Friday, February 12, 2021

புத்த பிக்கு முத்துராமலிங்கம் அய்யா

 




சில ஆண்டுகளுக்கு முன்பு

பர்மாவில் இந்தியத் தலைவர்கள் என்னும் பெயருள்ள ஆங்கிலப் புத்தகம் ஒன்றை கணிணி வழியாக வாசித்தேன். அந்த புத்தகத்தின் பெயர் இந்த பொருளிலே இருந்தது. அதில் , தென் தமிழகத்தில் இருந்த சாதியத் தலைவர் ஒருவர், பர்மாவில் வாழ்க்கை மேற்கொண்டபோது, அவருடன் 7 நபர்கள் சேர்ந்து, புத்தச் சமயத் தீட்சை எடுத்துக்கொண்டனர் என்ற குறிப்பையும் படித்து, அவர் யார் என கண்டறிய முயன்று தோற்றுப்போனேன்

சிலநாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர். முத்துராமலிங்கம் அய்யா அவர்களைப் பற்றி பேசும் போது அவர் மியாண்மரில் சிலகாலம் தங்கியிருந்தார் என்ற தகவலைக் கூறினார்

பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் அய்யா அவர்கள், 2 முறை மியாண்மருக்கு சென்றுவந்துள்ளார் என்ற விவரத்தை விக்கிபீடியாவில் கண்டேன்.

1936 ஆம் ஆண்டு மியாண்மரில் ( அப்போதைய பர்மா) இருந்து தாயகம் திரும்பி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு சமூகப் பணிகளில் ஈடுபடுகின்றார்

1955 ஆம் ஆண்டு மீண்டும் இரண்டாம் முறையாக மியாண்மர் சென்று  மியாண்மரில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் ஏற்பாடு செய்திருந்த அரசியல் மற்றும் ஆன்மீக நிகழ்வுகளில் கலந்து கொண்டு தாயகம் திரும்புகின்றார். என்ற தகவலை படித்தபோது அந்த ஆன்மீக நிகழ்வு என்பது தேவரின் புத்தசமய தீட்சையாக ஏன் இருந்திருக்ககூடாது என்ற அய்யம் எனக்குள் தோன்றுகின்றது.

காமராஜரால் காங்கிரஸ் கட்சிக்குக்கு கொண்டு வரப்பட்ட முத்துராமலிங்கம் அய்யா அவர்கள் 1956ஆம் ஆண்டு காமராஜரை எதிர்த்து அரசியல் பணிசெய்கின்றார்

1957 ஆம் ஆண்டு முதுகலத்துார் கலவரம் மற்றும் அது சார்ந்த இமானுவேல் சேகரன் அவர்களின் படுகொலைகள் நிகழ்கின்றது. இமானுவேல் சேகரன் அய்யா அவர்களையும் காங்கிரஸ் கட்சிக்கு கொண்டுவந்தவர் காமராஜர் அவர்களே. இதெல்லாம் நாடறிந்த அரசியல் கதை, இதை விவரிப்பதால் பலன் இல்லை

பசும்பொன் முத்துராமலிங்கம் அய்யா அவர்களின் முழு வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகங்களை படிக்க மனம் விரும்புகின்றது.

குறிப்பாக அவருடைய பர்மா பயணம் மற்றும் பர்மாவில் அவர் வாழ்ந்த வாழ்க்கை. அதன் பாதிப்புகள் ஆகியவற்றை குறித்து அறிய விழைகிறேன்.

 

குறிப்பாக பர்மாவில் அவர் கலந்து கொண்ட ஆன்மீக நிகழ்வுகள் குறித்த விவரங்கள் வெற்றிடமாகவே உள்ளது. அதற்கு காரணம் அவர் ஏற்றுக்கொண்ட பௌத்த தீட்ச்சை என்பதால் அது வரலாற்றில் வெற்றிடமாகப் பதியப்பட்டுள்ளது.

