புத்தச் சமயத் தாவரங்கள் 2
நிகழ்வு – 3
சித்தார்த்தரின்ஒன்பதாவது வயதில், தனது
தந்தையின் வயலில் நடைபெறும் விவசாயப் பணிகளை வேடிக்கைப் பார்க்கச் சென்றபோது,
முதன் முதலாக ஒர் நாவல் மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தார்.,
என இந்திய புத்தச் சமய இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆங்கில புத்தச் சமய
எழுத்தாளர்கள் அதை ரோஸ் நிற ஆப்பிள் மரம்
என்றும், குறிப்பிடுகின்ற அதே நேரத்தில் வேறு சில புத்தகத்தில் எந்த வகையான மரம்
என்பதைச் சொல்லாமலேயே சித்தார்த்தரின் முதல் தியானத்தை பதிவு செய்துள்ளனர்.,
கொய்யாச் செடி என பதிவு செய்கின்றார்,ராகுல் சாங்கிருத்யாயன்.
அவ்வாறு சித்தார்த்தர் முதன் முறையாக மேற்கொண்ட தியானம் மெத்தபாவனா தியானம் எனது
புத்தரும் அவர் தம்மமும் நுாலில் பதிவு செய்துள்ளது.
தனது ஒன்பதாவது வயதில் தனது தந்தையின்
வயலில் இருந்த நாவல் மரத்தின் கீழ் மெத்த பாவன தியானத்தை நீண்ட நேரம்
செய்கின்றார். அவ்வாறு நீண்ட நேரம் தியானம் செய்த போதும், சூரிய வெளிச்சத்தினால்
மற்ற மரங்களின் நிழல் நகர்ந்து சென்றபோதும், சித்தார்த்தர் முதன் முறையாக தியானம்
செய்த நாவல் மரத்தின் நிழல் எங்கும் நகராமல், சித்தார்த்தரின் தியானம் முடிந்த
பிறகே கலைந்து சென்றது என்பதே இங்கு சூழலியல் நோக்கில் பதிய விரும்பும் தகவலாகும்.
நிகழ்வு – 4
ஒருமுறை சித்தார்த்தர் தன் தந்தையின்
பண்ணைக்குச் சென்றார். ஓர் இடைவெளியில் ஒரு மரத்தடியில் இயற்கையின் அழகை ரசித்தவாறு
, அமைதியையும் அனுபவித்தவாறு இருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் ஒரு பறவை
வானத்திலிருந்து அவர்முன் விழுந்தது. அதன் உடலில் அம்பு தைத்திருந்தது. வலியினால்
மேற்கொண்டு பறக்க முடியாமல் அது கீழே விழுந்ததை சித்தார்த்தர் உணர்ந்து தானும்
வலியால் துடித்தார்.

அதன் பின் சித்தார்த்தர் அந்தப் பறவையை தொட்டு எடுத்து, அதன்
காயங்களுக்கு மருந்திட்டு, கட்டும் கட்டி அந்தப் பறவையை மெல்ல வலியிருந்து
விடுவித்து ஆறுதல் படுத்தினார். பறவைக்கும் சித்தார்த்தரின் அருகாமையும்,
மருந்தும் மிக்க ஆறுதலாக இருந்தது. சித்தார்த்தரின் மடியிலேயே அது இருந்தது.
அப்போது அந்தப் பறவையை வீழ்த்திய சித்தார்த்தரின் அத்தை மகன் தேவதத்தன் அங்கு
வந்தார். சத்திரியத் தர்மத்தின் படி வேட்டையில் வீழ்த்தப்பட்ட பறவை
வேட்டைக்காரனுக்கே சொந்தம் என தேவதத்தனும், தான் அடிப்பட்ட பறவையைக்
காப்பாற்றியதால் கருனையின் அடிப்படையில் பறவை தனக்கே சொந்தம் என சித்தார்த்தரும்
வாதிட்டார். இறுதியில் பெரியவர்களிடம் முறையிட்டபோது, சாக்கியக் குலப்
பெரியவர்களும் சித்தார்த்தர் சொல்வதே சரியென்றதால் தேவதத்தனுக்கும்,
சித்தார்த்தருக்கும் நிரந்தரப் பகையாகிப் போனது.,, என
குறிப்பிட்டுள்ளது. இந்த நிகழ்வில் சித்தார்த்தர் அமர்ந்திருந்த மரத்தின் பெயர்
எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும். ஓவியங்களும், சிற்பங்களும் இந்த நிகழ்வில்
சித்தார்த்தர் அமர்ந்திருந்த மரம் மூங்கில் என்றே குறிப்பிட்டுள்ளன.
