புலரும் அறத்தின் காலை – நுால் விமர்சனம் 
அவர்கள் பார்வையில்
எனக்கு – 
முகம் இல்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை
அவர்களின் பார்வையில் – 
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன.
சமையல் செய்தல்
படுக்கையை விரித்தல்
குழந்தையை பெறுதல்
பணிந்து நடத்தல்
இவையே எனது கடமைகள் ஆகும்.
கற்பு பற்றியும்
மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்
கதைக்கும்
அவர்கள்
எப்போதும் எனது உடலையே நோக்குவர்
கணவன் தொடக்கம்
கடைக்காரன் வரைக்கும்
இதுவே வழக்கம்
-   
அ.சங்கரி – சொல்லாத சேதிகள் நுாலில். 
இந்த கவிதையின் உரையாடல் வடிவமாகவே
பேராசிரியர். அரங்க மல்லிகா அவர்களின் புலரும் அறத்தின் காலை புத்தகத்தை எடுத்துக்
கொள்ள வேண்டிய நிலை உள்ளது. 
பெண்ணியவாதி, கவிஞர், கட்டுரையாளர்,
எழுத்தாளர், பேராசிரியர், இலக்கிய ஆளுமை, தலித் சிந்தனை மற்றும் செயல்பாட்டாளர் அரங்க
மல்லிகா அவர்களை இந்த  சமூகம் எப்படி புண்படுத்தியது
என்பதே புலரும் அறத்தின் காலை நுாலின் சாரம். அல்லது இந்த சமூகத்தின் மீது அவருக்கு
இருக்கும் கோபமே “புலரும் அறத்தின் காலை” யாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 
புலரும் அறத்தின் காலை என்னும்
தலைப்பே ஏதே ஒரு கவிதையிலிருந்து எடுத்த தலைப்பை போலவே உள்ளது. இந்த தலைப்பே ஒரு எதிர்மறையான
தலைப்பாக இருக்கின்றது நடப்பு சமூகத்துக்கு. பேராசிரியைக்கு அறம் தவறிய இந்த  சமூகத்தின் மீதுள்ள கோபமே புலரும் அறத்தின் காலை
என்னும் தலைப்பாக வெளிப்பட்டுள்ளது. 
நுாலில் புகுமுன் அறம் என்பது
என்ன என்றும் அது எந்த பொருளில் இந்த நுாலில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் அறிய வேண்டியுள்ளது.
பொதுவாக அறம் என்றவுடன் “ அறம் செய்ய விரும்பு” என்னும் அவ்வையாரின் ஆத்திச்சூடி முதல்வரியுடன்
நிறுத்திக் கொள்கின்றோம். சைவ மத நோக்கில் பொருள் கொள்ளப்பட்ட ஆத்திசூடியின் அறம் செய்ய
விரும்பு என்னும் பாடலுக்கு “ தருமம் செய்ய ஆசைப்படு ( ஆசை மட்டுமே பட வேண்டும் செயல்
படுத்தக்கூடாது )என்னும் விளக்கம் தரப்பட்டிருக்கின்றது இதுவரையிலும். 
சமண சமய நோக்கில் அறம் என்று கட்டமைக்கப்படுவது,
“ அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் இழுக்கா இயன்றது அறம் ( குறள் – 35) 
1.   பொறாமை
2.   பேராசை
3.   கோபம்
4.   சுடு
சொல் ஆகிய இவை நான்கையும் நீக்கி வாழ்வது  அறம்
என வள்ளுவர் வரையறுக்கின்றார்.
பௌத்த நோக்கில் அறம் என்பது ஐந்தொழுக்க
நெறிகளுக்கு உட்பட்டு வாழ்வதே அறம் என்று வறையறுக்கப்பட்டுள்ளது. ஐந்தொழுக்கங்களையே
பஞ்சசீலம் என்றும் அழைக்கின்றனர் பௌத்த சமயத்தினர். அவை
1.   உயர்வதை
புரிவதை தவிர்த்திடும் ஒழுக்கம்
2.   பிறர்
பொருளை கவர்தலை தவிர்த்திடும் ஒழுக்கம்
3.   பொய்
பேசுவதை தவிர்த்திடும் ஒழுக்கம்
4.   பிறன்மனை
நயக்கும் காமத்தை தவிர்த்திடும் ஒழுக்கம்
5.   மனதை
மயக்கும் மது, புகையிலை, போன்ற போதை பொருள்களை தவிர்த்திடும் ஒழுக்கம்  ஆகிய ஐந்து ஒழுக்கங்களை வாழ்வில் கடைபிடிப்பதே அறம்
என வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது. 
