Friday, May 5, 2017

படிக்கவேண்டிய புத்தகம்

படிக்கவேண்டிய புத்தகம் :
சேரி ரெண்டுபட்டால் - மா. அமரேசன்
அரசின் சலுகைகள் பல பெற்றும் பிற சமூகங்களைப் போல தலித் மக்களின் நிலை அரசியல், சமூகம், வணிகம் உள்ளிட்டவற்றில் ஏன் உயரவில்லை என்பதை ஆய்வுப்பூர்வமாக அலசும் நூல் இது. பிரச்னைகளைத் துல்லியமாக அடையாளம் கண்டு, அதற்கான தீர்வுகளையும் தெளிவாக முன்வைத்து விளக்கிப் புரியவைப்பது ஆசிரியரின் எழுத்தாளுமைக்குச் சரியான சான்று.
தலித் மக்களின் சுய குணநலன்கள் அவர்களின் தொழில், அரசியல் வாழ்வுக்கு எப்படித் தடைகல்லாகின்றன என விவரிக்கும் பகுதியில் வெளிப்படைத்தன்மை சற்று அதிகம். தலித் மக்களைப் பிரிவினை செய்து லாபம் பார்க்கும் சக்திகளை அடையாளம் காட்டி, தலித்களின் எதிர்காலத்தை விளக்கி, தலித் மக்களின் வாழ்வைக் கண்ணாடி போல அடையாளம் காட்டும் சமூக வாழ்வியல் நூல் இது. வெளியீடு: 
அறம் பதிப்பகம்,
3/582, முல்லை தெரு,
கஸ்துாரிபாய் நகர்,
எதிரில். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்
முள்ளிப்பட்டு கிராமம் மற்றும் அஞ்சல்
ஆரணி.  632316
திருவண்ணாமலை மாவட்டம்


பிரதிகள் வேண்டுவோர் பேசவும்
திரு. சண்முகானந்தம் - 9092901393
மா.அமரேசன். 9150724997
நன்றி.


No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்