அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா
மா. அமரேசன்
“அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா”
என்னும் இந்த பாடலைக் குறித்து நான் விவரிக்கப் போகின்றேன். இந்த பாடல் இடம் பெற்ற
தமிழ் திரைப்படம் நண்டு ஆகும். இது 1981 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை
இயக்கியவர். திரு. மகேந்திரன் அவர்கள். இப்படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா
அவர்கள். இது இளையராஜா இசையமைத்த 127 வது திரைப்படமாகும்.
வரலாற்று சிறப்பு மிக்க
இந்தப் பாடலை இயற்றியவர் மதுக்கூர் கண்ணன். இவரது இன்றைய பெயர், யார். கண்ணன். இவர்
கவிஞர், நடிகர், தயாரிப்பாளர், மற்றும் இயக்குனர் என பன்முக ஆளுமை கொண்டவர். இவர் இளையராஜாவின்
இசையில் அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா என்னும்
வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரே பாடலை இயற்றியுள்ளார். இந்த பாடலை பாடியவர். காலஞ்சென்ற
திரு. மலேசியா வாசுதேவன் அவர்கள்
கதைப்படி கதாநாயகன் தான்
இளமைக் காலத்தில் வாழ்ந்த டில்லி நகரத்தையும் யமுனை நதியையும் தன் மனைவி மற்றும் குழந்தைக்கு
சுற்றிக் காண்பிப்பதாக வரும் காட்சியில் இளமைகால நினைவுகளை அசைபோடும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும்
பாடல் இதுவாகும். தற்போதைய வார்த்தைகளில் சொல்வதென்றால் இதனை Time Travel Music (
Song) என்று இசை ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
ஆடுங்கள் பாடுங்கள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள் (அள்ளித் தந்த பூமி ....)
சேவை செய்த காற்றே பேசாயோ ?
சேமங்கள் லாபங்கள் தானோ ?
பள்ளி சென்ற காலப் பாதைகளே
பாலங்கள் மாடங்கள் ஆஹா
புரண்டு ஓடும் நதிமகள்
இரண்டு கரையும் கவிதைகள்
தனித்த காலம் வளர்த்த இடங்களே
இளமை நினைவை இசைக்கும் தெருக்குள் (அள்ளித் தந்த பூமி ....)
காவல் செய்த கோட்டை காணாயோ ?
கண்களின் சீதனம் தானோ ?
கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே
காரணம் மாதேனும் தேனோ ?
விரியும் பூக்கள் வானங்கள்
விசிறி ஆகும் நாணல்கள்
மரத்தின் வேரும் மகிழ்ச்சிப் படுக்கையே
பழைய சோகம் இனியும் இல்லை (அள்ளித் தந்த பூமி ....)
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
ஆடுங்கள் பாடுங்கள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள் (அள்ளித் தந்த பூமி ....)
சேவை செய்த காற்றே பேசாயோ ?
சேமங்கள் லாபங்கள் தானோ ?
பள்ளி சென்ற காலப் பாதைகளே
பாலங்கள் மாடங்கள் ஆஹா
புரண்டு ஓடும் நதிமகள்
இரண்டு கரையும் கவிதைகள்
தனித்த காலம் வளர்த்த இடங்களே
இளமை நினைவை இசைக்கும் தெருக்குள் (அள்ளித் தந்த பூமி ....)
காவல் செய்த கோட்டை காணாயோ ?
கண்களின் சீதனம் தானோ ?
கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே
காரணம் மாதேனும் தேனோ ?
விரியும் பூக்கள் வானங்கள்
விசிறி ஆகும் நாணல்கள்
மரத்தின் வேரும் மகிழ்ச்சிப் படுக்கையே
பழைய சோகம் இனியும் இல்லை (அள்ளித் தந்த பூமி ....)
இந்த
பாடல் கல்யாணி ராகத்தில் மேற்கத்திய இசைக்குறிப்பு மற்றும் இசைக் கருவிகளோடு அமைக்கப்பட்ட
பாடலாகும். இந்த ராகத்தை ராகங்களின் ராணி என்றும் அழைப்பார்கள். கல்யாணி ராகத்தில்
ராகதேவன் இசையமைத்த சில பாடல்களின் பட்டியலையும் பார்ப்போம்.
