18.01.2020 அன்று மாலை 4.00 மணிக்கு, சென்னை சைதாப்பேட்டையிலுள்ள அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரி அரங்கத்தில் மகா மங்கல புத்தசமய திருமண வலைத்தளம் துவக்க விழா மற்றும் அறம் பதிப்பகத்தின் 11நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரையை செல்வி. இன்பகுமாரி, மற்றும் பவானி வழங்கினர். தலைமை வழ. ஆனந்தன், அவர்களும், முன்னிலை சமூக நீதி மக்கள் இயக்கம் தலைவர் A.K.அம்பேத்கர்தாசன், வகித்தார். அறம் பதிப்பகத்தின் 11 நுால்களை வெளியிட்டு, புத்தசமய இணையதளம் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அவர்கள். ஏற்புரையும் நன்றியுரையும் திரு. மா.அமரேசன், அவர்கள் கூறினார். இந்நிகழ்சியை கவிஞர். யாழன் ஆதி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
இந்த நிகழ்சியில் பேரா. ஏ. மாரிமுத்து, பேரா. மாதவன், பேரா. கிருஷ்ணன் கதிரவன். மற்றும் எழுத்தாளர்கள். திரு. ஐ.ஜா.ம. இன்பகுமார், திரு. கெங்கை குமார், திரு. வீரபாபு, கவிஞர். மா. சுரேஷ், கவிஞர். நாச்சியாள் சுகந்தி, சுற்றுச்சூழல் போராளி. திருமிகு. நித்தியானந் ஜெயராமன். வழ. கயல் அங்கயற்கண்னி, உளவியல் ஆலோசகர் திருமிகு. கமலா தேவி மற்றும் பிச்சைமுத்து அவர்களும், இயக்குனர் தொல்காப்பியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பு செய்தனர். மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
![]() |
| விழா மேடையில் தலைவர் ஆம்ஸ்டிராங் மற்றும் சுற்றுச்சூழல் போராளி மரியாதைக்குரிய நித்தியானந் ஜெயராமன் மற்றும் நுாலாசிரியர்களும் |
![]() |
| மாநிலத் தலைவரின் எழுச்சியுரை |
![]() |
| மகா மங்கல இனையத் தள துவக்கி வைக்கின்றார் மாநிலத் தலைவர் |
![]() |
| மா. அமரேசன் ஊடகங்களுக்கு விளக்கம் தருகின்றார் |
![]() |
| மகா மங்கல இனையத்தளத்தின் முகப்பு பக்கம் |




































































