கி.பி.623 – ல் வைகாசி விசாக முழுமதி நாளில் முழு நிலவாய்
புத்தர் பிறந்தார். தனது 29 ஆம் அகவையில்
சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்குமான ரோகிணி நதிநீர் பங்கீட்டில் போரை தவிர்க்க துறவியானார்.
புத்தர் போதனைகள் “ தம்மம் மூன்று தொகுப்புகளாக தொகுக்கப்பட்டன அவை .
1.
பேருரைப் பகுதி
2.
நன்னடத்தைப் பகுதி
3.
உன்னதக் கோட்பாட்டுப் பகுதி
இந்த 3 பிரிவுகளும் ஒவ்வொரு பகுதியாகவும், அவை பல வகைகளாகவும்,
பற்பல உட்பிரிவுகளாகவும், விரிந்து கொண்டே செல்கின்றன.
அந்த வகையில் தொகுக்கப்பட்ட தம்ம புத்கங்களின் எண்ணிக்கை மொத்தம்
31 ஆகும்.
இவற்றில் பேருரைப் பகுதி
என்பது துறவிகளும், குடும்பத்தாருக்கும், பல்வேறு நேரங்களில், காலகட்டத்தில், புத்தரால் நேரடியாக சொல்லப்பட்ட அறிவுரை மற்றும் அறவுரையாகும். இவைகள்.
1.
ஒழுக்கம்
2.
நன்னெறி
3.
சமுக்க் கடமைகள் மற்றும்
4.
வாழ்வியல் பிரச்சனைகளைப் பற்றியதாகும்.
இந்தப் பேருரைகள் 5 வகைகளாகத் பிரிக்கப்பட்டிருக்கின்றன அவை.
1.
நீண்டப் பேருரைகள்
2.
இடைப்பட்ட அளவு பேருரைகள்
3.
உறவுடைக் கூற்றுகள்
4.
படிப்படியான உரைகள் மற்றும்
5.
சிற்றுரைத் தொகுப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சிற்றுரைத் தொகுப்பு மட்டுமே 15 புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளது. அவற்றில் அணைவராலும்
அறியப்பட்ட ஒரு புத்தகம்தான் தம்மபதம் ( தம்மவழி) இது புத்தரின் வாய்மொழியாக வந்தவை.
தம்மபதம் புத்தர் இவ்வுலகில்
உள்ள அணைத்து உயிரினங்களின் மீதும், மனிதர்களின் மீதும்,
கொண்டிருந்த கருணை மற்றும் அவருடைய எல்லையற்ற ஞானத்தையும் உலகுக்கு உணர்த்தும் சிறிய செய்யுள்களின் தொகுப்பாகும்.
26 தலைப்புகளைக் கொண்டது. 423 சிறு செய்யுளைக்
கொண்டதாகும்.
இந்தியாவில் தோன்றிய புத்தமதம், இலங்கை, சீனா, சப்பான்,
பர்மா என எல்லா கிழக்காசிய நாடுகளுக்கும் பரவியது. அவ்வாறு பரவக் காரணமாக இருந்ததில் போதிதர்மர் துவங்கி
பல்வேறு தமிழர்களின் பங்களிப்பு இருந்தாலும், 20ஆம் நுற்றாண்டில் இந்தியாவுக்கு வந்ததில்
1. கர்னல். ஆல்காட்
2. ராய்ஸ் டேவிட்ஸ்
3. பால்காரஸ் என்னும் 3 மேலைநாட்டு அறிஞர்களின்
வழியாக மேலைநாடுகளுக்கும் இந்தியாவுக்கும் பரவியது.
இவர்களோடு இணைந்து இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும்
பவுத்தம் பரவுவதில் பெரும் பங்கெடுத்தவர். பண்டிதர் அயோத்திதாசர் ஆவார்.
தேரவாத
பௌத்தம் உலகின் பழைய பவுத்த முறை என்று போற்றப்படுகின்றது. அந்த பௌத்த முறை பரவியுள்ள
ஆசிய மற்றும் கிழக்காசிய நாடுகளில் தம்மபதமானது,
மெய்யறிவு வளரவும், வழிகாட்டுதலுக்கும் ஆதாரமாக அமைந்துள்ளது. தினசரி வாழ்க்கை சிக்கலுக்கு
எளிய தீர்வை தரும் தீர்வுப் புத்தகமாகவும், ஒழுக்கத்தை பேணவும், அமைதியான மன நிலையில்
வாழவும் அறிவுடையோர் பின்பற்ற வேண்டிய நடைமுறையை தம்மபதம் விவரிப்பதால் இன்று தம்மபதம்
திசையெங்கும் தீர்வு சொல்லும் நீதி புத்தகமாக பயணப்படுகின்றது.
தேரவாத
பௌத்தக் கொள்கையின் படி தம்மபத ஒவ்வொரு வரியும், ஒரு குறிப்பிட்ட சம்பவம், அல்லது நிகழ்விற்க்கு
பதில் தர புத்தரால் சொல்லப்பட்ட வார்த்தையாகும். வரலாற்றில் முதன் முறையாக கி.பி.ஐந்தாம்
நுற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த புத்தேகோஷர் உரையெழுதி இருக்கின்றார். அவருக்குப்
பின் தம்மத பதம் உலகின் பல பகுதியில் பிரபலமாயுள்ளது.
ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டுமே 40க்கு
மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் உள்ளன. அமெரிக்காவில் இப்போது அதிகமாகப்
பரவி வரும் மதம் பெளத்தமதம் என்கிறார்கள்.
