Thursday, October 24, 2024
Wednesday, April 10, 2024
புத்த நெறி வாஸ்து டிப்ஸ் 1
புத்த நெறி வாஸ்து டிப்ஸ்
வீட்டில் எப்போதும் பணம் இருந்து கொண்டே இருக்க..... வீட்டின் ஈசான்ய மூலையில் ஒரு மூங்கில் செடியை நட்டு வையுங்கள்.
மூங்கில் செடி வளர வளர உங்கள் வீட்டில் செல்வம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
# மா. அமரேசன்
# புத்த நெறி வாஸ்து டிப்ஸ்
# மூங்கில்
# செல்வம்
# பணம் சேர
Wednesday, March 6, 2024
திருவண்ணாமலை மாவட்ட புத்தக கண்காட்சி 2024
திருவண்ணாமலை மாவட்ட புத்தக கண்காட்சி காந்தி நகர் மைதானத்தில் 07.03.24 முதல் 16.03.24 வரை நடைபெறுகிறது.
இதில் அறம் பதிப்பகத்தின் அரங்க எண் 75 ல் சமூக நீதி சார்ந்த அனைத்து புத்தகங்களும் கிடைக்கும். நண்பர்களுக்கு பகிருங்கள் நன்றி
தோழர்கள் திரளாக வருகை தந்து ஏராளமான நூல்களை வாங்கி செல்லுங்கள். தள்ளுபடி உண்டு.
Thursday, September 21, 2023
சாமானனியனின் சந்தேகங்கள்
அறம் பதிப்பகம்
முற்போக்கு நூல்களின் களஞ்சியம்
"சாமானியனின் சந்தேகங்கள்" ( Doubts of Common Man)
ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த கேள்வி பதில்களின் தொகுப்பு. தேனி மு. சுப்ரமணியன் எழுதியது. விலை ரூ 370/ கொரியர் செலவுடன் ரூ. 420/ரூபாய் தொகையை ஜி பேயில் எண்: 9150724997
Monday, September 11, 2023
Monday, August 14, 2023
ரோகிணி நதிக்கரையில்
நதியின் நடுவில்
குளம் போல
தேங்கியிருந்த நீரில்
சித்தார்த்தர் கைகளால்
மீன் பிடித்து மீண்டும்
ஆற்றில் விட்டு
விளையாடிக் கொண்டிருந்தார்
ஆற்றின் இரு கரையிலும்
சாக்கியர்களும் கோலியர்களும்
தமது படைகளுடன்
தாக்குதலுக்கு அணியமாக
இருந்தனர்.
இளவரசரை தங்கள்
பக்கம் அழைக்க
இரு படைகளும்
கத்தி கத்தி
களைத்து போயின
கலைந்தும் போயின
கரையோரப் போன கௌதமரின்
கையிலிந்த மீன் கேட்டது
ஏன் இந்த மீன் விளையாட்டு என்று
போரில் விருப்பம் இல்லை
பதில் வந்தது கௌதமரிடமிருந்து
இளவரசரின் பதிலைக் கேட்டதும்
கையில் இருந்து
துள்ளி தாவியது மீன்
விடியலில் கட்டிலில் இருந்து
கீழே விழுந்தேன் நான்.
Sunday, August 13, 2023
பல்கு நதிக்கரையில்
பல்கு நதிக்கரையில்
அரச மரத்தின் கீழ் இருந்த
மரங்களின் தேவனுக்கு
பால் சோறு படைக்கிறாள்
பழங்குடி இளவரசி சுஜாதா
துறவி சாப்பிடும் போது
சிந்திய சோற்றுப் பருக்களை
எங்கிருந்தோ வந்த
காகம் ஒன்று தன்
அலகால் கொத்தி தின்றது
சுஜாதா கையை தூக்கி
காகத்தை விரட்ட எத்தனிக்க
பார்வையால் தடுக்கிறார் சித்தார்த்தர்
கௌதமர் அமர்ந்திருந்த இடத்தை
சுத்தம் செய்த மகிழ்ச்சியை
கா கா என கத்தி சொன்னது காகம்
தூக்கம் கலைந்து நானும்
காகா என கத்திக் கொண்டிருந்தேன்
Friday, August 11, 2023
சரயு நதிக்கரையில்
வைகாசி மாதத்தின்
முழு நிலா இரவில்
சரயு நதிக்கரையில்
நானும் ராமனும்
அருகருகே நின்றிருந்தோம்...