 

பர்மிய பயணத்திற்கு பின் அவர் புத்த துறவிகளைப் போல மொட்டை அடித்துக் கொண்டார் என்றும். தமிழ் சூழலுக்கு ஏற்ப பௌத்த கருத்துக்களை மாற்றி பரப்புரை செய்த இராமலிங்கரின் வழியில் தன்னை இணைத்துக் கொண்டதையும் படித்தபோது பௌத்தம் அவருக்குள் நிகழ்த்திய மாற்றம் குறித்து ஏன் இங்கு விரிவான ஆய்வு இல்லை என்ற கேள்வியும் எனக்குள் எழுகிறது.

 

துறவி வாழ்க்கை என எழுதுவோருக்கு பௌத்த வாழ்க்கை முறை ( ஒரு பிக்குவைப் போல) என எழுத ஏன் மனம் ஒப்பவில்லை என்பது புரியவில்லை.

அவரின் சமயக் கருத்துக்துக்குள் இருந்த புத்த சமயம் குறித்து எவரும் பேசாமல் இருப்பது எனக்கு வியப்பு.

அவரது மரணம் மற்றும் நிணைவு நாளும்கூட புத்தச் சமயத் துறவிகளின் நிப்பான தின நிகழ்வைப் போலுள்ளதும் எனது கருத்தோட்டத்துக்கு கூடுதல் வலுசேர்க்கின்றது.

எனது பார்வையில் அவர் புத்த துறவியாக த் தெரி கின்றார்.

முத்துராமலிங்கம் அய்யாவைக் குறித்த சாதியம் கடந்த தரவுகளுடன் பதிவுகளோ, புத்தகங்களோ ஏதுமில்லை என்பது உண்மையில் பெருங்குறை.

இது குறித்த சரியான புத்தகங்கள் மற்றும் தரவுகள் இருந்தால் பகிரவும். நன்றி


Sunday, February 7, 2021

புத்தநெறி மந்திரங்கள் - 1

 புத்தநெறி மந்திரங்கள் – 1 



  

“ நமோ தஸோ பகவதோ அரகதோ சம்மா சம் புத்தஸ  

 நமோ தஸோ பகவதோ அரகதோ சம்மா சம் புத்தஸ 

 நமோ தஸோ பகவதோ அரகதோ சம்மா சம் புத்தஸ ”

இந்த மந்திரம் பொதுவாக புத்தரை வந்தனத்திற்க்கு (வழிபடுவதற்கு) முன்பாகவும், புத்தரின் பெருமைகளை பறைசாற்றும் விதமாகவும் புத்தசமயத்தவர்களால் ஓதப்படுகின்ற மந்திரமாகும்.

இதன் பொருள்

      உலகின் முழு ஞானம் பெற்ற ஒரே ஒருவரும் மற்றும் ஆசிர்வதிக்கப்பட்டவருமான புத்தருக்கு நான் மரியதை செலுத்துகின்றேன். அஞ்சலி செலுத்துக்கின்றேன்.

இதன் பயன்

1.   முழு ஞானம் அடையவும், நற்செயல்களைப் செய்யவும் உதவி செய்யும்.

2.   உலக பந்தங்களிலிருந்து விடுபடவும், உயர்ஞானத்தை அடையவும் உதவி செய்யும்.

3.   இதை உச்சரிக்கும் ஒருவரின் மன உறுதி வலுப்படும்.

  

Thursday, January 21, 2021

100 கவிஞர்கள் 100 கவிதைகள்

 

100 கவிஞர்கள் 100 கவிதைகள் 

அறம் பதிப்பகம் முன்னெடுக்கும் 100 கவிஞர்கள் 100 கவிதைகளுக்கான நெறிமுறைகள்.

,இளம் கவிஞர்கள் எத்தனைக் கவிதைகளை வேண்டுமானாலும் அறம் பதிப்பகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு arampublication50@gmail.com க்கு அனுப்பலாம்.

கவிதையின் உள்ளடக்கமாக

விளிம்பு  மக்களின் ( புலம் பெயர்ந்தோர், திருநங்கைகள், பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், மீனவர்கள், பழங்குடிகள், பட்டியலினம் ஆகியவர்களின்)   பாடுகள், கலை, பண்பாடு, கலாச்சாரம், ஈகம், மொழி, வலி, மகிழ்ச்சி, வழிபாடுகள், தனித்துவம்...... போன்றவைகளை பாடுபொருளாகக் கொண்டு  ஒரு பக்க அளவிற்கு எழுதப்பட்டிருக்க வேண்டும். சிறந்த ஒரு கவிதை மட்டுமே  புத்தகத்தில் இடம்பெறும்.

