Saturday, May 13, 2017

கலத்திற்கேற்ற கருத்தரங்குகள்

தமிழ்நாட்டிற்க்கு தற்போது 4 விதமாக கருத்துத் தலைமை தேவைப்படுவதாக தோன்றுகின்றது. இது சம்பந்தமான படைப்புகளும் கருத்தரங்கு, மற்றும் பயிற்சிப் பட்டறையும் இந்த நிலையில் ஒரு தவிர்க்க இயலாத எழுச்சியை உருவாக்கும்.


1. நீதிக் கட்சி, பேராயக் கட்சி, மற்றும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தலித்துகள் இழந்தது என்ன. என்னும் தலைப்பில் புத்தகமும், கருத்தரங்கும் நாடெங்கும் நடைபெற வேண்டும்.


2. தற்போதைய சூழலில் பட்டியலினம் அதிகாரத்தை கைப்பற்றுவதில் பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்களின் பங்கு. ( எப்பொழுதும் அதிகாரத்தை, முக்குலத்தோறும், கொங்கு வெள்ளாளர்களும், படையாச்சிகளுமே கைப்பற்ற வேண்டுமா) சட்ட மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அதிகாரம் இவர்களிடமே இருக்க வேண்டுமா என்ன. தமிழகத்தில் உள்ள பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து ஒரு பயிற்சி பட்டறையை அவர்களுக்கு நடத்த வேண்டும். இதனால் அவர்களுக்கும் இந்த சமூகம் நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றது, என்பது தெளிவாக புரியும். நாம் எதை கேட்க்க வேண்டும், எதை கேட்க கூடாது என்பதும் விளங்கும்.


3. வரலாற்றில் எப்பொழுதுமே, சமயங்கள் மறையும் ஆனால் சமயக் கருத்துக்கள் மக்களாலும், மற்ற சமயத்தாலும் உள்வாங்கி்க் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும். அந்த நோக்கில் பௌத்தம் இழந்ததும் பெற்றதும் என்ன என்பது குறித்தும், மானுட ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை பெற புத்தர் முன் மொழிந்த விடுதலை சாசனம் என்ன என்பன போன்ற கருத்தரங்குகள் நாடெங்கிலும் நடைபெற வேண்டும். இறுதியாக


4. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் தினைசார் வளச்சுரண்டலில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் விளிம்பு நிலை மக்களை காப்பாற்றும் உத்திகளும் முறைகளும் குறித்து சூழல் பாதுகாப்பு கருத்தரங்குகள் பெருமளவில் நடைபெற வேண்டும். அதற்கென விளிம்பு நிலை மக்களான, சமவெளி பழங்குடிகளான பட்டியலினம், கடற்கரை பழங்குடிகளான கடலோடிகள், மலைவாழ் பழங்குடிகள், திருநங்கைகள், மற்றும் நிலவுடைமை சாதியரிலும் உள்ள நிலமில்லாத வாழ்வாதாரமிழந்த மக்களுக்கான சூழல் பாதுகாப்பு செயல் திட்டத்தை வகுத்து அதனை செயல்படுத்த மக்களை திரட்ட வேண்டியத் தேவையுள்ளது.

தமிழகத்தில் தற்போதுள்ள கருத்து மற்றும் அரசியல் தலைமைகள் தங்களின் இறுதி காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பாதால் மாற்றுப் பார்வையுடன் மாற்றுத் தலைமைக்கு மக்களை அணியப்படுத்த இந்த கருத்தரங்குகள் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயம் வேண்டாம்.


No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்