பெண்கள் வரிசையாக வந்து
நதியில் மூழ்கி மூழ்கி நீராடினர்
நான் பெண்கள் கூட்டத்தில்
சீதையைத் தேடினேன்
ராமனின் கண்களோ
சூர்ப்பனகையைத் தேடின
சீதையின் பாதம் பணிய
குனிந்த என்னை தடுத்த சீதை
கை குலுக்கி நலம் விசாரித்தார்
ராமனோ சூர்பனகையை
வானரக் கூட்டத்தோடு
வன்புணர்ந்து கொண்டிருந்தார்
தொலைக்காட்சியில்
செய்தி சேனல்கள்
அலறலில் திடுக்கிட்டு எழுந்தேன்
மணிப்பூர் பற்றி எரிகிறது
Saturday, July 29, 2023
கோவை புத்தக கண்காட்சி 1
இந்த ஆண்டு அவரது கையில் புத்தகத்தை தந்தேன். மகிழ்ச்சிச்சியை பிரதிபலித்த தருணங்கள் அவை. அவருக்கு நன்றி.
Thursday, June 8, 2023
Sunday, April 9, 2023
சுற்றுச்சூழல் பொருளாதாரம் நூல் திறனாய்வு
வரும் செவ்வாய் கிழமை 11.04.2023 அன்று மாலை 6:00 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்வில் நான் எழுதிய சுற்றுச்சூழல் பொருளாதாரம் என்னும் நூல் திறனாய்வு செய்யப்படுகிறது. நண்பர்கள் திரளாக கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பிக்க கோருகிறேன் நன்றி
மா. அமரேசன்
எழுத்தாளர், பதிப்பாளர், பௌத்த அறிஞர்
Sunday, January 29, 2023
Sunday, August 14, 2022
தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி
Friday, January 28, 2022
Thursday, October 14, 2021
Tuesday, October 12, 2021
Sunday, March 14, 2021
Friday, March 12, 2021
புத்தநெறி மந்திரங்கள் - 4
புத்தநெறி மந்திரங்கள் 4
ஓம் மணி பத்மே ஹூம்
தியான மந்திரங்கள் - 1
இந்த மந்திரத்தை ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், என எவர் வேண்டுமானாலும், காலை, மாலை, இரவு, நள்ளிரவு, பகல், நண்பகல், என எப்பொழுது வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையிலும், எந்த இடத்திலும் மனதுக்குள்ளும், வாய்விட்டும், உச்சரிக்கவும், ஜெபிக்கவும் தியானிக்கவும் ஏற்ற மந்திரம்.
புத்தநெறி மந்திரங்களுக்குள் மிக சக்தி வாய்ந்த மந்திரம் இது. இதை மணி மந்திரம் என்றும் அழைப்பர். பண்டையத் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு மணி என்கின்ற பெயர் இருக்கும். அதே போல பலரும் தங்கள் வீட்டு நாய்க்கு முன்பெல்லாம் மணி என்றே பெயரிட்டு அழைப்பர்கள். ஏனென்றால் தங்களை காப்பது மணி மந்திரம் என்பதால் தங்களையும் தங்களின் குடும்பத்தையும் காப்பாற்றும் நாய்க்கும் அதே பெயரிட்டு அழைப்பது தமிழரின் மரபாக இருந்தது முன்பெல்லாம்.
அவலோகிதேஷ்வரரின் அவதாரமாக கருதப்படும் தலாய் லாமாவின் பக்தர்களால் இந்த மந்திரம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. மேலும் இந்த மந்திரத்தின் ஆற்றலை அதிகப்படுத்துவதற்காக இந்த மந்திரத்தை திபெத்தியர்கள் பாறைகளில் செதுக்கியும், பிரார்த்தனை சக்கரங்களில் எழுதியும் வைக்கின்றனர். ஒவ்வொரு முறை இந்த சக்கரத்தை சுழற்றும் போது, அது மந்திரத்தின் உச்சரித்ததின் பலனை தருகின்றதென நம்பப்படுகிறது.
