சில ஆண்டுகளுக்கு முன்பு
பர்மாவில் இந்தியத் தலைவர்கள் என்னும் பெயருள்ள ஆங்கிலப் புத்தகம் ஒன்றை கணிணி வழியாக வாசித்தேன். அந்த புத்தகத்தின் பெயர்
இந்த பொருளிலே இருந்தது. அதில் , தென் தமிழகத்தில் இருந்த சாதியத் தலைவர் ஒருவர், பர்மாவில் வாழ்க்கை மேற்கொண்டபோது, அவருடன் 7 நபர்கள் சேர்ந்து, புத்தச் சமயத் தீட்சை எடுத்துக்கொண்டனர் என்ற குறிப்பையும் படித்து, அவர் யார் என கண்டறிய முயன்று தோற்றுப்போனேன்.
சிலநாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர். முத்துராமலிங்கம் அய்யா அவர்களைப் பற்றி பேசும் போது அவர் மியாண்மரில் சிலகாலம் தங்கியிருந்தார் என்ற தகவலைக் கூறினார்.
பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் அய்யா அவர்கள், 2 முறை மியாண்மருக்கு
சென்றுவந்துள்ளார் என்ற விவரத்தை விக்கிபீடியாவில் கண்டேன்.
1936
ஆம் ஆண்டு மியாண்மரில் ( அப்போதைய பர்மா) இருந்து தாயகம் திரும்பி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு சமூகப் பணிகளில் ஈடுபடுகின்றார்.
1955
ஆம் ஆண்டு மீண்டும் இரண்டாம் முறையாக மியாண்மர் சென்று மியாண்மரில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் ஏற்பாடு செய்திருந்த அரசியல் மற்றும் ஆன்மீக நிகழ்வுகளில் கலந்து கொண்டு தாயகம் திரும்புகின்றார். என்ற தகவலை படித்தபோது அந்த ஆன்மீக நிகழ்வு என்பது தேவரின் புத்தசமய தீட்சையாக ஏன் இருந்திருக்ககூடாது என்ற அய்யம் எனக்குள் தோன்றுகின்றது.
காமராஜரால் காங்கிரஸ் கட்சிக்குக்கு கொண்டு வரப்பட்ட முத்துராமலிங்கம் அய்யா அவர்கள் 1956ஆம் ஆண்டு காமராஜரை எதிர்த்து அரசியல் பணிசெய்கின்றார்.
1957
ஆம் ஆண்டு முதுகலத்துார் கலவரம் மற்றும் அது சார்ந்த இமானுவேல் சேகரன் அவர்களின் படுகொலைகள் நிகழ்கின்றது. இமானுவேல் சேகரன் அய்யா அவர்களையும் காங்கிரஸ் கட்சிக்கு கொண்டுவந்தவர் காமராஜர் அவர்களே. இதெல்லாம் நாடறிந்த அரசியல் கதை, இதை விவரிப்பதால் பலன் இல்லை.
பசும்பொன் முத்துராமலிங்கம் அய்யா அவர்களின் முழு வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகங்களை படிக்க மனம் விரும்புகின்றது.
குறிப்பாக அவருடைய பர்மா பயணம் மற்றும் பர்மாவில் அவர் வாழ்ந்த வாழ்க்கை. அதன் பாதிப்புகள் ஆகியவற்றை குறித்து அறிய விழைகிறேன்.
குறிப்பாக பர்மாவில் அவர்
கலந்து கொண்ட ஆன்மீக நிகழ்வுகள் குறித்த விவரங்கள் வெற்றிடமாகவே உள்ளது. அதற்கு
காரணம் அவர் ஏற்றுக்கொண்ட பௌத்த தீட்ச்சை என்பதால் அது வரலாற்றில் வெற்றிடமாகப்
பதியப்பட்டுள்ளது.
பர்மிய பயணத்திற்கு பின் அவர் புத்த துறவிகளைப் போல மொட்டை அடித்துக் கொண்டார் என்றும். தமிழ் சூழலுக்கு ஏற்ப பௌத்த கருத்துக்களை மாற்றி பரப்புரை செய்த இராமலிங்கரின் வழியில் தன்னை இணைத்துக் கொண்டதையும் படித்தபோது பௌத்தம் அவருக்குள் நிகழ்த்திய மாற்றம் குறித்து ஏன் இங்கு விரிவான ஆய்வு இல்லை என்ற கேள்வியும் எனக்குள் எழுகிறது.
துறவி வாழ்க்கை என எழுதுவோருக்கு பௌத்த வாழ்க்கை முறை ( ஒரு பிக்குவைப் போல) என எழுத ஏன் மனம் ஒப்பவில்லை என்பது புரியவில்லை.
அவரின் சமயக் கருத்துக்துக்குள் இருந்த புத்த சமயம் குறித்து எவரும் பேசாமல் இருப்பது எனக்கு வியப்பு.
அவரது மரணம் மற்றும்
நிணைவு நாளும்கூட புத்தச் சமயத் துறவிகளின் நிப்பான தின நிகழ்வைப் போலுள்ளதும்
எனது கருத்தோட்டத்துக்கு கூடுதல் வலுசேர்க்கின்றது.
எனது பார்வையில் அவர் புத்த துறவியாக த் தெரி கின்றார்.
முத்துராமலிங்கம்
அய்யாவைக் குறித்த சாதியம் கடந்த தரவுகளுடன் பதிவுகளோ, புத்தகங்களோ ஏதுமில்லை
என்பது உண்மையில் பெருங்குறை.
இது குறித்த சரியான புத்தகங்கள் மற்றும் தரவுகள் இருந்தால் பகிரவும். நன்றி
No comments:
Post a Comment