தம்ம பதத்தின் சூத்திரங்கள் படிப்பதற்கு எளிமையானவை. பெளத்த சமயக்
கொள்கைகளும் வாழ்க்கைக்குத் தேவையான நீதிகளும் தம்மபதத்தில்
நிறையவே இருப்பதால் அவற்றைப் படித்துத் தெளிந்துகொள்ளலாம்.
“இது நமது மொழியிலுள்ள திருவள்ளுவரது திருக்குறளைப் போன்று
அத்துணைச் சிறப்பு வாய்ந்தது” என்று தம்ம பதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய நூல் திருக்குறளே என்கிறார் வையாபுரிப்பிள்ளை. தம் இலக்கிய உதயம் பகுதி 11 எனும் நூலில்.
தம்ம பதத்தின் பெருமையை ஹெர்மான் ஓல்டன்பெர்க் எனும் ஜர்மானியப்
பேராசிரியர் இப்படிக் கூறுகிறார்.
“பெளத்த சமயத்தைப் பற்றித் தெளிவாய்த் தெரிந்துகொள்வதற்கு பெளத்த
தர்ம ஆராய்ச்சிகளை ஆரம்பிக்கும்போதே ஆராய்ச்சியாளனுக்கு ஒரு புனிதமானவரின் கைகளால் தம்மபதத்தை அளிப்பதைவிட மேலான காரியம் ஒன்றும் இருக்க முடியாது. தம்மபதம் தன்னிரகற்ற அழகுடையது. பொருள் நிறைந்தபழமொழிக்களஞ்சியம்.பெளத்த சமயத்தைத் தெரிந்து கொள்ள உறுதிகொண்ட எவரும் திரும்பத்
திரும்பப் படிக்க வேண்டிய நூல் இது.”
தம்மத்தை முதலில் தமிழிற்க்கு தந்தவர் அய்யன்
திருவள்ளுவர். அவருக்குப்பின் பலரும் தம்மத்தை தமிழ்படுத்தினாலும், அவற்றில் குறிப்பிடத்தக்கவர்கள்
இலங்கையைச் சேர்ந்த எம். என். மெகைதீன்., பவுத்த துறவி சோமானந்த தேரா, சி.எஸ்.தேவநாதன்,
மற்றும் பகவான். ரஐனிஸ் ஆகியோர் அடங்குவர். இவர்களில் பகவான் ரசினிஸ் தம்ம பத்த்தை
கதைகளாக விளக்கினார். மற்றவர்கள் வசன கவிதை மற்றும் உரைநடைகளாக வெளியிட்டுள்ளனர்.
இவர்களை
அடுத்து தமிழ் கவிதைகளில் தனக்கென தனி ஆளுமையை ஏற்படுத்திக் கொண்டுள்ள யாழன் ஆதியும்
தம்மபதம் என்னும் அரியதொரு பொக்கிஷத்தை வெளியிட்டுள்ளார். 180 பக்கமுடைய கையடக்கப்
பதிப்பாக வெளிவந்துள்ளது. அட்டை படமும், அச்சிட்ட விதமும் மிக அருமை. கவிதைகள் ஆழ்ந்த
பொருளை எளிய தமிழில் யாருக்கும் புரியும் வண்ணம் இருக்கின்றன.
கவிதைகள்
பிற மொழி சொற்கள் இல்லாமல் எளிய தமிழில் யாருக்கும் புரியும் வகையில் வந்துள்ளது. குழந்தைகளுக்கும்
புரியும் விதமாய் உள்ளது.
” மனம்
முன்னோடி
மனம் தலைமை
தீயது
பேசும்
தீயது
செய்யும் மனம்
துன்பத்தால்
தொடரப்படும்
காளையைத்
தொடரும்
வண்டியாய்
”
என
முதல் கவிதையை துவங்கி கடைசி கவிதையான
” அந்த
துறவி
தன் பழைய
பிறப்புகளை
அறிந்தவர்
மகிழ்வை
துன்பத்தை
அறிந்தவர்
பிறப்பின்
முடிவை அடிந்தவர்
மேனறிவுடன்
இருப்பவர்
முழுமையடைந்தவர்
பற்ற்ற்ற
நிலையை அடைந்தவர்
அவரே
அறவோர் என்னும் கடைசி கவிதைக்க வரை, உள்ளங்கை
நெல்லிக் கணி போல படிக்கப் படிக் இன்பம் பயப்பனவாக
இருக்கின்றது.
ஒவ்வொரு
கவிதையும் சில நேரங்களில் திருக்குறளை புதுக்கவிதையில் வடித்துள்ளோரோ என்னும் உணர்வையும்
ஏற்படுத்த தவறவில்லை. இது யாழன் ஆதியின் அற்புதமான படைப்பு என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஏற்கனவே
யாழன் ஆதியின் செம்பறை கவிதைப் புத்தகம், பெரியார் பல்களைக் கழகத்தில் பாடப் புத்தகமாக
வைக்கப்பட்டிருப்பது போல இந்த தம்மபதம் நுலும் ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தில் பாநுலாகும்.
இறுதியாக
”புத்தர்
தன்னுடைய ஒளியால் மனிதனின் இருள் விலக பேசிய தம்மபதம், இங்கு யாழன் ஆதிகவிதையால் படிப்பவரின்
மனத்தில் தம்மபதம் ஆட்சி செய்யவும், ஆளுமை செய்யவும் புத்தராலேயே அருளப்பட்டிருக்கின்றது.
வெளியீடு
– புத்தர் ஒளி பன்னாட்டுப் பேரவை – சென்னை கிளை
விலை
– 100 உருவா.