Monday, February 15, 2021
புத்தநெறி மந்திரங்கள் - 3
பஞ்ச சீலங்கள் - பாளி
ஐந்தொழுக்கங்கள்
பானாதி பாதா வேரமணி சிக்காபதங் சமாதியாமி
அதின்னதானா வேரமணி சிக்காபதங் சமாதியாமி
காமேசு மிச்சா சாரா வேரமணி சிக்காபதங் சமாதியாமி
மூசாவாதா வேரமணி சிக்காபதங் சமாதியாமி
சுரா மேரய மஜ்ஜ பமாதட்டான வேரமணி சிக்காபதங் சமாதியாமி
சாது சாது சாது
பஞ்ச சீலம் - தமிழ் பொருள்
வழிபாட்டின் போது சொல்லவேண்டியது
- நான் உயிர்வதை செய்வதிலிருந்து விலகியிருப்பேன் என்ற போதனையை ஏற்றுக்கொள்கின்றேன்.
- நான் எனக்கு கொடுக்கப்படாததை எடுப்பதிலிருந்து விலகியிருப்பேன் என்ற போதனையை ஏற்றுக் கொள்கிறேன்.
- நான் பிழையுறு காமத்தினை பின்பற்றுவதிலிருந்து விலகியிருப்பேன் என்ற போதனையை ஏற்றுக் கொள்கிறேன்.
- நான் பொய் பேசுவதிலிருந்து விலகியிருப்பேன் என்ற போதனையை ஏற்றுக் கொள்கிறேன்.
- நான் போதையை உண்டாக்ககூடிய பொருளை எடுத்துக் கொள்வதிலிருந்து விலகியிருப்பேன் என்ற போதனையை ஏற்றுக் கொள்கிறேன்.
- எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தி என் உடலைத் துாய்மை படுத்துகிறேன்.
- மனமுவந்து தானம் செய்வதன் மூலம் என் உடலைத் துாய்மை படுத்துகிறேன்.
- சாந்தம்,எளிமை மற்றும் மனநிறைவுடன் வாழ்ந்து என் உடலை துாய்மை படுத்துகிறேன்.
- உண்மை நிறைந்த உரையாடல் மூலம் என் நாவினை துாய்மை படுத்துகிறேன்.
- தெளிவு, தீர்க்கம் மற்றும் பிரகாசமான மத்துடன் இருந்து என் மனதை துாய்மை படுத்துகிறேன்.
- புத்தநெறியைப் பின்பற்றும் குடும்பத்தினர்கள் மன அமைதியோடும் மகிழ்வோழும் வாழ்வதற்கு பின்பற்ற வேண்டிய ஒழுக்க கோட்பாடுகள்
- தனிநபர் ஒருவர் மன அமைதியோடு வாழ்வாரெனில் இந்த உலகம் அமைதியோடு வாழும் என்ற நெறிமுறையின் படி பகவான் புத்தரால் போதிக்கப்பட்ட ஒழுக்க நெறியாகும்.
- இந்த 5 ஒழுக்க கோட்பாட்டின் படி வாழும் ஒருவர் உயர் ஞானம் பெற்றவராக கருதப்படுவார்.
- மன அமைதியோடு வாழ வழி வகுக்கும்
- எல்லா உயிர்களையும் நேசிக்கும் எண்ணம் மேலோங்கும்
- இருப்பதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து வாழும் எண்ணம் பெருகும்
- உலகம் அமைதிக்கான அருமருந்து 5 ஒழுக்க கோட்பாடு
இதையும் படியுங்கள்
-
அசோகன் அங்குலிமாலா அகத்தியன் அகிம்சகன் அஜபலா அசாஜி அஜாதசத்ரு அனத்தா அனிச்சா அகாலா அஷ்வகோஷ் அஞ்சான் அசித்தா அனிருத்தா அபயன...
-
புத்தச் சமயப் பெயர்கள் - பெண் குழந்தைகள் அபயா அமிதா அபிதா அஞ்சனா அசிந்தா அனோமா அரிஷ்மதி அபிமுகி அவித்யா அம்பிகா அம்பாலி அ...
-
புத்தரின் பிறப்பு: கி.மு.ஆறாம் நுாற்றாண்டில் வட இந்தியாவில் இமயமலையின் அடிவாரத்தில் இருந்த கபிலவஸ்த்து நாட்டை கௌதம என்னும் பழங்குடி வகை...
-
பறை என்னும் இசைக் கருவி இசைப்பதால் பறையன் என்ற பெயர் வந்த்தா? அல்லது பறையனாய் இருப்பதால் பறை என்ற இசைக் கருவியை இசைக்கின்றானா? இந்த ...