பொதுவில் சமய நோக்கமின்றி அறத்தை
விளக்குவதாயின், எண்ணம், சொல், செயல் இவைகளில் நீதியையும் நேர்மையையும் கடைபிடித்து
வாழ்வதே அறம் என கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றோம். அறத்திற்கான விளக்கமாக இதை
சொல்லும் போது அறத்தை போதிக்கும் நுால்கள் என பேராசிரியை பதினென் கீழ் கணக்கு நுால்களையே
தமிழ் இலக்கியத்தில் அற நுால்கள் என குறிப்பிடுகின்றார் அவை. 
16.  [இன்னிலை]]
அறம் போதிக்கும் இந்நுால்கள் கீழ் கணக்கு என வகைப்படுத்தியதில்
இருந்து இந்நுால்கள் ஒரு வகையான புறக்கணிப்புக்கு ஆளாகியிருக்கின்றன என்பவற்றை
மிகத் தெளிவாக வரையறுக்கின்றார். அவ்வாறாயின் அறத்ததை போதிக்காத மற்றை நுால்கள்
பதினென் மேற்கணக்கு என பெயரிட்டழைப்பதன் நோக்கம் என்ன என நோக்கும் போது வரலாற்றில்
நெடுங்காலந்தொட்டே, அறம் மற்றும் அறம் அல்லாதவற்றிக்கான போராட்டம் நடந்து கொண்டே
இருந்திருக்கின்றது, என்பதை அறம் சார்ந்த நுால்கள் பதினென் கீழ் கணக்கு நுால்களே
என்று கூறுவதில் இருந்து அறிய முடிகின்றது.
அறம் குறித்த கருத்துக்கள் மற்றும்
நுால்களின் படி இன்றைய நமது வாழ்க்கை முறையானது அறம் சார்ந்த வாழ்க்கை முறையை நாம்
வாழவில்லை, மாறாக அறத்திற்க்கு எதிரான ஒரு வாழ்வை நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இன்று நாம் கடைபிடித்துக் கொண்டிருக்கும் மதம், சாதி, பண்பாடு, ஆகியவைகள் அனைத்தும்
அறத்திற்க்கு எதிரானவைகளாகவே இருக்கின்றன. என் மதம் உயர்ந்தது என்றொருவன் சொல்லும்
பொழுது இயல்பாகவே அடுத்தவன் மதம் கீழான மதமாகின்றது, என் சாதி உயர்ந்தது என்று சொல்லும்
போதும் இதேதான் நிகழ்கின்றது, பண்பாடு என்பது இன்றைக்கு நல்லவனாய் இருப்பதை விட வல்லவனாக
இருக்க வேண்டும் என்ற கருத்தை முன் மொழிகின்றது, இன்னும் தெளிவாக சொல்வதென்றால், “
நாலு பேருக்கு நல்லது என்றால் எதுவும் தப்பில்லை” அதாவது நாலு பேருக்காக நாற்பது பேரையும்
கொள்ளலாம், துன்புறுத்தலாம், என்பன போன்ற வன் முறைகளை நியாயப்படுத்தும் சமூகமாகத்தான்
இன்றைய சமூகம் இருக்கின்றது. 
புலரும் அறத்தின் காலை புத்தகத்தின்
மொத்த பக்கங்கள் 130, இதில் உள்ள மொத்த கேள்விகள் 125. இவற்றில் பேராசிரியை அவர்களின்
·        
தன் அனுபவ பகிர்வு கேள்விகள் – 39
·        
சாதியம் குறித்த கேள்விகள்     - 12
·        
பெண்ணியம் குறித்த கேள்விகள் – 20
·        
சிறுபத்திரிகை குறித்த கேள்விகள் – 02
·        
பௌத்தம் குறித்த கேள்விகள் -     12
·        
அரசியல் குறித்த கேள்விகள் –      07
·        
இலக்கியம் குறித்த கேள்விகள் -    33 
இந்த புத்தகத்தில் உள்ள சற்றேறக்குறைய
உள்ள 4420 வரிகளுக்குள் உள்ளவைகள்  யாவும் இரண்டு
செய்திகளை சொல்கின்றன. ஒன்று பேராசிரியை அவர்களுக்கு ஆண் சமூகம் தந்த வலி, மற்றொன்று
தலித்துகள் மீது நிகழ்ந்த, நிகழும் வன்முறைகளின் வரலாறு என எழுத்துக்களின் இடையே வலியையும்
வரலாற்றையும் மறைத்து வைத்திருக்கின்ற புத்தகமாக இது உள்ளது.
