமையை ஏற்படுத்திக் கொண்டுள்ள யாழன் ஆதியும் தம்மபதம் என்னும் அரியதொரு பொக்கிஷத்தை வெளியிட்டுள்ளார்.
தம்மபதத்தின் சிறப்புகள் :
      மெய்யறிவு வளரவும், வாழ்வியல் உள மற்றும் மனச் சிக்கல்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்கும் ஆதாரமாக அமைந்துள்ளது. தினசரி வாழ்க்கை சிக்கலுக்கு எளிய தீர்வை தரும் தீர்வுப் புத்தகமாகவும், ஒழுக்கத்தை பேணவும், அமைதியான மன நிலையில் வாழவும் அறிவுடையோர் பின்பற்ற வேண்டிய நடைமுறையை தம்மபதம் விவரிப்பதால் இன்று தம்மபதம் திசையெங்கும் தீர்வு சொல்லும் நீதி புத்தகமாக பயணப்படுகின்றது.
தேரவாத பௌத்தக் கொள்கையின் படி தம்மபத்தின்  ஒவ்வொரு வரியும், ஒரு குறிப்பிட்ட சம்பவம், அல்லது  நிகழ்விற்க்கு  பதில் தர புத்தரால் சொல்லப்பட்ட வார்த்தையாகும்.
தம்மத பதம் உலகின் பல பகுதியில் பிரபலமாயுள்ளது.ஐரோப்பிய  மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதுஆங்கிலத்தில் மட்டுமே 40க்கும்
மேற்பட்ட  மொழிபெயர்ப்புகள்  உள்ளனஅமெரிக்காவில்  இப்போது  அதிகமாகப்
பரவி வரும் மதம் பெளத்தமதம் என்கிறார்கள்.

தம்ம பதத்தின் சூத்திரங்கள் படிப்பதற்கு எளிமையானவைபெளத்த சமயக்
கொள்கைகளும் வாழ்க்கைக்குத் தேவையான நீதிகளும் தம்மபதத்தில்
நிறையவே இருப்பதால் அவற்றைப் படித்துத் தெளிந்துகொள்ளலாம்.
இது நமது மொழியிலுள்ள திருவள்ளுவரது திருக்குறளைப் போன்று
அத்துணைச் சிறப்பு வாய்ந்தது” என்று தம்ம பதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய நூல் திருக்குறளே என்கிறார் வையாபுரிப்பிள்ளைதம் இலக்கிய உதயம் பகுதி 11  எனும்  நூலில். தம்ம பதத்தின் பெருமையை  ஹெர்மான்  ஓல்டன்பெர்க்  எனும்  ஜெர்மானியப் பேராசிரியர்  இப்படிக்  கூறுகிறார்.
பெளத்த சமயத்தைப் பற்றித் தெளிவாய்த் தெரிந்துகொள்வதற்கு பெளத்த
தர்ம ஆராய்ச்சிகளை ஆரம்பிக்கும் போதே  ஆராய்ச்சியாளனுக்கு  ஒரு  புனிதமானவரின்  கைகளால்  தம்மபதத்தை  அளிப்பதைவிட  மேலான காரியம்  ஒன்றும்  இருக்க முடியாது.  தம்மபதம்  தன்னிரகற்ற  அழகுடையதுபொருள்  நிறைந்த பழமொழிக்களஞ்சியம். பெளத்த  சமயத்தைத்  தெரிந்து  கொள்ள  உறுதிகொண்ட  எவரும்  திரும்பத் திரும்பப் டிக்க வேண்டிய நூல் இது.”

