Friday, June 28, 2013

இலவச அரிசி இட்லி வேண்டாம்... தண்ணீர் வேண்டும்...

ிதமிழ்நாட்டில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று முந்தைய ஆட்சியில் நியாய விலை கடைகளில் விற்பனை செய்து கொண்டிருந்த போது, அடுத்து வந்த தேர்தலில் இரண்டு திராவிட கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவச அரிசி வழங்குவோம் என்று மார்தட்டினர். உண்மையில் தற்போதுள்ள அரசு ஆட்சிக்கு வந்ததும் கையெழுத்திட்ட முதல் கோப்பு ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி திட்டத்திற்க்குத்தான்.
முந்தைய ஆட்சியிலிலும் சரி, தற்போது இந்த ஆட்சியிலும் சரி, இந்த திட்டத்தின் பெரும் பயன் போய் சேர்ந்தது என்னவோ, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டட மக்களுக்குத்தான், ஏனெனில் ஏழைகளாக இருக்கும் தலித் மக்கள் இந்த திட்டத்தில் ரேசன் கடைகளில் போரடித்தான் அரிசி வாங்க வேண்டியுள்ளது.
ஏழைகள் தங்களின் உணவுத் தேவைக்காக அரிசியை பயன்படுத்தும் போது, பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்களின் பால் பெருக்கத்திற்க்கு இலவச அரிசியை பயன்படுத்தினர். தங்களுக்கு வழங்கப்பட்ட அரிசி மற்றும் குறுக்ககு வழியில் வாங்கப்பட்ட இலவச அரிசி கொண்டு, தங்களின் பசு மாட்டிற்க்கு பால் பெருக்கத்திற்காக கஞ்சி காய்ச்சி ஊற்றினர்.
உண்மையில் இலவச அரிசிக்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் பால் பெருக்கம் மிக அதிகமானது. இது கிராமங்களில் நடக்கும் நிகழ்வு....
நகரங்களில் மலிவு விலை உணவகம். இவையெல்லாம் எதை காட்டுகின்றது, இந்த நாட்டில் இந்த அளவுக்கு ஏழ்மை தலைவிரித்தாடுகின்றது. என்பதைத்தானே ஒழிய வேறு ஒன்றும் இ்ல்லை.

இந்த திட்டங்களை எல்லாம் ஏழ்மை நோக்கில் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான் என்றாலும்... இதிலுள்ள சில ஒட்டைகளையும் நாம் சுட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த குறிப்பு...
இப்படி எல்லாவற்றையும் ஏழைகளின் நிலையில் இருந்து நோக்கும் அரசு... திடிரென்று, மலிவு விலை தண்ணீர் விற்பனை என்று, அறிவித்து ஏழைகளின் வயி்ற்றில் அடித்துள்ளது. இது மிக மோசமான பின் விளைவுகளை உருவாக்கும் திட்டமாகும்... 
இதன் மூலம், தண்ணீர் விற்பனையை அரசு ஊக்கப்படுத்துகின்றது. தண்ணீரை தனியார்கள் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்வதை நீயாயப்படுத்துகின்றது... மறைமுகமாக ஊக்குவிக்கின்றது...
சராசரி ஒரு மனிதனின் தேவைக்கு வேண்டியது நாளென்றுக்கு 250 லிட்டர் தண்ணீர் என்றால், தற்போதுள்ள தமிழ்நாட்டின் 4000 தண்ணீர் வியாபாரிகள் அவர்களின் தேவைக்கு என்று உள்ள தண்ணீரைத்தான் பாட்டிலில் அடைத்து விற்கின்றான். அரசும் அதைத்தான் செய்கின்றது. தற்போது தமிழக மக்களின் சராசரி பயன்பாட்டு தண்ணீரின் அளவு 175 லிட்டராக குறைந்து உள்ளது.. இது மிக மோசமான விளைவுகளை உருவாக்குமே.. தண்ணீர் சிக்கல் உயிர் சிக்கல் புரிந்து கொள்ளத்தான் ஆட்சியாளர்கள் இல்லை்....
அரசுக்கு வருமானம்  வேண்டும் என்ற நோக்கத்திற்க்குத்தான் இந்த திட்டம் என்றால், இதை விட மிகுந்த லாபம் கிடைக்கும் வழியும் இருக்கின்றது... 
தற்போது தமிழக அரசு டாஸ்மார்க் கடைகளில்இருந்து கிடைக்கும் வருமானம் என்று சொல்லிக் கொள்வது விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம்தான். மாறாக டாஸ்மார்க் கடைகளில் விற்க்கப்படும் மது வகைகளை தமிழக அரசே உற்பத்தி செய்து விற்றால் அரசுக்கு தேவைக்கு அதிமாகவே லாபம் கிடைக்கும்... 
தற்போது விற்க்கும் மது வகைகளின் உற்பத்தி செலவு குறைவுதான், விளம்பரம், கமிசன், போக்குவரத்து போன்ற வற்றிற்க்கான செலவும் குடி்பவனின் தலையில்தான் விழுகின்றது... அப்படி இருந்தும் அந்த மது வகைகளை வாங்கி குடிக்கும் குடிமகனானிடம் அரசு தனியார் மது வகைகளை விற்ககும் விற்பனையாளனாகத்தானே இருக்கின்றது. அந்த வருமானத்திற்காக மட்டும்தானே இன்றைக்கு தமிழகத்தில் 97 சதமான மக்களை குடிகாரர்களாக ஆக்கி இருக்கின்றது...விறபனையாளருக்கே ஆயிரத்து ஐநுாறு கோடி லாபம் என்றால் உற்பத்தியாளருக்கு எத்தனை கோடிகள் லாபம் கிடைத்திருக்கும் அந்த லாபம் ஏன் தனியாருக்குப் போக வேண்டும்... நாமே மது வகைகளை உற்பத்தி செய்வோம், நாமே குடிப்போம், மொத்த பணமும் நமக்கே வரட்டும்... வந்த பணத்தை குடி நோயாளிகளின் குடும்பத்திற்க்கு இலவச அரிசி, இலவச காலணி, இலவச மிதி வண்டி, இலவச மடி கணிணி. இலவச நோட்டு புத்தகம், கர்பிணிகளுகக்கு ஊக்கத் தொகை. இலவச தாலி. என இன்னும் இலவசங்களை வாரி வழங்கலாம்... மக்களும் ஓட்டு போடுவார்கள்... ஆனால் மதுபான உற்பத்தியாளரிடம் இருந்து கட்சிக்கு வரும் நிதி போகும். கட்சியை நடத்த பணம் இல்லையென்றால் என்ன கட்சிக்கு வாக்களிக்க மக்கள் இருக்கின்றார்களே... இனி வரும் காலத்தில் இலவச தண்ணீர் என்பது சாத்தியமில்லை என்ற அறிவிப்பை செய்தி தாளில் பார்க்கும் நாள் தொலைவில் இல்லை... இலவச தண்ணீர் தருகின்ற கட்சிக்கே எங்கள் ஓட்டு என்ற சுவரொட்டியையும் பார்க்கும் நாளும் வெகு தொலைவில் இல்லை...



No comments:

Post a Comment

இதையும் படியுங்கள்