ஏற்கனவே பத்திரிகை மற்றும் புத்தகங்களில் வந்த கவிதைகளைத் தவிர்க்கவும்.

கவிதைகளை MS Word வடிவத்தில்  லதா எழுத்துரு அல்லது தமிழ் ஒழுங்கு குறி எழுத்துருவில் அனுப்பவும்.

சிறந்த கவிதையைத் தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கும் .

தேர்வுக்குழுவில்,

கவிஞர். யாழன் ஆதி - தலைவர்

வழ. திருநாவுக்கரசு – உறுப்பினர்.

பேரா. ஆமீனா பானு – உறுப்பினர். ஆகியோர் உள்ளனர்.

தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது மற்றும் உறுதியானது.

இதுவரையிலும் கவிதையை அனுப்பிய கவிஞர்கள்

1.   திருநாவுக்கரசு

2.   கீழ். கா. அன்புச்செல்வன்

3.   . சக்தி

4.   கவிஞர்.மேழியன் பார்த்திபன்,

5.   உட்கோட்டை இளங்கவி அருண்.ஜெ

6.   பட்டதாரி ஆசிரியர். அதுல்யா

7.   பேரா. பானுரேகா

8.   பேரா. செல்வராணி

9.   தரணிப் பிரியா

10. முனைவர். ப. சரவணன்

11. கவிஞர். ரவிதாசன்

12. டாக்டர்ஸ்ரீமதிசுபாஷினி – இலங்கை

13. முதுமுனைவர். மு. ஐயப்பன்

14. கவிஞர். கா. வேழவேந்தன். முன்னாள் அமைச்சர்

15.  சி. மகேந்திரவேலன்

16.  கவிஞர். வே. கௌரி – கடலுார்

17. அ. தமிழ்செல்வன்

18. முனைவர் இரா.இராமகுமார்

19. செல்வம் சுந்தர்

20. கவிமாலா

21. சே. இளவரசன்

22. மதுகை தி. பாரதி

23. பவள. துரை

24. நாகநாதன்

25. முனைவர். கு. சுதாகர்

26. அறிவு. ரெங்கா

27. நா. கோகிலா பிரியதர்ஷினி

28. ப. பழனிச்சாமி தமிழாசிரியர். கடலுார்

29. நா. கோகிலா பிரியதர்ஷினி

30. நிர்மலா நரேந்திரன்

 ஆகியோருக்கும் நெஞ்சம் நிறை நன்றி.

இளம் மற்றும் புதிய கவிஞர்களிடமிருந்து கவிதைகள் வரவேற்க்கப்படுகின்றது.

இந்த தகவலை உங்கள் எழுத்தாளர் நண்பர்களுக்கு பகிரவும். நன்றி


Thursday, November 5, 2020

ஆத்திசூடி மீள் வாசிப்பு புத்தக விமர்சனம்


 தமிழிலக்கியங்களின் மீது குறிப்பாக அற இலக்கியங்களான ஆத்திசூடி யின் மீதான கட்டுடைப்பே இந்த நுால் 

நிலமெனும் ஆயுதம் புத்தக விமர்சனம்

 நிலமெனும் ஆயுதம் புத்தகம் தமிழில் வந்துள்ள பஞ்சமி நிலம் குறித்த முழுமையான ஆவணம். இதன் ஆசிரியர் பஞ்சமி நிலப் போராளி, தலித் நிலவுரிமை இயக்கத்தின் மேனால் மாநில ஒருங்கினைப்பாளர் ஆவார்.


சுற்றுச்சூழல் பொருளாதாரம்



https://youtu.be/YFur8Gcf73k

புத்தச் சமயப் பொருளாதாரம்

 இந்த பொருண்மை யில் தமிழில் நடைபெறும் முதல் கூட்டம் இது. எனவே அதிக நபர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர் பார்கிறேன்


இளையராஜாவின்_இசை_பாடல்களில்_புத்தச்_சமயக்_கோட்பாடுகள்


 https://www.youtube.com/watch?v=b7xrjhgjAwU&t=1266s

இதையும் படியுங்கள்