1. ‘ஜனனி ஜனனி’ – தாய் மூகாம்பிகை (1982)
2. ‘நதியில் ஆடும் பூவனம்’ - காதல் ஓவியம்’ (1982)
3. ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ - (மன்னன்)
4. ‘சிறுகூட்டுல உள்ள குயிலுக்கு’ - (பாண்டி நாட்டுத்தங்கம்)
5. ‘விழிகள் மீனோ’ (ராகங்கள் மாறுவதில்லை)
6. ‘நிற்பதுவே நடப்பதுவே’ - (பாரதி)
7. ‘வந்தாள் மகாலட்சுமியே’ - (உயர்ந்த உள்ளம்)
8. ‘வெள்ளைப் புறா ஒன்று’ - (புதுக்கவிதை)
9. ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ - தளபதி (1991)
10. ‘காற்றில் வரும் கீதமே’ - ‘ஒரு நாள் ஒரு கனவு’ (2005) [1]
11. நான் என்பது நீயல்லவோ – சூரஸம்ஹாரம்
12. மஞ்சள் வெயில் – நண்டு[2] ஆகிய பாடல்களை உதாரணத்துக்குச் சொல்லாம்.
அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
இரண்டாவது இந்த பாடலின் இரண்டாவது இடையிசையில்
உலக திரைப்பட இசை வரலாற்றில் முதன்முதலாக இசைஞானி அவர்கள் பிரபஞ்சத்தின் ஓசையைப் பதிவு
செய்திருப்பார்கள். அவ்வாறு திரையிசையில் பதிவு செய்த பிரபஞ்சத்தின் ஓசை இளையராஜாவின்
இசையாகும். இவை இரண்டையும்
1966 ஆம் ஆண்டில் வெளிவந்த ராமு என்னும் திரைப்படத்தில்
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் “ பச்சைமரம் ஒன்று இச்சைக்கிளி ரெண்டு ” என்னும் ஒரு பாடலை
மகிழ்ச்சி, மற்றும் சோகம் என இரண்டு வகையில் எழுதியிருப்பார். அந்த இரண்டு பாடலும்
ரசிகர்களிடம் பெரு வெற்றி பெற்ற பாடலாகும். இந்த பாடலின் மூன்றாவது அடியாக “ அள்ளித்
தந்த அன்னை சொல்லித்தந்த தந்தை உள்ளம் கொண்ட பிள்ளை நீயால்லவா என எழுதியிருப்பார்..
அந்த அடிகளின் தாக்கத்தில் இருந்தே இந்த பாடலின் முதலிரண்டு வரிகளும் துவங்கியிருக்கும்
என்று கருதுகின்றேன். இந்த முன்னோடி வரிகள் இங்கே
பச்சைமரம் ஒன்று
இச்சைக்கிளி ரெண்டு
பாட்டுச்சொல்லி துாங்கச்சொல்வேன் ஆரிரரோ
அள்ளித் தந்த அன்னை
சொல்லித் தந்த தந்தை
உள்ளம் கொண்ட பிள்ளை நீயல்லவோ
இந்த வரிகளின் உந்துதலில் இருந்தே யார் கண்ணன் அவர்களும் “ அள்ளித்
தந்த பூமி அன்னையல்லவா சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா” என எழுதியிருப்பார் என்று
கருதுகின்றேன்.
விரியும் பூக்கள் வானங்கள் விசிறியாகும் நாணல்கள்
இந்த காலக் கணிதத்தில்
1983 ஆம் ஆண்டு ஒரு கவிஞர் விரியும் பூக்கள் வானங்கள் என்று பிரபஞ்சம் விரிவடைவதைக்
குறித்து எழுதியிருப்பது முன்னோடி அறிவியல் கருத்தாகவே கருதவேண்டியுள்ளது.
