Tuesday, July 11, 2017

ஜனனி ஜனனி பாடல்.

இளையராஜாவின் இசை - பாடல்களில் புத்த சமயக் கோட்பாடுகள்


ஜனனி ஜனனி பாடல்.


பொதுவில் இசை குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. இருப்பினும், இளையராஜாவின் இசையில் பௌத்தம் குறித்து எழுத வேண்டிய தேவை இருப்பதால் இந்த முயற்சியை தொடங்க வேண்டிய தேவை. அதனால் துவங்கி விட்டேன். ஒரு வேலை என்னுடைய இந்த கட்டுரைக்குப் பின் இசை குறித்தும் இசைஞானியாரைக் குறித்தும் மிக அதிகம் தெரிந்தவர்கள் எவராவது எழுதுவார்களாயின் மிக மகிழ்வேன். அந்த நோக்கத்திலேயே தமிழ் சமூகத்துடன் எனது உரையாடலை துவங்குகின்றேன்.

  • பொதுவில் பௌத்தம் மனிதர்கள் இல்லை உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவானது.
  • இளையராஜாவின் இசை குறித்த கருத்தான, ”இசை அனைவருக்கும் பொதுவானது. அதில் எந்த பாகுபாடும், யாருடைய உரிமை கோரலும் இல்லை என்பதே.” பௌத்த அடிப்படையிலான எண்ணம்.
  • பௌத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு குறிப்பாக புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு, ஆதரவில்லாதவர்களுக்கு எப்பொழுதும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும், புத்தரின் காலத்தில் இருந்து சம காலம் வரை.
  • இளையராஜாவின் இசையில் அண்ணக்கிளி முதல் அண்மைக்கால படம் வரை, உழைக்கும் மக்களின் இசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும், அதிலும் பெரும்பாலான பாடல்களில் மண்ணின் மைந்தர்களின் இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
  • பௌத்தின் அடிப்படை கருத்தாக்கம் என்பது, இந்த சமூகம் உருவாக்கி வைத்திருந்த பகுத்தறிவுக்கு ஒவ்வாத கட்டமைப்புகளை உடைத்தல்,
  • இளையராஜாவின் இசையிலும் இசை குறித்தான அனைத்து விதமான வரையறைகளுக்கான கட்டமைப்பு உடைக்கப்பட்டிருக்கும்.
  • பௌத்தம் ஒரு தனி நபரிடம் இரண்டு வகையான மாற்றத்தை உருவாக்கும், ஒன்று தன்னை மாற்றும், அதன்பின் சமூக மாற்றத்தை உருவாக்கும்.
  • இளைராஜாவின் இசையும் முதலில் தனக்கு ( கேட்பவருக்கு) மகிழ்ச்சியை உருவாக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் . அதன் பின் அந்த பாடல் குறித்த சிலாகிப்பு சமூகத்தில் பிரபலாமாகும்.
  • இந்த பொதுவான புரிதல்களோடு, இரண்டு பாடல்களின் இசை எவ்வாறு பௌத்தத்தை பிரதிபலிக்கின்றது என எடுத்துக் காட்ட விழைகின்றேன்.
முதலில்
  • ஜனனி ஜனனி பாடல்.
    • ஆதி சங்கரரின் பஜ கோவிந்தம் பாடலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பாடல் என அவர் பல முறை பல நேர்காணல் மற்றும் செவ்வியில் கூற கேட்டிருப்போம்.
    • உண்மையில் ஆதி சங்கரர் மற்றும் இராமானுஜர் ஆகிய இருவருமே புத்தரின் கருத்துக்களை இந்து மதத்திற்குள் கொண்டுவந்தவர்கள். இந்த பின்புலத்தில் ஆதி சங்கரரின் ஆதி தத்துவம் பௌத்தம் என்றாகின்றது.
    • அவரது பஜ கோவிந்தம் பாடல், புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி என்னும் திரி சரணத்தை அடிப்படையாக கொண்டே கட்டமைக்கப்பட்டது.
    • ஜனனி ஜனனி பாடலும், புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி என்னும் மூன்று சரணத்தையும் மீண்டும் மீண்டும் சொல்வதை போலத்தான் கட்டமைக்கபட்டிருக்கும்.
    • வரிகளை கவனிக்காமல் தாளம், இராகம் இவற்றை கவனிக்கும் பௌத்தர்கள் இதை உணர முடியும்.
    • இதை பின்பற்றி இதே ராகம், மெட்டு தாளத்தில் பிற்பாடு அவர் இசையமைத்த அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடலிலும், புத்தம் சரணம் கச்சாமி, தாள கதியிலே அமைக்கப்பட்டிருக்கும்.
    • தொடரும்.


No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்