Saturday, February 11, 2017

பட்டியலின கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள்

இன்றைய அரசியல் நிலைத்த தன்மையற்ற நிலையில். அதிகாரப் போட்டி நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில். நேற்றுவரை ஒன்றாக இருந்தவர்கள் இன்று நினைத்து கூடப் பார்க்காததை நிகழ்திக் கொண்டிருக்கும் நிலையில்
நாற்பது தனித்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களின் நிலை என்ன.? இந்த சூழ்நிலையை தனக்கும் தான் சார்ந்த சமுகத்துக்கான உயர்வுக்கான துருப்புச் சீட்டாக பட்டியல் இன கட்சிகள் எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகின்றது.
தான் இரண்டாம் இடத்தில் இருந்தும் முதலிடத்தைப் பிடிக்கவே முக்குல சமுகம் முயற்சிக்கிறது. அதனால் முதலிடத்தில் வருபவர்களுக்கும் நன்மை. அவர்கள் சமுகத்துக்கும் நன்மை.
இதே சூழ்நிலையில் நாடார் சமுகமோ சாணர் சமுகமோ இருந்திருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆட்சியில் பங்கெடுத்திருக்கும்.
இதே சூழ்நிலையில் மீனவ சமுகம் இருந்திருந்தால் கடற்கரை பிரச்சனை கடல்சார் வளங்களை பாதுகாத்தல் என இலங்கை ரானுவத் தாக்குதல் என தங்களின் பிரச்சினை களை தீர்க்கும் துருப்புச் சீட்டாக்கி இருக்கும்.
பட்டியல் இனம் என்ன செய்யப் போகின்றது. பட்டியல் இனத்தின் வாக்குகளை பெற்று சட்டமன்ற உறுப்பினரானவர்கள் அடையும் பயன் என்ன . தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு பெற்றுத்தரப் போகும் வாழ்வாதாரம் என்ன?
கூட்டாட்சியை முன்னிறுத்தி தேர்தலுக்கு முன் உறுவாக்கிய மக்கள் நல கூட்டணியின் நிலைப்பாடு என்ன. தேர்தலுக்கு பிந்திய இந்த அரும் வாய்ப்பை எப்படி பயன்படுத்தப் போகின்றது.
பட்டியல் இன கட்சிகள் இந்த சூழ்நிலையை சாதுர்யமாக பயன்படுத்தி தனக்கான அதிகார பகிர்வை எப்படி அடையப் போகின்றது.
வல்வர்கள் வாய்ப்பை உருவாக்குவார்கள். நல்லவர்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார்கள். பட்டியல் இனம் இரண்டையும் பயன்படுத்தாமல் விசுவாச அடிமையாக இருக்கும் பட்சத்தில் மதவெறியுடன் சாதிவெறியும் கைகோர்க்கும் போது பாதிக்கப்படுவது பட்டியல் இன மக்களாகத்தானே இருக்கப் போகின்றார்கள்.
இந்த சூழ்நிலையில் பட்டியலின அறிவுச் சமுகம் செய்ய வேண்டியது என்ன.
* தொடர்ந்து இதைப்போன்ற செய்திகளை சமுக ஊடகங்களில் பரப்பிக் கொண்டிருப்பது.
* தனது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தனது அதரவை நிலைப்படுத்தி பட்டியலின மக்களுக்கான நலன் சார்ந்த நிலைப்பாடுகளில் நிற்க வைப்பது.
* பட்டியலின கட்சிகளை இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தொடர்ந்து வலியுறுத்துவது.
* இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரலாற்றில் இடம் பிடிப்பதும். தவற விட்டு வரலாற்று பிழையை உருவாக்குவதும் சமுக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் உள்ள பட்டியலின ஆதரவு சக்திகளின் கையில் உள்ளது.
* நமக்கானவர்களை நமக்காக செயல்பட வைக்க அழுத்தம் தரவேண்டியது நமது கடமையாகின்றது.
தயவு செய்து இந்த கருத்து செயல்பாட்டுக்கு வரும் வரை அனைவருக்கும் பகிரவும். மற்றவர்களும் இதே ஒத்த கருத்தாக்கங்களை உருவாக்கி சமுக தளங்களில் பகிரவும்.
எளிய வேண்டுகோள். நமக்கான வலிமையை உருவாக்கட்டும்.
மா.அமரேசன்
முகநூல் பதிவு
09/02/17. பின்னிரவு பதிவு

No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்