நிகழ்வு
5
சித்தார்த்தர்
துறவியாவதை தடுக்கும் நோக்கில் சுத்தோதனர், மூன்று அரண்மனைகளையும், அவைகளில்
இளவரசருக்கு சேவை செய்ய ஆயிரக்கணக்கான பெண்களையும் அமர்த்தியிருந்தார். அவர்களின்
முழு நேரப் பணியே இளவரசரை வசியப்படுத்தி, சிற்றின்பத்தில் ஈடுபடுத்தி, துறவு
நோக்கத்தை கலைப்பதுதான். அவ்வாறு இளவரசரை வசப்படுத்த முயன்ற பெண்கள், தங்களின்
அழகை வர்ணிக்கும் பொழுதும், விரகதாபம் மற்றும் துயரத்தை விவரிக்கும் பொழுதும்
சுற்றுச்சூழல் நோக்கிலேயே விவரிக்கின்றனர் என்பது இதுவரை யாரும் கவனிக்காத
தகவலாகும். அதையும் இங்கே பதிவு செய்கின்றேன்.
·
இன்னொருத்தி அலைபாயும் கண்களுடன், நீலத்தாமரை ஒன்றை
நுகர்ந்தவளாய் உணர்ச்சி வசப்பட்டுத் தட்டுத் தடுமாறி, கொச்சை மொழி பேசினாள்.
·
அன்புத் தலைவனே, இங்கே பார், தேன் சுவை மலர்களால்
மூடப்பட்டுள்ள மாங்கனி – கோகிலப்
பறவையின் கானம் – தங்கக் கூண்டில் சிறைப்படுத்தப்பட்டதைப் போல.
·
“ வந்து இந்த அசோக
மரத்தைக் காணுங்கள், - இவை காதலர் துயரத்தை அதிகரிப்பவை – தீயினால்
தீண்டப்பட்டவைப் போல தேனீக்கள்
ரீங்கரிக்கின்றன.
·
இதோ இந்தத் திலக
மரத்தைக் காணுங்கள். – இதை மெல்லிய மாங்கிளை தழுவிக்கொண்டுள்ளது. –
மஞ்சளுடை தரித்த மங்கை ஒருத்தி வெள்ளுடையில் உள்ள ஓர் ஆணைத் தழுவுவது போல்.
·
இதோ இந்த குருபக
மரத்தைக் காணுங்கள். தேன் நிறைந்த மலர்கள் பூத்துக் குலுங்க – பெண்களின்
செவ்விய நகங்களைக் கண்டு வெட்கித் தலைக்குனிவது போல் இவை தோன்றவில்லையா.?
·
இதோ இந்த இளம் அசோக
மரத்தைக் பாருங்கள் புதியக் கிளைகளால் பூரணமாகியுள்ள இது எங்கள் கைகளின்
அழகைக் கண்டு வெட்கியதுபோல் தோன்றுகின்றது.
·
சிந்துவாரப்
புதிர்கள்
நிறைந்த கரையுள்ள இந்த ஏரியைப் பாருங்கள் வெள்ளுடையில் பொலிந்து தோன்றும் பேரழகுப்
பெண்போல் இல்லை.., என்பது
போன்ற விவரிப்புகளுடன் சுற்றுச்சூழல் தகவலையும், செய்தியையும் சேர்ந்தே பதிவு
செய்துள்ளது புத்தரும் அவர் தம்மமும் நுால்.
நிகழ்வு
6
சித்தார்த்தர் முற்றும் துறந்த
துறவியாக எண்ணியபொழுது, தனக்கு துறவியாக தீட்சை அளிக்க கபிலவஸ்துவில்
ஆசிரமத்திலிருந்த பாரத்வாஜ் அவர்களிடம் தீட்சை பெற்று முற்றும் துறந்த துறவியாகி
கபிலவஸ்த்துவை விட்டு வெளியேறி காட்டை நோக்கி நடக்கும் பொழுது, அவருடன் உடன்
சென்றவர்கள் அவருடைய பிரியத்துக்குரிய குதிரை கந்தகமும், மற்றும் அவரது தேர்
ஓட்டுனர், மற்றும் நண்பருமான சன்னா ஆகியோர் பின் தொடர சித்தார்த்தர் எந்தவிதமான
வருத்தமும், புலம்பலும், சோகமும் இல்லாமல் இயல்பான மனநிலையில் நடந்து கொண்டு
சென்றவர். அரோமா நதியைக் அடைந்ததும் சற்று நின்றார். அரோமா நதியைக் கடக்கும்
பொழுது, ஓவியங்களிலும், சித்திரங்களிலும் இரட்டை அரசமரம் ஒரு கரையிலும் மறு
கரையில் அசோகா மரமும், இடம் பெற்றிருக்கும்.,,
நிகழ்வு
7
சித்தார்த்தரும்,
மகத அரசரும் முதன் முதலில் சந்தித்துப் பேசிய இடம் பாண்டவ மலையில் உள்ள லோத்ர
மரங்கள் நிறைந்த, வனத்தில், லோத்ர மரத்தின் அடியில், மயிலகவும், ஓசையால்
நிரம்பிய அடர்ந்த அவ்வனத்தில், சந்தித்துப் பேசுகின்றனர்.,,
- தொடரும்.
நன்றி. புதியகோடங்கி - செப்டம்பர்2019 இதழ்