என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்:

      இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி, இது நடிகர் சிவக்குமாரின் நுாறாவது படம். இந்தப் பாடலை எழுதியவர், இசைஞானியின் இளவல், பன்முக ஆளுமை கொண்ட கங்கை அமரன் அவர்கள். இது ஒரு பெண்ணின் விரகதாபத்தை விரசமில்லாமல் சொல்லும் பாடலாகும். இந்த பாடல் எழுதிய பாடலாசிரியருக்கும், பின்னனி பாடகி. வாணி ஜெயராம் அவர்களின் குரலோடு சேர்ந்து இசைஞானியின் இசையில் புதிய உயிரோட்டம் கிடைக்கும். இப்பொழுது மட்டுமல்ல எப்போது கேட்டாலும் நம்மை மெய் மறக்கச் செய்யும் பாடல்களுள் ஒன்றுதான் என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் பாடல். இந்த பாடல் சாரங்கி ராகத்தில் அமைந்த பாடல் என படித்திருக்கின்றேன். இந்த பாடலின் நிரவல் இசை (இன்டர்லுா) குறித்து மட்டுமே நாம் பேசப்போகின்றோம். 

      “ பெண்கள் மீதான ஆசை
சிறிதளவாய் இருப்பினும்
அதை நீக்கல் வேண்டும்
பால் குடிகன்று பசுவிடம்
வளர்வதைப் போல
அது வளர்ந்து விடும்” – தம்மபதம் 284. யாழன் ஆதி



என்னும் புத்தரின் தம்ம பத வாக்கு, அப்போது காமம் கொண்ட ஒரு ஆண்மகனை நல்வழிப்படுத்த போதிக்கப்பட்டதாகும். அதை இன்றைய நோக்கில் ஆணுக்கும் எடுத்துக் கொள்ளலாம், பெண்களுக்கும் பொருத்திக் கொள்ளலாம். 

      இந்த தம்மப்பத பாடலின் படியே, என்னுள்ளில் எங்கும் ஏங்கும் கீதம் பாடலுக்கு இசைஞானி இசை அமைத்து இருப்பார். பாடல் துவங்கும் போது வரும் முன் இசையினை நிறைமாத பசு கன்று ஈனும் மகிழ்வான தருணத்தை புல்லாங்குழல் இசையால் நினைவு படுத்துவதாக இருக்கும். இந்த கட்டுரையை படித்து விட்டு இந்த பாடலைக் கேட்க்கும் போது, முன் இசைக்கு கன்று ஈனும் பசுவின் சூழலை, வலியை, காட்சிப் படுத்திப் பார்க்கும் போது முன் இசைப் பொருந்திப் போவதை உணர இயலும் 

      இந்த பாடலின் நிரவல் இசையில் புத்தரின் வாய்மொழி வேதமான மேலே சொன்ன தம்ம பதம் 284ன் பொருளுனர்ந்து இசை அமைத்திருப்பார் நம் இசைஞானி, முதல் நிரவல் இசையில் ஒரு கன்று முதன் முதலாய் தன் தாய்ப்பசுவிடம் பால் அருந்தும் காட்சிக்கு இசை அமைத்தது போலவே இருக்கும், இந்த பாடலை கேட்டு கண்களை மூடி இந்த காட்சியை உணரும் போது அந்த இசைப் பொருந்திப் போவதை உணர இயலும். இரண்டாவது நிரவல் இசைக்கு வளர்ந்த கன்று தன் தாயிடம் பால் அருந்தி வளர்ந்து நிற்ப்பதை இசையால் நமக்கு காட்சிப் படுத்தியிருப்பார் நம் இசைஞானி.
நிறைவாக, இனையர்களுக்குள் நிகழும் ஒரு நல்ல உடலுறவு என்பது இன்னும் கொஞ்சம் நீடிக்காதா என்னும் போதே முடிவுற வேண்டும்.  அதுதான் நிறை இன்பம். மாறாக எப்போது முடியுமோ என்னும் எண்ணம் எழுமாயின் அது துன்பம். இது காமம் குறித்தப் பாடலானதால், இன்னும் கொஞ்சம் நேரம்நீ இந்த பாடலும் இசையும் நீளாதா என்று நமக்குள் எண்ணம் தோன்றும் போது தனது இசையை நிறைவு செய்வார். நம் இசைஞானி. 
தொடரும்...
       






[1]   தம்மபதம் – தமிழில் யாழன் ஆதி 

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்