பிரபஞ்சம் குறித்தும், பிரபஞ்சத்திலுள்ள உலகங்கள் குறித்தும் உண்மையில்
இவர்கள் அனைவருக்கும் முன்பு சொன்னவர் பகவான் புத்தராவார். அபிதம்ம பீடத்தில் உள்ள
கேவத்தா சுக்தாவில் பிரபஞ்சம் குறித்தும், பிரபஞ்சம் விரிவாக்கம் குறித்தும் பேசியிருக்கின்றார்.
மேலும் அங்குத்தர நிகாயத்தில் வான்வெளியில் உள்ள உலகங்களின் எண்ணிக்கை 1,000,000,000,000 என்றும் சொல்லியிருக்கின்றார்.
கூடுதலாக இந்துமதம் சொல்லும் பஞ்சபூதக் கோட்பாட்டின் படி, நிலம், நீர், காற்று, நெரும்பு
வானம்
ஆகிய பஞ்ச பூதக்
கோட்பாடு புத்த சமயத்தில் இல்லை, மாறாக நிலம், நீர், காற்று , நெருப்பு ஆகிய நான்கு
பூதக் கோட்பாடுகள் மட்டுமே புத்த சமயத்தில் உள்ளது. இது குறித்து விவரிப்பதால் கட்டுரையின்
போக்கு மாறும் என்பால் இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன்.
பிரபஞ்ச ஓசையும் இளையராஜா இசையும்
பொதுவில் எந்த ஒரு
பாட்டின் தன்மை குறித்தும் அது ஏற்படுத்தப்போகும் உணர்வுகள் குறித்தும் ஒவ்வொரு பாடலின்
துவக்க இசையி்ல் வெளிப்படுத்துவார் இசைஞானி இளையராஜா அவர்கள். அதே போல் அள்ளித்தந்த
பூமி அன்னையல்லவா பாடலின் துவக்க இசையில் இது ஒரு மனிதரின் இளமைக்கால நினைவலைகள் என்பதையும்
துவக்க இசையில் வெளிப்படுத்தியிருப்பார்.
இதே போல் நிழல்கள்
படத்தில் வரும் இது ஒரு பொன்மாலை பொழுது பாடலில் வரும் ஒரு வரியான “ வானம் எனக்கு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்” என்னும்
வரிக்கு முன்பான இடையிசையில், போதி என்பது ஞானத்தை குறிக்கும் சொல் என்பதாலும், புத்தர்
இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரின் மன அமைதிக்கான தத்துவத்தைக் கண்டுபிடித்தவர் என்பதாலும்
மன அமைதியைக் குறிக்கும் வகையில் கோயில் மணி ஓசையை அதன் இயல்பான அளவீட்டிலிருந்து சற்று
நீட்டி முழக்கியிருப்பார்.
இன்னும் சற்று கூடுதலாக
சொல்வதென்றால் திருவாசக சிம்பொனியில் பிரபஞ்சத்தின் ஓசையை மற்றும் பால்வீதி மண்டலத்திலுள்ள
கிரகங்களின் ஓசையை சேர்த்திருப்பார். அது குறித்து பிறகு விரிவானதொரு கட்டுரையில் பேசுகின்றேன்.
https://www.youtube.com/watch?v=AEumUXzMrAs நாசா வெளியிட்டுள்ள பிரபஞ்ச ஓசையின் இனைப்பு இது. இதில் நாம் வாழும் பால்வீதி மண்டலத்தின் ஓசைக்கும் இளையராஜாவின் இசைக்கும் எந்த மாறுதலையும் நாம் கேட்க்கவே முடியாது. இன்னும் கூடுதலாகச் சொல்வதென்றால், நாசா பிரபஞ்ச ஓசையை பொதுவெளிக்கு வெளியிட்டது 17.08.2018 அன்று ஆனால் பிரபஞ்ச ஓசையை இளையராஜா இசையமைத்த திரைப்படம் வெளிவந்தது 17 ஏப்ரல் 1981. அந்த அளவுக்கு இசையில் காலத்துக்கும் முன்னோடியான இசையைத் தந்தவர் நம் இசைஞானி அவர்கள். அதுவும் ஒரு பாடலின் 2.09 வினாடித் துவங்கி 3.00 வினாடி வரைக்குமான 0.14 வினாடிக்கான இசையை புரிந்து எழுதுவதற்கே ஏறக்குறைய 40 ஆண்டுகள் ஆகின்றது. அவரது முழு இசையையும் புரிந்து கொண்டு எழுதுவதற்கு ஒரு யுகம் கூட போதாது என்பதே எனது தாழ்மையான கருத்து.