      இந்த புத்தகத்தை
படிக்கும் எவருக்கும் பேராசிரியை விவரிக்கும் நோக்கில் இயல்பாகவே தன்னையும் பொருத்திப்
பார்த்துக் கொள்ள துாண்டுகின்றது, அதுவே இந்த புத்தகத்தின் வெற்றியாக அமைகின்றது. உதாரணத்திற்கு
ஒன்றை சொல்ல வேண்டுமெனில், பேராசிரியை அவர்களின் ஆரம்ப கல்வி குறித்து பேசும் போது,
தான் நன்றாக படித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் தலித் என்பதாலேயே, வேறு பிரிவுக்கு
மாற்றப்பட்டதாகவும், மதிப்பெண்கள் குறைத்து போட்டதாகவும் சொல்கின்றார். உண்மையில்,
அவருக்கு ஏற்பட்ட நிகழ்வு ஆரம்ப கல்வி படித்து கொண்டிருந்த அனைத்து தலித்துக்குமே ஏற்பட்டிருக்கின்றது,
ஆனால் அதை படிக்கும் போதுதான் நாம் நமக்கும் இது நிகழ்ந்தது, இப்படி நிகழ காரணமாக இருந்தது,
கற்பிப்போருக்குள் இருந்த சாதிய மனோபாவம் என்பதை உணர்கின்றோம். 
      அதே வேலையில் தலித்துகளின்
தலைநிமிர்ந்த வாழ்வுக்கு முதல் காரணியாக இருக்கின்ற கல்வியானது, கல்விகூடத்தில் எத்தகைய
சாதுர்யத்துடன் மறுக்கப்படுகின்றது, நன்றாக படிக்கின்ற மாணவர்கள் எப்படி திட்டமிட்டே
கல்வியின் மீது ஆர்வம் குறையவும், இடைநிற்க்கவும் ஆசிரியர்களால் துாண்டப்படுகின்றனர்
என்பதை உள்ளங்கை நெல்லிக் கனி போல விளக்குன்றார். இன்றைக்கும் அரசு பள்ளிகளில் தலித்
பிள்ளைகள் நடத்தப்படும் விதம், அவர்களை எடுபிடி அடியாட்களாக ஆசிரியர்கள் பயன்படுத்திக்
கொள்ளும் சூழ்நிலை, இந்த சூழ்நிலைக்கு பழகாத மாணவர்கள் இடை நிற்க்கும் அவலம் ஆகிய அனைத்தையும்
நுாலின் ஆரம்ப அத்தியாங்களிலே நீரோடை போல தெளிவாக சொல்லி நம்மையும் அந்த சூழலுக்கே
இட்டு சென்று உணர்த்துகின்றார் ஆசிரியர். 
      அதே போல் தேவதாசி
முறை ஒழிந்தது என்று பெருமை பேசிக்கொள்ளும் நபர்களைப் பார்த்து, தேவதாசி முறை ஒழிப்பிற்க்கு
முனைப்பு காட்டும் உங்களால் தலித் சமூகத்துக்குள் நடந்து கொண்டிருக்கும் மாத்தம்மா
முறையை ஏன் ஒழிக்க முன் வரவில்லை என்று கேள்வியும் கேட்டு விளக்கமாய், தேவதாசி முறை
என்பது ஆதிக்க சாதிகளுக்குள் நிகழ்ந்தது, மாத்தம்மா என்னும் பொட்டு கட்டும் முறை தலித்துகளுக்குள்
நிகழ்வது, எனவே இந்த சமூகத்தில் தலித் பெண்களுக்கு நிகழும் இழிவை குறித்து யாரும் பேசுவதில்லை
என்று எழுத்து சாட்டையால் விளாசுகின்றார். 
      தமிழ் துறை பேராசிரியர்
என்பதால் தமிழ் கல்வி குறித்தும் அதிலுள்ள குறைபாடுகள் குறித்தும் கூட பேசுகின்றார்.
இன்றைய கல்வி முறையில் தமிழில் பேசும் முறை குறித்தும், தமிழில் எழுதும் முறை குறித்தும்,
கரிசனப்படுகின்றார். தமிழ்நாட்டில் தமிழில் பேசுவதற்க்கும் , எழுதுவதற்க்கும் கூட பயிற்சி
அளிக்கப்படவில்லை என்று கல்வி முறையின் அடிப்படை கேளாற்றை எளிதாக  அதே வேலையில் நுட்பமான புரிதலுடன் விளக்குகின்றார்.
      தற்போதுள்ள சமூகங்களை
தலித் சமூகம் மற்றும் பொது சமூகம் என இரண்டாக பிரித்து, பொது சமூகத்தின் பத்திரிகைகளை
பெரும் பத்திரிகை என்றும், தலித் சமூகத்துக்கான பத்திரிகையை சிறு பத்திரிகை என்றும்
பிரித்து பட்டியல் இடுகின்றார். இன்றைய இலக்கிய வாசிப்பு உலகில் பெரும் பத்திரிகை என்பவைகள்
பார்பணிய கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கின்ற அமைப்பாகவும், பொய்யுரைத்து புகழ் மற்றும்
பணம்  சேர்க்கும் பத்திரிகையாகவும் ஆசிரியர்
சுட்டுகின்றார். சிறு பத்திரிகைகள் என்பவை உழைக்கும் மக்களின் கருத்துக்களை கொண்டவை
என்பதால் அவற்றில் மக்களின் நலன் சார்ந்த எழுத்துக்களே இடம் பெறுகின்றன என்பதால் சிறு
பத்திரிகைகளை வாசிக்க வலியுறுத்துகின்றார். அவ்வாறு  அவர் வாசிக்க முன் மொழியும் சிறு பத்திரிகைகளாக 
1.   மேலும்
2.   நிறப்பிரிகை
3.   நிகழ்
4.   தலித்
முரசு
5.   புதிய
கோடாங்கி
6.   களம்
7.   மந்திரச்
சிமிழ்
8.   தடம்
9.   தளம்
10.  யுகமாயினி
11.  கல்குதிரை
12.  கல்வெட்டு
பேசுகிறது ஆகிய இதழ்களை வாசகர்களுக்கு படிப்பதற்காகவும் அறிவை பெருக்கிக் கொள்ளவும்
முன் மொழிகின்றார். 
நல்ல நுால்களை வாசிப்பவனே நல்ல
வாசகன் ஆகின்றான், நல்ல வாசகனே சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் சமூக செயல்பாட்டாளான்
ஆகின்றான் என்ற புரிதலோடு சில நல்ல நுால்களையும் வாசகனுக்கு முன் மொழிகின்றார் அவை.
1.   தமிழ்
இலக்கியத்தில் பெண்ணியம் 
2.   பெண்ணியக்
குரல் அதிர்வும் தலித் பெண்ணிய உடல் மொழியும்
3.   வழிகாட்டுதலும்
ஆலோசனை கூறுதலும்
4.   நீர்
கிழிக்கும் மீண்கள்
5.   பெண்ணின்
வெளியும் இருப்பும்.
6.   தலித்
பெண்ணிய அழகியல் 
7.   தலித்
அறம்
8.   கருப்பு
பெண்ணியம் ( Aren’t I a women )
9.   Golden
Treasury
10.  மரப்பசு
11.  மோகமுள்
12.  செம்பருத்தி
13.   நாளை மற்றொரு நாளே
14.  ஏற்கனவே
சொல்லப்பட்ட மனிதர்கள்
15.  புளியமரத்தின்
கதை 
16.  தோட்டியின்
மகன் 
17.  அஞ்ஞாடி
18.  கோவேறு
கழுதை
19.  ஆறுமுகம்
20.  செடல்
21.  கருப்பர்
பெண்ணியம்
22.  கவலை
23.  மீண்டும்
ஆதியாகி
24.  கருக்கு
25.  ஆனந்தாயி
26.  பழையன
கழிதல்
27.  சுவற்றுக்கு
வெளியே இருக்கிற கிராமங்கள்
28.  ஆல்பர்ட்
29.  குட்டி
இளவரசன் ஆகிய நுால்களை வாசகனுக்கு முன் மொழிகின்றார்.