நிறைவாக அமெரிக்காவில்
எத்தனையோ விண்வெளி மற்றும் வேற்று கிரகப் படங்கள் வந்திருந்தாலும் அவற்றில் முக்கியமான
குறிப்பிடத்தக்க ஒரு திரைப்படம் புரோம்தியஸ் ( Prometheus) ஆகும். இந்த படத்தின் இசையமைப்பாளர்
திரு. மார்க் ஸ்டிரெய்ட்ன் பீல்ட் ( Marc Streitenfeld ) ஆவர். இவர் இந்த திரைப்படத்தில்
பிரபஞ்சத்தின் ஓசையை அப்படியே இயல்பாக அமைத்திருந்தார் என்பதை அமெரிக்காவின் நாசா நிறுவனம்,
வெளியிட்டிருந்த கிரகங்களின் ஓசையிலிருந்து கண்டறிந்து அவருக்கு 2012 ஆம் ஆண்டுக்கான
கண்டுபிடிப்புக்கான விருது ( Discovery of the Year) என்னும் விருதை அளித்தனர் British Academy Film Awards என்னும் அமைப்பினர். அதற்காக அவர் பிரபஞ்ச இசை எப்படி
சாத்தியமாயிற்று என்னும் கேள்விக்கு நான் மேலைநாட்டு சுரங்களை தலைகீழாக இசையமைத்தேன்
என்று கூறியிருந்தார். ஒரு வேற்று கிரகத் திரைப்படத்திற்கு இத்தனை மெனக்கெடலும் முயற்சியும்
தேவையான ஒன்று என்றாலும்,
ஒரு பாடலின் இரண்டு
அடிக்காக தனது இசையில் பிரபஞ்ச இசையைக் கொண்டுவந்த இசைஞானியின் அர்பணிப்பும் ஈடுபாடும்
அளப்பரியது. அவர் நினைத்திருந்தால் வேறு ஒரு இசைஇட்டு அந்த இடத்தை நிரப்பியிருக்க முடியும். ஆயினும் தன் மனதுக்கு நேர்மையாக அந்த இடத்தில் கவிஞர் சுட்டும் பொருளுக்கான இசை வடிவத்தை நிரவல் இசையில் தரவேண்டும் என்னும் உந்துதலும் நேர்மையும் இளையராஜாவிடமிருந்து அவரது ரசிகர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். இதைப்போல பலவற்றை நாம் அவரிடமிருந்து கற்றக தவறிவிட்டோம். அதை நாம் இதுவரையிலும் கவனிக்கத் தவறியதால் இந்த கட்டுரை.
வாழ்த்துகள்.உங்கள் ஆய்வுப்பார்வை மிகப் பொருத்தமாக நகர்கிறது.இதே போலான இணை ஒப்பீடு parallel comparisons அடிப்படையில் தொடர்ந்து இந்தத் தலைப்பிலான உங்கள் சிந்தனைகள் விடிந்தால் பொருத்தமாக இருக்கும்.உங்கள் புத்தாக்கச் சிந்தனைகளுக்கு எனது பாராட்டுகள்.
ReplyDeleteஜெய் பீம்.. நீங்கள் இசையை பற்றி பேசுகிறீர்களா.
ReplyDeleteஅதனுள் பொதிந்த அடைக்கலமாகிய வரிகளை பற்றி பேசுகிறீர்களா.
இசையை உருவாக்குகின்ற கருவியை பற்றி பேசுகிறீர்களா.
அதன் ரசனையை பேசுகிறீர்களா.
இசை வரிகளின் பின்புலத்தை பற்றி பேசுகிறீர்கள.
அதற்குள்ளாக பௌத்தத்தை பேசுகிறீர்களா...
எல்லாமும்தான்.
உங்கள் சிந்தனை,
பேசாதததை பேச துணிந்த உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
தங்கள் படைப்புகளுக்காக மகிழ்ச்சிகளுடன் நன்றிகள்..