தன் வாழ்வில் சம்பந்தப்பட்ட நபர்களாகவும்,
அல்லது தான் வியந்த ஆளுமைகளாக சிலரையும் ஆசிரியர் முன் மொழிகின்றார். 
1.   அம்மா
– அஞ்சுகம்
2.   அப்பா
– ரெங்கசாமி
3.   அக்கா
– செந்தமிழ் செல்வி
4.   அண்ணன்
– இராசேந்திரன்
5.   முனைவர்.
தேவதத்தா
6.   கலைஞர்
– கருனாநிதி
7.   மிசோரம்
ஆளுனர். அ. பத்தநாபன்
8.   குட்டி
ரேவதி.
9.   மாலதி.மைத்திரி
10.  சுகிர்தராணி
11.  முபின்
சாதிகா
12.  சில்வியா
பிளாத்
13.  ராஜம்
கிருஸ்ணன்
14.  ஜெயகாந்தன்
15.  வண்ணநிலவன்
16.  வண்ணதாசன்
17.  நாஞ்சில்
நாடன்
18.  நகுலன்
19.  இமயம்
20.  ஸ்ரீதர
கணேசன்
21.  பெருமாள்
முருகன்
22.  தமிழ்
செல்வி 
23.  பாமா
24.  சிவகாமி
25.  அழகிய
பெரியவன்
26.  ஆ. மார்க்ஸ்
27.  தீபச்
செல்வன்
28.  ராஜ்கௌதமன்
29.  பஞ்சாங்கம்
30.  செந்தில்
குமார்
31.  யாழன்
ஆதி.  
ஆகிய எழுத்தாளர்களை சமூகத்துக்கான
எழுத்தாளர்களாக அடையாளப்படுத்துகின்றார். 
.இலக்கியத்தில் அடித்தட்டு மக்களின்
பால் கரிசனம் கொண்டவர்களாக அவர்களின் குரலை ஒலித்தவர்களாக 
1.   மணிமேகலை
2.   ஓளவையார்
3.   வெள்ளி
வீதியார்
4.   நச்செல்லையார்
5.   ஆண்டாள்
6.   குண்டலகேசி
ஆகியோர்களை முன்மொழிகின்றார். 
இறுதியாக, இந்த சமூகம் ஆணாதிக்க
சமூகமாக உள்ளதால் இயற்கையாகவே இது பெண்களுக்கு எதிரான சமூகமாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது
என்ற சமூகத்தின் இழிநிலையை ஒளிவு மறைவில்லாமல் உணர்த்துகின்றார். பெண்களுக்கு எதிராக
கட்டமைக்கப்பட்டுள்ள இந்த சமூகத்தை பெண்ணியம் X தலித் பெண்ணியம் என்ற விளக்கத்தை சொல்லும்
போது எளிதாகவும் ஆழமாகவும் விளக்குகின்றார். இந்த புத்தகத்தின் சாரமாக பெண்கள்தான்
அறம் என்றும் அவர்கள் மட்டும்தான் அறம் சார்ந்த வாழ்வை வாழ்கின்றனர் என்றும் உணர்த்துகின்றார்,
ஆயினும் பெண்களுக்கான விடுதலை என்பதே அறத்துக்கான விடுதலை என்ற கருத்தை மிக நுட்பமாக
முன்மொழிந்து அனைவரையும் அறம் சார்ந்த வாழ்வை வாழ வலியுறுத்தும் படைப்பாகவே புலரும்
அறத்தின் காலை நுால் உள்ளது. கேள்விகளை கேட்ட முபின் சாதிகா அவர்களுக்கும் வெளியிட்ட
கலைஞன் பதிப்பகத்தையும் இந்த புத்தகத்துக்காக தமிழ் கூறும் நல்லுலகம் பராட்ட கடமை பட்டிருக்கின்றது.
- நன்றி. காக்கை சிறகினிலே மாத இதழ். பிப்ரவரி 2016 











